விடுகதையா இந்த காட்சி..- ஏம்மா ஏன்?

வணக்கம் நண்பர்களே...



திடீர்ன்னு ஏற்ப்பட்ட மின்தடையா(பெண்தடயா!) இல்ல ரொம்ப நாளா இருந்த முடையான்னு சரியா தெரியல....

என்ன இருந்தாலும் ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி(!) இப்படி இருந்து வந்த ரெண்டு பேர் பிரிய எது காரணம்(!)...யாரு காரணம்...அய்யோ யாரு கண்ணு பட்டதோ தெரியலியே(!)...எம்புட்டு நாளா எங்க மக்களுக்காக கூட இருந்தே பல வழிகள சொல்லி கொடுத்துட்டு இருந்த அக்காவ வேணாம்னு சொல்லிட்டாங்களே...

நடக்குற வம்புல ஏதாவது நடந்து மீண்டும் நிர்வாகத்த இழக்க வேண்டிய நிலைமை வந்தால்(!)...நிர்வாகத்தை கைப்பற்ற ரெடியா இருந்தவங்கள கழட்டி விட்டுடாங்களே...


ஏற்கனவே...தண்ணி தரமாட்டான் பட்டிக்கு(!)..உன்னுதா என்னுதா வம்பு(!) விஷயமா போயிருந்தப்போ எட்டிப்பாக்காத(!) பயலுங்க எல்லாம்...அடுத்து போன சகோ ஆளுங்களுக்கு மட்டும் உறுதுணையா நின்னது தெரிஞ்சு போச்சே...இதுக்கு காரணம் யாருங்கோ...

இதுல என்ன உள்குட்டோ ச்சே உள்குத்தோ...யாருப்பா அங்க எதிர் தரப்புல கைதட்டுறது...நீங்க தான் சீன் போடுவீங்களா நாங்க போடா மாட்டோமா(!)...இனி இந்த கப்பல் தனியே பயணிக்குமா...இல்லை முன்பொருமுறை உடைத்த துடுப்பை மீண்டும் எடுத்துக்கொண்டது போலாகுமா...எல்லாம் சிவ மாயம் என்பார்கள்...இங்கே எல்லாம் பய பயம் ஆகிப்போனதோ....

என்ட பிரபோ..ச்சே டேய் தள்ளு...தாயே சூரி மாரி காளி என்ன ஆச்சி உனக்கு...ஏன் இந்த கோவம் பொறுத்தருளம்மா...

சட்டம் என்ன சொல்லும்...செவுத்துல ஆணி அடிக்காத்தீங்கன்னு சொல்லுமோ...இல்ல உள்ள தூக்கி போடுங்க அந்த கோணியன்னு(!) சொல்லும்மா தெரியல...

எனவே சட்டுன்னு நீங்க யோசிச்சி கப்புன்னு கழட்டி விட்டாப்ல தெரியல...ரொம்ப நாளா புகைஞ்சிக்கிட்டு இருந்தது இப்போதான் வெளிய வந்து இருக்கு போல...

எனிவே ஸ்டார்ட் மியூசிக்...பட் எதிர் பார்ட்டிங்க உஷாராயிக்காங்க...என்னவோ ப்ளான் பண்ணிட்டாங்க...

கொசுறு: அடுத்த டான்ஸ் எங்கப்பா சாமிகளா!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

28 comments :

  1. முதல் ஆட்டம் நான்தான்...

    ReplyDelete
  2. என்னடா எல்லாம் செம உள்குத்தா இருக்கு ஊருக்கு வரணுமா வேண்டாமா..?

    ReplyDelete
  3. நல்ல சமயத்தில் சரியான பதிவு மாப்பிள.

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணே..
    சிட்டுவேசன் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    அம்மா தன்னோட்ட சொத்தைக் காப்பத்த எடுத்த அதிரடி வழி!
    ஹே....ஹே...

    ReplyDelete
  5. ஓட்டு போட ஊருக்கு வரணும் நியாபகம் வச்சிக்கோ ஆமா...?

    ReplyDelete
  6. இப்போ எதிர் தரப்புகாரங்க நீங்க சொல்வது போல திண்டாடித் தான் இருப்பாங்க.
    ஹே..ஹே...

    ReplyDelete
  7. வணக்கம் மாம்ஸ்

    இதுதான் சரியான உள்குத்து பதிவு..

    முதல்ல வாசிக்கும் போது ஒண்ணும்புரியல..

    மூனாவதா வாசிச்சப்பதான் புரிஞ்சது

    ஓட்டு போட வருவீங்களா..?

    ReplyDelete
  8. தமிழ்நாடு மக்களுக்கு,வாயைக் கொறிக்க நெறைய மேட்டர் இருக்கு மாம்ஸ்...
    #நான் பாகிஸ்தானுய்யா!!!!
    :-)

    ReplyDelete
  9. @நிரூபன்

    அடடே இன்னும் அடி செமத்தியா விழும் பாருங்க!

    ReplyDelete
  10. ஆனால் இவங்கள நம்பமுடியாதே மாம்ஸ்

    வழக்கு விசாரணைக்காக ஊர ஏமாத்துர வேலைன்னு தோணுது

    ஏற்கனவே பிரிஞ்சு கூடுனவங்கதானே

    ReplyDelete
  11. @சம்பத் குமார்

    கூடுரதுக்கும் வாய்ப்பு அதிகம்!

    ReplyDelete
  12. பிரிவு : அடுத்த எலக்‌ஷன் வரைக்கும்

    ஓண்ணு சேர்ந்தப்புறம் இவங்களும் டயலாக் அடிப்பாங்க..

    எங்களுக்கும் கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும் அப்படின்னு

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  13. முன்பொருமுறை உடைத்த துடுப்பை மீண்டும் எடுத்துக்கொண்டது போலாகுமா..// இதுக்குதான் அதிக சான்ஸ் இருக்கு மாப்ள..

    ReplyDelete
  14. முன்னாடியே எடுத்திருக்க வேண்டியது... இப்பவாவது எடுத்தாங்களே அதுவரைக்கும் சந்தோசம்....

    ReplyDelete
  15. மாம்ஸ் இது புதுசு இல்லையே இது ஏற்கனவே ஒரு வாட்டி ஆனது தானே 1997ன்னு நினைக்கிறேன் அப்புறம் 11 மாசம் கழிச்சு அம்மா தானே போயி சேர்த்துக்கிட்டாங்க

    ReplyDelete
  16. இனி கொஞ்ச நாளைக்கு தோட்டத்துல ஒரு மாற்றம் பார்க்கலாம்.

    ReplyDelete
  17. வணக்கமுங்க!வருஷக் கடேசில இதெல்லாம் நல்லதுக்கில்ல,சொல்லிப்புட்டேன்!ரொம்ப நாளா ஊடல் இல்லேன்னு இப்புடி ஒரு பிட்டைப் போட்டா,அப்புடியே நம்பிடுறதா?

    ReplyDelete
  18. எனிவே ஸ்டார்ட் மியூசிக்...பட் எதிர் பார்ட்டிங்க உஷாராயிக்காங்க...என்னவோ ப்ளான் பண்ணிட்டாங்க...///அவரும் (ஸ்டார்ட் மியூசிக்)ஒரு பதிவு போட்டிருக்காரு!ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  19. கோவி.....இனி கொஞ்ச நாளைக்கு தோட்டத்துல ஒரு மாற்றம் பார்க்கலாம்.///"பூ" மரமெல்லாம் புடிங்கிப் போட்டுடுவாங்களோ?

    ReplyDelete
  20. 72 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்! அதுக்குள்ளய சமாதானம் ஆக வாய்ப்பிருக்கு!

    ReplyDelete
  21. கலக்கல் கலாய்ப்பு மாம்ஸ்...

    ReplyDelete
  22. என்னமோ நடக்குது உலகத்துல.. என்னமோ நடக்குக்து, மர்மமா இருக்குது...



    இன்று.

    காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

    ReplyDelete
  23. சட்டம் என்ன சொல்லும்...செவுத்துல ஆணி அடிக்காத்தீங்கன்னு சொல்லுமோ...இல்ல உள்ள தூக்கி போடுங்க அந்த கோணியன்னு(!) சொல்லும்மா தெரியல...
    :-))

    ReplyDelete
  24. அடுத்த டான்ஸ் எங்கப்பா சாமிகளா!

    ReplyDelete
  25. அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி