பதிவுலகத்தில் நீதி,நேர்மை + நட்பு = உண்மைத்தன்மை!

வணக்கம் நண்பர்களே...
இந்த புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நமக்கு எல்லாம் வல்ல பரம் பொருளின் ஆசிகள் கிடைக்க வேண்டுகிறேன்..


பின்னூட்ட வாதிகளாக ஆரம்பித்து, பதிவர்களாகி...அதன் மூலம் உலகெங்கும் பல நண்பர்களை பெற்று ஆனந்த கூத்தாடும் அனைவருக்கும் என் வணக்கங்கள்!


இனி இன்றைய பதிவுக்குள் செல்வோம்..


பதிவுலகம் தேடிவரும் யாவரும் ஒரு வித வடிகாலாய் தன் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள்...தேவையற்ற உராய்வுகளை தவிர்க்க தங்களை முடிந்த வரை பொது மனிதராக காட்ட முனைகிறார்கள்...


உண்மையில் எழுத்துக்கும், செயலுக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன...இங்கு பல நேர்மாறான விஷயங்கள் சென்று கொண்டு இருப்பதை தவிர்க்க இயலவில்லை...


இதில் அவர் எனக்கு தெரிந்தவர்...இவர் நல்லவர் என்று யாரும் எளிதாக சொல்லி விட முடியாது...நம்முன் அவர் அமைதியானவராக இருக்கலாம்..நமக்கு தெரியாத வகையில் அவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கும்..அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...முடிந்தவரை அவரவரே தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர(!) ஆதங்கப்பட்டு ஒரு டீச்பூனுக்கும்(!) பயன் கிடையாது என்பது என் கருத்து...


நம் தவறுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டுவது தவறு இல்லை...அதே நேரத்தில் அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை எப்படி மாற்றிக்கொள்வது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்...அதை விடுத்து மல்லுக்கு நிற்பதோ(!)...கெஞ்சி கேட்பதோ சரியான அணுகுமுறை அல்ல...


பதிவுலகம் ஒரு பொதுவான இடம்...பல நேரத்தில் அன்பு பூத்து குலுங்கும் அட்சய பாத்திரம்(!) சில நேரத்தில் ரத்த பூமி(!)...நம் கண்ணோட்டமே...இந்த இரண்டில் ஒன்றை ஏற்பதை முடிவு செய்கிறது...


முடிந்தவரை நம் எழுத்துக்கள் நேர்மையாக இருக்கட்டும்...அதை விடுத்து...


"அடிப்பது கொள்ளை பேசுவது நீதி நியாயம்" - இப்படி இருப்பதை மாற்றிகொள்வோம்..நம் மீது தவறு இருப்பின் திருத்திக்கொள்வோம்..


இங்கு முடிந்தவரை தனி மனித தாக்குதல்கள் நிகழாவண்ணம் இருப்பது வரை ஆரோக்கியமான விஷயமாக கருதப்படும்...அப்படி நிகழும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் தன்னை சரியான புரிதலுடன் மாற்றிக்கொள்ளும் போது அதை ஏற்று கொள்வதும் நம் கடமாயாகிறது!


புரிதலுக்கு நன்றி...


More tension less work, less tension more work...


 கொசுறு: கொய்யால என்ன சொல்றான் எதுக்கு இந்த பதிவு..படுபாவி இவன் லூசா இல்ல...!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. வணக்கம் மாம்ஸ்

  முதல் புரிதல்

  ReplyDelete
 2. //பதிவுலகம் ஒரு பொதுவான இடம்...பல நேரத்தில் அன்பு பூத்து குலுங்கும் அட்சய பாத்திரம்(!) சில நேரத்தில் ரத்த பூமி(!)...நம் கண்ணோட்டமே...இந்த இரண்டில் ஒன்றை ஏற்பதை முடிவு செய்கிறது...//

  சரியா சொல்லியிக்கீங்க.

  பசுமை பூங்காவாவும்,போர்களமாகவும் பார்ப்பது நம் கண்ணோட்டமே

  ReplyDelete
 3. இனிய மதிய வணக்கம் அண்ணா & மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,

  நீங்கள் சொல்வது போன்று தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பாங்கும், மாற்றுக் கருத்துக்களை வரவேற்கும் பண்பும் எல்லோருக்கும் வரவில்லை என்பது தான் உண்மை.

  தமிழ் கூறும் நல் உலகில் நாம் இன்னும் பல தூரங்கள் கருத்துக்களை வீரியப்படுத்தும் நோக்கில் பயணிக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 4. பின்னூட்டங்கள் நட்பு பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் அமைவதனைத் தான் பல பதிவர்கள் விரும்புகிறார்கள். மாற்றுக் கருத்துக்களையும், தவறுகளையும் சுட்டும் போது விரோதிகளாகப் பார்க்கிறார்கள்.

  அப்படியாயின் எம் நட்பு வெறும் ஓட்டுக்கும், எம்மைப் புகழும் பின்னூட்டங்களிலுமா தங்கியுள்ளது? எம் படைப்புக்களைப் பற்றி வாழ்த்தும் போது வாஞ்சையுடன் வரவேற்கும் நாம்,
  விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் வருகையில் விலகிப் போக நினைக்கிறோம்!

  இது உண்மையில் ஓர் எழுத்தாளனுக்கு அழகா? ஒவ்வொருவரும் தாம் ஓர் எழுத்தாளன், வலைப் பதிவு ஊடகம் எனும் நினைப்பில் தானே தம் ஓய்வு நேரங்களைச் செலவு செய்கிறார்கள்.

  ஆகவே விமர்சனங்களை, மாற்றுக் கருத்துக்களை மாத்திரம் வெட்டி விட நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது! வாழ்க தமிழ்!

  ReplyDelete
 5. கருத்துக்களால் தட்டிக் கொடுப்பது போன்று தவறுகள் வருகையில் சுட்டிக் காட்டி, குட்டிக் கொடுப்பது தான் உண்மையில் ஓர் நட்பிற்கு அழகு! அந்த வகையில் உண்மையில் உங்களைப் புகழ வேண்டும் எனும் நோக்கில் சொல்லவில்லை! இந்த பதிவுலகில் நீங்கள் பல இடங்களில் தட்டிக் கொடுத்தும், தவறுகள் வருகையில் குட்டியும் எமைச் சீர்படுத்தியிருக்கிறீங்க.

  நன்றி விக்கி அண்ணா!

  ReplyDelete
 6. @சம்பத்குமார்

  மாப்ள வருகைக்கு நன்றி...புரிந்துணர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 7. அண்ணே, எல்லா மனங்களும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் இயங்கும் என எதிர்பார்க்க முடியாதல்லவா?

  ReplyDelete
 8. @நிரூபன்

  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நிரூ...ஒவ்வொருவர் பார்வையில் உலகம் வெவ்வேறாக இருக்கலாம்..அதே நேரத்தில் நம் நேர்மை நம் எழுத்தில்!..ஊருக்கு நல்லவனாக நடித்து நம்மை நாமே ஏமாற்றி கொள்வதை என்ன சொல்வது தெரியல!

  ReplyDelete
 9. @நிரூபன்

  விமர்சனங்களே நம்மை செம்மை படுத்தும் உளி என்பது என் கருத்து நிரூ!

  ReplyDelete
 10. /கொசுறு: கொய்யால என்ன சொல்றான் எதுக்கு இந்த பதிவு..படுபாவி இவன் லூசா இல்ல...!

  //
  சொல்ல நினைத்தேன் ..

  ReplyDelete
 11. @நிரூபன்

  " நிரூபன் said...
  கருத்துக்களால் தட்டிக் கொடுப்பது போன்று தவறுகள் வருகையில் சுட்டிக் காட்டி, குட்டிக் கொடுப்பது தான் உண்மையில் ஓர் நட்பிற்கு அழகு! அந்த வகையில் உண்மையில் உங்களைப் புகழ வேண்டும் எனும் நோக்கில் சொல்லவில்லை! இந்த பதிவுலகில் நீங்கள் பல இடங்களில் தட்டிக் கொடுத்தும், தவறுகள் வருகையில் குட்டியும் எமைச் சீர்படுத்தியிருக்கிறீங்க.

  நன்றி விக்கி அண்ணா!"

  >>>

  புரிதலுக்கு நன்றி!

  நிரூ இங்கு யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல...கருத்துக்கள் முரன் பட்டு இருந்தாலும் யாவரும் ஒரே இனம் அது தமிழினம்!..இதை வேறு படுத்தி பார்ப்பது அறிவீனம்!

  ReplyDelete
 12. @நிரூபன்

  "அண்ணே, எல்லா மனங்களும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் இயங்கும் என எதிர்பார்க்க முடியாதல்லவா?"

  >>>>

  எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்து..அப்படி எப்போதும் இருக்கும் பட்ச்த்தில் நான் ஜால்ரா எனும் குறுகிய வட்டத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படும்...எனக்கு இதில் உடன்பாடு எப்போதும் இல்லை..!

  ReplyDelete
 13. @"என் ராஜபாட்டை"- ராஜா

  " "என் ராஜபாட்டை"- ராஜா said...
  /கொசுறு: கொய்யால என்ன சொல்றான் எதுக்கு இந்த பதிவு..படுபாவி இவன் லூசா இல்ல...!

  //
  சொல்ல நினைத்தேன் .."

  >>>>>>>>>>>


  மாப்ள வருகைக்கு நன்றி...புரிந்துணர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 14. தலைப்பில் உள்ளது என்னது?எனக்கு புரியலையே!நீதி, நேர்மை, நட்பு, இதெல்லாம் எந்த கடையில கிடைக்கும்.

  ReplyDelete
 15. @veedu
  " veedu said...
  தலைப்பில் உள்ளது என்னது?எனக்கு புரியலையே!நீதி, நேர்மை, நட்பு, இதெல்லாம் எந்த கடையில கிடைக்கும்"

  >>>

  வாங்க மாப்ள...இதெல்லாம் துட்டு கொடுத்தா கெடைக்கர விஷயம் இல்லீஙகளே ஹிஹி!

  ReplyDelete
 16. //விக்கியுலகம் says:
  January 3, 2012 12:08 PM Reply
  புரிதலுக்கு நன்றி!

  நிரூ இங்கு யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல...கருத்துக்கள் முரன் பட்டு இருந்தாலும் யாவரும் ஒரே இனம் அது தமிழினம்!..இதை வேறு படுத்தி பார்ப்பது அறிவீனம்!//
  அதே அதே. நானும் அதை ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 17. /விக்கியுலகம் says:
  January 3, 2012 12:08 PM Reply

  புரிதலுக்கு நன்றி!

  நிரூ இங்கு யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல...கருத்துக்கள் முரன் பட்டு இருந்தாலும் யாவரும் ஒரே இனம் அது தமிழினம்!..இதை வேறு படுத்தி பார்ப்பது அறிவீனம்!//
  அதே அதே. நானும் அதை ஆமோதிக்கிறேன். //

  இவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்போர், கருத்து மோதல்களைப் புரிந்து கொள்ளாது பிற பதிவர்களை ஓர் இனமாக கருத்தி புறக்கணிப்போர் எல்லாம் உணர்ந்து திருந்த வேண்டும் என்பதே என்னுடைய ஆவலும்!

  ReplyDelete
 18. பிறரை விமர்சித்து நாம் எழுதும்போது, நம்மையும் விமர்சனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டும்!

  இனம்,வர்க்கம்,மதம் சார்ந்த பதிவர்கள் எழுதும் வலைப்பூக்களுக்கு சென்று,அவர்களின் கருத்துக்கு மாற்று விமர்சனம் இட்டால், முகத்தை மூடிக் கொண்டு குழுவாக வந்து மொத்தி எடுத்து விடுவார்கள்!

  தனி ஒருவன் இங்கு கருத்துச் சொல்லி ஜெயிக்க முடியாது! குழுவாயிருந்தால் பயமில்லை!

  ReplyDelete
 19. முடிந்தவரை நம் எழுத்துக்கள் நேர்மையாக இருக்கட்டும்.


  ரொம்ப சரியா சொன்னீங்க,

  ReplyDelete
 20. விக்கி நல்ல அறிவுரைகள், பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. உள்குத்துக்கு வாழ்த்துக்கள்டா அண்ணே.....!!!

  ReplyDelete
 22. பதிவர்கள் படிக்க வேண்டிய பதிவு..
  கடைசில டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆக ட்ரை பண்ணிருக்கீங்க போல..

  //முடிந்தவரை நம் எழுத்துக்கள் நேர்மையாக இருக்கட்டும்...//

  பொதுவாக பதிவுலகில் இது குறையத் தொடங்கியிருக்கிறது.

  ReplyDelete
 23. சரியான புரிதல்கள் என்பது மாற்றுக்கருத்துக்களையும் விமர்சனங்களையும் (தன்மேல் தவறிருக்கும் பட்சத்தில்) ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது.

  ஆனால் இங்கு “அருமை.. சூப்பர்“னு முடிச்சிட்றாங்களே..

  ReplyDelete
 24. //More tension less work, less tension more work...//

  More post less comments, less post more comments...

  More comments less tension, less comments more tension...

  ReplyDelete
 25. //பின்னூட்ட வாதிகளாக ஆரம்பித்து, பதிவர்களாகி...அதன் மூலம் உலகெங்கும் பல நண்பர்களை பெற்று ஆனந்த கூத்தாடும் அனைவருக்கும் என் வணக்கங்கள்!//

  இப் புத்தாண்டின் முதல் வணக்கம் மாம்ஸ்.

  ReplyDelete
 26. இனி வரும் நாட்களில் நல்லதே நடக்க எல்லாம் வல்ல பரம் பொருளின் ஆசிகள் கிடைக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 27. வணக்கம் விக்கி சார்!/// கொசுறு: கொய்யால என்ன சொல்றான் எதுக்கு இந்த பதிவு..படுபாவி இவன் லூசா இல்ல...!////இல்லை,இல்லவே இல்லை!உண்மை சொன்னீர்கள்,அதுவும் நன்றே சொன்னீர்கள்!

  ReplyDelete
 28. உஷ்.. அப்ப்ப்ப்ப்பா.. நைனா...

  இன்னாதான் சொல்றே?..

  சரி விடு...

  அடுத்த முதல்வர் யாருய்யா?...
  :-)

  ReplyDelete
 29. ஓ.. நைனா... புரிஞ்சிடுச்சு.....

  (சே.. புரியலேனு சொன்னா.. நீயெல்லாம் ஒரு ப$%#^ அப்படீனு சொல்லுவீங்க...)

  சூப்பர் நைனா...

  நீ கலக்கு சித்தப்பூ...

  ReplyDelete
 30. Mamms vazhakkampol.......
  Onnum...puriyalai.....

  ReplyDelete
 31. adangkoyyaala அடங்கொய்யால, யாரை தாக்கறேன்னு சொல்லிட்டு தாக்குடா ஹி ஹி

  ReplyDelete
 32. ////பதிவுலகம் ஒரு பொதுவான இடம்...பல நேரத்தில் அன்பு பூத்து குலுங்கும் அட்சய பாத்திரம்(!) சில நேரத்தில் ரத்த பூமி(!)...நம் கண்ணோட்டமே...இந்த இரண்டில் ஒன்றை ஏற்பதை முடிவு செய்கிறது...////

  சரியாகச்சொன்னீங்க இதுதான் யதார்த்தம்

  இந்த பதிவில் யாருக்கும் உள்குத்து இல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 33. வணக்கம் விக்கி அண்ணா,

  வருட ஆரம்பத்தில் மிக பொருத்தமான பதிவு ஒன்றைத்தான் தந்திருக்கிறீர்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எழுத்தாணி பிடிப்பவனுக்கு வரவில்லை என்றால் அவன் எழுத்துலகில் நண்பர்களை விட எதிரிகளைத்தான் அதிகம் சம்பாதித்துக்கொள்வான் என நினைக்கிறன். நீங்கள் சொல்வது உண்மை. கருத்துக்களை கருத்துக்களாக ஏற்றுக்கொண்டு கருத்துக்களால் கருத்துக்களோடு வாதாடுவதில் எந்த பிழையும் இல்லை. இருந்தும் கருத்துகளை விடுத்து தனி மனித போராட்டங்கள் அசிங்கம் நிறைந்தவை.

  ReplyDelete
 34. கொசுறு டாப்பு..

  ReplyDelete
 35. கடந்த ஓரிரு வாரங்களாய் பதிவுலகினை பற்றிய பதிவுகளே அதிகம் வருகிறது...ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை?

  ReplyDelete
 36. என்னுடைய தளத்திலும் நண்பர்களுக்கு தவறை சுட்டி காட்டி அவசரப்பட்டு ஏதும் பின்னூட்டம் இட்டுவிட்டால் உடனே delete செய்து விடுகிறார்கள்...ஆனால் அது மின்னஞ்சலில் மூலம் எனக்கு தெரிந்துவிடும்போது எனக்கு தோன்றுவதெல்லாம்,"ஏன் இதை நீக்கி இருக்கிறார்கள்? ஏன் வெளிப்படையாய் என் தவறை இந்த நண்பரால் சொல்ல முடியவில்லை என்பதே.. "

  ReplyDelete
 37. என்ன உள்குத்தோ,வெளிக்குத்தோ யார் கண்டார்கள்!

  ReplyDelete
 38. பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரியாம் ஆகட்டும் மாம்ஸ்

  ReplyDelete
 39. கருத்துக்கள் வேறுபடுவதால்தான் நாம் மனிதர்களாக இருக்கிறோம். மாற்றுக் கருத்து வைக்கும் போதும் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் அதை வெளியிடுவதில்லை.

  ஆம் அது அவர்கள் சுதந்திரம். நாம் அதில் நுழையத் தேவையில்லை.

  ReplyDelete
 40. இன்று என் வலையில்
  நேத்து உள்ளதுதான்யா இருக்கு..!

  ReplyDelete
 41. தென்றா பசுபதி...., நீதி நேர்மை நாயம்லாம் நம்ம சொத்தாச்சே.... ஆருடா இது நமக்கு போட்டியா....?

  ReplyDelete
 42. அவரவர் மனசாட்சியை விட அவர்களை தண்டிக்கும் விஷயம் ஏதேனும் உண்டா என்ன? உங்களுக்கு புரியும், தெரியும் என்று நினைக்கிறேன். நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி