மஞ்ச மாக்கான் - A Love(!) Story!

வணக்கம் நண்பர்களே...இந்த பதிவில் வரும் விஷயங்கள் முற்றிலும் உண்மை...எனவே, பெண் ஆண் என்ற பேதத்துடன் எழுதியதல்ல...

வாப்பா எப்படி இருக்க...

நல்ல இருக்கேன் மாமா...

என்னப்பா இந்தப்பக்கமே காணோம்....

என்ன மாமா பண்றது வேலை தேடிட்டு இருக்கேன்..அதான் இப்போ இங்க பக்கத்துலையே வீடு பாத்து இருக்கோம் அடுத்தவாரம் குடிவர்றதா இருக்கோம்...உங்க கிட்ட சொல்லிட்டு போலாமேன்னு...

வாய்யா வா...என்ன உதவி வேணும்னாலும் என்னய கேளு...

அடுத்த வாரம்....


என்ன மாமி மாமா இல்ல...

இல்லப்பா டூல்ஸ் வாங்க கடைக்கு போயி இருக்காரு...

என்னைய பாத்ததும் உங்க பொண்ணு ஏன் பக்கத்துக்கு வீட்டுக்கு ஓடிச்சி...

ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னும்மில்ல...அவ பிரண்டபாக்க போயிருக்கா...

சரி மாமி நான் வரேன்...

சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தான் அவன்...அந்தப்பெண் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாள்...

ஏண்டி அவன் உன்னோட மாமா தான....எதுக்கு அவன் வரும்போது எல்லாம் ஓடிப்போயி அடுத்த வீட்டுல போயி பூந்துக்கற....

அம்மா...உனக்கு ஏன் இன்னும் புரியல அந்தாளு ஒரு மஞ்ச மாக்கான்...நான் சிட்டிலையே பொறந்து வளந்தவ...அவன் சிட்டிய விட்டு வெளிய இருந்து வந்து இருக்கான்...அதுவும் என்னைய பாக்க தான் அவன் அடிக்கடி இங்க வர்றான்...

உள் நுழைந்தான் குமார்...


அலோ ஒரு நிமிஷம் என்னோட கீய மறந்து விட்டு போயிட்டேன்...அதை எடுக்கத்தான் வந்தேன்...நீங்க நெனைக்கறது மாதிரி இல்லீங்க...நான் இங்க வர்றது எங்க மாமன பாத்து பேசிட்டு போகத்தான்..இந்த மாதிரி புத்தி எனக்கில்ல...இன்னொன்னு தெரிஞ்சிக்கங்க...தாம்பரம் சிட்டி தான் ஞாபகம் இருக்கட்டும்...நான் வர்றேன்...

ஏன்டி இது தேவையா உனக்கு...

கொஞ்ச நாள் போனது....அந்த மஞ்ச மாக்கான் கொஞ்ச கொஞ்சமாக தன் உழைப்பால் பொருளாதாரத்தில் மேலேறிக்கொண்டு இருந்தான்...

என்னங்க...

என்ன...

நம்ம சாருவ, குமாருக்கே பேசி முடிக்க பாருங்களேன்...கை நெறைய சம்பாதிக்கறான்...இடம் வேற வாங்கி போட்டு இருக்கறதா சொன்னீங்க...

எப்படி அவன் கிட்ட பேசுறது...ஏற்கனவே இந்தப்பொண்ணு அவனை அவமானப்படுத்தி பேசுனதில இருந்து அவன் இங்க வர்றதே இல்ல...சரி முயற்சி பண்றேன்...

குமாரு வீட்டில்...

ஏங்கா மாப்ள இல்ல...

இல்லப்பா எதோ வேல விஷயமா வெளியூரு போயி இருக்கான்..நான் கூட உங்க வீட்டுக்கு வர இருந்தேன்...ஒரு முக்கியமான விஷயம்...

என்னக்கா சொல்லு...

நம்ம குமாருக்கு வரன் ஒன்னு அருமையா வந்து இருக்கு...அவங்க அப்பாருக்கும் புடிச்சி போச்சி...இவன கேட்டா...நீங்களா பாத்து முடிச்சிடுங்கன்னு சொல்லிட்டான்...அதான் உன்கிட்ட சொல்ல வரலாம்னு இருந்தேன்..

ஓ அப்படியா...நல்லது நல்ல வரன்னா முடிச்சிடுவோம்!

மாமா வீட்டில்....

ஏம்மா..என்ன ஆச்சி மாமா ஒத்துக்கலையா...

ஏன்டி நீ வேணாம்னா அவன் ஒதுங்கிக்கணும்...வேணும்னா உடனே வந்து கல்யாணம் பண்ணிக்கனுமா...அவனுக்கு அவங்க வீட்டுல வேற பொண்ண பாத்துட்டாங்க.....

எது வேற பொண்ணா...கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்...

ஏன்டி நீ அந்த மெக்கானிக் பய்யன் கூட ஓடிப்போனியே...ரெண்டு நாலு கழிச்சி வந்து சேந்தியே...இது வரைக்கும் நீ உண்மையை சொல்லல...

நான் தான் சொன்னனே கோவா போயிட்டு வந்தோம்னு...அது ஒரு டேடிங் அவ்ளோதான்...அடுத்தவங்க தப்பா நெனைக்கறத பத்தி எனக்கு கவலை இல்ல...இப்போ அவனுக்கும் எனக்கும் எந்த லிங்கும் இல்ல...எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடக்காம நிறுத்து...நான் மாமாவையே கட்டிக்கறேன்...எனக்கு அது தான் சரின்னு படுது...

விஷயம் நம்ம கை மீறி போயிடுச்சி இப்போ ஒன்னும் பண்ண முடியாது...அடுத்த வாரம் நிச்சய தார்த்தம்...

பாக்குறேன்..எப்படி அந்தாளு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்ராருன்னு!

அடிப்பாவி...அவன் வாழ்கைய கெடுத்துடாதே....

அப்பா இப்போ நான் அந்தாளு என்னை கெடுத்துட்டான்னு பொண்ணு வீட்ல சொன்னா எப்படி இருக்கும்...

ஐயோ நீ எதுவேணா செய்வே நெஞ்சி தைரியம் புடிச்சவ...என் மாப்ள வாழ்கையில எதுவும் விளயாடிடாதே...பாவம் அவன்...!

ரெண்டு நாள் கழித்து குமாரின் வீட்டு தொலைபேசி ஒலித்தது...

அலோ...

நான் சாரு பேசுறேன்...

ம்ம் சொல்லுங்க...

யாரு மாமாவா....

ஆமாங்க...

நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னைய தான் பண்ணிக்கணும்...மீறி ஏதாவது முயற்சி பண்ணீங்க விளைவுகள் பயங்கரமா இருக்கும்...

ஹாஹா...என்னம்மா மிரட்ரியா...முயற்சி பண்ணு பாப்போம்...


நான் சீரியஸா சொல்றேன்...நீங்க மீறி அந்தப்பொண்ணு கூடத்தான் கல்யாணம்னு முடிவு பண்ணீங்கன்னா...அதுக்கப்புறம் சொல்ல மாட்டேன் செய்வேன்..

அட...

தொடரும்...

கொசுறு: இது ஒரு நிதர்சன பதிவே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. இப்பிடியும் ஒரு சிலர் இருக்கிறாங்கதான்.

  கல்யாணம் நடந்திச்சா இல்லையா? சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க

  ReplyDelete
 2. (நிர்மலா பெரியசாமி மாதிரி படிக்கவும்)
  விக்கி தொடர்கதை எழுதுகிறார்..... இதில் கில்மா வருமா?
  சிபி செந்தில்குமார் கேள்விவிவிவி.................

  ReplyDelete
 3. நல்லா கதை விடுறீரு!

  ReplyDelete
 4. மனிதரில் இத்தனை நிறங்களா?

  ReplyDelete
 5. மாப்ள சீக்கிரம் அடுத்த பகுதிய போடுப்பா.

  ReplyDelete
 6. கதை நல்லாத்தான் போகுது......

  ReplyDelete
 7. என்ன கொடும மாம்ஸ்? இப்பிடியெல்லாம் ம்ம்ம்..செய்வாய்ங்க செய்வாய்ங்க!
  குமார் - கேள்விப்பட்ட பேரால்ல இருக்கு! :-)

  ReplyDelete
 8. தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

  ReplyDelete
 9. சுவாரஸ்யம் தான் தொடருங்கள் ,
  நன்றி

  ReplyDelete
 10. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்..
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. அடுத்த பதிவுக்கு வெய்டிங்...

  ReplyDelete
 12. அப்புறம் என்ன ஆச்சு?சீக்கிரம் சொல்லுங்க!

  ReplyDelete
 13. மாப்ள உண்மையோ பொய்யோ அது மேட்டர் இல்ல ஆனால் சுவாரஸ்யமாக இருக்கு....

  ReplyDelete
 14. பாஸ் சுவாரஸ்யமாக இருக்கு அதுவும் உண்மைக்கதை என்றதும் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கு அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 15. மாம்ஸ்! பேசாம சீரியல் திரைக்கதை எழுதலாம் ! நல்லா வருதுமா!

  ReplyDelete
 16. டேய் அந்த டுமார் நீதானே ச்சே ச்சீ குமார் நீதானே, உன் கிளைமாக்ஸ் எனக்கு இப்பவே புருஞ்சி போச்சுடோய், விக்ரமன் படம் மாதிரி ஹீஈஈ ஹீஈஈ....

  ReplyDelete
 17. மாம்ஸ், இப்போ தன் டைம் கெடச்சுச்சு. மஞ்ச மாகான் லவ் ஸ்டோரி சூப்பர். தொடருங்கள்....
  அப்புறம் அந்த குமார் உங்களுக்கு சொந்தக்காரரா?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி