மார்கட் (Market)- வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே...என்னய்யா இது மார்கெட் பத்தி சொல்ல என்ன இருக்கு...அங்க இல்லதததையா வித்துடப்போறாங்கன்னு நினைக்கிறவங்க நினச்சிகிடட்டும்...நான் தொடருகிறேன்...!

காய்கறி மார்கெட் நம்ம ஊருல எப்படி இருக்கும்...காய்கறிகளை மட்டும் பல இடத்திலும்(!)...அசைவம் சில இடத்தில் தனியாகவும் விற்கப்படும்..!

இங்கு பொதுவாக மார்கெட் என்றாலே எல்லாம் கிடைக்கும் ஓர் இடம்...அதாவது காய்கறிகளும், அசைவமும்..!


முதலில் காய்கறிகள் பற்றி சொல்லிடுறேன்..நம்ம ஊருல இப்போ எப்படின்னு சரியா தெரியலீங்க...ஆனா, இங்க தேங்காய் துருவி விற்கப்படுகிறது...சேனைக்கிழங்கு தோல் உரித்து விற்கப்படுகிறது, இன்னும் தோல் உரித்து விற்கப்படும் வகையறாக்கள் - சிறு வெங்காயம், பூண்டு, உருளை கிழங்கு...இன்னும் பல..குறிப்பாக நீங்கள் கேட்ட உடன் சும்மா பர பரன்னு உரிச்சி கொடுத்திடுவாங்க...வீட்டுக்கரம்மாங்களுக்கு வேலை மிச்சம் அதிகம்..


கீரைகள் - பல கீரைகளின் பெயர்கள் தெரியா விட்டாலும் ஒரு அனுமானமாக வாங்கி வருவேன்..ரிஸ்க் பிடிக்கும் என்பதால்(!)..முதலில் எனக்கு சமைக்க சொல்வேன்...எனக்கு அடுத்த நாள் எதுவும் எதிர்மறையாக இல்லை என்றால் வீட்டில் இருப்போர் உன்ன அனுமதிப்பேன்...


மாமிசம் - சிக்கன் - இது உரித்து வெறும் சதைகள் மட்டும் தனியாக வேண்டுமென்றால் கொடுக்கப்படும்...இது தவிர மாடு மற்றும் பன்றி விற்பனை அமோகம்...ஆட்டிறைச்சி கிடைப்பதில்லை(!)...


இது தவிர ஆமை(சிறியது முதல் பெரியது வரை!), தவளை மற்றும் பல உயிரினங்கள்!..


கடல் உணவு: வியட்நாமியர்கள் கடல் உணவுப்பிரியர்கள்...எனவே மீன் வித விதமாக இருக்கும்(உயுருடன் அதிகம்!)...எறா - பல வகை உண்டு...இவை யாவும் கேட்ட உடன் அழகாக உரித்து தரப்படும்(தோல்கள் நீக்கி!)...


இது தவிர தனியாக நாய் கறி மார்க்கட் உள்ளது...(ஹிஹி!)..அப்படியே ஒரு நாயை சுட்டு(!) நிக்க வைத்து இருப்பார்கள்...ஸ்ஸ் அபா...உரித்த நாய் எப்படி இருக்கும் பாருங்க...இவை தனியாக பட்டிகளில் இறைச்சிக்காக வளர்க்கபடுபவை..

இங்கு கிடைக்காத மாமிச விஷயம் குறைவு...எந்த அளவுக்கு அசைவம் எடுத்துக்கொள்கிறார்களோ...அதே அளவு காய்கறிகளை உண்ணுவார்கள்(அதிகமாக பச்சையாக!)...

இப்படி பல வித உணவுகளை உண்டாலும் எடை என்னமோ 50 இலிருந்து 60 தாண்டாது....நிற்க அவர்கள் குடிக்கும் பானங்கள் பற்றி விரைவில்...

கொசுறு: எல்லா வித கனிகளும்(கிட்ட தட்ட!) கிடைக்கிறது என்பதால் அதை குறிப்பிடவில்லை...பொறுமையாக வாசித்தற்கு நன்றி..


நன்றி: திரு. சம்பத்குமார் - தமிழ் பேரன்ட்ஸ் அவர்கள் உபயத்தால்...தக்காளியின் ப்ளாக் கலைநுணுக்கத்துடன் மாறி இருக்கிறது!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. பிளாக் லே அவுட் மாத்தி இருக்கே , இன்னா மேட்டர்? உண்மையை சொல்டா

  ReplyDelete
 2. முதலில் எனக்கு சமைக்க சொல்வேன்...எனக்கு அடுத்த நாள் எதுவும் எதிர்மறையாக இல்லை என்றால் வீட்டில் இருப்போர் உன்ன அனுமதிப்பேன்...//
  இவ்வளவு நல்லவரா நீங்க ? சொல்லவே இல்ல ?

  ReplyDelete
 3. இது தவிர தனியாக நாய் கறி மார்க்கட் உள்ளது...(ஹிஹி!)..//
  காலையிலேயே வாந்தி வாந்தியா வருது

  ReplyDelete
 4. //முதலில் எனக்கு சமைக்க சொல்வேன்...எனக்கு அடுத்த நாள் எதுவும் எதிர்மறையாக இல்லை என்றால் வீட்டில் இருப்போர் உன்ன அனுமதிப்பேன்...//அவளோ நல்லவரா அண்ணே நீங்க...முட்டியல...

  ReplyDelete
 5. //இப்படி பல வித உணவுகளை உண்டாலும் எடை என்னமோ 50 இலிருந்து 60 தாண்டாது....//

  அதுக்கெல்லாம் நம்மள மாதிரி நல்ல மனசு வேணும் அண்ணே...

  ReplyDelete
 6. இது நம்ம எரிய சமாசாரம்...டைம் கெடச்சா எல்லாரும் வந்துட்டு போங்க..இந்த வருடத்தில் நான்..

  ReplyDelete
 7. Vanakkam mams...
  Blog mob.-la udane
  lode aaguthu.....
  Comp.....malai parkkiren

  ReplyDelete
 8. படங்களுடன் பதிவு அருமை
  அவர்கள் உணவுப் பழக்கத்திற்கும் எடைக்கும் எதுவும்
  சம்பந்தம் உள்ளதா எனத் தெரியவில்லை
  அவர்களது உணவுப் பழக்கம் குறித்தும்
  எழுதினால அவர்கள் ஆரோக்கியம் குறித்தும்புரிந்து கொள்ள
  ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்
  பயனுள்ள தகவல்கள் கொண்ட அருமையானபதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மார்கெட் ஓகே..அதென்ன எல்லா வித கனிகளும்(கிட்ட தட்ட!) கிடைக்கிறது.அது எந்த கனி...(மாட்டி விடுவோம்ல ).

  ReplyDelete
 10. ம்ம்..மார்க்கெட்ட பத்தி போட்டு மார்க்கெட் ஏத்திக்கிற முயற்சி..நல்லாடிருக்கு..


  அன்போடு அழைக்கிறேன்..

  இறப்பதை எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 11. வியட்நாமில...நாய்கறி கிடக்கும்ன்னு படிச்சிருக்கேன்.....உங்க கிட்ட
  கேக்கனும்னு நினைச்சேன்...பதிவா போட்டிட்டிங்க...

  இன்று என் வலையில் படிக்க

  அரசியலில் சேர்ந்த பிரபல பதிவர் பதிவுலகமே அதிர்ச்சி..!

  ReplyDelete
 12. நினைக்கிறவங்க நினச்சிகிடட்டும்...நான் தொடருகிறேன்...!

  இதுதான் விக்கி மாம்ஸ் பன்ச்.

  ReplyDelete
 13. புதிய சட்டையில் மாம்ஸ் பதிவு அசைவமாக உள்ளது.... ஹி..ஹி.. மார்க்கெட்டில் அசைவம் அதிகம்னு சொல்லியிருகிங்க...  வாசிக்க:
  முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

  ReplyDelete
 14. அவ்வ்வ் நாய்க்கறியா.. படிக்கும்போதே என்னமோ பண்ணுதே!! ஆமா நீங்களும் நாய்க்கறி சாப்பிடுறீங்களா?

  ஹா ஹா

  ReplyDelete
 15. டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு பாஸ்

  ReplyDelete
 16. நான் எதிர்பார்த்த விடயம் ...
  தொடருங்கள் ...தொடர்கிறேன் ...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. பாஸ் இன்னும் 8 பதிவுகள் போட்டால் 500பதிவுகளை எட்டிவிடுவீர்கள் வாழ்த்துக்கள்

  நாய் கறி உண்பார்களா? வித்தியாசமாக இருக்கு அவ்வ்வ்வ்

  ReplyDelete
 18. மாப்ளே எழுத்துக்களை கருப்பாக மாற்றி தொலைங்கே ஒயிட் பேக்கிரவுண்ட்க்கு நல்ல தெரியும் இப்ப இந்த சாம்ப கலரு சரியாக படிக்க முடியவில்லை.

  ஒருவேளை எனக்கு தான் கண் சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்

  பாத்து செய்யுங்கே மாப்ளே

  ReplyDelete
 19. நாய்க்கறி சாப்பிட்டால் என்றும் இளமையாக இருக்கலாம் என்று என் பிலிப்பைனி நண்பி சொல்கிறாள் உண்மையாடா அண்ணே...???

  ReplyDelete
 20. கோழி, மீனை விடு,வெங்காயம், உருளை சேனை கிழங்குகள் உரித்து கொடுப்பது ஆச்சர்யமா இருக்கே மக்கா...!!!

  ReplyDelete
 21. காய்கறின்னு ஆரம்பிச்சு, நாய்க்கறி வரை சொல்லிட்டீங்க.

  ReplyDelete
 22. ஐயோ நாய் கறியா?

  இப்பெல்லாம் இங்கயே சில சூப்பர் மார்க்கெட்ல காய் எல்லாம் துருவி (காரெட், பீட்ரூட்) வெங்காயம் உரிச்சு தராங்க..

  உங்க ப்ளாக் layout சூபரா இருக்கு.

  ReplyDelete
 23. வணக்கம் சார்!தக்காளி பத்தி தனிப்பதிவு போடுவீங்களா?அப்புறம், நல்ல வேளை மார்க்கட்டு,அடைப்புல இங்கிலிசுல வேற போட்டிருக் கீங்க!சி.பி"வேற"போட்டிருக்காரு!

  ReplyDelete
 24. மார்க்கெட் போன ஆளுன்னு உங்களை யாரும் சொல்ல முடியாது

  ReplyDelete
 25. ஹா..ஹா.. மாப்ள புது டெம்ப்ளேட் கலக்கலோ கலக்கல்..

  ReplyDelete
 26. உங்கள் பதிவும், அதிலிருக்கும் படங்களும், புது டெம்ப்லேட்டும் கலக்கல்

  ReplyDelete
 27. மார்கெட் அசத்தல். தளமும் சூப்பர்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி