friends Alias நண்பர்கள்!

வணக்கம் நண்பர்களே... எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக(!) இல்லை(!). காரணம் எனக்கு எந்தளவுக்கு ஆண் நண்பர்களோ அதற்கு சரி சமமாக பெண் நண்பர்கள் இருந்த காரணத்தால் காதல் என்பது ஏதோ காமடி விஷயமாகவே போய்விட்டது(இப்போது அதுதான் வாழ்க்கையே!).

நாங்க ஒரு பெரிய க்ரூப் என்று இருந்ததால், எங்க போகரதுன்னாலும் ஒரு படையா(அந்த படை அல்ல!) போவோம். இந்த படைகிட்ட மாட்டாத மக்களே இல்ல என்று சொல்லும் அளவுக்கு ரொம்ப நல்ல பேரு எங்களுக்கு(இதுக்கு காரணமே எங்க அம்மா என்ற அக்காதான்).


இன்று வரை எங்க கேங்குல இருந்த ஆண் பெண் அங்கத்தினருக்குள்ளே காதல் எனும் விஷயம் எட்டிப்பார்த்ததில்லை. காரணம் நாங்க எல்லாம் நண்பர்கள் மற்றும் சகோதர உணர்வு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்க கேங்குல சிவான்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்களுக்கு அடிக்கடி வரும் டவுட்டே இவன் எப்படி எங்க கேங்குல சேர்ந்தான் என்பது தான். ஏன்னா இவன் பேசறத்துக்கு நாங்க காசுகுடுக்கணும்(மெட்ராஸ் பவன் சிவா அல்ல!) அந்த அளவுக்கு அமைதியான ஒரு படிப்பாளி. எப்ப பாரு ஏதாவது படிச்சிட்டே இருப்பான். 


கிரிக்கெட் ஆட கூப்பிட்டாலும் அங்க வந்து ஓரமா உட்க்காந்து ஏதோ ஒரு புக்க வீட்டுல இருந்து எடுத்து வந்து படிச்சிட்டு இருப்பான். அந்த அளவுக்கு படிப்பின் மீது இவனுக்கு காதல். 

இந்த கல்லுளி மங்கனையும் ஒரு பொண்ணு லவ்வினா. திடீர்ன்னு ஒரு நாளு வந்து எங்ககிட்ட "டேய் ப்ளீஸ் நீங்கல்லாம் நாளைக்கு என் காலேஜுக்கு வர முடியுமா" அப்படின்னு கேட்டான்.

என்னடாஇது என்னிக்கும் இல்லாம என்று "என்னதான் விஷயம் சொல்லுடா" என்று ரீல் ஆனந்தி கேட்டா...........


"ஒன்னும் இல்ல ஒரு பொண்ணு என்னை லவ் பண்றேன்னு டெய்லி டார்ச்சர் குடுக்குறா கொஞ்சம் வந்து என்னன்னு கேளுங்கப்பான்னு" சொன்னான்.

"என்ன கொடும சாமி இது இவன ஒரு பொண்ணு லவ்வராலா, ஸ் ஸ் ஸ் டேய் எனக்கு மயக்கமே வந்துடும்போல இருக்குடா" என்றாள் ஹாக்கி சித்ரா.

"ஹேய் அவன்தான் சாமியாருன்னு தெரியும்ல வாங்க நாளைக்கு போய் இன்னா விஷயம்ன்னு பார்த்துட்டு வருவோம்" என்றேன்.

"இங்க பாரு அந்த ஏரியா கோடம்பாக்கம் அப்படியே படத்துக்கு எதாவது போயிட்டு வந்துருவோமாடா" என்றாள் ZOO லக்ஷ்மி.

"அடிப்பாவிகளா அவன் எவ்ளோ சீரியஸா வந்து சொல்லிட்டு இருக்கான் படம் தான் இப்போ முக்கியமா போச்சா உங்களுக்கு"...........(படம் பார்த்துவிட்டு வந்தது தனிக்கதை)

"சரி யாரு அந்தப்பொண்ணு கிட்ட பேசுறது............பசங்க நாங்க போயி பேசுனா எதாவது பிரசினயாயிடப்போவுது"........ அதனால.............


"ஏய் விடு நான் பேசுறேன்" என்றாள் வித்யா.

அடுத்த நாள் எல்லோரும் அவங்க அவங்க வீட்டுல சிவா காலேஜுல cultural program என்று சொல்லிட்டு கிளம்பி போனோம்.

சிவா அந்தப்பெண்ணை சுட்டி காட்டினான். 

"டேய் போய் கூப்பிட்டு வாடா பேசுவோம்" என்றான் முனி......

இல்லடா நான் வந்து............எப்படி.....போயி................கூப்பிட்டு..............

"டேய் இது ஆவறது இல்ல ரீலு நீ போய் கூட்டி வா" என்றேன் 

கொழுப்புதாண்டா உனக்கு............


சரி சீக்கிரம் முடிங்கப்பா படத்துக்கு நேரமாகுது....என்றாள் zoo 

சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுடன் வந்து நின்றாள் ரீல் ஆனந்தி.

எதிரே இருந்த "Mcrennet" உள் நுழைந்தோம்.........
அந்த கடையில் நுழைந்ததும் ஆளாளுக்கு என்ன ஆர்டர் பண்ணலாமுன்னு பிளான் பண்றாங்க........ கார்த்திக் சொன்னான் - "வந்தது எதுக்கு கதுக்கரதுக்கா இம்சைகளா சீக்கிரம் பேசி முடிங்க"
வித்யா ஆரம்பித்தாள் "என்னம்மா இவன லவ் பண்றியாமே அப்படியா" .....


ஆமாங்க அக்கா என்றாள் அந்தப்பெண்.


இன்னாது அக்காவா அடியேய் என்று பாய்ந்த அவளை அமைதிப்படுத்தினாள் zoo.


"சரி உனக்கு ஆளே கிடைக்கலியா, இவன் முகத்த பாரு கொஞ்சமாவது maturity இருக்கா மாதிரி தெரியுதா" என்றாள் வித்யா.
"நான் இவர லவ் பண்றேன் அவ்ளோதான்" - என்றாள் அவள்.


"இங்க பாரு இவனுக்கு உன் லவ்ல விருப்பம் இல்ல தயவு செஞ்சி இவன விட்டுடு, ரொம்ப பாவப்பட்ட ஜீவன் இது please" - என்றாள்.


இங்க பாருங்க இது எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விசயம் நீங்க எல்லாம் friends ன்னு சொல்லி தலையிடுறது நல்லாயில்ல என்றாள் அந்தப்பெண்.


"ஏன்டா டேய் எங்கள பாத்தா என்னா ஊருக்கு நேர்ந்து விட்டவங்க மாதிரி இருக்கா என்றேன்" நான்.
"இல்லடா please காப்பாத்துங்க" என்றான் சிவா.


"இப்போ என்னாதான் முடிவா நீ சொல்ல வர்ற" என்றாள் சித்ரா அந்தப்பெண்ணிடம்.


"இதுதான் என் முடிவுன்னு" சொல்லிக்கொண்டே அந்தப்பெண் தான் வைத்திருந்த பேனாக்கத்தியின் மூலம் தன் மணிக்கட்டை கிழித்துக்கொண்டாள்.
ரத்தம் கொட்டியதை பார்த்த எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அதுவரை
தெளலத்தாக(Tholath!) பேசிக்கொண்டு இருந்த நாங்கள் அடிச்சி புடிச்சி அந்தப்பெண்ணை ஆட்டோவில் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடுவோம் என்று நினைத்துக்கூடப்பார்கவில்லை.


இப்படி ஆரம்பித்த இவ்விருவரின் லவ் இன்று சென்னை அண்ணா நகரில் குடும்ப குத்து விளக்குகளாக சிவா - மகா மற்றும் இரு குழந்தைகளுடன் மையம் கொண்டு இருக்கிறது.


கொசுறு: வீட்டு வேலை(!) காரணமாக மீள் பதிவு ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. வீட்டு வேலை(!) // மாப்ள அப்படிய்ன்ன வேலை?

  ReplyDelete
 2. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...

  வீட்டு வேலை(!) // மாப்ள அப்படிய்ன்ன வேலை?///

  அடிக்கிறது, வெட்டுறது, பிழியறது... எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா....

  ஆமா, அப்பு கருனு... ஒனக்கு இன்னும் கண்ணாலம் ஆவலியா?

  :-)

  ReplyDelete
 3. ரெண்டு பேரும் என்னைக்கும் அன்பா இருந்தா மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 4. வீட்டு வேலை(!) காரணமாக மீள் பதிவு ஹிஹி!//

  அட்ரா அட்ரா அட்ரா சக்கை, என்னா சாப்பாடு அண்ணே இன்னைக்கு...?

  ReplyDelete
 5. எனக்கும் சாப்பாடு போங்க கத்துதா அண்ணே...

  ReplyDelete
 6. அட.. அப்படியா மாம்ஸ்..
  சொல்லவே இல்லை.

  ReplyDelete
 7. பசுமையான நினைவுகளா இருக்கு மாம்ஸ்

  ரெண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமா இருக்க்ணும்

  சிவா - மகா விற்க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. சிவா - மகா விற்க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. பொண்ணுங்களே வந்து ப்ரபோஸ் பண்றதெல்லாம் நடக்குதா? நம்ம குடுத்து வெச்சது அவ்வளவு தான்...

  ReplyDelete
 10. மாம்ஸ், சமையல் நல்ல செய்வியோ?

  ReplyDelete
 11. என்ஜாய்ய்ய்ய்ய்ய்.

  ReplyDelete
 12. ஏங்க...மாமஸ்ச..கலாய்க்கிறிங்க...சனி..ஞாயிறு இனி மீள் பதிவுதா....குங்பூ கத்துக்கிட்டு இருக்காரு மக்களே!

  ReplyDelete
 13. என்னடா ஏற்கனவே படிச்சமாத்றியே இருக்கேன்னு பார்த்தேன்... நல்லா வேலை செய் மாப்ள...

  ReplyDelete
 14. வீடு வேலை..????? வியட்நாம் போனாலும் புருஷன் புருஷன் தான்...ஹி ஹி :)

  ReplyDelete
 15. இரவு வணக்கம்,விக்கி சார்!இனிய நத்தார் வாழ்த்துக்கள்!மீள்பதிவுன்னாலும் கலக்கல் பதிவு.ஆம்பளைங்களுக்கு ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். நீங்க விரும்புற பொன்னை விட,ஒங்களை விரும்புற பொண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை அமோகமா இருக்கும்!இந்தக் கதை உதாரணம்.

  ReplyDelete
 16. மயிலன் says:வீடு வேலை..????? வியட்நாம் போனாலும் புருஷன் புருஷன் தான்...ஹி ஹி :)///தெரியும் சார்! நீங்க கூட புருஷன் தான்னு!ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
 17. பகிர்வுக்கு நன்றி சகோ .வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 18. அருமை! வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி. நண்பர்கள் படை வைத்திருக்கின்றீர்கள் போல் இருக்கிறது

  ReplyDelete
 20. பகிர்வுக்கு நன்றி. நண்பர்கள் படை வைத்திருக்கின்றீர்கள் போல் இருக்கிறது

  ReplyDelete
 21. வீட்டு வேலைல பிஸியா இருப்பீங்க. நேரமிருந்தா இந்த வாழ்த்தையும் பார்த்திடுங்க.

  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி