யார் இந்த பெண்! - W(who!)O?

வணக்கம் நண்பர்களே உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் இது!


இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.

அது ஒரு மாலைபொழுது:

ஏன்டா முருகா அந்தா தொலைவுல வருதே அந்த பொண்ணு என்னா அழாக இருக்குது இல்ல.....

அண்ணே இப்ப சொல்லுங்க தூக்கிட்டு வந்துடறேன்.........

டேய் நெறைய விவரம் தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கு.. பாத்து ஜாக்கிரதை!

விடுங்கண்ணே நாம பாக்காததா....

ரெண்டு நாளு கழிச்சி ஒரு ஷூட்டிங்கில்:


ஏன் பாட்டி நானு ஒரு IAS ஆகனும்ன்னு கனவுகண்டுகிட்டு இருந்தேன் என்னை ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்ட...........

இங்க பாரு கண்ணு நீ படிச்சி வேலைக்கு போயி தான் சம்பாதிக்கணும்னு இல்ல .... பாரு சீக்கிரத்துல நீ பெரிய பணக்காரி ஆகப்போறே பாரு!

அதுதான் இப்பவே பணம் நம்ம கிட்டே இருக்கே போதாதா.........

இது போதாது கண்ணு..............

ஒரு பின்னிரவில்:

இங்க பாரு... எங்க போறே இந்த ராத்திரியில.....?


ஹும்...... என் தலையெழுத்து எனக்கு வாச்ச அம்மா அப்படி! வாழ்கைய நல்லா வாழ சொல்லிக்குடுக்க வேண்டிய பாட்டி இப்படி பண்ணிட்டு(!) போயிட்டா............

அதுக்கு ஏன் கவலைப்படுறே நான் இருக்கேன்..........

யோவ் நீ எதுக்கய்யா லாயக்கு........உன் மனச தொட்டு சொல்லு...... உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்......... நான் பாட்டுக்கு படிச்சுகிட்டு இருந்தேன் என்ன கூட்டியாந்து இப்போ எந்தப்பக்கமும் போக முடியாதபடி ஆக்கிட்டீயே!?

இப்போ என்ன ஆச்சின்னு இப்படி கோவப்படுறே.......


போய்யா..................நீ ஒரு ஆம்பிளையா...... சொல்லு.......... நாயிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.........உன்னால ஒரு சராசரி மனுஷன், அவன் கூட இருக்க பொண்ணுக்கு குடுக்குற சந்தோசத்த குடுக்க முடியுமா........எவ்ளோ பணக்காரனா இருந்தா என்னாயா......... என்னாத்துக்கு வேணும் உன் பணம்......... என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டீயே.......நீ நல்லா இருப்பியா.............என்ன விட்டுடு............

அவன் திக்கித்து நின்றான் அவள் அந்த இடத்தை விட்டு சென்று நெடு நேரமாகியது.

என்ன அண்ணே அந்தப்பொண்ண விட்டுடீங்க,,,,,,,,,,

இல்ல முருகா........இன்னிக்கி அவ கேட்ட கேள்விகளால என் உடம்பு அப்படியே கரண்டு அடிபட்ட எலிக்கனக்கா நின்னுடுச்சி.

மூன்று வருடம் கழித்து:

ஏன்டா அங்க பாரு............


ஆமாண்ணே ஒரு பொண்ணு மயங்கி கெடக்கு.......

அண்ணே அதே பொண்ணு தான்னே.....

சரி தூக்கு வீட்டுக்கு கொண்டு போவோம்.

கொஞ்ச நேரம் கழித்து:

என்ன ஆச்சி ..............

என்ன ஆகணும்.........நான் நம்பிய அத்தன ஆம்புளைங்களும் என்னை ஒரு போகப்பொருளா பாத்தானுங்களே தவிர உயிருள்ள ஒரு பெண்ணா பாக்கலியே..... நான் என்னா செய்ய.......எல்லாம் என் தல விதி!

கவலைப்படாதே என் கூடவே இரு உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும்..........

இனி இருக்கேன் ..... இருப்பேன்


(மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரல்(தக்காளி ஹிஹி! இதுவும் ஒரு மீண்ட பதிவு ஹிஹி!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. என்னை சொல்ல வாறீங்கனு புரியலை ஆனால் சுவாரஸ்யமாக இருக்கு பாஸ்

  ReplyDelete
 2. என்னப்பா சொல்ல வரீங்க ஒண்ணுமே புரிய மாட்டேங்குது "அண்ணே !" நல்லவரா ? கெட்டவரா?

  ReplyDelete
 3. யாரும் பயப்படாதீங்க தக்காளி விக்கி குறும்படம் எடுக்க றான், அதுக்கான ஒன் லைன் ட்ரைய்லர் இது.. இந்த கதைக்கான விளக்கத்தை தம்பி மனோ வந்து தருவான் ஹி ஹி

  ReplyDelete
 4. >>K.s.s.Rajh said...

  என்னை சொல்ல வாறீங்கனு புரியலை ஆனால் சுவாரஸ்யமாக இருக்கு பாஸ்

  இப்படி சொன்னா விக்கி கோவிச்சுக்குவான், பொத்தாம்பொதுவா ஆஹா செம அப்ப்டி போடுங்க சந்தொஷப்படுவான் ஹி ஹி

  ReplyDelete
 5. மாம்ஸ் நீ என்ன சொல்றன்னு நல்லாவே புரியுது

  //மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்//

  இந்த வரிகளின் மூலம்

  ReplyDelete
 6. இன்னும் 4 வருஷத்துக்கு சொந்த ஊருக்கு வராம அங்கேய இருக்க போறியா மாமு ?

  ReplyDelete
 7. ஆனா, ஊமைக்குத்து குத்துறியே மாம்ஸ்...

  எதுக்கும் பாத்து இருந்துக்க

  ReplyDelete
 8. என்னண்ணே ஒன்னுமே புரியல்லயே

  ReplyDelete
 9. இது ஒரு மனசாட்சியின் குரல்

  ReplyDelete
 10. இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.

  அறிவுக்கு உகந்ததாக - அங்கதான் கொஞ்சம் உதைக்குது

  ReplyDelete
 11. (மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)//அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 12. நாய்நக்ஸ் கூட சேர வேண்டாம்ன்னா...கேட்டாத்தானே...இந்த வாரம் நாய்நக்ஸ் வாரம்...

  ReplyDelete
 13. இதால்ல என்ன ஆகும் ???

  ReplyDelete
 14. மாம்ஸ், ம்ஹும்.... ம்ஹும்..... விளக்க பதிவு நாளைக்கு போடுங்க...


  வாசிக்க:
  பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

  ReplyDelete
 15. வணக்கமுங்க!நல்லாவே சிரிக்கிறீங்க!எல்லாம்,நம்மள சொல்லணும்!

  ReplyDelete
 16. இது ஒரு மனசாட்சியின் குரல்(தக்காளி ஹிஹி! இதுவும் ஒரு மீண்ட பதிவு ஹிஹி!)//

  அதானே பார்த்தேன் எங்கேயோ படிச்ச்ப்ல இருக்கே பயபுள்ளை காப்பி பேஸ்ட் பண்ணிட்டானொன்னு நினைச்சிட்டேன் ஹி ஹி..

  ReplyDelete
 17. சி.பி.செந்தில்குமார் said...
  யாரும் பயப்படாதீங்க தக்காளி விக்கி குறும்படம் எடுக்க றான், அதுக்கான ஒன் லைன் ட்ரைய்லர் இது.. இந்த கதைக்கான விளக்கத்தை தம்பி மனோ வந்து தருவான் ஹி ஹி//

  விளக்கமாவது விளக்குமாராவது போடாங்கோ....

  ReplyDelete
 18. சி.பி.செந்தில்குமார் said...
  யாரும் பயப்படாதீங்க தக்காளி விக்கி குறும்படம் எடுக்க றான், அதுக்கான ஒன் லைன் ட்ரைய்லர் இது.. இந்த கதைக்கான விளக்கத்தை தம்பி மனோ வந்து தருவான் ஹி ஹி//

  அந்த ஆண்மை இல்லாத கேரக்டர், டாகுடர் விஜயை போட்டுறலாம், ஹீரோயினா ஜெயலட்சுமியை போட்டுருவோம், அல்லக்கைகள்ல ஒருத்தனா சிபி'யை போட்டுருவோம் எப்புடீ...

  ReplyDelete
 19. முதல்ல ஒரு நடிகை மாதிரி இருக்கு! (அதேதான்!)

  //ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்//

  இதப்பாத்தா அவங்க மாதிரி இருக்கே!

  ReplyDelete
 20. வணக்கம் அண்ணா,
  ஆண்களை அடக்கி ஆள வேண்டும் என நினைப்போருக்கு சொற்களால் அடி கொடுத்திருக்கிறீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி