சென்னையில் பிளாட் வாங்கப்போகும் பதிவர்கள் - ஹிஹி!

வணக்கம் நண்பர்களே...முரண்பட்ட விஷயங்களை அலசுவதே பதிவுலகின் வாடிக்கை என்ற நம்பிக்கையில்(!) இந்த விஷயத்தை இன்று எடுத்திருக்கிறேன்...உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்...அப்புறம் இந்தப்பய வம்பு வாங்கவே பதிவு போடுறான்னு சொன்னீங்க பிச்சி புடுவேன் ஹிஹி!(உபயம் அண்ணன் அவர்கள்!)

கொஞ்ச நாளாவே பதிவுலகில் ஒரு பதிவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு நான் உதாரணமா இருக்கறதா நண்பர்கள் சொல்லிட்டு வராங்க..அதாவது...

காப்பி அடித்தல் (இதுக்கு ஒரு பதிவு போட்டு விளக்கம் வேற...ஸ் ஸ் அபா!)

நேத்து வரைக்கும் காப்பி அடிச்சிட்டு அது மூலமா எதோ ரேங்கிங் ஆமே(மாமே!) அது வந்ததுக்கு அப்புறம்...திடீர்னு நான் நல்லவங்கோ இன்னைல இருந்து என்னைய பாருங்கோன்னு பம்முதல்(!)...

கண்ணா முன்னான்னு எவனையாவது வம்புக்கு நேரடியா இழுத்துட்டு அவன் பத்து பேர கூட்டிகிட்டு ஓடியாந்தா...வந்தவங்க பத்து பேரு கால்லயும் ஓயாம விழுந்து மன்னிப்பு கேட்டல்..(!)

நேத்து வரைக்கும் பத்திரிக்கை பிரதிகளை உபயோகிச்சது சட்டப்படி குற்றம்யான்னா...சரி இப்போ போடுறதுக்கு ஏதாவது பாத்து பணம் போட்டு கொடுங்கன்னு மன்றாடுதல்...

எப்படி என்னா போட்டாலும் போட்டவங்களுக்கு ஆதரவாவே ஜல்லி அடித்தல்!


இப்பேர்ப்பட்ட விஷயங்களை சரிவர செய்பவர்களுக்கு மட்டும்(!)...சென்னையில் அதுவும் நடு சிட்டியில்(ஸ்ஸ் அபா!) பிளாட் கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் தொடர்ந்து கூவி வருகிறார்...

மக்களே. நண்பர்களே...இப்படி எல்லாம் நீங்க நடந்து கிட்டா மட்டும் தான் பெரிய அளவுல சாதிக்க முடியும் போல...(!~)

என்னை பொறுத்தவரை சில வரையறைகள்...

சொந்தப்பதிவுகளை போட்டு தன்னையும்(நாம தானே முதல் ரசிகன்!), அடுத்தவங்களையும் சந்தோசப்படுத்த வேண்டிய கடமை பதிவர்களுக்கு உண்டு...

யாரோ கூவுரான்னா உடனே அது யாருன்னு தெரியாம எதிர் பதிவு போடுவது மிக தவறு...

யாராவது ஞாயமா கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கோம்(!)...ஏனெனில், நாம போடுற பதிவுகளுக்கு ஓட்டும் கருத்தும் போட்டு இருக்காங்க (ஞாபகம் இருக்கட்டும்!)

அடுத்தவங்களுக்காக நடிக்காதே...

எவனும் முழுமையான நல்லவன் இல்லை நான் உற்பட(!)...இருந்தாலும் நம் பதிவுகள் மூலம் முடிந்தவரை நாம் திருந்தினாலே போதும்...சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்புவதற்கு முன்!

யாருக்காவது அறிவுரை கூறும் முன் நாம் அதற்க்கு தகுதியுடன் இருக்கிறோமா என்பதை கண்டு கொண்டு கூறுவது உத்தமம்...(உதா:சிகரட், சரக்கு ஹிஹி!)

கொஞ்ச நாள் முன் வரை நான் எதெல்லாம் சரி என்று நினைத்து வந்தேனோ இப்போது அது தலை கீழாக கிடக்கிறது...

வெறும் மானம் கெட்ட(டு!) புகழுக்காகவா இந்த பதிவுலகில் நாம் எழுதி வருகிறோம்...

இந்த பதிவுலகில் சிலரை(!) தவிர பொதுவாக எழுதுபவர்கள் ஏராளம்...முடிந்தவரை தங்கள் கருத்துக்களை நேர்மையாக அதே நேரத்தில் மற்றவர் மனம் கோணத(நான் அல்ல!) வகையில் எழுதி வருபவர்கள் ஏராளம்..

முடிந்தவரை நட்பு பாராட்டு என்று என் புத்தி சொன்னாலும்...இதயம் மறுக்கிறது...

ஒரு நேர்மையான எதிர் கருத்துக்கு கூட(!)...கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அதை அலட்சிப்படுத்தி கிண்டல் செய்யும் இவர்கள் எல்லாம் என்ன *** உலோக பதிவர்களாக வலம் வருகிறார்கள் என்று புரிய வில்லை...

இவர்களை தொடருபவர்களுக்கு இவர்களின் உண்மையான மற்றும் கேவலமான (எல்லாத்துக்கும்!) ஜால்ரா விஷயம் தெரியுமோ தெரியாதோ...

என்ன கொடுமையா இது...

இதெல்லாம் சொன்னா என்னை சண்டக்காரேன்...எப்ப பாரு எதிர் மறையா பேசிட்டு திரியிரான்னு...சொல்றானுங்க...

ச்சே கடைசில என்னையும் புலம்ப வச்சிட்டாங்களே...

சாமி முடியல...


நான் டைப்பிய கருத்துக்களுக்கு நானே முழு சொந்தக்காரேன்...எவனுக்காகவும் கருத்துக்களை திருப்பி எடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னும் சொல்லி முடிக்கறேன்..

கொசுறு; இன்னைக்கு வர வேண்டிய கதை நாளைக்கு வரும்...ஸ்ஸ் அபா எங்கதையே இப்படி இருக்கு..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

81 comments :

 1. நம்ம பதிவுகளுக்கு, டுவிட்டருக்கு, அய்யா சாமி எதாவது போட்டு கொடுங்க என்று கேட்பது என்ன நியாயம்?
  ஏண்டா என் படைப்பை திருடுன ராஸ்கல்...என் உழைப்புக்கு தகுந்த மரியாதை கொடு இல்லையினா உன் புக்குல ஒன்னும் என் படைப்பை போடவேண்டாம் என்று கேட்டால் அது பாராட்டலாம்!ஏனுங்க உங்களுக்கு உங்க படைப்பு மேல் நாங்க நம்புற அளவு கூட நம்பிக்கை இல்லையா?

  ReplyDelete
 2. நாட்டு மக்களூக்கு உபயோகமான பதிவு .. பிரமாதமான கருத்து

  ReplyDelete
 3. நாட்டு மக்கள் விலை வாசி உயர்வை கண்டித்து வருத்தப்படுகிறார்கள், சபரி மலையில் தமிழன் அடிபடுகிறான், முல்லை பெரியாறு பிரச்சனை என அனைத்தையும் உங்கள் ஒரே பதிவில் அலசி தமிழக மக்களுக்கு உதவி செய்த விதம் ஆஹா பேஷ் பேஷ் பிரமாதம்

  ReplyDelete
 4. நாளை தன்மான தலைவர் விக்கி தக்காளி அவர்கள் தான் சொந்தமாக எடுத்த வீடியோ பதிவுகள் போடுவார்

  ReplyDelete
 5. தம்பி விக்கி தக்காளி, நீ தான் அந்த புரட்சிக்காரனா? ஹய்யோ அய்யோ

  ReplyDelete
 6. @veedu

  அய்யா இத அண்ணன பாத்து கேக்க வேண்டியது!

  ReplyDelete
 7. >>..எவனுக்காகவும் கருத்துக்களை திருப்பி எடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னும் சொல்லி முடிக்கறேன்..

  ஹானஸ்ட்ராஜ் போல, அண்ணன் எல்லாருக்கும் நல்ல மரியதை தர்றாரே?

  ReplyDelete
 8. ஒரு பதிவு போடு முன்ன எத்தனை "ஸ்ஸ் அபா " கூல் விக்கி. ஒரு நல்ல பொழுது போக்கு தளத்தை ஏன் குத்து சண்டை தளமாக்கணும்

  ReplyDelete
 9. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  நாட்டு மக்கள் விலை வாசி உயர்வை கண்டித்து வருத்தப்படுகிறார்கள், சபரி மலையில் தமிழன் அடிபடுகிறான், முல்லை பெரியாறு பிரச்சனை என அனைத்தையும் உங்கள் ஒரே பதிவில் அலசி தமிழக மக்களுக்கு உதவி செய்த விதம் ஆஹா பேஷ் பேஷ் பிரமாதம்"

  >>>>

  சார் உங்களுக்கு தான் எத பத்தியும் கவலை இல்லையே...அலேக்(!) ரேங்கும் முதல் நபர்ங்கர விஷயம் மட்டும் போதுமே ஹிஹி!

  ReplyDelete
 10. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  நாளை தன்மான தலைவர் விக்கி தக்காளி அவர்கள் தான் சொந்தமாக எடுத்த வீடியோ பதிவுகள் போடுவார்"

  >>>>>>>>>>>

  அந்த வீடியோ பதிவுகளை பற்றி தான் பலர் கருத்துக்களை விவரமா சொன்னாங்களே...இன்னும் உங்களுக்கு புரியலையா...அம்புட்டு அறிவாளியா நீங்க!

  ReplyDelete
 11. தம்பி விக்கி தக்காளி, நான் சின்னப்பையன், சினிமா விமர்சனம், ஜோக்ஸ் போடற பொறுப்பில்லாத ஆள், நீ அப்படி அல்ல, மிலிட்ரி மேன். நீ நாட்டுப்பற்றுடன் மக்களூக்காக பதிவு போடறதை விட்டுட்டு இப்படி சின்னப்புள்ள போல டீச்சர் அவ்ன் என்னை கிள்ளீட்டான் இவன் என்னை அடிக்கறான், அப்டினு அடுத்தவனை ஏம்ப்பா குறை சொல்லிட்டு இருக்கே?

  ReplyDelete
 12. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி விக்கி தக்காளி, நீ தான் அந்த புரட்சிக்காரனா? ஹய்யோ அய்யோ'

  >>>>>>>>>>

  நீர் ஒரு சரியான அரசியல்வாதிய்யா ...உம்மை ஒரு கேள்வி கேட்டா எனக்கு சம்பந்தமே இல்லாத எவனோடவோ என்னை இணைச்சி பேசுற பாரு ஹிஹி...என்னத்த சொல்ல!

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி விக்கி தக்காளி, நான் சின்னப்பையன், சினிமா விமர்சனம், ஜோக்ஸ் போடற பொறுப்பில்லாத ஆள், நீ அப்படி அல்ல, மிலிட்ரி மேன். நீ நாட்டுப்பற்றுடன் மக்களூக்காக பதிவு போடறதை விட்டுட்டு இப்படி சின்னப்புள்ள போல டீச்சர் அவ்ன் என்னை கிள்ளீட்டான் இவன் என்னை அடிக்கறான், அப்டினு அடுத்தவனை ஏம்ப்பா குறை சொல்லிட்டு இருக்கே?"

  >>>>>>>>

  இது குறை அல்ல பதிவுலக நிதர்சனம்.

  ReplyDelete
 14. @rufina rajkumar

  சகோ...பொறுத்துக்கொள்ளுங்கள்...புரிந்துணர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. //ஒரு பதிவு போடு முன்ன எத்தனை "ஸ்ஸ் அபா " கூல் விக்கி. ஒரு நல்ல பொழுது போக்கு தளத்தை ஏன் குத்து சண்டை தளமாக்கணும்//

  Repeat

  ReplyDelete
 16. அடடா... மொதல்ல இருந்தா???

  ஆனாலும் தைரியமா பேசுறதுக்கும் தில் வேணும்.. பாராட்டுக்கள் சகோ விக்கி

  ReplyDelete
 17. @ஆமினா

  வருகைக்கு நன்றி சகோ..புரிந்துணர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 18. //யாருக்காவது அறிவுரை கூறும் முன் நாம் அதற்க்கு தகுதியுடன் இருக்கிறோமா என்பதை கண்டு கொண்டு கூறுவது உத்தமம்//

  நிதர்சனமான உண்மை மாம்ஸ்

  ReplyDelete
 19. @சம்பத் குமார்

  வருகைக்கும், புரிந்துணர்வோடு கூடிய கருத்துரைக்கும் நன்றி மாப்ளே!

  ReplyDelete
 20. //புரிந்துணர்வோடு கூடிய கருத்துரைக்கும்//

  அந்த் திரட்டியின் நிர்வாகி நீங்க தானா? ஹி...ஹி...ஹி...(கோர்த்துவிட்டாச்சு. இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் ;-)

  ReplyDelete
 21. இது கருத்து சண்டைதான் நட்புரீதியான விரிசல் இல்லை! என்னங்க சிபி கும்மிதான் அடிக்கிறிங்க, பதிலை கானவில்லை? இல்லை "விக்கி" மாதிரி எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?

  ReplyDelete
 22. 1000 thaba sonnalum...
  Nanga kettka mattom....
  Engalukku thevai.....nanga
  seiyrom......

  ReplyDelete
 23. @ஆமினா

  "ஆமினா said...
  //புரிந்துணர்வோடு கூடிய கருத்துரைக்கும்//

  அந்த் திரட்டியின் நிர்வாகி நீங்க தானா? ஹி...ஹி...ஹி...(கோர்த்துவிட்டாச்சு. இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் ;-)"

  >>>>>>>>>>>>

  ஏங்க சகோ இப்படி வேற கோத்து விடுவீங்களா யப்பா!

  ReplyDelete
 24. @veedu

  " veedu said...
  இது கருத்து சண்டைதான் நட்புரீதியான விரிசல் இல்லை! என்னங்க சிபி கும்மிதான் அடிக்கிறிங்க, பதிலை கானவில்லை? இல்லை "விக்கி" மாதிரி எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?"

  >>>>>>>>>>

  யோவ் நடக்குற கூத்துல...நீர் வேற ஏன்யா உள்குத்து குத்துற கொய்யால!

  ReplyDelete
 25. Engaludan vanthu type seithaaya ???
  Net connection vangi koduthaayaa....???
  Illlai...enakku pen nanbargalai
  arimugam seithaaya ??????

  ReplyDelete
 26. @NAAI-NAKKS

  " NAAI-NAKKS said...
  1000 thaba sonnalum...
  Nanga kettka mattom....
  Engalukku thevai.....nanga
  seiyrom......"

  >>>>>>>>>>>

  வாய்யா வா எங்கடா இன்னும் ஆங்கில குத்து வரலேன்னு பாத்தேன் ஹிஹி!

  ReplyDelete
 27. Manam kettavene.....
  Unkku een pathil sollanum ?????
  Nee sollvathai nanga een kaettkanum.....?????

  ReplyDelete
 28. @NAAI-NAKKS

  "NAAI-NAKKS said...
  Engaludan vanthu type seithaaya ???
  Net connection vangi koduthaayaa....???
  Illlai...enakku pen nanbargalai
  arimugam seithaaya ??????"

  >>>>>>>>>>>

  அய்யயோ நான் இல்ல..நான் இல்ல ஏன்யா ஏன் இப்படி!

  ReplyDelete
 29. @NAAI-NAKKS

  " NAAI-NAKKS said...
  Manam kettavene.....
  Unkku een pathil sollanum ?????
  Nee sollvathai nanga een kaettkanum.....?????"

  >>>>>>>>

  இந்தாளு யார திட்ராருன்னே தெரியலியே..என்ன கொடும இது!

  ReplyDelete
 30. Naan evvalavu periya all theriuma ????
  Oru varthai sonnal pothum
  oodi vanthu uthava...evvalavu
  per inga irukkanga
  theriuma...????

  Enakku rank illatti....
  Porul reethiya help panna
  inga pathivargal....niraiya per
  irukkanga....
  Thiruppi tharanum-nu avaciyam
  illai....

  ReplyDelete
 31. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?
  நேற்று சசியின் ப்ளாக்கில் உங்க கருத்தை பார்த்த போதே நினைத்தேன், இன்று ஓர் கலாய்த்தல் பதிவு காரசாரமாக வரும் என்று! ஹி...ஹி...

  செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.அதோடு யதார்த்தத்தினையும் புரிய வைச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 32. @NAAI-NAKKS

  யோவ் நீர் வேற யாரையோ கோத்து விடுறீரு...சாமி வேணாய்யா...!

  ReplyDelete
 33. Arimuga pathivar.....naane...!!!!????
  Summa irukken.....innum
  ul kutthu pathivu....
  Podalai.....
  Potta....enna aagum theriuma...????
  He...he....

  ONNUM AAGATHU.......
  athan...summa irukken....

  ReplyDelete
 34. @நிரூபன்

  "நிரூபன் said...
  வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?
  நேற்று சசியின் ப்ளாக்கில் உங்க கருத்தை பார்த்த போதே நினைத்தேன், இன்று ஓர் கலாய்த்தல் பதிவு காரசாரமாக வரும் என்று! ஹி...ஹி...

  செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.அதோடு யதார்த்தத்தினையும் புரிய வைச்சிருக்கிறீங்க"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள...புரிய வேண்டியவங்களுக்கு புரியலியே அதான் வருத்தம்...இத வேற பெரிய வெற்றியா(!) காட்டிக்கறது வேதனை!

  ReplyDelete
 35. @NAAI-NAKKS

  யோவ் யாரைத்தான் சொல்றே சொல்லேன்யா!

  ReplyDelete
 36. Naalai muthal....anithu peper,,,books...innum ,,,anaithum....
  Thadai seiya padu kirathu.....
  Ini nanga post potta piraku than...
  Anaithum,,,, veliedappadum.....
  Inthu....antha RANK...-mel....
  Aanai...

  ReplyDelete
 37. @NAAI-NAKKS

  ஸ் ஸ் அபா இது ஆவுறது இல்ல!

  ReplyDelete
 38. Sol oneru.....
  Seyal veru.....

  Ennathai...sollurathu mamms.....

  ReplyDelete
 39. Nanga onnum kettka mattom....
  Engalukku....veeta pathukkaratha vida....
  Pasangalai pathukkiratha vida....

  RANK -- than mukkiyam......
  Appa pathivargale....
  Pathivargalaa....iruntha
  kalyaanam pannatheenga......
  Appadiye...kalyanam pannitta....
  Pathiva kuraichikkittu.....
  Kudumbatha parunga.....
  MENTEL ----- aagidanthinga.....

  ReplyDelete
 40. @NAAI-NAKKS

  சரிய்யா சரி விடு...பாவம் இப்ப தான் ப்ளாட்டு வாங்கி இருக்காங்க..இன்னும் கொஞ்ச நாள்ல குடுத்தனம் போகும்போது பால் காய்ச்ச கூப்பிடுவாங்க...அப்போ போவோம்யா!

  ReplyDelete
 41. கலகம் நன்மையில் முடியுமா???????????????

  ReplyDelete
 42. On line -la irukkura konjam perum
  ....summa summa unga blog-ke
  vara mudiuma ????
  Appadi ennatha than ezhuthareenga..????

  Roomba nattukku thevaiyana....
  Aalasal....
  Natta munnethara....pathivu...
  Aadeengappa....
  INDIA vallarasu than.....

  ReplyDelete
 43. @suryajeeva

  " suryajeeva said...
  கலகம் நன்மையில் முடியுமா???????????????"

  >>>>>

  நம்புவோமாக மாப்ள!

  ReplyDelete
 44. @NAAI-NAKKS

  யோவ் இப்போ எதுக்கு நாட்ட இழுக்குற...ஏற்கனவே நிர்வாகத்த எதிர்த்து கருத்து சொன்னா உள்ளார தூக்கி போற்றுவோம்னு மிரட்டுறாங்க...ஏன்யா நீ வேற!

  ReplyDelete
 45. Thirumba .......thirumba ....
  Orey velaiyo,,,,illai,,,
  sappittalo,,,,
  BORE ....adikkaathu ????

  Thayavu seithu
  purinthu kollungal pathivargale.....
  Net enpathu...just..TIME PASS.....
  ithula....een ivvalavu......

  VERI THANAMANA.....EEDUPADU....?????

  ReplyDelete
 46. @ vikki
  appadi ulla potta...naama
  aanantha vigaden ---eiditer mathiri----

  periya all aaiduvom-la
  he...he...he..

  ReplyDelete
 47. @NAAI-NAKKS

  பார்ரா இப்படி வேற நெனப்பு இருக்கா ஹிஹி!

  ReplyDelete
 48. Aama mamms.....
  Namakku veendiyathu....
  PERUM,,,,PUGAZHUM......RANKKUM,,,,,
  athukkaga naama ennavena....
  Meendum.....
  Ennavena----lum
  SEIVOM-LA....

  ReplyDelete
 49. Sari...mams....
  Mathavanga comment podattum..
  Appalikka varen....

  ReplyDelete
 50. முடியல...


  மறுபடியும் முதல்லிருந்தா...?

  ReplyDelete
 51. @கவிதை வீதி... // சௌந்தர் //

  " கவிதை வீதி... // சௌந்தர் // said...
  முடியல...


  மறுபடியும் முதல்லிருந்தா...?"

  >>>>>>>>>>>>

  முதல்ல இருந்து போட்டுட்டு வந்துட்டு இப்போ இப்படி சொல்றாங்களே அதான் மாப்ள முடியல முடியல ஹிஹி!

  ReplyDelete
 52. மாம்ஸ் அருவாளைத் தூக்கிட்டாரு! ஆடுங்க எல்லாம் லைன்ல வாங்க! :-)

  ReplyDelete
 53. ஏன் மாம்ஸ் ஏன்? எதுக்கு?

  ReplyDelete
 54. உனக்கு யாரையாவது குத்தி குடைச்சல் கொடுக்கலைனா தூக்கம் வராதோடேய்...

  ReplyDelete
 55. ம்ம்ம் சரக்கடிக்கிரத்தை திடீர்னு நிப்பாட்டினா இப்பிடித்தான் இருக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  ReplyDelete
 56. டேய் அண்ணே நீ எப்பிடி கூவினாலும் பிரயோசனம் இல்லை ஹீஈஈ ஹீஈஈ....

  ReplyDelete
 57. MANO நாஞ்சில் மனோ said...
  ம்ம்ம் சரக்கடிக்கிரத்தை திடீர்னு நிப்பாட்டினா இப்பிடித்தான் இருக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  ஓ!அது தானா விஷயம்.நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்.

  ReplyDelete
 58. @ஜீ...

  " ஜீ... said...
  ஏன் மாம்ஸ் ஏன்? எதுக்கு?"

  >>>>>>>>>>

  மாப்ள எல்லாம் பதிவுலக நிதர்சனம் தானே...இவங்கல்லாம் என்னமோ சாதிச்சிட்டதா நேத்து ஒரு பதிவு வந்துது...அதுல சொந்த சரக்கு மூலமா எம்புட்டு...அடுத்தவங்க சரக்கு மூலமா எம்புட்டுன்னு மாப்ள சொல்லவே இல்ல ஹிஹி!

  ReplyDelete
 59. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  உனக்கு யாரையாவது குத்தி குடைச்சல் கொடுக்கலைனா தூக்கம் வராதோடேய்..."

  >>>>>>

  அண்ணே உன்னைய விட்டுட்டனே...நடுவுல நீ கூட நெறைய சுட்டு போட்டுட்டு இருந்தே இல்ல ஹிஹி!

  ReplyDelete
 60. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  ம்ம்ம் சரக்கடிக்கிரத்தை திடீர்னு நிப்பாட்டினா இப்பிடித்தான் இருக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...."

  >>>>>>>>>>>

  அப்போ சட்டுன்னு நிப்பாட்டுனா உண்மையா உளருவோம்னு சொல்லு!

  ReplyDelete
 61. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  டேய் அண்ணே நீ எப்பிடி கூவினாலும் பிரயோசனம் இல்லை ஹீஈஈ ஹீஈஈ..."

  >>>>>>>>>>>>

  அதானே தமிழனாச்சே ஹிஹி!

  ReplyDelete
 62. @கோகுல்

  "கோகுல் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  ம்ம்ம் சரக்கடிக்கிரத்தை திடீர்னு நிப்பாட்டினா இப்பிடித்தான் இருக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  ஓ!அது தானா விஷயம்.நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்"

  >>>>>>>>>>>>

  அடப்பாவமே ஏன்யா ஏன் என்னமோ நெனச்சீங்க!

  ReplyDelete
 63. ச்சே கடைசில என்னையும் புலம்ப வச்சிட்டாங்களே...

  சாமி முடியல...

  //

  மாம்ஸ்!போங்கடா போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கடான்னு சொல்றிங்களா?

  ஆஆஆ....ஹாஆஆஆஆஆ

  ஹி ஹி!

  ReplyDelete
 64. இங்கையும் சண்டையா என்ன கொடுமை சரவணன் எல்லா இடத்திலும் ஒரே சண்டையாக இருக்கே?

  ReplyDelete
 65. ஏன் சென்னையில பிளாட் குடுக்கணும்,ஹனோயில குடுத்தா சீப்பா இருக்கும்ல?

  ReplyDelete
 66. @கோகுல்

  "கோகுல் said...
  ச்சே கடைசில என்னையும் புலம்ப வச்சிட்டாங்களே...

  சாமி முடியல...

  //

  மாம்ஸ்!போங்கடா போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கடான்னு சொல்றிங்களா?

  ஆஆஆ....ஹாஆஆஆஆஆ

  ஹி ஹி!"

  >>>>>>>>>

  எத்தன வருசம்தான் அதையே சொல்றது மாப்ள...முதல்ல நேர்மையா நாம படிப்போம் ஹிஹி!

  ReplyDelete
 67. @K.s.s.Rajh

  "K.s.s.Rajh said...
  இங்கையும் சண்டையா என்ன கொடுமை சரவணன் எல்லா இடத்திலும் ஒரே சண்டையாக இருக்கே?"

  >>>>>>>>>>

  மாப்ள இது சண்ட இல்ல கருத்து தெளிவு படுத்தறது...தெளிய தெளிய....ஹிஹி!

  ReplyDelete
 68. @Yoga.S.FR

  " Yoga.S.FR said...
  ஏன் சென்னையில பிளாட் குடுக்கணும்,ஹனோயில குடுத்தா சீப்பா இருக்கும்ல?"

  >>>>>>>>>>>

  இங்கன வெளிநாட்டுக்காரர்கள் நில புலன் வாங்க முடியாதுங்க...நாட்டையே எழுதி கொடுக்க இது நம்மூரு இல்லீங்கோ ஹிஹி!

  ReplyDelete
 69. உள்குத்தா இருக்கும்ன்னு பார்த்தா...இதென்ன நேரடி குத்தாவே இருக்கு....
  துணிச்சலான கருத்துக்கள், பாராட்டுக்கள்
  இந்தப்பதிவுக்காக யாராவது தக்காளிக்கு ஒரு மில்லியன் டோங்க் அனுப்பவும்

  ReplyDelete
 70. வணக்கம் மாப்பிள!
  நீண்ட நாளா தக்காளிய பார்கலயேன்னு இன்று வந்தா..  வந்த நேரம் சரியில்லபோல.. மாப்பிள நான் அடுத்த தபா வாரேன்யா..!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி