பேச்சை குறை...காரியம் முடியும்!

வணக்கம் நண்பர்களே...
மனித வாழ்கையில் பேச்சு மிக இன்றியமையாதது...அதே நேரத்தில் அந்த பேச்சின் மூலம் என்னல்லாம் இன்னலுக்கு உண்டாகிறோம்...!~


ஒரு இன்டர்நெட் தொலைபேசி உரையாடல் உங்களுக்காக...


ஹலோ...நான் சேகர் பேசுறேன்(நாய் சேகர் அல்ல!)


ஆங் சொல்லுங்க மாமா..எப்படி இருக்கீங்க...


நான் நல்லா இருக்கேன் மாப்ள..உங்கள தான் பாக்க முடியல..இப்போ ரொம்ப பெரிய ஆளு ஆயிட்டீங்க...அதான்!


அய்யயோ அப்படியெல்லாம் இல்ல..வேலை அதான்..!


எப்போ இங்க வரீங்க....


இன்னும் முடிவாகல...லீவ் கிடைக்கல...


அப்படியா...சரி எனக்கு ஒரு விஷயம் உங்க கிட்ட பேசணும்...


சொல்லுங்க..


(மாமா அங்கே பக்கத்தில் இருக்கும் மனைவியிடம்>>>)


ஏம்மா, அந்த டிவி வால்யும கம்மி பண்ணு...


மீண்டும் மாப்பிள்ளையிடம்...


ஆங்...அதாவது மாப்ள...நீங்க இங்க இருக்கும்போது நான் உங்கள மதிச்சதே இல்ல..


பரவைல்லீங்க மாம்...


ஏண்டி..சொல்றது கேக்கல...அப்படியே அந்த கூல்ட்ரிங்க்ஸ் கொண்டா...


யார சொல்றீங்க...


எல்லாம் உங்க மாமியத்தான்...


(யோவ் ஏன்யா கொல்ற!)


அது வந்து மாப்ள இப்போ நீங்க பெரிய ஆளாயிட்டீங்களா..உங்க கிட்ட எப்படி இத சொல்றது...நீங்க ஏதாவது தப்பா எடுத்துகிட்டீங்கன்னா...


மாம்ஸ் நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் சொல்லுங்க...நான் இன்னும் குயந்த பய்யன் தான் உங்களுக்கு ஹிஹி...


சரி வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...


எல்லாம் நல்லா இருக்காங்க...அங்கன..


இங்க எல்லாம் நல்லா இருக்காங்க...அப்புறம் அந்த விஷயம் என்னனா... ஏய் அந்த இன்னொரு பாட்டில கொண்டா...


ஏன் மாம்ஸ்...அடுத்த குவாட்டரா...


இல்ல மாப்ள ஹாப்!


ஹிஹி.. (எனக்கு ஆப்பு!)...


அதாவது மாப்ள நீங்க இப்போ பெரியாளாயிட்டீங்க...நான் பாத்தது போல சின்ன பய்யன் இல்ல...


(ஸ் ஸ் அபா...மறுபடியும் முதல்ல இருந்தா...கொய்யால!)


மாம்ஸ் என்ன பிரச்சன சொல்லுங்க...என்னால முடிஞ்சா எதாவது செய்யிறேன்..


அதில்ல மாப்ள அவன விடக்கூடாது...


யார...


அதாவது மாப்ள...நீங்க என்னை நம்புறீங்க இல்ல...
மாம்ஸ் என்ன மாம் இப்படி ஒரு கேள்வி...கண்டிப்பா நம்புறேன்(அட சர்வேசா...இது தான் சனிப்பெயர்ச்சியா!)


நான் சரக்கடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காதீங்க...உண்மையாதான் பேசுவேன்...மேட்டர் என்னன்னா...இருங்க...ஏன்டி அந்த மிச்சர கொண்டா...சைடு டிஷ் தீந்து போச்சி...


(யோவ் ரீலு அந்து போச்சி..எனக்கு நாடா பிஞ்சி போச்சி...!)


மாம்ஸ் தயவு செய்து என்ன பிரச்சனன்னு சொல்லுங்க...மணி 1 ஆகுது இங்க...


ஓ அப்படியா..ரொம்ப நேரமா பேசுரமோ...


(அடப்பாவி மனுசா 10.30 மணில இருந்து கொலையா கொல்லுறியே...இதே காசு போட்டு போன் பேசி இருந்தா உன் சொத்து மொத்தமும் போயி இருக்கும் இன்டர்நெட் காரேன் புண்ணியம் கட்டிக்கறான்!)


ஆமா மாமா...நீங்க மாமி கிட்ட போன கொடுங்க...


அவ தூங்கி ரொம்ப நேரம் ஆச்சிடா மாப்ள...


அப்போ இவ்ளோ நேரமா இடையில சொல்லிட்டு இருந்தீங்க..


அதான்டா எழுந்து டிவி ஆப் பண்ண சொன்னேன் செய்யல...கூல்ட்ரிங்க்ஸ் கொண்டார சொன்னேன் செய்யல...தூங்கிட்டு இருக்கா...#@#@#


(அய்யோ சாமி இதேல்லாம் பிரமையா...பாவிங்களா நான் தண்ணி அடிக்கறதா விட்டாலும் விட்டேன் ஆளாளுக்கு கொலையா கொல்லுரானுங்களே...உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா!)


இன்னும் நீங்க என்ன விஷயம்னு சொல்லல...சொல்லுங்க...


அதுவந்து மாப்ள...அவன விடக்கூடாது...


(அடபோய்யா நீயும் உன் கதையும்...கொய்யால!)


எவன...


அதான் அவன...மாப்ள கரண்டு கட் ஆயிரிச்சி..இன்னும் இந்த பேட்டரி 15 நிமிஷம் வரும்...பேசுவோம்..


(எவன்டா அந்த பேட்டரிய கண்டு பிடிச்சது...!)


அதாவது மாப்ள எனக்கு ஒரே ஒரு பொண்ணு...


மாம்ஸ் அதான் தெரியுமே...உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆயிரிச்சி அதுவும் தெரியும்...


தெரியுமா...அந்த மாப்ள நம்ம ஜாதி இல்ல அது தெரியுமா...


தெரியும் மாம்...சொல்லுங்க( அய்யோ காதுல ரத்தமா வருதே...தக்காளிய பேசியே கொல்றானே!)


அதான் மாப்ள...


(போடாங்கொய்யால...நான் கணினியை அனைத்து விட்டு படுக்கப்போனேன் இரவு 2 மணிக்கு!)


why this கொலைவெறி...(என் போனில் ரிங் டோன் அடித்தது...)


மாப்ள நான்தான்..என்னாச்சி கம்பியூட்டர்..


மாம்ஸ் என்னமோ ப்ரோப்ளம்...கட் ஆயிருச்சி நாளைக்கு பேசுவோம்..போய் படுங்க...


அது வந்து மாப்ள..


(போயா கொங்காங்கோ...போனை Off செய்து விட்டு தூங்கப்போனேன்!)


ஸ்.ஸ் ..அபா..முடியல...சாமி கொலையா கொல்றாங்க...!


கொசுறு: நாடு விட்டு நாடு வந்து இருந்தாலும், சனி பகவான் கடல் தாண்டி வந்து கைய புடிச்சி இழுக்குரானே..யோவ் நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லையா...என்னைய விட்ருய்யா...மீ பாவம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. லேப் டாப் மனோவை வெள்ளிக்கிழமை தாக்குவது மனசுக்கு கஷ்டமா இருக்கு ஹி ஹி

  ReplyDelete
 2. பேச்சுப்போட்டில கலந்துக்கிட்டா பேச்சை குறைச்சா பரிசு கிடைக்காதே தம்பி? ஹி ஹி

  ReplyDelete
 3. மாம்ஸ், இன்னைக்கு நான் முதல்ல படிச்ச பதிவு இதுதான்..... ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கு....

  ReplyDelete
 4. இப்போ எனக்கு ஒரு டவுட்டு, இந்த அநியாயத்தை பண்றதே நீதானே என்ன பிளேட்டை திருப்பி போட்டு பதிவு போட்டுருக்கியா நீ நார்மலாதானே இருக்கே...?

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் said...
  லேப் டாப் மனோவை வெள்ளிக்கிழமை தாக்குவது மனசுக்கு கஷ்டமா இருக்கு ஹி ஹி//

  கொய்யால தூக்கி போட்டு மிதிச்சுபுடுவேன் ராஸ்கல்....

  ReplyDelete
 6. வணக்கம் அண்ணே, நல்லா இருக்கீங்களா?

  //ஹலோ...நான் சேகர் பேசுறேன்(நாய் சேகர் அல்ல!)
  . //

  படிக்கும் போதே நகைச்சுவை எகிறுது!
  ஹே...ஹே..

  ReplyDelete
 7. வணக்கம் அண்ணே,

  வரம்பு மீறி வார்த்தைகளைப் போதையில் உளறுவோரைப் பற்றி சூடா ஒரு குட்டு போட்டிருக்கிறீங்க.

  ரசித்தேன்.

  ReplyDelete
 8. அதகளம் மாம்ஸ் உங்க மாமா நல்லா தானே பேசுனாரு?? உங்களுக்கு பொறுமை வேணும் மாம்ஸ் ஹி ஹி ஹி

  ReplyDelete
 9. இப்ப என்ன சொல்ல வாறீங்க, குடிக்ககூடாதுன்னா, குடிச்சிட்டு பேசப்புடாதுன்னா,பேசினா ரொம்ப நிதானத்தில பேசனும்னா? புரியலியே!

  ReplyDelete
 10. இதுக்கு அவரே பரவியில்லைன்னு தோணுதோ. ஹா ஹா ஹா

  ReplyDelete
 11. வேணாம்...வலிக்குது..விட்டுடு....மாம் இத..விட்டுட்டிங்க....
  சரியா சொல்லுங்க..நாய் சேகரா...நாய்நக்ஸா......?
  ஆமா காலையில அக்காகிட்ட வாங்குனதைப் போடலை....நல்லா உச்சந்தலையை தேச்சிவிட்டுக்குங்க....இரத்தம் கட்டிக்கப்போகுது......
  எப்படியெல்லாம் பதிவ தேத்தராங்கப்பா....தம்பி சுரேஷ் நீ...இன்னும் ஒர்த் ஆகனும்டா...

  ReplyDelete
 12. பேச்சை குறைச்சாலே பெரும்பாலான பிரச்சனைகளே வராது.. ஆனா நம்மாள முடியாது.. தமிழன் மூச்சே பேச்சு தான், பேச்சு நின்னா மூச்சு நின்னிரும்...

  ReplyDelete
 13. ////அவ தூங்கி ரொம்ப நேரம் ஆச்சிடா மாப்ள...


  அப்போ இவ்ளோ நேரமா இடையில சொல்லிட்டு இருந்தீங்க..


  அதான்டா எழுந்து டிவி ஆப் பண்ண சொன்னேன் செய்யல...கூல்ட்ரிங்க்ஸ் கொண்டார சொன்னேன் செய்யல...தூங்கிட்டு இருக்கா...#@#@#////

  ஹா.ஹா.ஹா.ஹா...

  இப்படி பல கேசுகள் எல்லா இடத்திலையும் இருக்கு பாஸ்

  ReplyDelete
 14. அவன்...அவன்னு சொல்றாரே!யாருங்க
  அது?

  ReplyDelete
 15. எப்பவோ எங்கயோ..நல்லா தூங்கிட்டு இருந்த யாரையோ எழுப்பி விட்டிருக்க.அதான்..சுத்துது!

  ReplyDelete
 16. ங்கொய்யால ஒருகாலத்துல நீ பண்ணிட்டு இருந்ததைலாம் இப்ப நல்லவனாகிட்டம்ன திமிருல வேற யாரோ பண்ண மாதிரி போட்டுத் தாளிச்சிட்டு இருக்க?

  ReplyDelete
 17. இதுக்கு நீங்க கிச்சிளிக்காஸ் போட்டுகிட்டு இருந்திருக்கலாம்

  ReplyDelete
 18. ///அதான்டா எழுந்து டிவி ஆப் பண்ண சொன்னேன் செய்யல...கூல்ட்ரிங்க்ஸ் கொண்டார சொன்னேன் செய்யல...தூங்கிட்டு இருக்கா///

  super family...

  i like it annachchi

  ReplyDelete
 19. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சரியாகச் சொன்னீங்க சார்!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி