மருத்துவமனை(GH) - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே...



வியட்நாம் பற்றி பதிந்து நெடு நாட்களான படியால்(!)...இன்று இங்கு இருக்கும் மருத்துவமனை பற்றியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...!

ஒரு நாட்டுக்கு மிக முக்கியம் சுகாதாரம்...அதை ஆள்பவர்கள் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது மிக மிக முக்கியம்..

வியட்நாம் - தலை நகரம் ஹனோய்...இங்கு மக்களின் அன்றாட வாழ்கை பெரும்பாலும் இயந்திரத்தனமானாலும்...அதிலும் ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை...பெண்ணின் உழைப்பும் தைரியமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன...நாங்கள் சென்ற அரசு சார் மருத்துவமனையில் மருத்துவர் முதல் அனைவரும் பெண்களே!...


என்னுடைய மனைவிக்கு உடல் நலமில்லை என்று கூறியதால் மருத்துவமனை செல்ல முற்பட்டோம்...இங்கு பல நாடுகளின் மருத்தவமனைகள் இருக்கின்றன...குறிப்பாக பிரெஞ்சு, ஆஸ்திரேலியா மற்றும் கியூபா...இதை தவிர்த்து பல இருக்கின்றன...

நான் பிறந்தது அரசு மருத்துவமனை என்பதால்(!)..எப்பொழுதும் அரசு மருத்துவமனையில் உடல் நலம் பார்த்துக்கொள்வது இன்று வரை தொடர்கிறது...என் மனைவியும் "சரி போவோம்னு" சொன்னதால் போய் பார்த்தோம்...


அது ஒரு அரசு மருத்துவமனை...சும்மா சொல்லக்கூடாது...அட அட அட என்னா சுத்தம்...அப்படி ஒரு சுத்தமுங்க...கொஞ்சம் கூட வாடை(smell!) வரலை...இதுவரை நானும் இங்கு இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு சென்று இருக்கிறேன்...அங்கேயும் இதே போலத்தான் ஒரு பளிச்சின்னு துடைச்சி வச்சது போல இருக்கும்...

இங்கு ஒரு நடைமுறை உள்ளது...அதாவது அனைத்து மக்களுக்கும் இன்சூரன்ஸ் அட்டை கொடுக்கப்பட்டு உள்ளது(வருடத்துக்கு $5)..அதன் மூலம் அவர்கள் தங்கள் உடல் சம்மந்தப்பட்ட வியாதிகளை சரி செய்து கொள்ளலாம்..இதை வாங்காதவர்கள் அப்போதைக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்த வேண்டும்..

வரவேற்ப்பரையில்...இன்சூரன்ஸ் இல்லாத தனி நபர்களுக்கு, எந்த செக்கிங்குக்கு எவ்வளவு என்று போர்டை வைத்து இருக்கிறார்கள்..தவிர வெளி நாட்டினர் வந்தால் எந்த வித பாகுபாடு இல்லாமல் அதே அளவு பணத்தை பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்க்கிறார்கள்...ஆச்சரியமாக இருந்தது..பொதுவாக வெளி நாட்டினர் என்றாலே பணத்தை பிடுங்கி விடுவார்கள் ஆஸ்பத்திரிகைகளில்...!

இரத்த பரிசோதனை என் மனைவிக்கு எடுத்தேன் (கொலஸ்டிரால் உற்பட!) மொத்தம் $5(ECG உற்பட!)...கவனிப்பு என்பதை பார்க்கும்போது பல விஷயங்களை சொல்லியே தீரனும்...



அதாவது உடல் செக் செய்யும்போது பொதுவாக சம்பந்தப்பட்ட நபர் ஒரு பதற்றத்துடன் மருத்துவரை உற்று கவனித்து கொண்டே இருப்பார்...அந்நேரம் மருத்துவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் எதுவும் சீரியசானதாக இருந்து விடக்கூடாது என்று நினைப்பார்...அப்படிப்பட்ட அந்த நேரத்தில் என் மனைவியின் முகத்தை பார்த்து அந்த மருத்துவர் அழகா சிரிச்சிகிட்டே..உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லீங்க...கிளைமேட் மாறி இருக்கு அதான் என்று வியட்நாமிய மொழியில் சொல்லிசென்றார்...

பரிசோதனைக்காக ரத்தம் எடுத்து ஒரு மணி நேரத்தில் அதை பற்றிய ரிசல்ட்டை தெரிவித்து விட்டனர்...ஒண்ணுமில்லை என்று மீண்டும் மருத்துவர் உறுதி படுத்திய பிறகே வீட்டுக்காரம்மாவுக்கு மனசு அமைதியாச்சி இடையில் நான் அதெல்லாம் ஒன்னும் இருக்காது..என்ன கொழுப்பு அதிகமா இருக்கான்னு தான் டவுட்டு என்று சொன்னதால் கொஞ்ச நேரம் முறைச்சாங்க அம்புட்டு தான்...


நான் சொல்ல வந்த விஷயம் விட்டுட்டேன் பாருங்க...மருத்துமனை என்பது அன்பாக நடத்தும் ஒரு இடம் என்பதையும்..அதுவும் அரசு சார் மருத்துவமனை எப்படி மக்களை அணுகுகிறது என்பதையும் நேரில் கண்டு ஆனந்தம் கொண்டேன்...அதற்கே இந்த பதிவு...

கொசுறு: என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு மொக்கையாக பட்டால் சாரிங்கோ!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

33 comments :

  1. "நான் சொல்ல வந்த விஷயம் விட்டுட்டேன் பாருங்க...மருத்துமனை என்பது அன்பாக நடத்தும் ஒரு இடம் என்பதையும்..அதுவும் அரசு சார் மருத்துவமனை எப்படி மக்களை அணுகுகிறது என்பதையும் நேரில் கண்டு ஆனந்தம் கொண்டேன்...அதற்கே இந்த பதிவு..."

    மாப்பிள அருமையான பதிவு.

    ReplyDelete
  2. நம் மக்களுக்கு தேவையான பகிர்வு..

    ReplyDelete
  3. நம்மூர் வைத்தியசாலைகளும் இப்படி இருந்தா எப்பிடி இருக்கும்

    ReplyDelete
  4. இங்க அப்படி இல்லையே..

    ReplyDelete
  5. மாம்ஸ்

    இது நம்ம ஊரில் சாத்தியமாகுமா??????????

    ReplyDelete
  6. மாம்ஸ் இது மொக்கை இல்லை, உங்கள் அனுபவ பகிர்வு... வியட்நாம் மருத்துவமனை பற்றி அறிந்து கொண்டேன்....

    இன்னும் வியட்நாம் சேதிகள் தொடர கேட்டுக்கொள்கிறேன்.


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

    ReplyDelete
  7. //நான் பிறந்தது அரசு மருத்துவமனை என்பதால்(!)..எப்பொழுதும் அரசு மருத்துவமனையில் உடல் நலம் பார்த்துக்கொள்வது இன்று வரை தொடர்கிறது//செம லாஜிக்....

    ReplyDelete
  8. @கும்மாச்சி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்ள!

    ReplyDelete
  9. @Cpede News

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. @வெளங்காதவன்

    வருகைக்கும் :-)க்கும் நன்றி ஹிஹி!

    ReplyDelete
  11. @மதுரன்

    “மதுரன் said...
    நம்மூர் வைத்தியசாலைகளும் இப்படி இருந்தா எப்பிடி இருக்கும்”

    >>>>>>>>>>>>

    இப்படி மாறனும்னு எனக்கும் ஆச தான் மாப்ள!

    ReplyDelete
  12. @மதுமதி

    மாறனும்னு எனக்கும் ஆச தான்!

    ReplyDelete
  13. @தமிழ்வாசி பிரகாஷ்

    கண்டிப்பா பகிர்வேன் நன்றி...வருகைக்கும் கருத்துக்கும் மாப்ள!

    ReplyDelete
  14. @சசிகுமார்

    ஹி ஹி எப்பிடி நம்ம வழி மாப்ள!

    ReplyDelete
  15. கேட்கவே ஆச்சரியம்!!ஆசிய நாடுகளில் குறிப்பாக நம்ம நாடுகளில்...ஹிஹி

    ReplyDelete
  16. கேட்கவே ஆச்சரியம்!!ஆசிய நாடுகளில் குறிப்பாக நம்ம நாடுகளில்...ஹிஹி

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. @மைந்தன் சிவா

    சார் வாங்க ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க!

    ReplyDelete
  19. @நண்டு @நொரண்டு -ஈரோடு

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்ள!

    ReplyDelete
  20. பயலை கும்ம முடியல, மக்கள்க்கு உபயோகமா பதிவு போட்டிருக்கான்

    ReplyDelete
  21. என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு மொக்கையாக பட்டால் சாரிங்கோ!//

    கொய்யால எந்த பதிவு போட்டாலும் தக்காளி உள்குத்து போடாமல் இருக்கமாட்டான் போல...

    ReplyDelete
  22. சி.பி.செந்தில்குமார் said...
    பயலை கும்ம முடியல, மக்கள்க்கு உபயோகமா பதிவு போட்டிருக்கான்//

    விடுடா விடுடா, நமக்கு அடுத்த சான்ஸ் கிடைக்காமலா போகும்...?

    ReplyDelete
  23. நான் அதெல்லாம் ஒன்னும் இருக்காது..என்ன கொழுப்பு அதிகமா இருக்கான்னு தான் டவுட்டு என்று சொன்னதால் கொஞ்ச நேரம் முறைச்சாங்க அம்புட்டு தான்...//

    சந்தடி கேப்புல அண்ணியை வாரி இருக்கியே, வீட்டுல போயி செவில்ல அடிவாங்குனதையும் சொல்லலாம்ல....

    ReplyDelete
  24. வியட்னாம் மக்கள் மனசு போல எல்லாமே சுத்தமாக இருக்கும் போல இல்லையா, அருமையான பதிவு...!!!

    ReplyDelete
  25. வணக்கம் அண்ணே,
    நல்ல பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    எம்மவர்கள் இந்த மாதிரி வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளைப் பார்த்தாவது பல துறைகளில் எம் நாடுகளை முன்னேற்றப் பாடு பட வேண்டும்.

    ReplyDelete
  26. மாமா மருத்துவமனைய விடுங்க...அக்கா நல்லாயிருக்காங்களா?
    பார்த்துக்கங்க மாம்ஸ் பதிவ கூட அப்புறம் போட்டுக்கலாம்...

    ReplyDelete
  27. நம்மூர் அரசு மருத்துவமனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு எடுத்துக்காட்டாக வியட்நாம் மருத்துவமனைகள் இருக்கின்றது.

    நம்ம சுகாதார அமைச்சர்... வியட்நாம் சென்று...கண்டு...
    நம் ஊரில் சீர்திருத்தம் செய்தால் நாடும்... நாமும் நலமாக இருப்போம்.

    ReplyDelete
  28. மாப்ள, நம்மூர் டாக்டர்களும் நம்ம மக்கள்ல இருந்துதானே உருவாகுறாங்க? நூலைப் போல சேலை......!

    ReplyDelete
  29. மருத்துவமனைகளில் அன்பாய்தான் நடத்த வேண்டும் ,நீங்க நம்ம ஊர் மருத்துவமனைகளை பார்த்து விட்டு அங்கே போகும் போது அது உமக்கு வித்தியாசமா தெரியுது.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி