புல்லட்டுல போன கருவாடு! - (TN)

வணக்கம் நண்பர்களே...
சமீபத்தில் நண்பரின் குரல் ஒலித்தது நெட் பேசியில்(net phone!)....

என்னடா எப்படி இருக்க....

நல்லா இருக்கேன் மாப்ள...சொல்லுங்க...நீங்க எப்படி இருக்கீங்க...

என்னய்யா ரொம்ப மரியாத கொடுக்கற...ரொம்ப வருஷம் ஆனதால...(பேச்சு தொடர்ந்து போனது...பேச்சு முடிந்த பொழுது நான் அவனுடன் சுற்றி திரிந்த நாட்கள் ஞாபகம் வந்தது...அதிலிருந்து!)

டேய் மாப்ள...இன்னைக்கு நைட்டு ஏதாவது வேல இருக்கா உனக்கு...

ஏன்?

இல்ல கொஞ்சம் வெளிய போகணும்...

அதுக்கென்ன மாப்ள வீட்ல சொல்லிட்டு வந்துடறேன்...ஆனா தண்ணி அடிக்க மாட்டேன் சரியா...ஏன்னா அடுத்த நாள்ல இருந்து நான் வேற வீடு தேடனும் எங்கப்பாரு ரோட்ல வச்சே கிழிச்சிபுடுவாரு என்னைய...ஹிஹி!

சரி...நைட் நான் வந்து உன்ன வீட்லயே பிக்கப்பன்னிக்கறேன்...

(இரவு வந்து சேர்ந்த நண்பனோடு கிளம்பினேன்!)

ஆமா மாப்ள இப்பவே மணி பத்து ஆகுது...எங்க போகணும் யார பாக்கணும்(அவன் பயங்கர கோபக்காரன் என்பதால்...எளிதில் பேசிவிட முடியாது!)..

இல்லடா ஒருத்தன் எங்கிட்ட 10,000 ரூவா வாங்கிட்டு தராம இழுத்தடிசிட்டு இருக்கான் அவன நைட்ல போனத்தான் பாக்க முடியும்..அதான்...

சரி...வண்டிய புடி....வீட்டுக்குள்ள போய்ட்டு வந்துடறேன்....(உள்ள போய் 5 நிமிடத்தில் திரும்பி வந்தான் நண்பன்!)

என்னப்பா இப்படி குப்புன்னு அடிக்குது...

ஒரு Half அடிச்சா பின்ன மல்லிப்பூ ஸ்மெல்லா அடிக்கும்...ஏன்னா இப்போ தான் எனக்கு இந்த பாவ புண்ணியம் ஞாபகம் வராது...சரி நீ ஓட்டு வண்டிய...

அடப்பாவி...என்னயவேற எதுக்கு கூப்ட...

நீதான் அதுக்கு சரியா வருவேன்னு தான்(இது வேறயா!)

(அங்கிருந்து கிளம்பி(!) 15 மைல் தூரத்தில் இருந்த அந்த இன்னொரு கடன் வாங்கிய நண்பரின் வீட்டின் வாசல் சென்றடைந்தோம்!)

டேய் வெளிய வாடா வென்று...!

(ஓட்டமும் நடையுமாக வெளியே வந்த அந்த நண்பன்....) 

வாடா ஆனந்த்...வா உள்ள போய் பேசுவோம்...

அதெல்லாம் வேணாம்...என் துட்ட கொடு முதல்ல...கொய்யால நான் உன்கிட்ட கொடுத்து 6 மாசமாச்சி..இதனால என் வீட்ல ரொம்ப பிரச்சன...

இப்போ இல்ல...என்ன பண்ண சொல்ற...

அடிங்க(அவன் முதுகில் வைத்திருந்த அருவாவை உருவினான்!...அப்போது தான் கவனித்தேன் பாவி கையோடு அருவாளை கொண்டு வந்து இருக்கிறான் என்று...!)


நண்பன் ஓட..இவன் அவனை துரத்திக்கொண்டு ஓட...இரவு 12.30 மணிக்கு நான் இவன் பின்னாடி ஓடிக்கொண்டு இருந்தேன்...

கடன் வாங்கியவன் சரியான ஓட்ட பந்தய வீரனாகத்தான்(!) இருக்கணும்...ஓடியே விட்டான்!..எங்க இருவருக்கும் மூச்சிரைத்தது...

மாப்ள தப்பிச்சிட்டான்...நாளைக்கு வருவோம்...


என்னாது நாளைக்கா...டேய் யப்பா...நான் இந்த விளையாட்டுக்கு வரல...நீ என்னடான்னா அய்யனாரு கணக்கா அருவா தூக்கிட்டு ரோட்டல ஓடுற...

என்ன பண்றது கடன் கொடுத்தா இப்படித்தான்...(ஒரு வெளிச்சத்துடன் ஒரு பைக் எங்கள் அருகில் வந்து நின்றது!..இரு காவலர்கள்(ஹிஹி!) வண்டியில் இருந்து இறங்கினர்..)


டேய்...யார்ரா நீங்க...


சார்..இங்க ஒரு பிரெண்ட பாக்க வந்தோம்..(நான்!)


இவன் ஏன் ஒரு மார்கமா பாக்குறான்...


இல்ல சார் அவனுக்கு உடம்பு சரி இல்ல...


ஏய் என்ன முறைச்சி பாக்குற...தூக்கிட்டு போய் லாடம் கட்டிடுவோம் ஜாக்கிரதை...எந்த ஏரியா உனக்கு...என்ன குடிச்சி இருக்கீங்களா...


(வந்த இரு காவலர்களும்(!) முழு போதையில் இருந்தார்கள்!)


இங்கதானுங்க பக்கத்துல...


ஏரியாவ சொல்றா...@#$#@


சார் மங்காபுரம்...


ஓ...என்ன குடிச்சிட்டு கலாய்க்கிறீங்களா...


சார் நீங்கதான் ஓவரா குடிச்சிருக்கீங்க போல...பாத்து சார் விழுந்துடப்போறீங்க..


அடிங்க எங்களையே கலாய்கிரியா...#######


(அவர் வாயிலிருந்து அசிங்கமான வார்த்தைகள் வர..மீண்டும் முதுகிலிருந்த ஆயுதத்தை இவன் உருவ..ஸ் ஸ் அபா...அடுத்த காட்சி ஸ்டார்ட் ஆனது..)


யோவ் நில்லுய்யா...இந்தாய்யா உன்னோட வாக்கி டாக்கிய எடுத்து கிட்டு போய்யா...


போங்கடா கொய்யால...(அவர்கள் ஓடிய ஓட்டத்தை பார்க்கணுமே...இதற்கும் இரு காவலர்களும்(!) அதிகமாக குடித்து இருந்தனர்!)


டேய் வாடா வீட்டுக்கு போகலாம்...


இருடா அவன் வீட்ல இருந்து ஏதாவது எடுத்துகிட்டு போகனும்டா...


திறந்து இருந்த வீட்டில் உள்ளே சென்று ஒரு சிறிய மூட்டையை எடுத்து வந்தான்...


என்னடா இது...


மாப்ள வந்ததுக்கு கருவாடு இருக்குற இந்த பெரிய டப்பாத்தான்டா லாபம் என்றான்...!


கொசுறு: நாங்கள் புல்லட்டை எழுப்பி அங்கிருந்து கிளம்பும்வரை அந்த மாவீரர்கள் யாரையும் காணோம்...!


நீதி: மக்களே...உங்கள் சொந்த விஷயங்களுக்கு நண்பர்களையும் சேர்த்து பலிகடா ஆக்கி விடாதீர்கள்!(Friend is very important for our life!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. சரியாச் சொன்னீங்க மாம்ஸ்.

  ReplyDelete
 2. >>
  ஓ...என்ன குடிச்சிட்டு கலாய்க்கிறீங்களா...


  சார் நீங்கதான் ஓவரா குடிச்சிருக்கீங்க போல...பாத்து சார் விழுந்துடப்போறீங்க..  haa haa ஹா ஹா இவனே ஒரு மொடா குடிகாரன், இதுல போலீஸை குறை சொல்றான், ஹய்யோ அய்யோ

  ReplyDelete
 3. இந்த பதிவு சொல்லும் நீதி - குடிகார பசங்களொட சாவகாசம் வெச்சுக்க வேணாம்

  தம்பி விக்கி, இனி சேட்ல வந்து மிரட்னே தக்காளி மனோவை விட்டு வெட்டிடுவேன் ந்க்கொய்யால

  ReplyDelete
 4. >>டேய் மாப்ள...இன்னைக்கு நைட்டு ஏதாவது வேல இருக்கா உனக்கு...

  ஏன்?

  இல்ல கொஞ்சம் வெளிய போகணும்...

  haa haa தக்காளீக்கு பகல்லதான் வெலை, ஆஃபீஸ் பி ஏ மாலை 6 மணிக்கு கிளம்பிடும், அதுக்கப்புறம் அய்யா ஃபிரீதான் ஹய்யோ அய்யோ

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்-கடைசி வரி!

  ReplyDelete
 7. கலக்கல் பகிர்வு.

  ReplyDelete
 8. அடுத்தபதிவு...கருவாட்டு குழம்பு..தொட்டுக்க OLD BOAT RAM...
  சரியா மாம்...

  ReplyDelete
 9. மாப்பு செம்ம கலக்கல்...

  ReplyDelete
 10. ஹா ஹா ஹா! செம்ம கலக்கல் மாம்ஸ்! :-)

  ReplyDelete
 11. டேய் என்னடா நடக்குது இங்கே, ராஸ்கல் நீ குடிச்சிருக்க மாட்டேன்னு நம்புறோம்...!!!

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் says: December 23, 2011 9:19 AM Reply
  >>
  ஓ...என்ன குடிச்சிட்டு கலாய்க்கிறீங்களா...


  சார் நீங்கதான் ஓவரா குடிச்சிருக்கீங்க போல...பாத்து சார் விழுந்துடப்போறீங்க..  haa haa ஹா ஹா இவனே ஒரு மொடா குடிகாரன், இதுல போலீஸை குறை சொல்றான், ஹய்யோ அய்யோ//

  தக்காளியின் டவுசர் அருமையாக உருவப்பட்டது ஹி ஹி...

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார் says: December 23, 2011 9:20 AM Reply
  இந்த பதிவு சொல்லும் நீதி - குடிகார பசங்களொட சாவகாசம் வெச்சுக்க வேணாம்

  தம்பி விக்கி, இனி சேட்ல வந்து மிரட்னே தக்காளி மனோவை விட்டு வெட்டிடுவேன் ந்க்கொய்யால//

  கொய்யால உன்னையும் மிரட்டுரானா எட்றா சண்முகபாண்டி அந்த அருவாளை....

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் says: December 23, 2011 9:22 AM Reply
  >>டேய் மாப்ள...இன்னைக்கு நைட்டு ஏதாவது வேல இருக்கா உனக்கு...

  ஏன்?

  இல்ல கொஞ்சம் வெளிய போகணும்...

  haa haa தக்காளீக்கு பகல்லதான் வெலை, ஆஃபீஸ் பி ஏ மாலை 6 மணிக்கு கிளம்பிடும், அதுக்கப்புறம் அய்யா ஃபிரீதான் ஹய்யோ அய்யோ//

  எதுக்குடா அவன் பர்சனல் மேட்டரை சொல்லி அவனை நாரடிக்கிற ராஸ்கல்...

  ReplyDelete
 15. ஹா.ஹா.ஹா.ஹா. நல்ல அனுபவம் தான் போங்க சுவாரஸ்யமாக இருக்கு

  ReplyDelete
 16. ஹா ஹா ஹா ஹா ஆக மிச்சம் கருவாடு மட்டுமே ஹி ஹி...!!!

  ReplyDelete
 17. ////நீதான் அதுக்கு சரியா வருவேன்னு தான்(இது வேறயா!)////

  ஹா.ஹா.ஹா.ஹா நல்லாத்தான் உங்க நண்பர் யோசிக்கின்றார்

  ReplyDelete
 18. வணக்கமுங்க!செம.....................!

  ReplyDelete
 19. மாப்ள அந்த கருவாட்டை என்ன பன்னநீங்க? ஹீ.ஹீ..

  ReplyDelete
 20. /நீதி: மக்களே...உங்கள் சொந்த விஷயங்களுக்கு நண்பர்களையும் சேர்த்து பலிகடா ஆக்கி விடாதீர்கள்!(Friend is very important for our life!)//

  நல்ல நீதி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி