நகைசுவையாளனின் ஆத்திகம்!

வணக்கம் நண்பர்களே...
பல நாட்களாக மனதில் இருந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தே இதை பகிர்கிறேன்...


பெரியார் எனும் மா மனிதனின் பெரு முயற்சியால் தான் நான் உற்பட பலர் அறிய பல இடங்களில் வேலை வாய்ப்பு பெற்று இருக்கின்றனர் என்பது மறுக்கப்பட முடியாத ஒரு மாபெரும் விஷயம்...இப்படி இருக்க பெரியாரின் பல குண நலன்களை விட்டு...அவரின் பலவற்றில் ஓர் கொள்கையான கடவுள் மறுப்பு என்பதை மட்டும் வைத்து தொங்கும் முற்போக்கு இந்நாளைய அறிவுக்கொழுந்துகளை என்ன செய்வது தெரிய வில்லை...


நேற்று வரை கடவுளை நம்பும் மனிதர்களை கிண்டலடித்து கல்லா நிரப்பிய பன்னாடை எனும் ஒரு டபுள் மீனிங் நகைச்சுவை கலைஞன் இன்று திருநள்ளாறு போய் சாமியிடம் மன்றாடும் நிலைமை இன்று எல்லோராலும் கிண்டலடிக்கப்படுகிறது...


பொதுவாக கடவுள் இருப்பு(!) மறுப்பு(!) கொள்கையுடையோர் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்...ஆனால், நேற்று பெய்த மழையில் இன்று துளிர் விட்ட சிலர் மட்டுமே பெரிதாக கூவி வருகிறார்கள்...ஏன் இந்த ரெட்டை வேடம் என்று தெரியவில்லை...


என்னை பொறுத்தவரை இங்கு இந்து கோயில்கள் இல்லை என்ற போதும்...மனதுக்கு தேவைப்படும்போது கிறித்துவ தேவாலயங்களில் சென்று கடவுளை தரிசிப்பது ஒரு புறம் இருந்தாலும்..அதை வெளிக்காட்டிக்கொள்வது என்பது குறைவு...


என்னவோ போங்கப்பா...என்னமோ நாட்டை மாத்துறேன் ரோட்டை மாத்துறேன்னு சொல்லிட்டு எப்ப பாரு தான் மட்டும் அறிவாளி மாதிரியும் அடுத்தவங்க எல்லாம் முட்டாப்பசங்க பசங்க மாதிரியும் சிந்திக்கும் சிலரின் கோமாளித்தனம் அளவை மீறி போய் கொண்டு இருப்பதால் இந்த ஆறுதல் பதிவு...!


போலி பகுத்தறிவாதிகளே முதலில் மஞ்சத்துண்டு போடுபவரின் எல்லை தாண்டி வர முயற்சியுங்கள்...பின் ஊருக்கு உபதேசம் செய்யுங்க...நாலு புக்க படிச்சிபுட்டு பினாத்துறத நிறுத்துங்க...தங்களை திருத்திக்க முடியாதவங்க ஊருக்கு சங்கு ஊதுறதை நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...   


கொசுறு: இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. வணக்கம் மாம்ஸ்

  முதல் வரவு

  ReplyDelete
 2. மிகச் சரி
  இப்போது கடவுள் மறுப்பை மட்டுமே
  வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட பலர்
  பல துறைகளிலும் நிரம்பி வருகிறார்கள்
  ஏனென்று புரியவில்லை
  சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு

  ReplyDelete
 3. இதுல எனக்கும் உடன்பாடு உண்டு மாம்ஸ்.

  இப்ப வெளில நாத்தீகம் சொல்ற பலபேர் உள்ளூர ஆத்திகரா இருப்பது இரட்டைவேடம் போடுவது மாதிரி இருக்கு..

  அதுக்கு நான் ஆத்திகன்னே அவர் சொல்லிருக்கலாம்.

  இந்த மேட்டர தமிழகத்தின் பிரபல தாத்தாகிட்ட பலதடவை பார்த்து இருக்கிறோம்.கடைசியா தனது மகள் டெல்லிக்கு டூர்(....?) போயிருந்தப்பகூட குடும்பமே திருநள்ளார் போயிட்டு வந்தாங்க..

  இவங்க எல்லாம் தானா திருந்துனாதான் ஆச்சு

  ReplyDelete
 4. என்ன செய்ய சகோ?.....நடிகர் கல்லாகட்டணுமே..

  கடவுள் மறுப்புகொள்கை என்ற போலிமுகமுடி மட்டுமே தங்களை வெளியுலகில் அறிவுஜீவியாய் காட்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு.

  கடவுள் கொடுத்த 6ம் அறிவான பகுத்தறியும் அறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டுமே என்பது அவர்களின் மடத்தனமான கருத்து.

  ReplyDelete
 5. ஆமா மாம்ஸ்...

  ஆனா நான் நாத்திகன் மாம்ஸ்...
  இதை எங்கும் நான் சொல்லுவேன்...
  இரட்டை வேடம் போடாமல்....

  ReplyDelete
 6. அப்படி போடு!

  ReplyDelete
 7. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் குறிபிட்டுள்ள நடிகர், "நான் உண்மையான கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவன் அல்ல, மூட நம்பிக்கைக்கு மட்டுமே எதிரானவன்" என்று தெளிவு படுத்தியுள்ளார், இதை ஒரு படத்தில் வசனமாக பேசியும் உள்ளார். சாலை ஓர மைல் கல்லை கடவுள் என்பது, ராசிக்கல், வாஸ்து , போலிச் சாமியார்கள் போன்றவற்றில்நடக்கும் பித்தலாட்டங்களை கிண்டலடித்தாரே தவிர, இறை நம்பிக்கை கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை.

  ReplyDelete
 8. வயது ஏற ஏற பயம் எல்லா பகுத்தறிவுக்கும் வரும்!

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. தான் உழைப்புக்கு மேல் செல்வம் வேண்டுபவனே...ஆத்திக்கத்தை
  நாடுகிறார்கள் ....

  அது நிலைக்குமா?????

  ReplyDelete
 11. உங்க கருத்துல இருக்கிற உண்மைக்கு நான் தலை வணங்குகிறேன்....ஆனால் மாற்று கருத்து ஒன்றும் உள்ளது உதாரணமாக கண்ணதாசன் பகுத்தறிவு பாசறையில் தீட்டப்பட்ட வைரம், பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார்....விவேக் அவர்களுக்கு சான்ஸ் இல்லை இப்ப அதனால கடவுள் பக்தி வந்திருக்கலாம்....கண்ணதாசன் மாதிரி பகிரங்கமா...ஒத்துக்கமுடியாது...
  ஏன்ன இவர்கள் நடிகர்கள் சொந்த வாழ்க்கையிலும்....

  ReplyDelete
 12. //போலி பகுத்தறிவாதிகளே முதலில் மஞ்சத்துண்டு போடுபவரின் எல்லை தாண்டி வர முயற்சியுங்கள்...//
  ”நச்”

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  என் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்.

  ReplyDelete
 14. வணக்கம்,விக்கி!க(கொ)லைஞர் மேல் என்ன கோபம் உங்களுக்கு????

  ReplyDelete
 15. இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. சரியாக சொன்னீர்கள் அண்ணே

  ReplyDelete
 17. குத்துங்க எசமான்!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 18. ///Yoga.S.FR said...

  வணக்கம்,விக்கி!க(கொ)லைஞர் மேல் என்ன கோபம் உங்களுக்கு????///

  அவர் தமிழ் மக்களின் ஸ்பெசல் கெஸ்ட்... எப்பெப்போவெல்லாம் டைம் கேடைக்குதோ, அப்பப்போ நாலி தட்டு தட்டிடுவோம்....

  :-)

  ReplyDelete
 19. ???? ???? ?? ??????????? ??????? ??? ???????? ?????????? ???? ???? ???????? ???: ???? ??????????? ??????

  ReplyDelete
 20. சாட்டையில் அடித்தாற்ப் போல் சொல்லி உள்ளீர்கள். இவர்களுக்கு பணம் தான் முக்கியம்! நன்றி நண்பா!

  ReplyDelete
 21. மாம்ஸ்

  இவனுக எல்லாம் சினிமா காரனுங்க நம்பபடாது. தமிழனை ஏமாற்றி பணம் பண்ணுவது தான் குறிக்கோள் - இது நம்ம தமிழன் ஏன் உணர வில்லை? என்பது புரியலை - அது தான் அவனுகளுக்கு +.

  முல்லை பெரியார் விசயத்தில் இது வரை எந்த நடிகனோ நடிகையோ வாய திறந்தாங்களா??

  ReplyDelete
 22. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

  ReplyDelete
 23. வணக்கம் பாஸ்,

  நீங்களும் பொங்கியிருக்கிறீங்க.
  இப்போ டாஷ்போர்ட் மூலமா பதிவினைப் படிக்கையில் தான் தெரிந்தது.

  ஹே...ஹே..
  எம்புட்டுச் சொன்னாலும் சில ஜென்மங்களுக்குப் புரியவா போகிறது?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி