பேச்சுலர் - ஒரு பூனை புலியானது!

வணக்கம் நண்பர்களே...
இந்தப்பதிவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றிய பதிவு...!


டேய் நாளைக்கு நியு இயர்...இன்னைக்கு நைட் என்ன பிளான்..!


மாப்ள ஆளுக்கு எவ்ளோ துட்டுன்னு சொல்லிடீங்கன்னா ரெடி பண்ணிடுவோம்..!


சரி பக்கத்து ரூம் பசங்களும் வரானுங்களா இல்ல ஏதாவது தனி பிளானா!


இதுவரைக்கும் ஒன்னும் சொல்லல..விடு நம்ம வழிய பாப்போம்...!


அந்த மொட்டை மாடியில் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்தது சரக்கு கொண்டாட்டம்...!


ஏன்னே, முன்னமே சொல்லி இருந்தீங்கன்னா நாங்களும் வாங்கி வந்து இருப்போம்ல...


இருக்கட்டும் வாங்க...ஏற்கனவே இருக்கறத பங்கிட்டுப்போம்....டேய் நீயும் கோபியும் போய் பிரியாணி பார்சல்கள மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க...!


சரிங்க்னோவ்!


(வீட்டுக்காரர் என்ட்ரி...அதாம்பா house owner!)


எலேய் என்னய்யா இது வீடா பாரா...இன்னாங்கடா இத்தனை பேரு உக்காந்து தண்ணி அடிக்கறீங்க...


ஸ் ஸ் வாங்க ஓனர்...உங்களுக்கு என்ன விஸ்கியா பிராந்தியா!..


அடேய் என்னா கொழுப்பு இருக்கணும்...என்னையே கலாய்க்கிரீங்களா!


அட உக்காருங்க ஓனர்...உங்கப்பாருக்கு தெரியாம நீங்க கட்டிங் போடுறது எனக்கும் தெரியும்..


ஏன்யா ஏன் இப்படி பொதுவுல போட்டு கொடுக்கற...சரி நான் கெளம்பறேன்..


யோவ் எங்க போற...!


அடங்கொய்யால இவனுக்கு ஏறிடிச்சி போல...நானா தான் வந்து மாட்டிகிட்டனா...


வீட்டுக்குத்தான்...


எந்த வீட்டுக்கு..ஒழுங்கா இங்கன உக்காரு...இல்ல சொந்த வீட்டுக்கு போகமாட்டே...டேய் அந்த பாட்ல எடு...


டேய் பாவி...நான் உக்காந்துடறேன் இரு..(பய புள்ள இல்லனா பாட்ல எடுத்து மண்டையில போட்ருமோ!)


அடேய் ஓனருக்கு ஊத்து....அப்படியே சைடிஷ் வையி...


அய்யா ராசா தெரியாம வந்து மாட்டிக்கினேனே...என்னைய விட்ரு!...வீட்டுக்கு போனா என் பொண்டாட்டி அடிச்சே கொன்னுடுவா என்னை புரிஞ்சிக்க!


இங்க பார்ரா..இவரு நானும் இளம் ஜோடிகள் புரிஞ்சிக்க...ஏன்யா உன்னைய தான் தினமும் வெளுக்கராங்களே இன்னைக்கு என்ன புதுசா...


டேய் எவ்ளோ மரியாத நான் கெளம்பறேன்...


தோபார்ரா அண்ணனுக்கு கோவம் வேற வருதா...யோவ் முதல்ல வீட்ல அடிவாங்கரத நிறுத்து...இல்ல இந்த உதார் விடறத நிறுத்து ஹிஹி...


ஏன்டா சொல்ல மாட்ட...அவசர ஆபத்துக்கு உன்கிட்ட காசு வாங்கறேன் இல்ல...இதுவும் வேணும் எனக்கு இன்னமும் வேணும்...!
சரி சரி பாருங்க பேசிகிட்டே ரெண்டு ரவுண்டு போட்டுட்டீங்க...அந்த மூணாவதையும் எடுத்து குடிச்சிட்டு கெளம்புங்க...அப்புறம் மப்பு ஏறிடிசின்னா பிரச்சன ஆகப்போகுது வீட்ல...


ஏன்டா என்னா சரக்குடா இது குப்புன்னு ஏறிப்போச்சி...


பூனை புலியாக மாறிக்கொண்டு இருந்தது....


என்னாங்க...இன்னும் இங்க என்னா பண்ணிட்டு இருக்கீங்க...வீட்டுக்கு வராம...(ஓனரின் மனைவி குரல் கேட்டது!)


நீ போ நான் அப்புறமா வரேன்..


அடேய் என்னங்கடா இது இப்படி உக்காந்து கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிட்டு இருக்கீங்க...


ஏங்கா உங்களுக்கும் வேணுமா..


அடி செருப்பால...யோவ் இதுங்க மொட்ட பசங்க நீ சம்சாரிதான உனக்கு அறிவு வேணா இங்க வந்து குடிச்சிட்டு இருக்க...
அடிங்க..என்னையே திட்ரியா...உன்ன என்னா பண்றேன் பாரு...


ஓனர் மனைவி முன்னாடி ஓட ஓனர் காலி பாட்டிலை தூக்கிட்டு துரத்திக்கிட்டு ஓட...ஒரு பூனை புலியானது...!


(ஓனரின் தந்தை என்ட்ரி!)


ஏன்டா என் பையன தண்ணி அடிக்க வச்சி கெடுக்கறீங்களா!


இதோடா முன்னால் சிஐடி வந்துட்டாரு...என்னா தாத்தா நீங்க ஒரு கட்டிங் போடுறீங்களா...


சீ உங்கள திருத்த முடியாதுடா...உங்கள முதல்ல வீட்ட காலி செய்ய வச்சாத்தான் எனக்கு நிம்மதி...


சரி சரி டென்சன் ஆகாதீங்க...


அடி நாதாரி...அது சரி என்ன சரக்கு அடிக்கறீங்க!


அவரும் எங்களுடன் மிங்கிள் ஆனாரு...ஹிஹி!...


கொசுறு: அது ஒரு கனாக்காலம்...என்ன ஒரு வாழ்கைடா...!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. அடப்பாவி டேய் அந்த வீடியோவை பார்த்துட்டு வாந்தி வாந்தியா வருதுடா நாதாரி த்தூ....

  ReplyDelete
 2. இந்த கிளிப்பை அந்த மூதேவி சிபி'க்கு தனியா மெயில் அனுப்பி சாகடிச்சுருக்கலாம், எங்களையும் சேர்த்து கொல்லனுமா ராஸ்கல்...

  ReplyDelete
 3. தண்ணி சாப்பிடறது சம்பந்தமா ஒவ்வொருத்தரும் கைவசம் நிறயக் கத வெச்சுருப்பாங்க போல!

  ReplyDelete
 4. மிகவும் சீரான சிறப்பான கருத்துகள் பாராட்டுகள் தொடர்க...

  ReplyDelete
 5. >>மாலதி says:
  January 3, 2012 5:07 PM Reply

  மிகவும் சீரான சிறப்பான கருத்துகள் பாராட்டுகள் தொடர்க...


  ஹலோ மேடம், அவன் தண்ணி அடிச்சுட்டு உளறி இருக்கான். அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. தக்காளி, உன்னை கண்டபடி திட்டி நிரூபனை ஒரு பதிவு போடசொல்லனும் ஹி ஹி

  ReplyDelete
 7. மாம்ஸ் ஏன் இப்புடி?

  ReplyDelete
 8. சரக்கு பதிவா..ம்..படிச்சாச்சு..

  ReplyDelete
 9. மை கோட்... ஏன் அண்ணா இந்த கொலைவெறி.. வாக்க்.. பாம்ம்பு கறியா... யார சாகடிக்க இந்த முயற்சி அண்ணா?

  தண்ணிக்கு பின்னால இவ்வளவு ஸ்டோரி வச்சிருக்கங்கையா...

  ReplyDelete
 10. தானே புயல் ஓய்ஞ்சாலும் இந்த தண்ணி புயல் தமிழ்நாட்டுல ஓயாது போல...

  அந்த வீடியோ இருக்கே சாமி...
  மருந்து வெக்க வேண்டியதையெல்லாம் விருந்தா வெக்கறானுகளே... கொடுமை...

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் says:
  தக்காளி, உன்னை கண்டபடி திட்டி நிரூபனை ஒரு பதிவு போடசொல்லனும் ஹி ஹி//


  சொல்லீட்டாப்போச்சு.. இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு

  ReplyDelete
 12. //சி.பி.செந்தில்குமார் says:
  தக்காளி, உன்னை கண்டபடி திட்டி நிரூபனை ஒரு பதிவு போடசொல்லனும் ஹி ஹி//

  நிரூபன் வீடியோ பார்த்திட்டு வாந்தியா எடுத்திட்டு இருக்காப்படி மசக்கை மாதிரி திட்டி என்ன பாராட்டி கூட பதிவிடமாட்டாப்படி...உவ்வேவ்...

  ReplyDelete
 13. மாமா பதிவ போட்டிட்டு பாம்பு திங்க போய்ட்டியா....அய்யா சாமி பேதிய கிளப்புறீங்க....

  ReplyDelete
 14. ஆஹா !இப்படி பேச்சுலர்ஸ் கிடைக்க அந்த ஹவுஸ்ஓனர் குடுத்து வைச்சிருக்கணும்

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட் சார்!எனக்கு சொல்லாம வுட்டுட்டீங்களே????ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 16. ஒரு நிமிஷம் இதெல்லாம் வியட்நாம்ல நடந்ததுன்னு நினைச்சுட்டேன்... நம்மூர் ஞாபகங்கள் போல...

  ReplyDelete
 17. மாம்ஸ்,
  வணக்கம்
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. வை திஸ் கொலைவெறி பாஸ் அவ்வ்வ்வ்

  ReplyDelete
 19. பசுமை நிறைந்த நினைவுகள்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி