நோட்ஸ் எடுத்துக்க அதோட கொஞ்சம்(SN) ஸ்நாக்ஸ் எடுத்துக்க!

வணக்கம் நண்பர்களே...இந்த பதிவு குடிகாரரர்களுக்கான பதிவு என்பதால்...நல்லவங்க(!) மேல் கொண்டு படிச்சிபுட்டு அப்புறம் அது சரி இல்ல இது சரியில்லன்னு என்னைய குற்றம் சொல்லாதீங்கப்பு...ஓகே ஸ்டார்ட்....


குடிகாரர்கள் வகை...

எப்பவாவது குடித்தல்...

மொடாக்குடி...

நண்பர்களுக்காகன்னு சொல்லிபுட்டு ஓசிக்குடி(!) மட்டுமே குடித்தல்...

குடியினால் ஏற்படும் தீமைகள் பற்றி பலர் சொல்லி கேட்டாலும் நாமே அவதிப்படும் போது தான் அதனை உணர முடியும்...


முதல் வகை...எப்பவாவது குடித்தல்...

இப்போ நாடு போயிட்டு இருக்க நிலைமய பாத்தா...அரசாங்கமே குடிக்காதவங்கள தள்ளி(!) வச்சிடுவாங்க போல இருக்கு...இதுக்கு பயந்து கிட்டு எப்பவாவதாவது குடிப்பது வாடிக்கையாகி வருகிறது(எல்லோரும் அல்ல!)...நேத்து ஒரு நண்பர் அவரோட பையன் மது அருந்திவிட்டு வந்தத நெனச்சி ரொம்ப வேதனப்பட்டாரு...இதுக்கும் அந்தப்பைய 6 ஆம் வகுப்பு தான் படிக்கிறானாம்...வாழ்க ஜனநாயகம்!

ரெண்டாவது வகை...மொடாக்குடி..

ஸ் ஸ் அபா....இந்த வகை இருக்கே..குடிக்கலன்னா அன்னைக்கு தூக்கமே வராதுங்கற அளவுக்கு போதைக்கு அடிமையானவங்க...இவங்கள பத்தி சொல்லனும்னா...தனியா ரெண்டு புத்தகம் போடணும்..!

மூன்றாவது...நண்பர்களுக்காக குடித்தல் மற்றும் ஓசிக்குடி கிடைத்தால் மட்டும்!...இந்த வகை இருக்காங்களே...செலவு செய்யாம யாரு ஓசிக்குடிக்கு கூப்ட்டாலும் போயிருவாங்க...

இப்போ என்னைய பாருங்க..இங்க அடிக்கடி பார்ட்டி பார்ட்டின்னு(இந்தியன்ஸ் மீட்டிங்!) சொல்லி கூப்பிடுவாங்க(!)...எங்கடா இந்தாளு அங்க போயிட்டு நண்பர்கள் கிட்ட மொக்க போட்டு கிட்டே சரக்கடிச்சிட போறாருன்னு என் மனைவி கூடவே வருவாங்க...ஒன்லி கூழ் ச்சே கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே...(நெசமுங்க!)


என்ன இருந்தாலும் குடிப்பதை(!) வெளிய சொல்ல முடியாத நண்பர்கள் என்ன செய்வது என்று மண்டைய உடசிக்கறாங்க...அதாவது கூழுக்கும் ஆச..மீசைக்கும் ஆசைன்னு சொல்லுவாங்களே...அவங்களுக்காக...சில முட்டாள் தனமான விஷயங்கள்...வெளிய சொல்லாம எடுத்துக்கங்க...

அதாவது பல நண்பர்கள்(!) மது குடிக்கராங்க...ஆனாலும் தங்கள நச்சுன்னு அதாவது பிட்டா (Fit not Bit!) காமிச்சிக்கனும்னு ஆசைப்படுவாங்க...என்ன பண்றது ஜிம்முக்கு போக, உடல்பயிற்ச்சி செய்ய முடியாது...நேரம்(!) இருக்காது...இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் நடை பயிற்சி போங்க...விடியக்காலையில அப்படிப்போகறது உடலுக்கும், மனசுக்கும், கண்ணுக்கும்(!) நல்லது...

மது அருந்துபவர்கள்....முடிந்த வரை விஸ்கியை தவிருங்க...பிராந்தி மாத்திக்கங்க...அதுவும் குடிக்கும்போது கூட கூல் ட்ரிங்க்ஸ்ங்கற பேர்ல கலப்பீங்களே(பூச்சிக்கொல்லி!) அதையும் கலக்காதீங்க....முக்கியமா சுடு தண்ணி கலந்து குடிங்க...என்ன புரிஞ்சிதா...உடம்பில் ஒட்டுவது குறைவு என்பதால்...3 பெக்கோட நிறுத்திக்கங்க....முழுசா குடிச்சிட்டு பெட்டை ச்சே மட்டை ஆயிடாதீங்க...!..பத்தல பத்தலைன்னு சொல்லி அடிச்சிட்டு இருந்தீங்க...ஆல்கஹால் ப்ளட்ல ஈசியா கலக்க ஆரம்பிச்சிடும் சாக்கிரத!

ரெண்டாவது...பீர் என்பது நொதிக்க வைத்தது என்பதால் எளிதில் உடன் சாப்பிடும் உணவுகளை உடம்பில் சேர்த்து விடும்...அதனால் முடிந்த வரை குறைவா நிறுத்திக்கங்க...(நடக்கற காரியமா!)


முக்கியமான விஷயம்...சரக்க குவாட்டர் வாங்கிட்டு சைட்டிஷ்ங்கர பேர்ல பாதி கடைய காலி பண்றத நிறுத்துங்க(!)...முடிந்த வரை வெஜிடேரியன் மற்றும் எண்ணையில பொறிக்காத உணவுகளை சாப்பிடவும்...

இதுக்கெல்லாம் மேல...முடிந்த வரை தண்ணி அடிச்சிட்டு போதையில பாடுறா மாதிரி பாட்டு வந்தா கேட்டு தொலைக்காதீங்க...ஹிஹி...அப்புறம் உங்களுக்கும் நெனைப்பு வரும்..உதாரணம் லேட்டஸ்ட் Why கொலைவெறி டீ பாட்டு ஹிஹி!...

கொசுறு: என்னதான் நண்பர்கள் வற்புறுத்தினாலும்...உங்களின் மனமே குடி பின் செல்வதற்கு காரணம்..முடிந்த வரை வாரத்துக்கு ஒரு முறை என்பதாக குறைத்து நிறுத்த முயலுங்கள்...(ஸ் ஸ் அபா இந்த அறிவுரைய சொல்றவனுங்கள எதால அடிக்கலாம்னு நீங்க கேக்குறது இங்க வரை கேக்குதுங்க..மன்னிச்சு!..ஏன்னா நான் நிறுத்திட்டேன்பா!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. இன்று மனிதம் இப்படித்தான் அறையப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 2. >>இந்த பதிவு குடிகாரரர்களுக்கான பதிவு என்பதால்...நல்லவங்க(!) மேல் கொண்டு படிச்சிபுட்டு அப்புறம் அது சரி இல்ல இது சரியில்லன்னு என்னைய குற்றம் சொல்லாதீங்கப்பு...ஓகே ஸ்டார்ட்....

  hi hi ஹி ஹி அப்போ நீயே படிச்சுட்டு நீயே கமெண்ட் போட்டுக்கோ தம்பி

  ReplyDelete
 3. ?>>>அதாவது பல நண்பர்கள்(!) மது குடிக்கராங்க..

  தம்பி, நம்ம பதிவுலகத்துல ஏகப்பட்ட குடிகாரங்க இருக்காங்களே? அவங்க எல்லாம் சண்டைக்கு வர மாட்டாங்களா? ஹி ஹி கோர்த்து விட்டிங்க்

  ReplyDelete
 4. >>விக்கி: ennoda pathivu
  vote
  button inanchirukka
  illayaa


  தம்பி... தமிழ்மணம் கூட தகராறு செஞ்சே, அதுல நியாயமான ஒரு காரணம் இருந்துச்சு, இப்போ =இண்ட்லி, உலவு, தமிழ் 10 கூடவும் சண்டையா? நீ பெரிய சண்டைகாரனா இருப்பே போல?

  ReplyDelete
 5. //என்னதான் நண்பர்கள் வற்புறுத்தினாலும்...உங்களின் மனமே குடி பின் செல்வதற்கு காரணம்..முடிந்த வரை வாரத்துக்கு ஒரு முறை என்பதாக குறைத்து நிறுத்த முயலுங்கள்...(ஸ் ஸ் அபா இந்த அறிவுரைய சொல்றவனுங்கள எதால அடிக்கலாம்னு நீங்க கேக்குறது இங்க வரை கேக்குதுங்க..மன்னிச்சு!..ஏன்னா நான் நிறுத்திட்டேன்பா!)//

  சரிதான் மாம்ஸ்..

  அடிக்கடி குடிக்கிறவங்க அற்ப ஆயுச விலை கொடுத்து வாங்குறாங்க..இதுதான இன்றைய நிஜம்

  ReplyDelete
 6. எப்படீங்க இப்படில்லாம்!

  ReplyDelete
 7. குடி குடியைக் கெடுக்கும் !!

  ReplyDelete
 8. என்னோட நண்பன் ஒருத்தனும் இப்படித்தான் குடிச்சு குடிச்சே அழிஞ்சு போறான்.... திருத்தவே முடியலை.. இன்னைக்கோட கடைசி இனிமேல் குடிக்க மாட்டேன் இது சத்யம் அப்படின்னு சொல்லி சத்யம் பண்ணி என்கிட்டையே காசும் (ஏன்னா கடைசியா என் கையாள வாங்கரராம் நட்புக்கு மரியாதையை ) வாங்கிட்டு போய் அடிச்சுட்டு வந்துருவார்... சரி நாளைக்கு பயபுள்ள அடிக்காது அப்படின்னு நினைச்சிட்டு இருந்த அடுத்த நாள் காலைலேயே அடிசுருக்கும். ஏன்னு கேட்டா என் காசில குடிக்கல வேற ஒருத்தன் வாங்கி குடுத்தான் சொல்வார்... காசா முக்கியம்... இது மாறி ஏதாவது ஒரு காரணம்... ஆனால் இப்போ அப்படியில்லை நான் சொல்லி அவர் மனைவி சொல்லி கடந்த 3 வருசமா திருந்தாத ஆளு இப்போ பையன் பொறந்ததும் அவரே மாறிட்டாரு... டெய்லி குடிச்சிட்டு இருந்தவரு இப்போ வாரக் கடசில தான் குடிக்கிறார்...

  எப்படியோ திருந்துங்கப்பா உங்கள நம்பித்தான் உங்க குடும்பம் உங்க பையன் புள்ளை மனைவி எல்லாரும் இருக்காங்க............

  ReplyDelete
 9. அடடா மாம்ஸ் ....இத முன்னாடியே
  போட்டிருக்க கூடாதா.....
  நானும் திருந்திட்டேனே....
  அப்ப இந்த போஸ்ட் எனக்கு இல்லையே......

  சரி இந்த போஸ்ட்-காக கொஞ்சம் அடிச்சிட்டு அப்புறம் நிறுத்திடுரேனே....
  ஹி..ஹி...

  ReplyDelete
 10. மாம்ஸ் இந்தமாதிரி மூணு வகையுளையும் குடிக்கிறவங்கள என்ன பண்ணுறது?

  ReplyDelete
 11. ஸ்ஸ்ஸ்ஸ்அப்பா மாமன் எப்ப விக்கியானந்தர்
  ஆனாரு....விவேகானந்தர் சக்கரையை சாப்பிடறத நிறுத்தின கதை தெரியுங்களா?

  ReplyDelete
 12. குடி குடியை கெடுக்கும்

  ReplyDelete
 13. என் பேரு எங்காவது போட்டிருக்கா பதிவுல... மாப்ள சொன்ன மாதிரியே பேரு போடல... நன்றி...

  ReplyDelete
 14. விஸ்கி மேல என்ன கடுப்பு மாம்ஸ்? இந்தியாவில் கிடைக்குற சரக்கு 90 சதம் ப்ளேவர் செய்யப்பட்ட எத்தில் அல்கஹால் தான்! பழரச பிராந்தியும் இல்லை..மால்ட் விஸ்கியும் இல்லை..!

  ReplyDelete
 15. குடி குடியைக்கெடுக்கும்.

  ReplyDelete
 16. சியர்ஸ் மாம்ஸ்!!! :-)

  ReplyDelete
 17. குடிகாரங்கள் கூட மூன்று வகையா பிரிச்சிட்டீங்களே

  ReplyDelete
 18. எவ்ளோ விஷயம்! ஒத்துக்கிடுறேன்.. நீங்க பெரிய ஆளுதான் மாம்ஸ்! :-)

  ReplyDelete
 19. வாரத்துக்கு ஒருமுறைன்னு மாம்ஸ் சொல்ற அறிவுரையை கேளுங்க.... அப்போதான் உருப்பட முடியும்.. ஹே ஹே...


  எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
  வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

  ReplyDelete
 20. ராவான பதிவில் ஆங்காங்கே நகைச்சுவை சோடாவை மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கீங்க...

  ReplyDelete
 21. ஏன்னா நான் நிறுத்திட்டேன்பா!)//

  பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லுடா வெண்ணை ஹி ஹி...

  ReplyDelete
 22. யோவ் பிராந்தியில சுடுதண்ணியை ஊத்துனா நல்லாவா இருக்கும் ஹி ஹி நான் ஒன்லி போடா ச்சே ச்சீ சோடா...

  ReplyDelete
 23. சைட் டிஷ் தக்காளி, வெள்ளரிக்காய் சாப்பிடலாம்...!!!

  ReplyDelete
 24. தமிழ் பத்து, இன்ட்லி இணைப்பு குடுத்தாச்சு, யுடான்ஸ் பட்டனையே காணலியே என்னாச்சு...?

  ReplyDelete
 25. குடிகாரர்களை வகை படுத்திவிட்டீகள்..

  ReplyDelete
 26. சி.பி.செந்தில்குமார் Says:
  December 1, 2011 9:53 AM
  >>விக்கி: ennoda pathivu
  vote
  button inanchirukka
  illayaa


  தம்பி... தமிழ்மணம் கூட தகராறு செஞ்சே, அதுல நியாயமான ஒரு காரணம் இருந்துச்சு, இப்போ =இண்ட்லி, உலவு, தமிழ் 10 கூடவும் சண்டையா? நீ பெரிய சண்டைகாரனா இருப்பே போல//

  ஏண்டா நாதாரி மூதேவி நீயாவது இணைச்சி விடலாம்தானே ராஸ்கல்...

  ReplyDelete
 27. பதிவு ஒரு மார்கமா இருக்கு...

  ReplyDelete
 28. குடியை நிறுத்திட்டீங்களா...க்ரேட்!

  ReplyDelete
 29. குடியை நிறுத்திட்டீங்களா...
  Great.. super..

  ReplyDelete
 30. பகிர்விற்கு நன்றி நண்பரே!
  நண்பரே! எனக்காக இதைப் படியுங்கள்.
  நம்ம தளத்தில்:
  "மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"


  இதையும் படிக்கலாமே:"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"

  ReplyDelete
 31. நம்பிட்டோம்...

  ReplyDelete
 32. குடிச்சுப்பழகணும்!படிச்சுப்படிச்சு சொல்லுவாங்க பாழும் கள்ளை நீக்கிப் பாலைக் குடிச்சுப் பழகணும்!(கலைவாணர்)

  ReplyDelete
 33. ஏன்னா நான் நிறுத்திட்டேன்பா!////அதான் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களோ?

  ReplyDelete
 34. MANO நாஞ்சில் மனோ said...

  சைட் டிஷ் தக்காளி, வெள்ளரிக்காய் சாப்பிடலாம்...!!!////அவிச்ச முட்டை கூட எடுத்துக்கலாம்!கட்டுக்குள்ள வச்சுக்கும்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி