சிபி,விக்கி,மனோ - (CO) அலட்டல்கள்! - 15.12.11

வணக்கம் நண்பர்களே...சிபி விக்கி மனோ...இந்த மூனும் ஒண்ணா சேந்தா அந்த ஊரு உருப்படுமா...!

நீங்களே பாத்துக்கங்க...இந்த கொடுமைய...ரெடி ஸ்டார்ட் மியுசிக்...

சிபி: ஹலோ குடை புடிச்சிட்டு போறவரே...கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ்..விக்கி: ஹாய் எப்படி இருக்க...

சிபி: (இவனையா கும்பிட்டேன்..இந்த கைய கொண்டு போய் அடுப்புல வச்சிடணும்...இவன் புடிச்சா விடமாட்டானே...)...ஒண்ணுமில்ல விக்கி...எப்படி இருக்கன்னு..!

விக்கி: நான் நல்லாத்தான் இருக்கேன்...ஏன்யா படக்குன்னு கும்புட்ட கைய எடுத்துட்ட....ஏன் ஒன்லி பொண்ணுங்கள பாத்தாதான் கும்புடுவியோ!

சிபி: ஆரம்பிச்சிட்டியா...ஸ்ஸ் அபா...அப்படியில்ல...சரி எங்க போயிட்டு இருக்க...

விக்கி: மனோ வரேன்னு சொன்னான்...அங்க ஒரு பஞ்சாயத்து...நம்ம ஊரு பொண்ண சேட்டன் கைய புடிச்சி இழுத்துட்டானாம்...

சிபி: ஓ..சரி பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா..

விக்கி: பிஞ்சிடும்...கொய்யால நக்கலா...அதோ வரான் பாரு அவன்கிட்ட கேளு...

மனோ: என்றா என்றா சொல்றான் இந்த பரதேசி...

சிபி: அட ராமா...இன்னைக்கு ரெண்டு ஏழரையா....

மனோ: அடேய் மூதேவி...வா அங்கன பஞ்சாயத்து கூட்டி இருக்காங்க போயிட்டி வருவோம்...

(மூவரும் பஞ்சாயத்து மர நிழலில்!)

ஒருவர்: ஏனுங்க துபாய் பாண்டி சட்டு புட்டுன்னு ஒரு தீர்ப்ப சொல்லுங்க...

மனோ: எலேய் பிச்சி புடுவேன்...மனோ அண்ணன்னு கூப்படனும்னு எத்தன தபா சொல்லி இருக்கேன்..ராஸ்கோல்!

சிபி: இதோடா...எலேய் என்ன கொடுமைடா..நீயெல்லாம் தீர்ப்பு சொல்ற!

விக்கி: விட்ரா விட்ரா...கிழவிகள சைட் அடிச்சிட்டு இருந்த உன்னையே நாங்க பஞ்சாயத்துல உக்கார வைக்கலையா...

சிபி: ஹேய் அதெல்லாம் ஹாலிவுட் கேர்ல்ஸ்!


மனோ: அட பன்னாட...இப்போ வந்து இருக்க விஷயத்துக்கு வருவோம்..ஏன்யா சேட்டா...பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா...

சேட்டன்: என்ன இழுத்தியா...

(மனோ வந்த கோபத்துக்கு காது மேலே ஒன்னு வைக்கிறான்)

சேட்டன் or செத்தான்: அண்ணே தெரியாம இழுத்துப்புட்டேன்னே...இப்போ எவ்ளோ பைன்ன்னு சொல்லுங்க கட்டி புடுறேன்...

மனோ: எது ஓ நீ அம்புட்டுபடிச்சி இருக்கியா...எங்கள பாத்தா ஈனா வானா(!) போல இருக்கா...டேய் இவன அந்த மரத்துல கட்டி வையிங்க வெறும் உள்ளாடை மட்டும் போதும்(!)..மத்தத உருவிடுங்க...யாராருக்கு அடிச்சி பழகனுமோ அடிச்சிட்டு போங்க ரெண்டு நாளைக்கு...இனி இவன் எங்கயாவது இப்படி பண்ணான்(!) கைய கால வெட்டி போட்ருவோம்!

மக்கள்: அண்ணே அருமையான தீர்ப்புன்னே...

விக்கி: எலேய் இது தீர்ப்பா...

மனோ: வேற என்ன பண்ண...

விக்கி: இவன அங்கன சுட்டு இருக்கனும்டா..இல்லைன்னா இனி இவன் அந்த நெனப்பே வராத மாதிரி கட் பண்ணி இருக்கணும்!

சிபி: விட்ரா கைய தெரியாம இழுத்து இருப்பான்...

விக்கி: ஏன் உனக்கு ஓசி சாயா போயிரும்னு பயமா...இல்ல அந்த மலையாள ஆண்டி புட்டு கொடுக்கறத நிறுத்திடும்னு சோகமா...

மனோ: விட்ரா...இதோடா திருந்திடுவான்..இல்லைன்னா ஊர விட்டு ஓடிடுவான்...

சிபி: இந்த நாதாரி எப்ப பாரு என்னைய குறை சொல்றதுலையே நேரத்த கழிக்குது...இதுக்கு ஒரு வழி பண்ணனும்...முதல்ல!

விக்கி: ஏன்டா...அந்த அணு மேட்டர் என்னாச்சி...

சிபி: இந்த பிகர் எப்படா பாத்த!

மனோ: எலேய் அவன் அணுவுலை மேட்டர சொல்றான்...அது இப்போதைக்கு அமிஞ்சி இருக்கு...அதுக்கு தானே பய புள்ளைங்க முல்லைய எடுத்து வேடிக்க காமிக்குதுங்க...

விக்கி: வேணும்னா இப்படி செய்வோமா...

சிபி: எப்படி...

விக்கி: சிபிய அங்கன அனுப்பி வைப்போம்...விமர்சனம்ங்கர பேர்ல இவன் போடுற விஷயத்த படிச்சி பாத்தவைங்க எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க...

மனோ: அப்படி என்னடா முடிவு...விக்கி: சாமி இவன்தொல்ல தாங்கல..எல்லா பிகர்யும் வர்ணிக்கறான்..மொதல்ல இவன இவன் ஊருக்கு கூட்டிட்டு போங்க...நாங்கல்லாம் என்ன சொன்னாலும் கேக்குரோம்னு சொல்ல மாட்டாங்க...

சிபி: அடேய் நாதாரி...கட்டையை தூக்கி கொண்டி அடிக்க ஓடுகிறான் விக்கியை(சாதா கட்டையை!)

கொசுறு: இந்த பதிவில் வரும் மூவரில்...என்னைத்தவிர இருவர் ஏதாவது இந்த பதிவை பற்றி அவதூறாக எண்ணினால் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் முட்டிக்கொள்ளவும்..ஹிஹி!(நானல்லாம் அப்பவே அப்பிடி...அப்போ இப்போ!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. இந்த போஸ்ட்ல என்னை நீ கேவலப்படுத்தவே இல்லை. அதனலா நான் வெளி நடப்பு பண்ரேன் ஹி ஹி

  ReplyDelete
 2. >>விக்கி: சிபிய அங்கன அனுப்பி வைப்போம்...விமர்சனம்ங்கர பேர்ல இவன் போடுற விஷயத்த படிச்சி பாத்தவைங்க எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க...


  adeey adeey மனோ எட்றா அந்த அரிவாளை , இவனை ஒரே வெட்டா வெட்டிடலாம்

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  பார்ரா...என்றா என்னாச்சி இப்போ...ஹிஹி!

  ReplyDelete
 4. தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகளை நகைச்சுவையாக...

  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ மாப்ளே!

  ReplyDelete
 6. மாப்ள,நல்ல கலாய்ப்புதான்.

  ReplyDelete
 7. ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வரலையின்கிற தைரியம் மாம்ஸ்க்கு...
  ரோசப்பட்டு பிளைட் புடிச்சி வந்திராதிங்க..கொய்யால போட்டு தள்ள ஆளு ரெடி பன்னிருவாங்க....இரண்டு பேரும்...

  ReplyDelete
 8. நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க இது புரியாம!?

  ReplyDelete
 9. மாம்ஸ் ரொம்ப அதிகமா யோசிக்கறின்களா? கலாய்ப்பு ரொம்ப தான்

  ReplyDelete
 10. செம மொக்கை பாஸ் நல்லாத்தான் யோசிக்கிறீங்க

  ReplyDelete
 11. //இவன அந்த மரத்துல கட்டி வையிங்க வெறும் உள்ளாடை மட்டும் போதும்(!)..மத்தத உருவிடுங்க...// மத்ததுன்னா அதையுமா? ஹி ஹி...

  ReplyDelete
 12. சிரிக்க வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .வீடியோ இணைப்பு கலக்கல் .

  ReplyDelete
 13. வணக்கம் மாப்பிள..!
  செம கலாய்பு செய்திருக்கீங்க.. அதிலும் எனக்கு பிடித்த அமைதிபடையில் படத்தில் இருந்து காட்சிகள் அருமை..!

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா ஹா நேற்று பதிவுலகம் வரமுடியலை, அட இங்கே என்னங்கடா நடக்குது ராஸ்கல் ஹி ஹி....!!!

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said...
  இந்த போஸ்ட்ல என்னை நீ கேவலப்படுத்தவே இல்லை. அதனலா நான் வெளி நடப்பு பண்ரேன் ஹி ஹி//

  ஒ அப்போ பச்சை பச்சையா திட்டட்டுமாடா அண்ணே ஹி ஹி...

  ReplyDelete
 16. சி.பி.செந்தில்குமார் said...
  >>விக்கி: சிபிய அங்கன அனுப்பி வைப்போம்...விமர்சனம்ங்கர பேர்ல இவன் போடுற விஷயத்த படிச்சி பாத்தவைங்க எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க...


  adeey adeey மனோ எட்றா அந்த அரிவாளை , இவனை ஒரே வெட்டா வெட்டிடலாம்//

  அவனை வெட்டுறது இருக்கட்டும் இப்போ உன்னை வெட்டணும் போல இருக்கே...

  ReplyDelete
 17. விக்கியுலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  சரியாக கவனிக்கவும்..ஹிஹி!//

  எது பிகரையா...

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  பார்ரா...என்றா என்னாச்சி இப்போ...ஹிஹி!//

  கொலைவெறியா இருக்கான்யா...

  ReplyDelete
 19. veedu said...
  ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வரலையின்கிற தைரியம் மாம்ஸ்க்கு...
  ரோசப்பட்டு பிளைட் புடிச்சி வந்திராதிங்க..கொய்யால போட்டு தள்ள ஆளு ரெடி பன்னிருவாங்க....இரண்டு பேரும்...//

  அம்புட்டு தைரியசாலியா அவன் ஹி ஹி...

  ReplyDelete
 20. இந்த பதிவில் வரும் மூவரில்...என்னைத்தவிர இருவர் ஏதாவது இந்த பதிவை பற்றி அவதூறாக எண்ணினால் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் முட்டிக்கொள்ளவும்..ஹிஹி!(நானல்லாம் அப்பவே அப்பிடி...அப்போ இப்போ!//

  ஹா ஹா ஹா ஹா சுவத்துல முட்டுறதுக்கு தலை இருந்தாதானே, அதைத்தான் நீ காலி பண்ணிட்டியே அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 21. ///மனோ வரேன்னு சொன்னான்...அங்க ஒரு பஞ்சாயத்து...நம்ம ஊரு பொண்ண சேட்டன் கைய புடிச்சி இழுத்துட்டானாம்...////

  நாட்டாமை தீர்ப்பை சொல்லிப் போடாதை அப்புறம் நீயும் கம்பி எண்ணணுமுல்ல...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி