சார் சார் எங்கள திட்டாதீங்க - WE(!) பாவம்!

வணக்கம் நண்பர்களே....
இது இப்போதைய ஜனநாயக வாதிகளின்(!) கொதி நிலை....புரிந்து கொள்ள வேண்டுகிறேன்...

சார் வணக்கம்...எங்கள எல்லாம் எதுக்கு பிரஸ் மீட்டுக்கு வர சொன்னீங்க....

ஆங்...அது வந்து ரொம்ப நாள் ஆச்சே(!) ஏதாவது உளறரனும் ச்சே சொல்லனும்னு தானுங்க...

அப்படி என்ன சார் அவசரம் இந்த நேரத்துல வர சொல்லி இருக்கீங்க...

அதாவது...நாடு இப்போ போயிட்டு இருக்க நிலைமை சரியில்ல....

அது எல்லோருக்கும் தெரியுமே...

அலோ குறுக்கால பேசாதீங்க....அப்புறம் நான் மனப்பாடம் செய்ஞ்சிட்டு வந்தத மறந்திடுவேன்....

பார்ரா....சரிங்க அய்யா சொல்லுங்க.....

இந்த சமூக வலையமைப்பு பத்தி சொல்லப்போறேன்...

ஓ ஆரம்பிங்க...ரெடி ஸ்டார்ட்....

எங்க தெய்வத்த(!) பல லட்சம் பேர்கள வாயில போட்டுகிட்ட அன்பு இதயத்த பத்தியும்...எது நடந்தாலும் எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு ஆட்டு தாடிய வச்சிக்கிட்டு மோட்டு வலயத்த பாக்கும் கலியுக தஞ்சாவூரு பொம்மையையும் கிட்ட தட்ட இந்த பொட்டி வச்சிருக்கவங்க எல்லாமே கலாய்கிறாங்க...இது எவ்ளோ தப்பு தெரியுமா...ஒரு முடிவ எடுக்க முடியல...குளத்துல பாம் போட முடியல...பேரிக்கா காரேன் கிட்ட வழிய முடியல.....ஸ் ஸ் அபா...என்னத்த சொல்றது...எனக்கு வேற கோவம் கோவமா வருது...

அய்யா எல்லோரையும் விமர்சிக்கலாமேங்க...அதுக்கு பேருதானே ஜனநாயகம்....நீங்க சொல்ற பேரிக்காளையும் அது தானே நடந்து வருது...அவங்களே பொறுத்து போகும்போது...நீங்க ஏன்யா இப்படி டென்சன் ஆயிட்டீங்க....

அதாவது அவங்க கத வேற(!)...நாம யாரு...யாருங்கரேன்...

ஆமா சொல்லுங்க நாம யாரு....

எப்பவுமே ஏதாவது ஒரு வெள்ளக்காரனுக்கோ, வெள்ளக்காரிக்கோ(!) அடிமையா இருந்தே பழக்கப்பட்டவங்க...எங்கிருந்து வருது இந்த அளவுக்கு துணிச்சல் இந்த பய புள்ளிங்களுக்கு...பிச்சி புடுவோம் பிச்சி..

அதான் ஏற்கனவே ஒரு புள்ள உங்க தோஸ்து மூஞ்சிய பிச்சிட்டாரே...

ஆங்....அதான்...பாத்தீங்கல்ல...இனி எதிர் காலத்துல யாரும் எங்க மேல கையி காலு போடக்கூடாதுங்கரதுக்கு தான் இந்த சட்டத்த யோசிச்சிருக்கோம்...

என்னங்கய்யா அப்படி ஒரு சட்டம்...

இனி யாரும் சமூக வலைகளில் எந்த அப்பா டக்கரையும் ச்சே அரசியல் வாதியையும் கலாய்க்க கூடாது...அப்படி காலாய்ச்சா அவங்கள உடனே தூக்கி ஜெயில்ல போட்ருவோம்...


அட அட அட...இதுவல்லவோ சட்டம்..இனி மும்மாரி பெய்யும் இந்த தேசத்துல...நாங்க கெளம்பறோம்...

என்ன அதுக்குள்ளே கெளம்பிட்டீங்க....

இப்போ நீங்க இந்த விஷயத்த சொல்லிட்டு இருக்கும்போதே சமூக வலைகளில் உங்க தலைய உருட்ட ஆரம்பிச்சிட்டாங்க...சீக்கிரத்துல நீங்க இதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு வேற சொல்லுவீங்க பாருங்க...

எது மன்னிப்பா...நாங்கலாம் குப்புறவே விழுந்துடுவோம்ல...அதெல்லாம் இப்போதைக்கு நடக்காது...ஏன்யா இப்படி அந்தம்மாவுக்காக பம்முறீங்க...

அவங்கள வச்சித்தான் இங்க பல பெருசுங்க வாழ்கைய ஓட்டி கிட்டு இருக்கு...ஏன்யா நீ வேற...

அய்யா வரோமுங்க....

கொசுறு: லேட்டஸ்ட் தகவலை வைத்து புனையப்பட்டது...நண்பர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. மாம்ஸ் வழக்கம் போல்....

  ReplyDelete
 2. என்ன இந்த கருமாந்திரம் பிடிச்ச வலை உலகில் இருக்கிற அரசியல்,,,பொறாமை ,,,இன்னும் சில பல இவனுகளுக்கு தெரியாது போல ....ஏன்னா நாம எல்லாம் மொழி வாரியா பிரிஞ்சிகிடக்குறோம்....

  இது எல்லாம் தெரிஞ்சிதுன்னா....
  அவனுகங்களே புரிஞ்சிப்பாங்க ...இவனுங்க தானாவே அடிச்சிக்கிட்டு
  வெளிய போய்டுவானுங்க ....
  நாம ஒண்ணும் ()*)(&*(^*&%&$^%*&&*)
  செய்யவேண்டாம்....என்று

  ReplyDelete
 3. மாப்ள அவனுங்கள நேர பார்த்தா நாங்களும் பம்முவோம், பின்னே வலைப்பூவில்தான் அவங்களை பிரிச்சு மேய முடியும்.

  ReplyDelete
 4. வாங்கய்யா சிபலு அய்யா... வாட்டி வதைக்க வந்தோமய்யா..

  ReplyDelete
 5. மாமா...பதிவுக்கு பிள்ளையார் சுழி போடுவா...நீங்க நாமத்தை போட்டிருக்கேளே....அடுத்ததா எலக்ஷ்ன் வரப்போகுது மக்கள் போடுவா பாருங்க...பெரிசாசாசா......அப்ப இவாலெல்லாம் யானை போடுற விட்டையை கூட ஒன்னும் செய்யமுடியாது....
  (பிராமின் பாசை போடுறதுக்கே பயமா இருக்கு)

  ReplyDelete
 6. மிகப்பெரிய ஜனநாயக நாடு... போங்கய்யா உங்க ஜனநாயகமும் வெங்காயமும்...

  ReplyDelete
 7. கொசுறு: லேட்டஸ்ட் தகவலை வைத்து புனையப்பட்டது...நண்பர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி!///என்ன பொங்கலுக்கு பொருள் எதுவும் இலவசம் இல்லைங்கிறதா?அதான்,ஏழைங்களே இல்லியே,அப்புறம் ஏன் இலவசம்கிறேன்?

  ReplyDelete
 8. அப்போ நம்ம குரூப்புல யாரு யாரு உள்ள போறீங்க? யாரு யாருமுன் ஜாமீன் வாங்க போறீங்க?

  ReplyDelete
 9. புரியல. எப்படியோ ஜனநாயகம் உருபட்டா சரி தான்....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி