மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 2

வணக்கம் நண்பர்களே...முதல் பாகம் பார்க்க இங்கு மஞ்ச மாக்கான் - A Love(!) Story!செல்லவும் ..

மாமா வீடு...

என்ன தான்டி செய்யனும்னு சொல்றே...

ம்ம் நான் நெனச்சத முடிச்சே தீருவேன்...

துவச்சி காயப்போட்ருவேன் ஜாக்கிரத...உனக்கு பையனா கெடைக்க மாட்டான்...

அப்பா இன்னைக்கு பாருங்க....

மாலை நேரம்...குமார் வீதியில் வந்து கொண்டு இருக்கிறான்...

மாமா...

(ஆஹா!) என்னம்மா...

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்...

என்கிட்டயா...என்ன பேசணும்...

கொஞ்சம் என்கூட Mc Rennet வரைக்கும் வர முடியுமா...நான் வேணா என்னோட சைக்கிள வீட்ல விட்டுட்டு உங்க பைக்ல பின்னாடி உக்காந்து வரட்டா...

வேணாம்மா...நீ சைக்கிள்லையே வா...கொஞ்ச தூரம் தானே...அதுவுமில்லாமே...எனக்கு நெறைய வேலை இருக்கு...!

ஓ..பத்து நிமிஷம் பேசணும்...

ஓகே...நீ போயிட்டே இரு தம்பிக்கு டிரஸ் எடுத்திட்டு வந்தேன் அத கொடுத்திட்டு வந்துடறேன்...

சரி..

கொஞ்ச நேரம் கழித்து...Mc. Rennet shop இல்...

ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க....

நான் உங்களையா...அய்யோ நாங்கல்லாம் மஞ்ச மாக்கானுங்கம்மா...

கிண்டல் பண்ணாதீங்க நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்...

என்னம்மோ போன் பண்ணி மிரட்டுறே...என்ன தான் உன்னோட பிரச்சன...

நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோதான்...


உன் விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்...உன்னோட கேரக்டர் தெரியும்...நீ இது வரைக்கும் எத்தன பேர கழட்டி விட்டு இருக்கன்னும் தெரியும்..எனக்கு உங்கதையே வேணாம்...என்னைய விட்ரு!

இது தான் உங்க முடிவா....உங்கள சும்மா விடமாட்டேன்...நீங்க எப்படி துடிப்பீங்க பாருங்க...

சரி பாப்போம்...

ரொம்ப வருத்தப்படுவீங்க...

சந்தோசம் அதையும் பாப்போம்...

நிச்சயதார்த்தம் முடிந்து கொஞ்ச நாள் கழித்து...வீட்டுக்கு திரும்பிய குமாருக்கு பேரதிர்ச்சி...கதவை தட்டி கொண்டு இருந்தார்...கதவை திறந்தது சாரு...கூடவே அவரின் தம்பியுடன்...

டேய் என்னடா இது...வீட்டு கதவ மூடிட்டு உள்ளார நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க...

அண்ணே உள்ரூம்ல பேசிட்டு இருந்தோம்...

அதுக்கு எதுக்கு தாழ்பாள் போட்டு இருந்துது....

சரி விடுன்னே..ஏன் இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட...வேலை முடிஞ்சிடுச்சா...

ஏய் சாரு கெளம்பு உங்க வீட்டுக்கு...நான் வரேன் வந்து உங்க அம்மா, அப்பாகிட்ட நடந்தத சொல்றேன்...

ஏன்னே இப்போ ஏன்னா நடந்துடுசின்னு இப்படி தையா தக்கான்னு குதிக்கற...

எலேய் ஒரு வயசுக்கு வந்த பொண்ணு...இப்படி உன்கூட..ச்சே டேய் நான் உன்னைய இப்படி பாப்பேன்னு நெனைக்கல...

ஒன்னும் நடக்கல...அதுக்குள்ளே தான் நீ வந்துட்டியே...

சீ...வெளிய போடி...டேய் உள்ள போடா...(தம்பி உள்ளே சென்று விட்டான்...!)

என்ன Mr. குமார் உன்னைய பழி வாங்குவேன்னு சொன்னேன்ல...இனி தான் உனக்கு இருக்கு...நீ என்ன பேசுனாலும் உன் அருமை தம்பி அத கேக்குற மூட்ல இல்ல...ஹாஹா...என்னோட கேரெக்டர கேவலமா சொல்லி கொக்கரிச்சியே...இனி பாரு என்னோட ஆட்டத்த...

சீ நீயும் ஒரு பெண்ணா...

நானா சொல்றேன் நீதான் சொல்றே...வர்ட்டா...

கொஞ்ச நாள் கழித்து மாமா குமார் வீட்டுக்கு தன் மனைவியுடன் வந்தார்...

என்ன மாப்ள எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன் மாம்ஸ்...என்ன ரொம்ப நாளா காணோம் வேலையோ!

ஆமாம்டா...சரி சின்ன மாப்ள எங்க காணோம்...

அவரு காலயிலயே வேலைக்கு போயிட்டாரே...

என்னது அப்படியா...எங்க வீட்டுக்கு வந்து மேல்படிப்பு படிக்க ரூ 30,000 வேணும்னு காலைல கேட்டாரே...நான்கூட உங்க அண்ணனுக்கு தெரியுமான்னு கேட்டதுக்கு தெரியும்னு சொன்னாரே...சரி விடுங்க!

அப்படியா...(அடப்பாவி இப்படி போய் மாட்றியே!)

மாமி பேச ஆரம்பித்தாள்(மாமா மெளனமாக பார்த்து கொண்டு இருந்தார்!)

எம் பொண்ணு உங்க சின்ன பையன விரும்புறா...

ஓ!

நாம பெரியவங்களா பேசி முடிச்சிட்டோம்னா நல்லது...இல்லைன்னா சின்னஞ் சிறுசுங்க...ஏதாவது எடக்கு மடக்கா செய்யப்போகுதுங்க...சட்டு புட்டு பேசி முடிங்க!


ஏம்மா என்னா பேசுற நீ...அப்படியே இருந்தாலும் வீட்ல அய்யா இல்ல அவரு நைட்டு தான் வருவாரு...அவரு வந்த உடனே பேசிட்டு சொல்றேன்...

உங்க வீட்டுக்காரருக்கு எங்க குடும்பத்த பாத்தாலே புடிக்காதே...அதான் அவரு இருக்கும் போது...வரல...

சரி விடு...நைட்டு அய்யா வரட்டும் கேட்டு சொல்லுறேன்...சரியா...

சரி நாங்க வாரோம்...

குமாரின் எதிர்கால மனைவியின் வீட்டு தொலைபேசி ஒலித்தது...

ஹலோ...

வர்ஷினியா...

ஆமாங்க...நீங்க...

என்னை உங்களுக்கு தெரியாது..எனக்கு உங்களை நல்லா(!) தெரியும்...நான் கொஞ்சம் உங்க கிட்ட இப்போ பேச முடியுமா...

ம்ம் பேசுங்க...

நீங்க Mr. குமாரை திருமணம் செய்துக்கறதா முடிவு பண்ணிட்டீங்களா...

என்னங்க இது கேள்வி...நிச்சயதார்த்தம் எல்லாம் ஆகிடுச்சி..உங்களுக்கு தெரியாதா...ஏன்!

அவரோட தனிப்பட்ட வாழ்கை ரொம்ப மோசம்ங்க உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில...அநியாயமா உங்க வாழ்கைய அந்தாள நம்பி இழந்துடாதீங்க...

ஹாலோ யாருங்க நீங்க...ஏன் அவர பத்தி இவ்ளோ கீழ்த்தரமா பேசுறீங்க!...அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சன...


சொல்றேன்...கேளுங்க...


தொடரும்...


கொசுறு: பெண் இந்த பூமியில் தாயாக, தமக்கையாக, மனைவியாக பூஜிக்க படுகிறாள்...இருந்தும் ஒரு சில பெண்கள்....

கொசுறு 2: இந்த உரையாடல்களில் இருந்தவர்கள்- மாமா, சாரு, மாமி, குமார், அம்மா, தம்பி...எங்கெங்கு இவர்கள் பேசி இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்...உங்களுக்கு தெரியாததா...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. மாம்ஸ், அருமையான தொடக்கம்..... குமார் உஷாரா இருந்தாலும் ஏதாவது நடந்திடுது.... பாக்கலாம் அடுத்த பாகத்தில்.... வீ ஆர் வெயிட்டிங்....

  ReplyDelete
 2. இது தானா அந்த காதல் கதை?

  ReplyDelete
 3. தொடருங்கள் மாம்ஸ்..
  காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. ////கொசுறு: பெண் இந்த பூமியில் தாயாக, தமக்கையாக, மனைவியாக பூஜிக்க படுகிறாள்...இருந்தும் ஒரு சில பெண்கள்....
  ////

  ஆம் பாஸ் ஒரு சில பெண்களின் கேவலமான செயல்களினால் அவர்களை பெண்கள் என்று சொல்லவே வெட்கமாக இருக்கு...

  ReplyDelete
 5. கதை இன்னும், எங்களை மாதிரி LKG களுக்கு விளங்கர மாதிரி இருந்திருக்கலாம்

  ReplyDelete
 6. அருமையாகப் போகிறது பதிவு
  கற்பனையைவிட நிஜத்தின் பங்கு
  அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. எதிர்பார்ப்பை கூட்டும் கதை. தொடர்கிறேன்.

  ReplyDelete
 8. கற்பனைக்கதைகளை விட நிஜக்கதைகள் எதிர்பார்க்கமுடியாத திகில் கதைகளாக அமைந்துவிடுவதுண்டு.

  ReplyDelete
 9. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?

  விவகாரமான கதையாக இருக்கு! ஆனாலும் சமூகத்தின் யதார்த்தத்தினைச் சொல்லி நிற்கிறது.
  கணவனுக்குப் பழி வாங்கும் நோக்கில் தன் சுய ரூபத்தை கணவனின் தம்பியுடன் சேர்ந்து காண்பிக்கத் துடிக்கும் மனைவி!
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  இப்படியும் சிலர் உள்ளனர் தான் எம் சமூகத்தில்!

  அடுத்த பாகத்தை எதிர்பார்த்து!

  ReplyDelete
 10. கணவனை பழி வாங்க இப்படியும் செய்வார்களா? மாப்ள எதிர்ப்பார்ப்பு கூடுகிறது..

  ReplyDelete
 11. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்

  ReplyDelete
 12. தொடருங்கள் மாம்ஸ்

  ReplyDelete
 13. //ஒன்னும் நடக்கல...அதுக்குள்ளே தான் நீ வந்துட்டியே...//

  மாமா.....ஒரு கில்மாவ கெடுத்திட்டியே!
  குமாரு யாருன்னு தொடர் முடிவுல சொல்லுவிங்களா...? இல்லை...
  உங்களுக்கு தெரியாதா? அப்படின்னு மழுப்ப போறீங்களா?எதா இருந்தாலும் பஞ்சாயத்துல சொல்லிட்டு 3 போடுங்க

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி