நேற்று வாழ்கையில் முக்கியமான நாள்!

வணக்கம் நண்பர்களே...
எல்லோருக்கும் வாழ்கையில் சில நாட்கள் நெஞ்சை விட்டு அகலாத விஷயங்களை கொண்டு இருக்கும்...அதை மறக்க முடியாத நாட்கள் என்று கூறுவோம்..அப்பேர்ப்பட்ட நாளாகிப்போனது நேற்று!...


ஹலோ மாப்ள எப்படி இருக்கீங்க...


சொல்றா அப்துல்..என்ன ஆளையே காணோம்..உங்க போன் வொர்க்காகல ரொம்ப நாளா!


(இவர் ஒரு பேங்கில் ப்ராஜெக்ட் விஷயமா வொர்க் பண்றார்!)

ஆமாங்க அவசர வேலையா இந்தியா போயி இருந்தேன்..ஒரு முக்கிய விஷயம் அதான் உங்களுக்கு போன் பண்ணேன்..முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க!


(அவருடைய வார்த்தையில் ஒரு அவசரம் தெரிந்தது!)


என்னய்யா சொல்லு...ஏன் என்னாச்சி!


என் அப்பா ஹனாய் பாக்கனும்னு சொன்னாரு அவர 15 நாள் இங்க தங்கி இருக்க சொல்லி கூட்டி வந்தேன்..திடீர்னு இப்போ அவருக்கு மூச்சி திணறல் வந்துருச்சி...இப்ப பாத்து ஒரு டாக்ஸி கெடைக்கல என்னத்த பண்றதுன்னு தெரியல...


நான் ட்ரை பண்ணி பாக்குறேன்...ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் கூப்பிடுறது தானே...விடுங்க நான் ட்ரை பண்றேன்...


(மழை அதிகமா பெய்யிரதுனால டாக்ஸி காரனுங்க பிசியாயிடானுங்க போல ஒருத்தனும் லைன் எடுக்கல...இங்க மழை பெய்ஞ்சா டாக்சி கெடைக்கறது கஷ்டம்..!)


மாப்ள கவலைப்படாதீங்க போன் லைன கட் பண்ணிடாதீங்க நான் என்னோட மனைவி போன்ல டாக்ஸி ட்ரை பண்றேன்...(லைன் கட்டாயிட்டா திரும்ப எடுக்குமோ தெரியல...காத்து மழை!)


என்ன பண்றதுன்னு தெரியல...இவரு துடிக்கறத பாக்க முடியல(அழ ஆரம்பித்து விட்டார்..!)


டேய் அடிங் அழாத...அப்படியே வீட்ல இருக்க எல்லா A/c லையும் ஹீட்டர் போட்டு விடு...நான் இதோ வரேன்...!


என் பிளாட் அவர் இருக்கும் வீட்டுக்கும் கிட்ட தட்ட 2 கிமீ இருக்கும்...அடிக்குற மழையில அங்க அங்க ட்ராபிக் ஜாம்..வீட்டிலிருந்த பைக்க எடுத்து கிட்டு வேகமா இருக்குற சந்துல எல்லாம் நுழைந்து ஓட்டிக்கொண்டு இருந்தேன்...எல்லாம் பிளாட் பார்மிலும் ஏறி இறங்கினேன்..வியட்நாமியர் பலர் என்னை முறைத்து பார்த்துகொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் விரைந்தேன்...


அடித்து பிடித்து அந்த பிளாட் இருக்கும் இடத்தை அடைந்த போது நண்பர் எப்படியோ அவர் தந்தையை 7 வது மாடியில் இருந்து கீழ கொண்டு வந்து விட்டிருந்தார்...திடீரென மின்சாரம் தடைப்பட்டது...அட சர்வேசா ஏன்டா இப்படி ஒரு உயிரை சோதிக்கரே!..ஒரு நாதாரி டாக்சியும் வந்த பாடில்லை...


அடித்து பிடித்து அவரை என் பின்னால் உட்கார வைத்து நண்பரை பிடித்துக்கொள்ள சொன்னேன்...
மாப்ள மூணு பேரு அதுவும் ஹெல்மட் இல்லாம நாங்க ரெண்டு பேரு...போலீஸ் காரேன் பாத்தான்னா புடிச்சி நிறுதிடுவான்டா...


அடச்சீ ஏறு..எவன் நிறுத்தினாலும் வண்டிய நான் நிறுத்த மாட்டேன் உக்காரு...கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாத...


கிட்ட தட்ட அங்கிருந்து 3 கீமீ தூரம் பல தடைகளை தாண்டி எந்த போலீஸ் கை காட்டியும் நிற்காமல் கொண்டு போய் சேர்த்தோம் பிரெஞ்சு ஆஸ்பிடலில்...ச்சே என்ன வாழ்கைடா இது...


அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நார்மலாக இப்போ இருக்கிறார் என்று டாக்டர் சொல்லும்வரை நிம்மதி இல்லாமல் இருந்தேன்...ஸ்ஸ் அப்பாடா ஒரு உயிரை காப்பாதிட்டடா தக்காளி..இது போதும்டா!..


அப்போதும் நண்பன் தேம்பி தேம்பி குழந்தை போல் அழுதுகொண்டே சொன்னான்...


மாப்ள எங்கப்பாவ காப்பாதிட்டடா...எனக்கு இருக்க ஒரே சொந்தம் அவர் தான்டா...என்ன சொல்றதுனே தெரியல என்றான்..(அம்மா இல்லாத அந்த குழந்தை!)


எனக்கு நிம்மதியாயிற்று...அங்கிருந்து கிளம்பினேன்...(மழை வானத்தை கிழித்து பெய்து கொண்டு இருந்தது!)


எங்கள் மூவரை கொண்டு சேர்த்த என் பைக் சட்டென ஒரு இடத்தில் பஞ்சர் ஆகியது...


ஸ்ஸ்...
அருகே எங்கே தேடியும் ஒரு கடையும் திறந்து இல்லை..எல்லாம் மூடி கிடந்தது...அரை கிலோமீட்டர் பனியுடன் பெய்து கொண்டு இருந்த மழையில் நானும் நீந்திக்கொண்டு பைக்கை இழுத்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தேன்...அந்த நாலு ரோடு சேரும் இடத்தில் ஒரு பெரியவர் என்னை கூப்பிட்டார்..அவர் சைக்கிள் ரிப்பேர் செய்பவர்..


அவர் பேசியது எனக்கு புரிய வில்லை..எனினும் என் நிலைமையை புரிந்து கொண்டார்...அவருக்கு 87 வயதாம்!


வண்டியின் பின் சக்கரத்தை கழட்டி டயரில் இருந்து டியூபை வெளியில் எடுத்து எந்த இடத்தில் பஞ்சர் என்பதை காமித்தார்...அப்போது தான் கவனித்தேன் அவருக்கு ஒரு கண் இல்லை..


என்னிடம் அந்த பஞ்சர் போன இடத்தை காமித்து ஒரு குச்சியால் அந்த இடத்தில் சொருக சொன்னார்...அடிக்கிற மழையில் எப்படியோ சரியான இடத்தில் சொருகிவிட்டேன்!..பஞ்சர் போட்டு விட்டு திரும்ப அந்த டியுபை டயர் உள் செலுத்த பட்ட பாடு இருக்கே..ஏனெனில் அவரால் முடிய வில்லை..கொஞ்ச நேரத்தில் வண்டி ரெடி ஆனது...


ஸ் ஸ் அபா ஒரு மணி நேர போராட்டத்தில் வெற்றிகரமாக பஞ்சர் போட்டு முடித்தோம்..!


வீடு வந்து சேரும்போது மணி 12!


கொசுறு: ஒரு பெரியவருக்கு என் மூலம் உதவி செய்ய வைத்த கடவுள்...இன்னொரு பெரியவர் மூலம் என்னை காப்பாற்றி இருக்கிறார்...கடவுள் எப்போதுமே பாக்கி வைப்பதில்லை போலும்!..பொறுமையாக வாசித்ததற்கு நன்றிகள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. காலத்தினால் செய்த உதவி குறள் நினைவுக்கு வருது மாம்ஸ்!

  ReplyDelete
 2. மாம்ஸ்
  உருக்கம்.. நிஜம். இது தான் நிஜமான வாழ்கை

  ReplyDelete
 3. : ஒரு பெரியவருக்கு என் மூலம் உதவி செய்ய வைத்த கடவுள்...இன்னொரு பெரியவர் மூலம் என்னை காப்பாற்றி இருக்கிறார்...கடவுள் எப்போதுமே பாக்கி வைப்பதில்லை
  >>
  ரொம்ப சரிதான் சகோ

  ReplyDelete
 4. அவசரத்துக்கு உதவுபவனே நல்ல நண்பன்..பாராட்டுகள்..
  ஈரோட்டு சூரியன்

  ReplyDelete
 5. ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மாப்ள நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வணக்கம் வெங்கட் சார்!மனசார உதவிய உங்களுக்கு,ஆண்டவன் கிழவர் ரூபத்தில்!!!

  ReplyDelete
 8. வணக்கம் அண்ணா,
  நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் எனும் வாக்கினை இறைவன் உடனுக்குடன் பெரியவர் மூலமாக உங்களுக்கு காட்டியிருக்கிறார்.

  வண்டி பஞ்சர் ஆகும் போது மழையினுள் ஆண்டவன் உங்களுக்கு சோதனை கொடுத்து விட்டானோ என நினைத்தேன். ஆனால் அடுத்த பந்தியில் சைக்கிள் கடை பெரியர் மூலம் கடவுள் கண் திறந்திருக்கிறார்.

  இயல்பான எழுத்து நடை பதிவிற்கு வலுச் சேர்த்திருக்கிறது.

  ReplyDelete
 9. நல்ல காரியம் செய்தீர்கள் மாம்ஸ் வாழ்த்துக்கள்! அந்த பார்வை சரியில்லாத பெரியவரும் நல்லாயிருக்கட்டும்!

  ReplyDelete
 10. Ok....ok...mamms....

  Now im cleared.......

  Good things.....happens
  for good peoples.......

  But its not
  GOD........

  Its our good doings....

  ReplyDelete
 11. நல்ல காரியம் செஞ்சு இருக்கிங்க.. என்ன சொல்றதுனே தெரியலை.. காலத்தில் செய்த உதவி, எல்லாத்தையும் விட பெரியது..

  ReplyDelete
 12. தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது, நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது, ராஜா சின்ன ரோஜா படப் பாடல் ஞாபகம் வந்துச்சு...

  ReplyDelete
 13. நன்மை விதைத்தால் நன்மையைத்தான் அறுவடை செய்யமுடியும் என்பதின் உதாரணம் இதுதான்....எனக்கும் இப்படி ஒரு அனுபம் இருக்கிறது அவர் வயதானவர் இல்லை என் நண்பன் நாதாரி விசத்தை குடிச்சிருச்சு!

  ReplyDelete
 14. ஸலாம் சகோ.விக்கி,
  மிக அருமையான பதிவு.
  உங்கள் நண்பர், தன் ஆபத்தில் அறிந்தார் அவரின் அருமை நண்பனை..!

  //ஒரு பெரியவருக்கு என் மூலம் உதவி செய்ய வைத்த கடவுள்...இன்னொரு பெரியவர் மூலம் என்னை காப்பாற்றி இருக்கிறார்...கடவுள் எப்போதுமே பாக்கி வைப்பதில்லை போலும்!.//---இங்கே இன்னோன்றை மறந்து விட்டீர்கள்..!

  இதே பங்க்சர் ஹாஸ்பிட்டல் போகும்போது ஏற்பட்டிருந்தால்..?

  இறைவனுக்கு நன்றி.
  வாழ்த்துகள் சகோ.விக்கி.

  ReplyDelete
 15. பொன்னம்பலம் உயிரை எடுத்துதான் பார்த்து இருக்கேன், இந்த பொன்னம்பலம் உயிரை காப்பாத்தி இருக்கிறார் பிரமாதம் மக்கா தெய்வத்தின் துணை உனக்கு எப்போதும் உண்டு...!!!

  ReplyDelete
 16. ஆஹா நேற்றைக்கு சினிமா பாக்க போறதால்ல சொன்னே என்கிட்டே ம்ம்ம்ம்...!!!

  ReplyDelete
 17. மழை பெய்தால் வியட்னாம்'ல மட்டுமில்ல சார், உலகத்தில் எங்கேயும் டாக்சி கிடைப்பது சிரமம்தான்...!!!

  ReplyDelete
 18. நெஞ்சில ஈரம் இருக்கிற மனிதர்கள்தான் கடவுளின் வாரிசு.

  ReplyDelete
 19. என்னது? நீ நல்ல காரியம் செஞ்சிருக்கியா? அடங்கோ

  ReplyDelete
 20. நண்பன் கொடுத்ததால்...வேறு வழியில்லாமல்!//

  டேய் நான் உன்னை மிரட்டினதாக நினச்சிரப்போறாயிங்க ஹி ஹி...

  ReplyDelete
 21. மாப்ள ஒரு சின்ன நிகழ்வை ரொம்ப இண்ட்ரெஸ்ட்டிங்கா சொல்லிருக்கீங்க...

  ReplyDelete
 22. ங்கள் நண்பரின் தந்தையை மிகப் பிரயாசைப்பட்டு
  மருத்துவ மனையில் சேர்த்து அவருக்கு சரியாகிவிட்டது
  எனத் தகவல் தெரிந்ததும் தங்களுக்கு ஏற்பட்ட திருப்தி
  எத்தனை சௌகரியங்கள் சுகங்கள் கிடைக்கும் போதும் நிச்சயமாக ஏற்படாது
  இதிலிருக்கும் இன்னொரு சௌகரியம் இப்படியே
  பிறருக்கு முடிந்த அளவு நன்மை செய்து கொண்டே இருந்தால்
  நமக்கு கெடுதியே வராது என்கிற நம்பிக்கையும்
  நம்க்கு உறுதியாக வந்துவிடும்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 23. மாப்பிளே சுகங்கள் எல்லாம் எப்பூடி? வந்துட்டோம்ல:)
  புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. மாம்ஸ், உங்கள் நண்பரின் தந்தைக்கு நீங்க செய்த உதவியே, இன்னொருத்தர் மூலமா உங்களுக்கும் ரிப்பீட்டு ஆயிருச்சு.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்கவே முடியாது அதுவும் பொருத்தமான நேரத்தில் கிடைக்கும் உதவி சின்னாக இருந்தாலும் அதன் பயன் பெரியது நல்ல பகிர்வு

  ReplyDelete
 27. உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைந்த உங்களுக்கு உதவ ஒருவர் வந்தாரே அதுதான் வாழ்வின் நியதி!நன்று.

  ReplyDelete
 28. மாம்ஸ் மிகப் பெரிய செயலைச் செய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 29. அயல்நாடு சென்றாலும் அசராத வீரரையா நீங்கள். நன்றி.

  ReplyDelete
 30. ஒரு பெரியவருக்கு என் மூலம் உதவி செய்ய வைத்த கடவுள்...இன்னொரு பெரியவர் மூலம் என்னை காப்பாற்றி இருக்கிறார்...கடவுள் எப்போதுமே பாக்கி வைப்பதில்லை போலும்!..

  நெகிழ்ச்சியான வரிகள்..

  ReplyDelete
 31. நெகிழ்ச்சியான பதிவு மாப்ள, நல்ல வேலை செஞ்சிருக்க.....!

  ReplyDelete
 32. Anne...Vanakkam anne..

  Udukkai izhanthavan kai pola
  uthavi seithaaram vikki...

  Nandri...thodarga um pani...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி