மஞ்ச மாக்கான் - A Love Story - Final!

வணக்கம் நண்பர்களே...முந்தய பாகங்களுக்கு...

மஞ்ச மாக்கான் - A Love(!) Story!

மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 2
மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 3

தொடர்கிறது...

ஹாய்...

இங்க எதுக்கு வந்த...

என்ன இது கேள்வி..உங்கள பாக்க வந்தேன்...

பாத்துட்டே இல்ல கெளம்பு...

முடியாது..எனக்கு ஒரு வழி சொல்லுங்க..

என்ன சொல்லணும்..

என்னை நீங்க இப்பல்லாம் கண்டுக்கறதே இல்ல...

இங்க பாரும்மா...நான் அப்படித்தான்...உன்னால எனக்கு பிரோஜனம் இல்ல கெளம்பு..

ஏன்!...

இங்க பாரு ஓபனா சொல்லட்டா...

சொல்லுங்க...

நீ எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சி தான் பழகுனேன்...சரி என்னோட படிப்பு செலவுக்காவது ஆகுமேன்னு பாத்தா...ரொம்ப உசாரா தான் இருக்கீங்க...கல்யாணம் பண்ணிக்கறேன்னு எழுதி கொடுத்தாத்தான் பணம் தருவேன்னு சொன்னீங்க இல்ல...

ஆமா...அதுக்கு என்ன..

உன்னைய மாதிரி பொண்ணு கலயாணத்துக்கு வேலைக்காகாது...நாளைக்கே இன்னொருத்தன பாத்துட்டு ஓடிருவே...

ச்சே என்னை அவ்ளோ கேவலமா நெனைக்கிறீங்களா...

எங்க அண்ண மாதிரி உன்கிட்ட பொண்ணாச்சேன்னு பொறுமையா பேசுற ஆளு நான் இல்ல...கெளம்பு இங்க வந்து சீன் போட்டே...நீ பலான ஆளுன்னு சொல்லி அடிச்சி வெரட்ட வெச்சிடுவேன்...

ஓ...பாக்கறேன்..உன்னையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்...

சர்தான் போ..இன்னும் எத்தன பேருகிட்ட இப்படியே சினிமால வராப்ல சொல்லிட்டு இருப்ப....அட சீ போ...!


(அன்று மாலை அவள் அவமானத்தால் குறுகினாள்...திடீரென்று மயக்கமானாள்...வீட்டில் இருந்த பெரியவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்...அங்கே அவள் கர்பமாக இருப்பதாக கன்பார்ம் ஆனது..!)

அடிப்பாவி இப்படி பண்ணிட்டியே...யாரு சொல்லியும் கேக்காம உனக்கு இம்புட்டு சுதந்திரம் கொடுத்தோமே...இப்படி எங்கள தல குனிய வச்சிட்டியே..

இப்போ என்ன ஆச்சின்னு இப்படி நீயும் அப்பாவும் கத்திட்டு இருக்கீங்க...ஒன்னும் பிரச்சன இல்ல...இருங்க..அந்த போன எடுங்க...

தொலைபேசி அடித்தது...

ஹலோ பிஜுவா...

ஆமா..சொல்லு மஞ்சு..

டேய் நீ கெளம்பி கல்பனா ஹாஸ்பிடல் வா...

சிறிது நேரத்தில் பிஜு அங்கு வந்து சேர்ந்தான்...

இவன்தான் என்னோட வருங்கால புருஷன்...இவன்தான் இந்த குழந்தைக்கு அப்பா..போதுமா..

எவ்ளோ நெஞ்சழுத்தம்டீ உனக்கு...

ஏம்பா உங்க அப்பா, அம்மா யாரு...

எங்க அப்பா பேரு தாமஸ்...பிசினெஸ் மேன்...

ஓ..இதுவேறயா...சரி உங்க அப்பா எம் பொண்ணே மருமகளா ஏற்துப்பாரா...

இல்ல ஆண்டி நான் ஏற்கனவே கேட்டு பாத்துட்டேன்...வீட்ட விட்டு வெளிய போக சொல்லிட்டாரு...இப்போ நான் தனியாத்தான் ரூம் எடுத்து தங்கிட்டு இருக்கேன்...எனக்கிருக்க ஒரே சொந்தம்...என் மஞ்சு மட்டும் தான்...!

ஓ...சரி சீக்கிரத்துல ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணி வைக்கிறோம்...அப்படியே ஒரு ரிசப்ஷன் வச்சி மானத்த கொஞ்ச மாவது காப்பாத்த பாக்குறோம்..சரியா...அதுவரைக்கும் அமைதியா இருங்க ப்ளீஸ்!...

ஓகே மா...

கொஞ்ச நாளில் அப்படியே நடந்தது...தம்பதிகளாக மாமனும் அவர் மனைவியும் கலந்து கொண்டார்கள்...அங்கே..

டேய் என்னை மன்னிச்சிடுடா....அப்படியே என் பொண்ணையும்...

என்ன மாமா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு...விடுங்க...இப்போவாவது சந்தோஷமா இருக்கான்னு நெனைக்கும்போது மனசுக்கு ஆறுதலா இருக்கு...

என்ன மஞ்சு எப்படி இருக்க...கங்குராசுலேஷன்...

உன்னை விட மாட்டேன்டா...

அட இன்னுமா...ஸ் ஸ் அபா...(கொஞ்ச நாளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது அவளுக்கு...குழந்தை பிறந்த சில தினங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டது...இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறாள்...அவள்!)

முடிந்தது...

கொசுறு: விறுவிறுப்புக்காக எழுதப்பட்டதல்ல...இக்கதை(காதை!)...வாழ்கை என்பது அழகிய பயணம்...அதை அதன் பாதையில் விட்டு ரசிப்பவர்கள் என்றுமே சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்...தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்ப்பவர்களின் வலி கடைசிவரை தொடருகிறது...மனசுக்கு அமைதி கொடு இறைவா...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. டிஸ்கியில் கொடுத்துள்ளதுதான் எனது கருத்தும்
  உண்மை சுவாரஸ்யத்தைவிட சுவாரஸ்யமானது இல்லையா
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மஞ்ச மாக்கான் நன்றாக இருந்தது..

  ReplyDelete
 3. அருமையா முடிச்சீங்க மாம்ஸ்....

  ReplyDelete
 4. Kilu kiluppu illaiye mamms.....
  Enna ponga.....
  (ippadikku rangalathilum
  kilu kiluppu kettpor sangam )

  ReplyDelete
 5. என்ன மாம்ஸ்! கடைசில இப்பிடி முடிஞ்சுது? அதுசரி அவ முதல்லேயே மனநிலை சற்று பாதிக்கப்பட மாதிரித்தானே இருந்தா!

  //தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்ப்பவர்களின் வலி கடைசிவரை தொடருகிறது//

  சூப்பர் மாம்ஸ்!!!

  ReplyDelete
 6. குமார் சார் கதைநல்லாயிருந்தது!!(நிசகதை மாதிரியே இருக்குதுங்க என்னை முறைக்காதிங்க..ஹிஹி)
  அவள் செய்யதபாவத்திற்கு குழந்தைக்கு தண்டனையா?மனவளர்சி பாதிக்கப்பட்ட தாயின் குழந்தை நினைத்தாலே கவலை கொள்கிறது.

  ReplyDelete
 7. //வாழ்கை என்பது அழகிய பயணம்...அதை அதன் பாதையில் விட்டு ரசிப்பவர்கள் என்றுமே சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்...தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்ப்பவர்களின் வலி கடைசிவரை தொடருகிறது.//

  உண்மை மாம்ஸ்..ரொம்ப டச்சிங்கா இருக்கு.

  கதையும் கூட

  ReplyDelete
 8. இப்படியும் ஒரு பெண்ணா....

  ReplyDelete
 9. நல்ல கதை மாம்ஸ் அதை விட கடைசியா சொன்ன வார்த்தை நிதர்சனம்

  ReplyDelete
 10. மஞ்ச மாக்கான்னு ஒரு தலைப்பா? தம்பி இதுல எதும் உள்குத்து இருக்கா?

  ReplyDelete
 11. அருமையாக கொண்டு சென்று அழகாக முடித்திருக்கிறீர்கள்.வாழ்க நீவிர் பல்லாண்டு!

  ReplyDelete
 12. இதனால உலகத்துக்கு நீ என்ன சொல்ல வர்றேன்னா, வானவில்லை நீ வளைக்காதே அது தானே வளஞ்சிதானே இருக்குன்னு அருமையா சொல்லிட்டீங்க அண்ணே, வாழ்க்கையை அதன் போக்கில் விடுங்க சந்தோசம் தானா வரும் ரைட்டு...!!!

  ReplyDelete
 13. .வாழ்கை என்பது அழகிய பயணம்...அதை அதன் பாதையில் விட்டு ரசிப்பவர்கள் என்றுமே சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்...தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்ப்பவர்களின் வலி கடைசிவரை தொடருகிறது...மனசுக்கு அமைதி கொடு இறைவா...!

  அழகான முடிவு!

  ReplyDelete
 14. வாழ்கை என்பது அழகிய பயணம்...அதை அதன் பாதையில் விட்டு ரசிப்பவர்கள் என்றுமே சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்.ஒரு நல்ல தொடர், அசத்தல்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி