பேச்சு(!)வார்த்தை! - முடியல...!

வணக்கம் நண்பர்களே...



எங்கு திரும்பினும் பேச்சு வார்த்தை தான்...அதை பற்றிய பதிவு இது...

எங்கெங்கு காணினும் சக்தியடான்னு சொல்லிட்டு போனாரு ஒருத்தரு(!)...இப்போ எங்க பாத்தாலும் பேச்சு பேச்சு...அடங்கப்பா...


உலை மூடனும்னாலும் பேச்சி அதையே துறக்கனும்னாலும் பேச்சி...


அணை இடிக்கனும்னாலும் பேச்சி...அதை கட்டனும்னாலும் பேச்சி..

பொண்ண களி திங்கற இடத்துல இருந்து காப்பாத்தி கொண்டு வர பேச்சி(!)..

நாடே நாசமா போனாலும்...சென்ட்ரல் மம்மிக்கிட்ட பொம்மையோட பம்மல் பேச்சி!...

அமைச்சர் செவுலுல அடி வாங்கினாலும் பேச்சி...அதை காந்தியம்னு சொன்னாலும் பேச்சி..

பஸ் டிக்கெட் விலை ஏத்தினாலும் பேச்சி...பஸ்ஸே விடலன்னாலும் பேச்சு...


பெட்ரோல் விலை ஏறினாலும் பேச்சி...வவுறு எரிஞ்சாலும் பேச்சி...

குழந்தை குடிக்கிற பாலு விலைய ஏத்தினாலும் பேச்சி...இரக்க மாட்டேன்னு சொன்னாலும் பேச்சி..

கற்பு ரேட்டு போட்டு வித்தாலும் பேச்சி...துட்டு எவ்ளோ கெடசிதுன்னு பேச்சி!..

தம்மாத்துண்டு கச்சை கட்டுனவங்க எட்டி உதைச்சாலும் பேச்சி...அவன்கிட்ட பம்முனாலும் பேச்சி...

வெள்ளை சட்டை போட்டவனுங்க பிரச்சன வந்தா ஓடிபூட்டாலும் பேச்சி...மம்மிகிட்ட பம்மிகிட்டு இருந்தாலும் பேச்சி..

காந்தியம் காந்தியம்னு சொன்னாலும் பேச்சு...அதையே உதையா வாங்கிகிட்டும் பேச்சி...

பகைவனுக்கு அருள்வாய்ன்னு பேச்சி...அவன் நம்ம வயித்துலேயே அடிச்சாலும் பேச்சி...

தண்ணி தண்ணின்னு பேச்சி...அதையே பாட்டில்ல அடைச்சி வித்தாலும் பேச்சி...

பேச்சு பேச்சு பேச்சு...சுதந்திரம் கெடச்சதுக்கப்புரம் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை பேச்சி...வேற என்னத்த கிழிக்கப்போறோம்...!


போதும்டா பேசுனது...அவனுங்க செயல்ல கரீட்டா இருக்கானுங்க...நாம பேசி பேசியே வீணா பூட்டோம்...மாறுங்க நிஜ உலகத்துக்கு வாங்க...நம்ம ஊர எப்படி காப்பத்தப்போறோம்னு சிந்திங்க...ஸ்ஸ் அபா முடியல முடியல..

கொசுறு: நானும் என் பங்குக்கு பேசிட்டேன்...இந்த மானம் கெட்ட பொழப்பை எப்படி மாத்தப்போறேன்..
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

22 comments :

  1. ஸ்......அபா.....தமிழன் பேச்சிலதாங்க கெட்டிக்காரன்........ஹிஹி

    ReplyDelete
  2. பய புள்ள இன்னைக்கு உருப்படியான பதிவு போட்டிருக்கானே, திருந்திட்டானா?

    ReplyDelete
  3. பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

    என் தளத்தில்
    'தனிமை தரிசனம்'

    ReplyDelete
  4. உருப்படாம பேசியே கொல்றவங்களைப் பத்தி
    ஒரு உருப்படியான பேச்சை
    காணொளியாகவும் பதிவாகவும் கொடுத்து
    அசத்தியமைக்கு மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மாம்ஸ்.... ஆதங்கம் சரிதான்.... :-)

    ReplyDelete
  6. வணக்கமுங்க!நானும் என் பங்குக்கு பேசிக்கிறேன்!மகா ஜனங்களே,......................................................................!!!!!

    ReplyDelete
  7. எலேய் பேசுனாதானே காரியம் நடக்கும், நீ பேசாம எப்பிடிடா எம் எல் ஏ ஆவாய் சொல்லு...?

    ReplyDelete
  8. எங்கெங்கு காணினும் பேச்சி, பேசுவதற்கு சம்பளம் கிடைக்கும் இடம் நீரா ராடியா.....!!!

    ReplyDelete
  9. சரியா போச்சு, சொல்லற சும்மா இருன்னு சொல்லாம சொல்லி விடுவீங்க போலிருக்கே.. அண்ணா உங்கள நம்பி அரசியல்ல இறங்கிடலாம்னு இருந்தேன்... ஏமாத்தி போடாதீங்க..

    ReplyDelete
  10. மாமு! திரும்பத் திரும்ப பேசற நீ !

    ReplyDelete
  11. //அவனுங்க செயல்ல கரீட்டா இருக்கானுங்க...நாம பேசி பேசியே வீணா பூட்டோம்..//
    Super maams!

    ReplyDelete
  12. எவ்ளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?

    ReplyDelete
  13. பேசலான தமிழன் செத்துருவான்.. பேச்சு நம் உயிர் மூச்சு...




    உங்க கருத்த சொல்லுங்க காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  14. பேசி பேசி தான் வீணாக போய் கொண்டிருக்கிறோம் அருமையா சொன்ன மாப்ள

    ReplyDelete
  15. மாப்ள எப்பவுமே ரைட்டு தான்..

    ReplyDelete
  16. பேச்சி,பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.,
    சும்மாவா பாடினார் மக்கள் நாயகன்(?)

    ReplyDelete
  17. பேசியே கெடுத்தவரு கலைஞரு...
    பேசாம கெடுக்கறவரு
    மண்ணு மோகனு...

    ReplyDelete
  18. சரியாச் சொன்னீங்க....
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  19. மாம்ஸ், நீங்க பேசுறது நம்ம காதுக்கு மட்டுமே கேட்குது... அரசாங்கத்துக்கு கேட்கனுமே? என்ன செய்யலாம்???

    ReplyDelete
  20. கேரளாவிலிருந்து 282 பேர் அகதிகளாக,தமிழகம் திரும்பியிருப்பதாக செய்தி வருகிறதே,உண்மையா?யாராச்சும் சொல்லுங்கப்பா!

    ReplyDelete
  21. இதென்ன பட்டணம் எல்லாம் பட்டணம் ஸ்டைலில் நானும் படிச்சுப் பார்த்தேன் அண்ணாச்சி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

    ReplyDelete
  22. பஸ் டிக்கெட் விலை ஏத்தினாலும் பேச்சி...பஸ்ஸே விடலன்னாலும் பேச்சு./

    பேச்சு பேச்சாத்தான் இருக்கணுமுன்னு புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி