தயக்கம் என்ன? - இப்படிக்கு நம்பவைத்து கழுத்தறுப்போர் சங்கம்!

வணக்கம் நண்பர்களே...இது ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி...நீங்க புரிஞ்சிப்பீங்கங்கர நெனப்புல பதிவு பண்றேன்...

லேடி: மக்களே...உங்க அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக விலைவாசி உயர்வை அளிச்சி இருக்கேன்...எப்பவும் போல கொஞ்ச நாள் பொங்கிட்டு எப்படி அத சமாளிக்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கிடுங்க...ஏன்னா எனக்கு இப்போ ரெஸ்ட் முக்கியம்...!

தாத்தா: ஏம்மா, எங்க ஆட்சில இப்படில்லாம் நடந்துதா...மக்கள் என்னமா சுகமா இருந்தாங்க...இடி இடிச்சாலும் மழை பெஞ்சாலும் மானாட டின்கலாட பாத்து ரசிச்சிட்டு இருந்த்தாங்க...கேடி: ரெண்டு பேரும் சரி இல்ல...என்னைய போல புல்லா குடிச்சிட்டு மட்டையாக முடியுமா....இல்ல என் ஊட்டுக்கு உள்ளேயே குந்திகிட்டு போராட்டம் நடத்த முடியுமா....

லேடி: எலேய் கொஞ்சம் நெனச்சி பார்லே!..என்னாலே தானே உனக்கு இத்தன பேரு கெடச்சாங்க....

கேடி: நீங்க தான் நெனச்சி பாக்கணும்...நான் இல்லன்னா நீங்க ஜெயிச்சி இருக்க முடியுமா....

மக்கள்ஸ்: அலோ அதான் ஜெய்ச்சி புட்டீங்களே...ஓட்டு போட்ட குற்றத்துக்காக இருக்குற அத்தன விஷயத்துலயும் விலைய ஏத்திப்புட்டா நாங்க எப்படி வாழ்றது...


லேடி: ஓட்டு போடுற வரைக்கும் மக்கள்ன்னு பாப்பேன்...ஜெய்ச்சிட்டா என் பேச்சி மட்டும்ல, தங்கச்சி பேச்சை கூட கேக்க மாட்டேன்...நான் ஒரு ரிங் மாஸ்டர்...

மக்கள்ஸ்: அதுக்காக நாங்க என்ன உங்களுக்கு ஆனியன் ரோலா தெரியிரோமா...

தாத்தா: இதுக்கு தான் அப்பவே சொன்னேன்...நானும் என் குடும்பமும் தான் நாட்டுக்கு நல்லது செய்யிரவங்கன்னு...கேட்டீங்களா...

கேடி: ஆமாய்யா...இப்போ மட்டும் என்ன வாழுது...எப்படியோ ப்ளான் பண்ணி வெளிய கொண்டாந்திட்டீங்களே..


தாத்தா: உனக்கு ஏன்யா வவுறு எரியிது...இதுக்காக இந்த வயசுல எத்தன பேரு கால்ல விழாத குறையா கெஞ்சினேன்...எவ்ளோ கோடி கொடுத்தேன்...ஸ் ஸ் அபா...உன்னைய போல அந்தப்பக்கமா துட்ட வாங்கிகிட்டு...இந்த பக்கமா அவங்களுக்கு எதிரா கொடி புடிச்சி டபுள் கேம் ஆடல...

கேடி: அலோ...நான் எம்புட்டு தமில் பற்று உடையவன் தெரியுமா...அதனால தான் இப்போ எதிர்ல இருந்துகிட்டு ஊட்டுக்குள்ள மட்டும் தெலுங்கு பேசுறேன்...

லேடி: ஸ்ஸ் அபா....ஏன்யா ஆளாளுக்கு இப்படி அப்ரூவர் கணக்கா உண்மையா கொட்டுரீங்க...என்னைய பாரு நேத்து வரைக்கும் அந்த மூணு பேரோட தூக்குக்கு எதிர்ப்பு தெரிவிச்சேன்....இப்போ எல்லாத்திலயும் வெற்றி...இப்போ அத நான் ஆதரிக்கறேன்னு சொல்றேன்..எல்லோரும் அமைதியா இருக்காங்க...அது தான்யா எம்மேல இருக்க பயம்...

மக்கள்ஸ்: இம்புட்டு நல்லவங்களா நீங்க...நாங்க தான் அவுட்டா...


லேடி,தாத்தா, கேடி: எப்பவுமே நீங்கதான் அவுட்டு...இது இன்னுமா புரியல ஆர்வக்கோளாருங்களா..ஒன்னு தெரிஞ்சிக்கங்க...ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி எப்படி கரண்டு இல்லாம வாழ்ந்தீங்களோ..நடை பயணமா போனீங்களோ...அதை நனவாக்குறது தான் எங்களோட கடமை..

கொசுறு: வாழ்க ஜனநாயகம்!    
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. மாமா, எல்லோருமா சேர்ந்து சாய்ச்சுப்புட்டாங்களே?

  ReplyDelete
 2. எல்லாம் கூட்டு களவாணி

  ReplyDelete
 3. //லேடி,தாத்தா, கேடி: எப்பவுமே நீங்கதான் அவுட்டு...இது இன்னுமா புரியல ஆர்வக்கோளாருங்களா..ஒன்னு தெரிஞ்சிக்கங்க...ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி எப்படி கரண்டு இல்லாம வாழ்ந்தீங்களோ..நடை பயணமா போனீங்களோ...அதை நனவாக்குறது தான் எங்களோட கடமை//..

  இதுக்கு என்ன ரிஅக்ட் பண்றதுன்னு???

  ReplyDelete
 4. போற போக்க பாத்தா நனவாக்கிருவாங்கதான் போல இருக்கு

  ReplyDelete
 5. @தமிழ்வாசி பிரகாஷ்

  மாப்ள இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!

  ReplyDelete
 6. @மனசாட்சி

  மாப்ள அதே அதே...களை எடுக்க நாம் ஒன்று படவேண்டும்!

  ReplyDelete
 7. @இரவு வானம்

  மாப்ள இனி மாற வேண்டியது மக்கள் தான்!

  ReplyDelete
 8. ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி எப்படி கரண்டு இல்லாம வாழ்ந்தீங்களோ..நடை பயணமா போனீங்களோ...அதை நனவாக்குறது தான் எங்களோட கடமை..// இவங்க மூணு பேருக்குமே மக்கள் திரும்ப, திரும்ப ஓட்டு போட்டு சரிக்க வெச்சா அது நடந்தாலும் அச்சிரியப் படுவதற்க்கில்லை..

  ReplyDelete
 9. இவங்க மூணு பேருக்குமே மக்கள் திரும்ப, திரும்ப ஓட்டு போட்டு சரிக்க வெச்சா அது நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..

  ReplyDelete
 10. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள வெற்றுக்கூச்சல்கள் குறைந்து சமுதாயம் விடிவு பெற இன்னொரு போர் தேவை போல!~

  ReplyDelete
 11. தாடி : ங்கொய்யால...மக்கள் கடைசியில நம்ம மாதிரி ஆயிட்டாங்க..

  மம்மி : யோவ்...என்னய்யா...சவுண்டு
  "எனக்கு ஒன்னும் தெரியாது" இதை மனப்பாடம் பன்னசொன்னனே மூடிட்டு அதமட்டும் பண்னு...

  ReplyDelete
 12. வாழ்க ஜனநாயகம் அப்படின்னுட்டு அமைதியா இருந்துடனும் வேற என்ன பண்றது..

  ReplyDelete
 13. பரவால்ல,வுடுங்க தல!அதான்,கற்காலத்துக்கு அழைச்சிகிட்டு போறதா சொல்லியிருக்காங்கல்ல?(செம பிகரு பாக்கலாம்!)

  ReplyDelete
 14. ஹா..ஹா..ஹா.. செம கலந்துரையாடல்..! இதை படிச்சதும் சொல்ல நினைப்பது,

  வாழ்க ஜனநாயகம்!!!

  ReplyDelete
 15. .ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி எப்படி கரண்டு இல்லாம வாழ்ந்தீங்களோ..நடை பயணமா போனீங்களோ...அதை நனவாக்குறது தான் எங்களோட கடமை..//

  அப்போ சுகர், கொலஸ்ட்ரல், பிரஷர், ஹார்ட் அட்டாக் இல்லாத உலகம்னு சொல்லு ஹி ஹி...!!!

  ReplyDelete
 16. கேடி: ஆமாய்யா...இப்போ மட்டும் என்ன வாழுது...எப்படியோ ப்ளான் பண்ணி வெளிய கொண்டாந்திட்டீங்களே..//

  ஆத்தீ எம்புட்டு பணமும் டீலிங்கும் கைமாறி இருக்கும், நினைக்கவே தலை கிர்ர்ர்ர்ருங்குது!!!!

  ReplyDelete
 17. //அலோ அதான் ஜெய்ச்சி புட்டீங்களே...ஓட்டு போட்ட குற்றத்துக்காக இருக்குற அத்தன விஷயத்துலயும் விலைய ஏத்திப்புட்டா நாங்க எப்படி வாழ்றது...//

  மக்கள் படுற பாடு கொஞ்சம் நஞ்சமா தெரியல் மாம்ஸ்

  இல்லாத கரண்டுக்கு விலையேற்றம்..

  ஓடாத பஸ்ஸுக்கு விலையேற்றம்..

  கடைசியா பச்ச புள்ளங்க குடிக்கிற பால் விலையேத்துன ரொம்ப கஷ்டம் மாம்ஸ்

  அடுத்து அரசியல்ல வர்ற தலைமுறைக்கு நாம சரியா சொல்லிக்கொடுத்தோம்னாத்தான் இத சரி பண்ண முடியும்னு தோணுது

  இல்லன்னா இவனுங்க இப்படிதான் வரிப்பணத்த பூராம் கொள்ளையடிச்சிட்டு நம்க்கே விலையேற்றம்னு ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாங்க

  நான் சொல்றது சரிதான மாம்ஸ்

  ReplyDelete
 18. @veedu

  அது தாடி அல்ல கேடிய்யா ஹிஹி!

  ReplyDelete
 19. @கவிதை வீதி... // சௌந்தர் //

  அப்படி இருக்க முடியாதுங்க...ஏதாவது யோசிங்க!

  ReplyDelete
 20. @Yoga.S.FR

  ஏன் தல இந்த கொடுமைய வேற தாங்கணுமா சாமி!

  ReplyDelete
 21. @Abdul Basith

  இல்ல மாப்ள இதுக்கு வேறு வழி கண்டிப்பா கிடைக்கும் சீக்கிரத்துல பாருங்க!

  ReplyDelete
 22. @MANO நாஞ்சில் மனோ

  அப்போ எல்லோரும் உழைப்போம்கறீங்க...இல்ல அப்பவும் இந்த தலைவனுங்க தொல்ல இருக்குமோ!

  ReplyDelete
 23. @"என் ராஜபாட்டை"- ராஜா

  சரி சரி!...இன்று உங்க வலையில் என்ன!

  ReplyDelete
 24. @சம்பத் குமார்

  நீங்க சொல்றது அம்புட்டும் சர்தான் மாப்ள...இத தான் சொல்லுவாங்க பெரியவங்க...குரங்கு அப்பம் பங்கிட்ட கதைன்னு!

  ReplyDelete
 25. நாட்டு மக்களுக்கு உபயோகமா தக்காளீ பதிவு போட்டிருக்கான், மழை வரப்போகுது

  ReplyDelete
 26. பகிர்வு அருமை!..வாழ்த்துக்கள் சகோ .
  என் தளத்தில் இன்று பட்ட மரங்களும்
  பறவைகளும் .எப்படி உள்ளது என்பதை அறியத் தாருங்கள் ..மிக்க நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 27. என்ன கொடும சார் இது.. தக்காளி பதிவெல்லாம் பளிச்னு புரியுது, போய் நல்ல டாகுடரை பார்க்கோனும்.....!

  ReplyDelete
 28. நீங்க சொல்றது உண்மை... மாம்ஸ்...

  தலைமைப் பொருப்புல இருக்குரவுங்க கூட்டா செயல்படுராங்க, -ஆனா மக்கள் தான் தனித் தனியா பிரிஞ்சி கஷ்டப் படுராங்க...
  மக்களிடம் தேவை ஒற்றுமை...
  இனியாவது ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம்...

  ReplyDelete
 29. படம் பார்த்து கதை கண்டோம்..
  இன்று என் வலைப்பூவில்... மனவாசம்

  ReplyDelete
 30. உங்க ஏரியாவுக்கு நா புது ஆளு...லேட்டா வந்திருக்கிற இந்த சின்ன பயல ஏத்துக்கோங்க....

  ReplyDelete
 31. நல்லா இருக்கு.

  ReplyDelete
 32. “Democracy is the government 'off' the people, 'buy' the people, 'far' the people”

  ReplyDelete
 33. சைக்கிள் , மெழுகுவர்த்தி எல்லாம் ரெடி.
  எல்லோரும் தியானம் பண்ணி நட்ட்கிறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கங்கபா . பாராளுமன்றத் தேர்தல்ல ஓட்டுக்கு பணம் வாங்கி சமாளிச்சுக்கலாம்,

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி