வடக்குப்பட்டி பேருந்து பயணம் - வியட்நாம்(VN)!

வணக்கம் நண்பர்களே....நேற்றைய பயணம் பற்றிய இடுகை இது....நேற்று பெய்த பனியில் நனைந்த தக்காளியின்(!) பயணத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்தில் பதிவு செய்கிறேன்..!

எனது முன்னாளைய உதவியாளினி(ஹிஹி!) கொஞ்ச காலத்துக்கு முன்னாடி (6 மாசம்!) எங்கிட்ட பண உதவி கேட்டு இருந்தாங்க...சரி கொடுப்போம் எங்க போயிடப்போறாங்க வாங்கிடுவோம்னு நம்பி கொடுத்தேன்யா($400)...உடனே மக்கள்ஸ் நீங்க என்னடா பொண்ணுன்னா மட்டும் தான் பணம் கொடுப்பான் தக்காளின்னு தப்பா நெனச்சிடாதீங்க(!)...உதவியாளர்கள் அனைவரும் பெண்கள் தான் என்பதால்(!)...

வேலை விட்டு போவதாக அந்த பெண் சொன்னபோதே பணத்தை கேட்டு இருக்கணும்..."கவலைப்படாதீங்க சார் கண்டிப்பா ரெண்டு மாசத்துல பணத்த திருப்பி கொடுத்துடுவேன், எனக்கு திருமணம் அதான் வேலைய விடுறேன்னு" சொன்னாங்க!

சரி அப்படின்னு விட்டுட்டேன்...2 மாசம், 6 மாசம் ஆச்சி...

வீட்டுக்காரம்மா என்னைய போட்டு வறுத்தெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க(ஹிஹி!)...

யோவ் பொண்ணு கேட்டதும் எடுத்து கொடுத்திட்டியே...இப்போ 6 மாசம் ஆச்சி எப்போ தான் அந்த பணம் திரும்ப வரும்னு என்னைய பூரிக்கட்டை கொண்டு விரட்டியதால்(யம்மாடி என்னா அடி!)...

"போன் பண்ணேன்"

அந்த பொண்ணும் சார் என்னால இப்போ வர முடியாது..நீங்க வேணா என்னோட ஊருக்கு வாங்க நேரடியா பணத்த உங்க கிட்ட கொடுத்துடுறேன்னு சொல்லிடுச்சி...அட்ரஸ் கேட்டதுக்கு...அங்க இறங்கிட்டு ஒரு கால் பண்ணுங்க...நான் நேரடியா வந்து என்னோட கணவரோட உங்கள மீட் பண்றேன்னு சொல்லுடுச்சி...ஞாயித்து கிழைம வேறயா...சரி நாமலே பஸ்ஸ புடிச்சி போயிட்டு வந்துடுவோம்னு கெளம்பினேன்...

video


காலை 5 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டு பைக்க ஸ்டாண்ட்ல விட்டுட்டு...பஸ்சுக்கு வெய்ட் பண்ணேன்...5.30 க்கு முதல் பஸ் புடிச்சாச்சி...ஆரம்பமே அமர்க்களமா இருக்கேடான்னு ஏறி சீட்டுல என் சீட்ட பத்திரப்படுத்திட்டேன்(!)...ஏறிய உடனே அந்த டிரைவர் என்னைய குறு குறுன்னு பாத்துட்டு...

எந்தூருய்யா நீன்னு கேட்டாரு...

ஏன்னே இந்தியா தான் சொல்லுங்கண்ணே(நல்ல வேல நீ தமிழனா, இல்ல இந்தியனான்னு கேக்கல!)...

ஒண்ணுமில்ல கேட்டேன்னுட்டு... 5.000 (ரூ 12.50 இந்திய மதிப்பில்)தாங் கொடுன்னுட்டாரு...

அண்ணே டிக்கட்டு...

ஹிஹி..அதெல்லாம் தேவை இல்லைன்னுட்டாரு!

நம்மூரு போலதானான்னு நானும் அமைதியாயிட்டேன்!(up to 40 Km = 5.000d)

கிட்ட தட்ட ஒன்னரை மணி நேர பயணம்... அழகான பனிப்பயணம்...!

அங்கன போய் இறங்கிட்டு Phone போட்டா...இப்போ நிக்கிற ரோடும், நெம்பரும் கேட்டாக...

நானும் சொன்னேன்...அதுக்கு அந்த பொண்ணு கொல்லுன்னு சிரிச்சிட்டு சொல்லுது...


சார்...நீங்க நான் சொன்ன இடத்துல இறங்கல...ரெண்டு கிலோ மீட்டர் முன்னாடி ஸ்டாப்ல இறங்கி இருக்கீங்கன்னு...நான் ஒரு 15 நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு Phone டக்குன்னு வச்சிடுச்சி...

இல்லையே...நான் அந்த கண்டக்டர் கிட்ட கேட்டதுக்கு..இதுதான் கடைசி ஸ்டாப்புன்னு சொன்னாரே...பய புள்ள டிக்கட் கேட்டதுக்கு இப்படி பண்ணிடுச்சோ!...ஸ்ஸ் அபா...!

சரி நம்ம டைம் வொர்க்காக ஆரம்பிச்சிடுச்சி போல...சதீசு அண்ணன்கிட்ட கேட்டு ஏதாவது பரிக்காரம் பண்ணிக்கலாம்னு நெனச்சிக்கிட்டேன்!..நேரம் போக போக பசி பின்னிச்சி...கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கொட்டுற பனில ரோட்டுல நின்னுட்டு இருந்தேன்...நாதாரி வரக்காணோம்!...சரின்னு பக்கத்துல இருந்த ரோட்டுககடயில நூடுல் வாங்கி சாப்பிட்டேன்...


video


ஒன்றை மணி கழிச்சி வந்துதுங்க ரெண்டும்...

சாரி சார்...நேரமாயிருச்சி!

அதான் ஆயிருச்சே...(எப்படியெல்லாம் பழி வாங்குதுகள்!) ஏம்மா கொடுக்க வேண்டிய பணத்த ஹனோயிக்கு வந்து கொடுக்கக்கூடாதா....

இல்ல சார் நான் இப்போ மூணு மாசம் pregnant!

ஓ...கல்யாணம் ஆகி எத்தன மாசம் ஆச்சி...

ஒரு மாசம் தான் சார்...

அதுக்குள்ளே எப்படிம்மா...

அது வேற ஒன்னும் இல்ல சார்...எங்க பிரெண்ட்ஸ் ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் குழந்தை உண்டாகல...அதான் நாங்க முதல்ல குழந்தை விஷயத்தை கன்பார்ம் பண்ணிக்கிட்டு...அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...அதான் உங்களுக்கு கூட எப்போன்னு சொல்லல...

பார்ரா..சரி அது உங்க பர்சனல் சரிம்மா நான் கெளம்பட்டுமா...

இந்தாங்க சார்(கவர்!)...

ஒரு அம்பது டாலர் மதிப்பிலான தாங் பணத்தை அவங்களுக்கு அன்பளிப்பா கொடுத்துட்டு கெளம்பினேன்...

சரிம்மா உம்புருசன்கிட்ட சொல்லி பைக்ல என்னைய அந்த பஸ் டெப்போல விட்ற சொல்லு...

இல்ல சார்..இங்க கொஞ்சம் கூட்டமா இருக்கும் ரெண்டு ஸ்டாப் போனதுக்கப்புறம் உங்களுக்கு உக்கார இடம் கிடைக்குன்னு - சொல்லிச்சி அந்த புள்ள...

video

(தக்காளி பய புள்ள இம்புட்டு வைட் இருந்தா எப்பிடி ஹிஹி!)...நீங்க இந்த ஸ்டாப்புல ஏறிக்கங்க...

சரி...(பஸ் வந்தது...முழுக்க கூட்டம்!)

பஸ்சுக்குள்ள நின்னுகிட்டே அடுத்த ஒன்னரை மணி நேர பயணம்...அடப்பாவிகளா கடனா துட்டு கொடுத்தது தப்பாய்யா...!

இந்த முறை மானஸ்தன்யா நடத்துனரு...டிக்கட்ட கொடுத்துட்டாரு!

video

பஸ்சுல ஒரு பெண் குழந்தைய வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டு கிட்டு இருந்தாங்க...ஒரு லைன் சீட் பஸ் அப்படிங்கறதால...இன்னொரு பெண்ணிடம் இடம் கேட்க்க..அந்தப்பெண்ணோ முடியாதுன்னு மறுத்துடுச்சி...அட எல்லா ஊர்லயும் இப்படிதானா...

சரி என்னைய சுத்தி பாக்குறேன் ஒரே பிகாரா இருக்கு...தக்காளி டேய்...விட்ரா விட்ரா...கடலைய போடு!...ஸ்டார்ட் மியூசிக்!...

கொசுறு: இதுல கடலை போட்டதை பதிவாக்க வேண்டியது இல்லைன்னு நெனைக்கிறேன் ஹிஹி!...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. கொடுத்த கடன வங்க இவ்வளவு அவஸ்தையா

  ReplyDelete
 2. // ஒரே பிகாரா இருக்கு...தக்காளி டேய்...விட்ரா விட்ரா...கடலைய போடு!...ஸ்டார்ட் மியூசிக்!...//


  தக்காளி பணத்தை வாங்கினாலும் லொள்ளு போகலையே...எல்லாம் விஸ்கியில் ஊறியது. சர்தான்

  ReplyDelete
 3. (யம்மாடி என்னா அடி!)...
  //
  உள்ளது உள்ள படி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன்!

  மாம்சு,சரியா தான் சொல்லியிருக்கீங்க.ஹிஹி

  ReplyDelete
 4. //அதான் நாங்க முதல்ல குழந்தை விஷயத்தை கன்பார்ம் பண்ணிக்கிட்டு...அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...அதான் உங்களுக்கு கூட எப்போன்னு சொல்லல...//

  அட ங்கொய்யால... இது கூட நல்லாத்தான் இருக்கு மாம்ஸ்

  ReplyDelete
 5. சரி என்னைய சுத்தி பாக்குறேன் ஒரே பிகாரா இருக்கு...தக்காளி டேய்...விட்ரா விட்ரா...கடலைய போடு!...ஸ்டார்ட் மியூசிக்!..
  //
  ரணகலத்துளையும் கிளுகிளுகிளுப்புங்க்றது இது தானா?

  ReplyDelete
 6. எல்லாமே உனக்குனே சிக்குதே அது எப்படி # டவுட்டு

  ReplyDelete
 7. இப்ப இருக்கிற உதவியாளருக்கு எவ்வளவு கடன் கொடுத்திங்க மாம்ஸ்...
  அடுத்த பயணத்திற்க்கு ரெடியாகாலாம்ல..கொய்யால பொண்ணுக கேட்டா மட்டும் தூக்கி கொடுப்பிங்க..பூரிகட்டையில அடிக்ககூடாது கிரிகெட் பேட்ல போடனும் ஹஹஹஹஹ

  ReplyDelete
 8. தக்காளி இந்த தொழில் வேற பண்றியா...?

  ReplyDelete
 9. இனி தக்காளியை அனைவரும் கந்துவட்டி கோவிந்தன் என்று அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 10. கடனை வசூலிக்க அதுவும் ஒரு பெண்ணை பார்க்க இம்புட்டு தூரம் பயணம்.
  எல்லாம் பூரிக்கட்டை செய்யும் மாயம் தான்....

  ReplyDelete
 11. ஓங்க கையிலே இருக்குற கேமாராவே முதலே பறிக்கனும்.

  சும்மா சொன்னேன் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்

  பகிர்வுக்கு நன்றி மாப்பிள்ளையின் புண்ணியத்தில் வியட்நாம் ரியால் பஸ் தரிசனம் பெற்றோம்.

  ReplyDelete
 12. Thakkali mamms
  GIVE AND TAKE
  policy thaneeee
  atha sollalai parunga.......

  ReplyDelete
 13. சவூதி இருந்து ரியால் காசை எண்ணி எண்ணி ரியல்கூட ரியாலாக எழுத்து வந்து விழுகிறது எழுத்து பிழை மாப்ளே
  ரியால் இல்லை real

  ReplyDelete
 14. நீதி: கடன் கொடுத்தால் புதுப்புது அனுபவங்கள் கிட்டும்!

  ReplyDelete
 15. இதுல கடலை போட்டதை பதிவாக்க வேண்டியது இல்லைன்னு நெனைக்கிறேன் ஹிஹி!...//////ஆமா,நீங்க கடலை போட்டு அது பயிராகி அப்புறம் அறுவட செஞ்ச கதைல்லாம் கூட கேக்கணும்னு.......!கெரகம் தான்!( நமக்கும்!)

  ReplyDelete
 16. அதான் நாங்க முதல்ல குழந்தை விஷயத்தை //கன்பார்ம் பண்ணிக்கிட்டு...அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...அதான் உங்களுக்கு கூட எப்போன்னு சொல்லல...//மாப்ள செம ஐடியா

  ReplyDelete
 17. ////கொசுறு: இதுல கடலை போட்டதை பதிவாக்க வேண்டியது இல்லைன்னு நெனைக்கிறேன் ஹிஹி!...

  ////கொசுறு: இதுல கடலை போட்டதை பதிவாக்க வேண்டியது இல்லைன்னு நெனைக்கிறேன் ஹிஹி!...
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா.சுவாரஸ்ய பதிவு

  ReplyDelete
 18. டேய் மூதேவி நீ வட்டிக்கு பணம் வேற குடுக்குறியா சொல்லவே இல்லை...

  ReplyDelete
 19. டேய் அண்ணே இப்பவாவது காசை திருப்பி தந்தாளேன்னு சந்தோசப்படு...!!

  ReplyDelete
 20. பெரிய உத்தமன் மாதிரி பேசிகிட்டு திரியுறான், ஆனால் கடலை மட்டும் போடுவாராம் போடாங்...

  ReplyDelete
 21. வாழ்ரய்யா நீ...நடத்து... இங்க கொய்யா பழம் விக்கிற ஆயா கூட பக்கத்துல நிக்க மாட்டேங்குது...கொய்யால..

  ReplyDelete
 22. ///மயிலன் said...
  வாழ்ரய்யா நீ...நடத்து... இங்க கொய்யா பழம் விக்கிற ஆயா கூட பக்கத்துல நிக்க மாட்டேங்குது...கொய்யால..////

  ஏண்ணே இப்படி பொலம்புறீங்க? கொய்யாப்பழம் வேணும்னா வாங்கி சாப்புடுங்கண்ணே....!

  ReplyDelete
 23. //இதுல கடலை போட்டதை பதிவாக்க வேண்டியது இல்லைன்னு நெனைக்கிறேன் ஹிஹி!...


  //

  நல்ல எண்ணம்

  ReplyDelete
 24. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?

  ஊர் வாசனையை எம்புட்டுத் தான் நொந்து நூலாகினாலும், ஊர் வாசனையோடு ஒரு பஸ் பயணம் வெளியூரில் கிடைத்திருப்பது அருமை தானே;-))))

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  கலியாணத்திற்கு முன்னாடியே கொழந்த இருககன்னு செக் பண்ணிப் பார்க்கிராங்களே..
  இது எங்கே போயி முடியுமோ;-))))

  ReplyDelete
 25. மாப்ள நல்லாத்தான்யா இருக்கு பஸ் பயணம், கடலை போட்டு கடனை வசூல் பண்ற ஐடியா சூப்பர்.

  ReplyDelete
 26. கடன் கொடுத்ததனால்தானே ஒரு புதிய அனுபவம்.

  ReplyDelete
 27. சுவாரஸ்ய பதிவு...

  ReplyDelete
 28. அருமையான அனுபவப் பகிர்வு..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி