வந்தார், சென்றார் - அமைதிக்கு மட்டும் நாமா!

வணக்கம் நண்பர்களே...தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை...இதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...அதுவாவது ஆட்டுவித்தால் கொஞ்சமாவது விசைக்கு ஏற்ப ஆடும்..ஆனால்.....!

என்னய்யா நாடு இது..பக்கத்துக்கு மாநிலத்துக்காரேன் நம்ம பெண்டு புள்ளைங்கள அவமானப்படுதுறான்(!)...எல்லோரும் மூடிக்கிட்டு இருந்தோம்...அமைதி காப்போம் அமேதிய(!) காப்போம்னு சொல்லி கிட்டு திரிந்தோம்!

இப்போ நடு நிர்வாகத்தோட ஆளு இங்க வந்துட்டு ஒரு வார்த்தை பேசாம(!)...முன்னாலும் இந்நாளும் கொடுத்த ரெண்டு குயர் மனுவ வாங்கி போட்டுக்கிட்டு கை ஆட்டிட்டு போயிட்டாரு...

நாமெல்லாம் இந்த நாட்ட சேந்தவங்க தானா...இல்ல ஒதுக்கப்பட்ட மாநிலமா...ஓட்டுக்கு மட்டும் வர்றவங்க கூட ஒத்துமையா சேந்து கொடுத்த காகித விஷயங்கள் இப்போ எந்த டஸ்பின்ல(!) இருக்கோ தெரியல...இதுக்கும் இத்தன நாளா பொங்கி பொங்கி வவுறு புண்ணு வந்தது தான் மிச்சம்...


இங்க உலை பிரச்சன நடந்துக்கிட்டு இருக்கும் போதே..கம்யூனிச நாட்டுல போய் கண்டிப்பா திறந்தே தீருவோம்..இம்புட்டு கோடிய வேஸ்ட் பண்ண முடியாதுன்னு சீரிய சிங்கம்(!)..இங்கன வந்ததும் பம்மாத்து காட்டிட்டு போயிருச்சி...இதுக்கும் எல்லோருமா சேந்து எதிர்ப்பு தெரிவிச்சும் ஒன்னும் நடக்கல..நாங்க செய்யிறத தான் செய்வோம்..உங்களால முடிஞ்சத பாத்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க போல...

அணை பிரச்சன ஆணை(யானை!) கணக்கா கொழுந்து விட்டு எரிஞ்சிகிட்டு இருக்கு...காய்கறி பரிமாற்றம் இல்ல...மக்கள் பயந்து பயந்து வாழ்ந்துகிட்டு இருக்காங்க...எதிர்ப்புகளை சமாளிக்க முடியாம நாங்களும் ரெளடிதான்னு ஒரு க்ரூப் புலம்பிட்டு திரியிது..

இந்த நிலமையில ரெண்டு நாளு இங்க என்ன கரகாட்டம் பாக்கவா வந்தீங்க ...இல்ல ஜிகினா ஒட்டி கிட்டு டான்ஸ் நடக்குதா..என்னமோ பிரியாணி சாப்பிட வீட்டுக்கு கூப்டது போல சாப்டு கெளம்பி போயிட்டாரு...

கொடி காத்த குமரன தெரியும்..கொடி காட்டக்கூடாதுன்னு பதறிய ஆள தெரியுமா...இம்மாம்பெரிய ஆளு வராரு...மக்கள் கூட்டம் நிரம்பி ஏதாவது எதிர்ப்பு வந்துடப்போகுதுன்னு எல்லாத்தையும் ப்ளான் பண்ணி நடத்தி(!) அனுப்பி வச்சிட்டாங்க...ஆஹா என்னே கடமை உணர்ச்சி...

போங்கப்பா...இனி கடல் நீரை குடிநீரா மாத்தி பயிரை காப்போம்...(இது ஒரு பொழப்பு!)

கொசுறு: இது உங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டிய நேரம்...நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

31 comments :

 1. இன்னைக்கு பயலுக்கு என்னமோ ஆகிடுச்சு, விழிப்புணர்வு போஸ்ட்

  ReplyDelete
 2. நல்லா சொல்லுறீங்க பாஸ்
  ஆனால் எல்லோறும் உணர்ந்து செயற்பட்டால் பிரச்சனைகள் குறையும்

  ReplyDelete
 3. இழு... இழு.... நல்லா இழுத்துப்போட்டுக் குத்து....

  #மாம்ஸு.... இனிமே சமூகவலைதளங்களுக்கும் சென்சார் வைக்கிறது கன்பார்ம் ஆயிடுச்சாம். நெசமான்னு கொஞ்சம் விசாரி!!!!!!

  ReplyDelete
 4. நீயும்....பொம்மை...நானும்..பொம்மை...நினைச்சுபார்த்தால் எல்லாம் பொம்மை ஓ...ஓ....ஓ...ஓ....

  ReplyDelete
 5. //இந்த நிலமையில ரெண்டு நாளு இங்க என்ன கரகாட்டம் பாக்கவா வந்தீங்க ...இல்ல ஜிகினா ஒட்டி கிட்டு டான்ஸ் நடக்குதா//
  சூப்பர் மாம்ஸ் நீங்க குத்துங்க!

  @வெளங்காதவன்
  என்னாது சமூக வலைத்தளங்களுக்கு ஆப்பா?

  ReplyDelete
 6. மாம்ஸு,

  தமிழனாவது ஒன்னு சேருவதாவது....கனவிலும் நடவா ஓன்று.

  சரி, எல்லா கட்சிகளும் ஒண்ணு சேருதானா..?? பிரஸ்டேஜ் பார்கிரானுங்க..தக்காளி ஓட்டுக்கு மட்டும் வருவானுங்க.

  த‌மிழ‌னை சினிமாக கிறுக்கனாக்கி நடிகர்கள் வாழ்கிற‌ர்க‌ள். அந்த‌ வ‌ழியில் வந்தவர்கள் த‌மிழ‌ர்க‌ளை குடிகார‌ர்க‌ளாக்கி அழித்து அந்த ப‌ணத்தில் ஆட்சி நடத்துகிறார்கள் .

  ReplyDelete
 7. மாம்ஸ், நானும் இந்த விசயத்தை பற்றிதான் பதிவு போட்டிருக்கேன்....

  ரெண்டு நாள் சிதம்பரத்துக்கும், தமிழக காங்கிரஸ்க்கும் மட்டுமே அல்வா போல இருந்திருக்கும்.

  ReplyDelete
 8. நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள்.....

  பிரச்சனை பற்றி பேசாமல் நிகழ்ச்சிகள் முக்கியமா போச்சு நம்ம வாயில்லா பூச்சிக்கு......

  ReplyDelete
 9. அப்படி போடுய்யா தக்காளி, இப்படி ஒவ்வொருத்தன் கிட்டேயும் மல்லுக்கட்டுறதுக்கு பதிலா இனி கடல்நீரை குடிநீரா மாத்துறத பத்தி சீரியசா யோசிக்கனும்....!

  ReplyDelete
 10. /இனி கடல் நீரை குடிநீரா மாத்தி பயிரை காப்போம்...(இது ஒரு பொழப்பு!)//
  கடைசியில நல்ல யோசனை ஒன்னும் சொல்லிப்புட்டு, இது ஒரு பொழப்பான்னு வேற கேட்டுட்டீங்களே.

  ReplyDelete
 11. மாம்ஸ் எனக்கு என்னவோ அவர் முகத்தில ஒரு பயம் தெரிஞ்சது.. அது அப்படியே இருக்கணும். நல்ல வேலை அவர் எசகு பிசகா ஏதாவது பேசி இருந்தா (அவரு தான் பேசமாட்டரேன்னு) ஒரு வேளை சுனாமி அவர் ரூபத்தில வந்து இருக்கும்.

  ReplyDelete
 12. //@வெளங்காதவன்
  என்னாது சமூக வலைத்தளங்களுக்கு ஆப்பா?///

  மேட்டர் கன்பார்ம் ஆவுற மாதிரி தெரியுது... தில்லி வட்டாரங்கள் இப்புடித்தேன் சொல்லுது... பொறுத்திருந்து பாப்போம்...

  ReplyDelete
 13. //
  மேட்டர் கன்பார்ம் ஆவுற மாதிரி தெரியுது... தில்லி வட்டாரங்கள் இப்புடித்தேன் சொல்லுது... பொறுத்திருந்து பாப்போம்...///

  ச்சே.. நானும் மன்னு மாதிரி ஆயிட்டனே!!! பொறுமை பொறுமைன்னு...
  ச்சே ச்சே!!!

  ReplyDelete
 14. நானும் என்னுடைய எதிர்ப்பை பலமாக பதிவு செய்கிறேன்..

  இதுக்கு அந்த பிரதமர் நமக்கு வேண்டாம்.

  ReplyDelete
 15. காலை வணக்கம் விக்கி சார்!எப்பயுமே தமிழன்னா இளக்காரமாயே போச்சு!அது ஆண்ட நாட்டுல இருந்தா என்ன,இந்தியாவுல இருந்தாலென்ன. நாம செய்யுறத செஞ்சு தான் தீருவோம்,ஒங்களால முடிஞ்சதப் பாத்துக்குங்க அப்புடின்னு சொல்லாம சொல்லுறாங்க!

  ReplyDelete
 16. வந்தார் போனார் அவ்வளவுதான் எதுக்கு வந்தார் எதுக்கு போனார்ன்னு யாருக்கும் தெரியலையாம்..


  அன்போடு அழைக்கிறேன்..

  நாட்கள் போதவில்லை

  ReplyDelete
 17. ஸலாம் சகோ.விக்கி,
  செமை பதிவு.

  சும்மா கிடைக்கிற தண்ணியிலே விளைகிற அரிசிக்கே ஆசாசத்துலே விலை... இனி, ///இனி கடல் நீரை குடிநீரா மாத்தி பயிரை காப்போம்...///----என்ற நிலையில் விலைவாசியை நினைத்தால் பகீர்..!

  தகவலுக்காக...
  ஒரு லிட்டர் பெட்ரோல் சவூதியில் அரை ரியால் தான் சகோ..! ஆனா... ஒரு லிட்டர் குடி தண்ணீர் பாட்டில்..? ரெண்டு ரியாலுங்கோ..!

  ReplyDelete
 18. ஓரிரு எம்பி சீட்டுக்கள் மட்டுமே இருக்கும் வட கிழக்கும்... நாப்பது இருந்தும் கூட்டணி வச்சாத்தான் ஜெயிக்க முடியும் என்ற பிரதேச கட்சிகளின் ஆட்சியில் மட்டுமே இருக்கும் நம் மாநிலமும்.... //நாமெல்லாம் இந்த நாட்ட சேந்தவங்க தானா...இல்ல ஒதுக்கப்பட்ட மாநிலமா...//----என்று நினைக்காமல் இருக்க முடியாது.

  கரீக்டா சொன்னீக சகோ.விக்கி.

  ReplyDelete
 19. சிங்கிடிக்கு சிங்கி அடிக்க மட்டுமே தெரியும் இது தெரியாதா நமக்கு...?

  ReplyDelete
 20. கடல்நீரை எப்பிடி எடுக்குறது, வங்காள விரிகுடா எங்களுது[[கல்கத்தா]] அரபிக்கடல் எங்களுது [[கேரளா]], இந்தியப்பெருங்கடல் எங்களுதுன்னு சிறிலங்கா காரனும் வரமாட்டானுகங்குறது என்ன நிச்சயம்...?

  ReplyDelete
 21. வாய் சொல்லில் வீரரடின்னு பாரதி சும்மாவா சொன்னான்...?!!!

  ReplyDelete
 22. @ நாஞ்சில்மனோ...

  ///கடல்நீரை எப்பிடி எடுக்குறது, வங்காள விரிகுடா எங்களுது[[கல்கத்தா]] அரபிக்கடல் எங்களுது [[கேரளா]], இந்தியப்பெருங்கடல் எங்களுதுன்னு சிறிலங்கா காரனும் வரமாட்டானுகங்குறது என்ன நிச்சயம்...? ///

  சும்மா கிடந்த சங்கை.....................................................

  ReplyDelete
 23. @பன்னிக்குட்டி ராம்சாமி

  அது.. அது ரொம்ப ஈஸி பட் காசு கொஞ்சம் அதிகம் செலவாகும். அக்சுவல் காசு கம்மிதான் பட் கமிசன் ஊழல் இது எல்லாம் சேர்த்தா?? அதைதான் யோசிக்கணும்

  ReplyDelete
 24. @MANO ???????? ???

  மக்கா அப்ப நமக்கு கடலே இல்லையா? அங்கேயும் ஆப்பா? அவ்வ்வ்வ்

  ReplyDelete
 25. எங்க போனாலும் பிரச்சினையா இருக்கு மாப்ள...

  ReplyDelete
 26. இன்னும் ஏண்டா ஒட்டிகிட்டு இருக்கீங்க கிளம்பிப் போங்கடா அவங்களும் பல தடவ ஸ்ட்ராங்கா சொல்றாங்க நம்ம ஆளுங்கதான் லேட் பிக் அப்....

  ReplyDelete
 27. அவரு பெரிய தில்லுதுரையாம்! ரத்த பூமிக்கே சுற்றுலா வந்திருக்காராம்!

  ReplyDelete
 28. அண்ணே மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒவ்வோர் விஜயங்களையும் அரசியல்வியாதிகள் செய்தால் ஏன்னே...எதிர்ப் பதிவு வரப் போகுது?

  ஹே...ஹே..
  இப்படி எத்தனை நாளைக்குத் தான் எம் தலையில் மிளகாய் எரிப்பாங்களோ.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி