முல்லையும்...பிரபலங்களும்!

வணக்கம் நண்பர்களே...இன்றைய டாப் விஷயம் முல்லை...இதை இந்த நிகழ்ச்சியில் வரும் பிரபலங்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பாருங்க..

லேடி: என்னய்யா இது எப்ப பாரு நொச்சி நொச்சின்னுகிட்டு...இப்போ என்ன கண்டனம் தெரிவிக்கனுமா..இல்ல அடிபட்டவங்களுக்கு துட்டு கொடுக்கனுமா...நான் யாரு தெரியும்ல(!)...கற்பை பறி கொடுத்தவங்களுக்கு நீதி தேவையில்லைன்னு துட்டு வாங்கி கொடுத்த ஆளு...இதுக்கும் பாத்து ஏதாவது செய்யிறேன்...இன்னும் பெரிசா எதுவும் நடக்கலியே...(!?)


தாத்தா: இதான் சான்ஸ் எப்படியாவது இத அரசியலாக்கி குளிர் காஞ்சிப்புடனும்...எப்படியும் இத விட்டா இப்போதைக்கு வேற மேட்டர் கிடைக்காது....ஸ்டார்ட் மியுசிக்....

தமிழா...உன் வீரம் எங்கு போனது..நாம் யார் என்று உலகுக்கு உணர்த்து...யார் என்ன செய்தாலும் அவர்களை அடித்து விடாதே(!)....காலில் மிதித்து விடாதே(!)...மலயாளியை வாயிலேயே மிதித்து விடாதே(!)...நான் சொன்னது புரிந்ததா...நம் வீரம் எங்கே...எங்கே எங்கே...(ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கப்பா!)

கேடி: நான் எம்புட்டு பெரிய ஆளு...ஒரு டேங் புல்லா குடிச்சவன்...விட மாட்டேன்...இதோ போராட்டம் நடத்துறேன்...வாங்கலேய்...வந்து பிரியாணி துன்னுபுட்டு ரெண்டு குவாட்டர் அடிச்சிட்டு போங்க...(எவன் எங்க செத்தா எனக்கென்னா...எந்த கட்சியாவது துட்டு கொடுக்குதா அதான் முக்கியம்!)


ஜினி: கண்ணா பிரச்சன என்னன்னு முதல்ல சரியா பாருங்க...பேசி ஒரு முடிவு எடுத்துக்கலாம்...(ஸ் ஸ் அபா!)

மல்: நான் முதலில் நடிக்க நினைத்தது மலையாள படத்தில்தான்...ஆனால்(அடேய்!)

ஜய்: நான் மாட்டேம்பா....தங்கள அறிவாளிங்கன்னு சொல்லிக்கற முண்ட கலப்பைங்க(!)...எனக்கு போய் சிலை வச்சி இருக்குங்க...அடுத்த என் படத்துக்கு ஏரியா பிரச்சன வந்துடும்..(டேய் பன்னாட..உன்னைய எதால அடிக்கலாம்!)

ல: நான் என்ன சொல்றது...இருங்க வூட்டுக்காரங்க கிட்ட கேட்டு சொல்றேன்(என்ன பண்றது வீட்டுக்காரி மலயாளியாச்சே!)

டிஆர்: டேய் எவன்டா அது..எங்கடா பிரச்சன...என் ஊட்டு பிரச்சினையே பெருசா கீது...தமிழன்டா நான் தமிழன்டா(டேய் நீ முதல்ல மனுசனாடா!)

கோ: இப்படியே தொடர்ந்தால் இந்த நாடு தனியே பிரியும்( யோவ் பிரச்சனைய தீக்கற வழிய பாருங்க...கொய்யால எப்ப பாரு...!)

மரம் வெட்டி: எங்க பிரச்சன...எங்க...நான் கொஞ்சம் தூங்கிட்டேன்..அந்த பிஞ்சில பழுத்தவன் தான் இதுக்கு காரணம்...(இந்த நாதாரிய போட்டு கொளுத்துங்க முதல்ல!)

பொது ஜனம்: எப்படியாவது பிரச்சனைய சுமூகமா முடிக்க பாருங்க...

தாத்தா: அப்படியெல்லாம் முடிக்க முடியாது...நான் முன்னொரு காலத்தில ரயிலே வராத பாதையில(போதையில!) தல வச்சி என் மொழிய காப்பாத்துனவன்...

பொது ஜனம்: அதுக்கு இப்ப என்னங்க...

தாத்தா: அது வந்து...எம் பொண்ணு வந்ததுல இருந்து டயலாக் மறந்து பூடுது..இருங்க எழுதிட்டு வரேன்...

ஆத்தா ஏதாவது பாத்து பண்ணுங்க...

லேடி: இருங்க அதான் யோசிச்சிட்டு இருக்கேன்...சரி இப்போ நான் ஏதாவது நடவடிக்கை எடுத்தா(!) அதுக்கு பதிலா இன்னும் சில பொருள்களோட விலைய ஏத்த வேண்டி வரும்..ஏன்னா நிர்வாகத்துக்கு துட்டு வேணும்...சரியா...யம்மா...இந்த பிரச்சனைக்கும் துட்டு ஏத்துரதுக்கும் என்னா சம்பந்தம்...

அதெல்லாம் எனக்கு தெரியாது...ஓட்டு போட்டேல்லா..போட்டேல்லா...

ஸ் ஸ் அபா எல்லாம் கலி முத்திடுச்சி....கடவுளே...சீக்கிரத்துல இதுக்கு ஒரு நல்ல வழி காட்டு...இப்படி சரியான வழிகளை செய்ய வேண்டியவங்க எல்லாம் அமைதி காத்தா யாரு தான் இந்த பிரச்சனைய முடிக்கப்போறது......?

கொசுறு: இது தாங்க இன்றைய நிலை...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. wonderful vikki !!
  கிசு கிசு பாணியில் எழுதினாலும் எல்லோரையும் கண்டு பிடிக்கிற மாதிரி எழுதிய விதம் ரசிக்கத் தக்கது

  ReplyDelete
 2. நல்லா சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 3. இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
  நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

  http://www.change.org/petitions/central-government-of-india

  நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

  ReplyDelete
 4. இன்றைய தமிழக அரசியல்வாதிகளின் மற்றோரு முகத்தை தோலுரிச்சி காட்டி இருக்கேங்க மாப்ள..சபாஷ்..

  ReplyDelete
 5. விடுங்க. கேப்டன் போராட்டம் மூலமா சுமூக தீர்வு கிடைக்கும் :))

  ReplyDelete
 6. அருமை.
  பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. கொடுமை இம்ம்புட்டு தெளிவா சிந்தித்த மாம்ஸ்க்கு ஒ போடு - இது தான் உண்மையான நிலைமையோ

  ReplyDelete
 8. தாத்தாவை அடிச்ச நக்கலை அந்த ஆளுபடிச்சான்னு வைங்க வயிறு வலிக்க சிரிப்பாரு...மாமா லேடி பெயரைத்தான் கேடின்னு வைக்கனும் போல....சூழ்நிலை அப்படித்தான் இருக்கு..

  ReplyDelete
 9. வணக்கமுங்க!சொரணை கெட்டவன் தமிழன்னு இன்னிக்கு நேத்தா தெரியும்?

  ReplyDelete
 10. தக்காளி அப்படி போட்டுத்தள்ளு....!

  ReplyDelete
 11. ல: நான் என்ன சொல்றது...இருங்க வூட்டுக்காரங்க கிட்ட கேட்டு சொல்றேன்(என்ன பண்றது வீட்டுக்காரி மலயாளியாச்சே!) //

  அடங்கொன்னியா ல'யும் மலையாளி'தாண்டா...!!

  ReplyDelete
 12. கோ: இப்படியே தொடர்ந்தால் இந்த நாடு தனியே பிரியும்( யோவ் பிரச்சனைய தீக்கற வழிய பாருங்க...கொய்யால எப்ப பாரு...!)//

  ஹா ஹா ஹா ஹா நீ எதுக்குய்யா பைல்ஸ் வந்தாப்ல கத்துரே..

  ReplyDelete
 13. தாத்தா: அது வந்து...எம் பொண்ணு வந்ததுல இருந்து டயலாக் மறந்து பூடுது..இருங்க எழுதிட்டு வரேன்...//

  கொய்யால எட்றா அந்த அருவாளை.....

  ReplyDelete
 14. தம்பி உருப்படியா ஒரு பதிவை போட்டிருக்கே போல ஹி ஹி

  ReplyDelete
 15. //மல்: நான் முதலில் நடிக்க நினைத்தது மலையாள படத்தில்தான்...ஆனால்(அடேய்!)//

  சூப்பர் அண்ணே...செம செம ...

  ReplyDelete
 16. இங்க கருத்து சொல்லவர நண்பர்கள் எல்லாரும் இத்த சொடுக்கி நம்ம ஏரியா பக்கம் வந்துட்டு போங்க... .....குறும்(பு)படம்

  ReplyDelete
 17. ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துடலாமா மாம்ஸ்???

  ReplyDelete
 18. எல்லாம் கலி முத்திடுச்சி.

  ReplyDelete
 19. சிறப்பான கற்பனை..

  ReplyDelete
 20. சிந்தனை கற்பனை மாம்ஸ்

  ReplyDelete
 21. கற்பனை அருமை மாம்ஸ்.. எவ்வளவு சீரியஸ் மேட்டரையும் சிரிப்பா ஆக்கிடுறீங்களே எப்புடி !!??

  ReplyDelete
 22. mika sirantha pathivu ularththam kondavai parattukal

  ReplyDelete
 23. தமிழன்டா நான் தமிழன்டா(டேய் நீ முதல்ல மனுசனாடா!)............//////////////////////உனக்கு கண்ணுல ஏதோ கோளாறு இருக்குன்னு நினைக்கிறேன் ...உண்மையில் டி.ஆர். மனுசனா?

  ReplyDelete
 24. ! சிவகுமார் ! said...

  விடுங்க. கேப்டன் போராட்டம் மூலமா சுமூக தீர்வு கிடைக்கும் :))
  ............//////////////////////

  ஆமாம் முல்லை பெரியாறு தண்ணியை வைத்துதான் தமிழ்நாட்டில் சரக்கு தயாரிக்க படுகிறது . அது வரவில்லை என்றால் நமக்கு சரக்கு பஞ்சம் வந்துவிடும் என்று யாராவது அவரிடம் சொன்னால் போதும்...அதன் பிறகு கேப்டன் அதிரடியை மட்டும் பாருங்க பூச்சாண்டி சீ..சீ ...உம்மன்சாண்டி பாக்கீஸ்தானுக்கே தஞ்சம் போய்விடுவார் ...

  ReplyDelete
 25. பதிவு ரெகலகட்டுது... மாம்ஸ்...

  ReplyDelete
 26. மாம்ஸ்..
  இன்றைய நிலைய
  அப்படியே புட்டுபுட்டு வைச்சுடீங்க..

  ReplyDelete
 27. வித்தியாசமாக அலசல் பாஸ்! கலக்குறீங்க...
  பகிர்விற்கு நன்றி!
  சிந்திக்க :
  "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

  ReplyDelete
 28. வணக்கம் மாப்பிள!

  அரசியல் வியாதிக்குள் இந்த பிரச்சனை அகப்பட்டால் தீர்வு இல்லபோல.. அவனவன் இதிலேயும் எப்படி பிழைப்பு நடத்தலாம் என்றுதான் பார்க்கிறாங்க..!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி