பேச்சுலர் - ஹாய் பணமே!

வணக்கம் நண்பர்களே...
இந்த பேச்சுலர் எனும் பேச்சு துணைக்கு ஆளில்லாதவர்கள்(!)..உண்மையில் தங்களை தாங்களே செதுக்கி கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் ஆவர்...அந்த நிலைமையில் சந்தித்த நிகழ்சிகளின் கோர்வைகளே இந்த பதிவுகள்...இதில் பல நண்பர்கள் சந்தித்த விஷயங்களையும் தொகுத்து வருகிறேன் அவ்வளவே...


ஹாய் நண்பா எப்படி இருக்க...


வாய்யா வா..என்ன ஊருக்கு போனியே அப்பா, அம்மா, அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க...


ம்ம்..இப்போ பரவாயில்லை..


என்னடா இப்படி சொல்றே...அக்காக்கு வரன் வந்து இருக்கறதா சொல்லி இருந்த...


அதா..விட்ரா...நடக்கும்போது நடக்கும்...


என்னாச்சி சொல்லு...


இப்போ தெரிஞ்சு என்ன பண்ண போறே...இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது...


இல்ல சொல்லு...உன்னோட குடும்ப நிலவரம் தான் என்ன...?
என் அப்பா நடக்க முடியாம பக்க வாதத்தில விழுந்துட்டாரு...அம்மா உனக்கே தெரியும் இதய நோயாளி...அக்கா என்னை விட 7 வயசு மூத்தவ...என்னைய கஷ்டப்பட்டு ஒரு டிகிரி வாங்க வச்சிட்டாங்க...இப்போ அவங்க வாழ்கைய நான் எப்படியாவது சரியா அமைசிக்குடுப்பேன்னு நெனச்சிட்டு இருக்கு குடும்பமே...இந்த நிலமையில இருக்குற வீடும் கடன்ல ஜப்தியாகர நிலமையில இருக்கு..என்ன பண்றது...இந்த நிலமையில வேலை கெடைக்காம இங்கன நான் நாயி மாதிரி திரியிறேன்..என்னத்த சொல்ல..உன்னைய போல நண்பர்கள் இல்லன்ன...சோறு கூட தினமும் கிடைக்காதுடா...


டேய் அப்படி சொல்லாத...நீ பெரிய ஆளா வருவடா...உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...சரி அத விடு...அந்த சாம்பு கம்பனி interview க்கு போய் இருந்தியே...இன்னைக்கு தானே சொல்றேன்னு சொன்னாங்க...


ஆமாம்டா மாப்ள..போன் நம்பர் கொடுத்து இருக்காங்க...இரு நான் கீழ போயி தாத்தா கடையில போன் பண்ணிட்டு வாறன்..


எலேய் சாப்டியா...


அது வந்து நான் வந்து பேசரனே...


நாயே...தின்னுட்டு போ...இப்போ மணி 9 தான் ஆகுது 10 மணிக்கா போன் பண்ணு....


(இரவு 10 மணி!)


இல்ல மாப்ள வேலை கிடைக்கல...நான் வேற கடன்காரன் கிட்ட ஒரு மாசத்துல பணத்த ரெடி பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...


எவ்வளவு...


75 ஆயிரம் ரூபாய்...


ஏன்டா, அம்புட்டு துட்டு ஒரு மாசத்துல எப்படிடா...


என்ன பண்றது மாப்ள...அவன் ரொம்ப கேவலமா பேசுனான்...நானும் வீராப்பா சொல்லிட்டு வந்துட்டேன்...


டேய் ராஜேசு....(நண்பன் கோபி வருகிறான்...)


என்னடா...சொல்லு என்ன ரொம்ப நாளா காணோம்...


மாப்ள ஒரு மேட்டரு...


சொல்லு...


இந்த பூ(!) ஆஸ்பத்திரி இருக்குல்ல...
ஆமா...அங்க ஒருத்தருக்கு கிட்னி தேவைப்படுதாம்...பெரிய பணக்காரராம்...1 லட்சம் வரைக்கும் கொடுக்க ரெடியா இருக்காராம்...நம்ம கோபாலு போய் இருக்கான்...ஆனா, அவனோடது அவங்க நெனைக்கற போல செட் ஆகல போல...


டேய் மச்சி...எனக்கு சொல்றா...நான் போறேன்டா...சரியான சான்ஸ்டா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடா!...


டேய் வேணாம்டா...இன்னைக்கு நிலைமைக்காக உன் வருங்காலத்த இழக்காதடா..


நீ சும்மா இருடா...நீ சொல்றா எங்க...


(நண்பனின் பேச்சை கேட்க்காமல் அங்கு சென்று பார்த்த போது...இவனுக்கு முன்னே யாரோ ஒரு ஏழை அதனை தாரை வார்த்து விட்டான் என்று இவனுக்கு தெரிந்தது....ரூமுக்கு வந்து அழுது கொண்டு இருந்தான்)


மாப்ள உனக்கு டெலிக்ராம் வந்து இருக்குடா...


அழுது கொண்டே அதை வாங்கி படிக்கிறான்...படித்ததும் ஓடிப்போய் ஊருக்கு போன் செய்கிறான்...


அண்ணே என்னனே ஆச்சி...


தம்பி உங்க அக்கா கடிதாசி எழுதி வச்சிட்டு குடும்பத்தோட கொளுத்திக்கிட்டு இறந்து போச்சிய்யா...அந்த கடிதாசில...நாங்க தான் நல்லா வாழல எங்க வீட்டு ராசாவாது நல்லா இருக்கணும்...அவனை அழ வேணாம்னு சொல்லுங்கன்னு எழுதி இருக்குய்யா....


மனமுடைந்து நின்றான் அந்த இந்நாட்டு மன்னன்...(எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாமே!)


கொசுறு: இப்போது ஒரு கைம்பெண்ணை திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தை இவன்...இன்று பணம் இருக்கிறது(!)...அந்த சொந்தங்கள் இல்லை...சம்பாதிக்கும் பணத்தில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறான்...!..நாம் இந்த பூமிக்கு வந்ததே பல நல்ல காரியங்களை செய்யவே..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. என்ன தம்பி போஸ்ட் போடற டைம் மாறுது?

  ReplyDelete
 2. >>நாம் இந்த பூமிக்கு வந்ததே பல நல்ல காரியங்களை செய்யவே..!

  தக்காளிக்கு என்ன ஆச்சு? நல்ல நல்ல கருத்தெல்லாம் சொல்றானே?

  ReplyDelete
 3. //டேய் அப்படி சொல்லாத...நீ பெரிய ஆளா வருவடா...உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...சரி அத விடு...அந்த சாம்பு கம்பனி interview க்கு போய் இருந்தியே...இன்னைக்கு தானே சொல்றேன்னு சொன்னாங்க...//

  இப்படி உண்மையா உற்சாகப்படுத்துரது உலகத்துலயே நம்ம நண்பர்கள் தான மாம்ஸ்..

  ReplyDelete
 4. //இப்போது ஒரு கைம்பெண்ணை திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தை இவன்...இன்று பணம் இருக்கிறது(!)...அந்த சொந்தங்கள் இல்லை...சம்பாதிக்கும் பணத்தில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறான்...!..நாம் இந்த பூமிக்கு வந்ததே பல நல்ல காரியங்களை செய்யவே..!//

  அவரோட நல்ல காரியங்கள் மென்மேலும் தொடரணும்..

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Mams.....intha mathiri
  neethi kathai ellathaium.....
  Book-aa
  potta enna......
  Ellarukkum
  payan padume....

  ReplyDelete
 6. மாம்ஸ் நல்ல சிறுகதை..

  முளைக்கும் வரை காத்திருக்கும் விதையே விருட்சம் ஆகிறது

  ReplyDelete
 7. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கிறீங்களா?
  பதிவினைப் படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 8. மனதை நெருடும் கதை அண்ணே,
  உண்மையில் எம் வசம் பணம் இல்லாத போது கஷ்டங்கள் அதிகமாக வரும்.
  பணம் இருக்கும் போது?

  ஆனாலும் அந்த நல் மனம் கொண்ட மன்னனைப் பாராட்ட வேண்டும். பணத்தோடு புரளும் எல்லோருக்கும் நல்ல குணம் இருக்காது.

  தன் கடந்த காலத்தில் அக்காவிற்கு நிகழ்ந்தது போல, இன்று சமூகத்தில் உள்ளோருக்கு நிகழக் கூடாது என்பதற்காக உதவி செய்கின்ற அம் மன்னனை நாமும் வாழ்த்துவோம்.

  ReplyDelete
 9. மனதை நெகிழ வைத்த பதிவு மாப்ள..

  ReplyDelete
 10. வீட்டுல டிவி இல்லாத போது டிவி இருந்தா நல்லாயிருக்கும் என்று ஆசைப்படுவோம்...சே...டிவியே வேண்டாம் என்று வெறுக்கும் போது தானே....டிவி கிடைக்கும் (கலைஞர் டிவி),பணம் இருந்து என்ன செய்வது மாம் தோள் கொடுக்க சொந்தம் வேண்டுமே...

  ReplyDelete
 11. மனதை வருடும் பதிவு

  ReplyDelete
 12. வணக்கம் விக்கி,சார்!அருமையான பதிவு.அது இருக்கும்போது,இது இருப்பதில்லை!இது இருக்கும்போது அது இருப்பதில்லை.ஏதோ ஒன்றை இழந்தாலே ஒன்று கிட்டும்போலிருக்கிறது!

  ReplyDelete
 13. நண்பர் மன்னனுக்கு நல்ல குணம்,
  என்னத்த சம்பாரிச்சாலும் கொடுப்பதில்
  இருக்கும் சுகம் தனிதான்.

  ReplyDelete
 14. ஒவ்வொரு உயர்வுக்குப் பின்னுமொரு சோகம்/தியாகம் இருக்கத்தான் செய்கிறது!

  ReplyDelete
 15. //நாம் இந்த பூமிக்கு வந்ததே பல நல்ல காரியங்களை செய்யவே..!//

  ஏதோ நம்மால முடிஞ்சுது....

  ReplyDelete
 16. மனத்தைக் கனக்க வைத்த பகிர்வு .மிக்க
  நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 17. //நாம் இந்த பூமிக்கு வந்ததே பல நல்ல காரியங்களை செய்யவே..!//

  முடிந்தவரை நல்ல காரியங்களை செய்ய வேண்டும். அப்படி செய்யா விட்டாலும் அடுத்தவங்களை கெடுக்கும் கரியங்களையாவது செய்யாமல் இருக்க வேண்டும்........

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி