நீங்க எந்த க்ரூப்!

வணக்கம் நண்பர்களே...


இந்த பதிவு ஒரு க்ரூப் பற்றிய பதிவு....


ஹாய் எப்படி இருக்க...


ம்ம் நல்லா இருக்கேன்...


என்ன நீயும் இங்க சேந்துட்டியா..


ஆமா...ஏன் சேரக்கூடதா!


இல்ல நீ ஏன் இங்க போய்....


என்ன பிரச்சன உனக்கு...நான் சேரக்கூடாத அளவுக்கு இங்க என்ன இருக்கு...


அது இல்ல...
வேற என்ன?


எப்படி சொல்றது...


சரியா யோசிச்சித்தான் இந்த முடிவு எடுத்தியா...


ஹே என்னாச்சி உனக்கு...நான் எதையும் யோசிக்காம முடிவெடுக்க மாட்டேன்னு உனக்கு தெரியுமில்ல...


அதான் நானும் யோசிக்கறேன்..நீ எப்படி இங்க..


அய்யோ நீ சொல்றத பாத்தா இங்க எதோ பிரச்சன இருக்கு போல...ஏன் மறைக்கற சொல்லு!..


வேணாம் விடு...அதான் சேந்துட்டியே!


ஏய் சொல்றா...எனக்கு பயமா இருக்கு...


இதெல்லாம் சேர்றதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும்...இப்ப சொல்லி என்ன பண்ண...


இப்போ நீ சொல்லப்போறியா இல்லையா...


ம்ம்...


நீ என்னோட உண்மையான பிரெண்டுன்னா சொல்லு நான் செய்ஞ்சது தப்பா...


நீ அப்படி என்னை நெனச்சிருந்தா முன்னமே எங்கிட்ட கேட்டு இருப்ப..இப்படி வந்து சேந்து இருப்பியா..


டேய் கேக்காதது தப்பு தான்...தயவு செய்ஞ்சி மன்னிச்சிடு...என்னதான் விஷயம் சொல்லு...ஏன் இவங்கல்லாம் அவ்ளோ மோசமானவங்களா...


அது இல்ல மேட்டரு...


ஸ் ஸ் அபா எனக்கு தலை சுத்துது...


இரு விளக்கமா சொல்றேன்..நீ ஒரு பயந்தாங்கோலி...


அதுக்கு என்ன...இப்ப..
அதான் கேக்குறேன்...அப்பேற்பட்ட நீ எப்படி First group எடுத்த...இங்க தான் தவள எலின்னு அறுக்குற விஷயம் இருக்கே...உன்னை நான் commerce தானே எடுக்க சொன்னேன்...


இல்லடா...எங்கப்பாதான் என்னை force பண்ணி இங்க சேத்துட்டாரு....இதை கேட்டேன் அவருகிட்ட ஏற்க்கனவே..


என்ன சொன்னாரு..
அந்த க்ரூப்தான் விக்கி எடுத்திருக்கான்...உனக்கு எந்த பயமும் இல்லம்மான்னு சொன்னாரு...


அவள் அப்பாவின் நம்பிக்கையை கேட்டு செய்வதறியாது மலைத்தான் விக்கி..


கொசுறு: நண்பர்களுக்கு எது சரி என்று நாம் யோசிக்கும் போது...நம்ம கூட இருக்கறது தான் அவங்களுக்கு சரின்னு இவங்க யோசிக்கராங்களே...என்ன ஒரு நம்பிக்கை!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. இது யாருக்கு உள்குத்து ஒண்ணுமே புரியலையே அண்ணே...!!!

  ReplyDelete
 2. என்னைக்கு இந்தியா வந்து எவன்கிட்டே எல்லாம் அடி வாங்கப்போறியோ தெரியலை நடத்து...!!!

  ReplyDelete
 3. கதை ஓகே அண்ணே..ஆனா அதுக்கும் மேல உள்ள வீடியோக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா ?...எனக்கு புரியலையே..

  ReplyDelete
 4. இன்று என் மயிலிறகில்...எழுதக்கூடாத பதிவு....
  இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..

  ReplyDelete
 5. தக்காளி ஃபார்முக்கு வந்துட்டான்யா.... ஒரு எழவும் புரியல.........!

  ReplyDelete
 6. என்னவோ போ மாம்ஸ்....

  ReplyDelete
 7. எல்லாம் ஒரே குருப்புதானோ!

  ReplyDelete
 8. அண்ணே டாப் கியர்ல போறீகளோ???

  ஒண்ணுமே புரியலயே. க்ரிஸ்டோபர் நோலன், கமலஹாசன், மணிரத்னம் எவ்வளவோ பரவால்ல போல.

  ReplyDelete
 9. மாப்ள இது என்ன உள்குத்து வேலையா? புரியலையே.

  ReplyDelete
 10. வணக்கம் வெங்கட் சார்!எல்லாரையும் சிண்டைப் பிச்சுக்க வச்சுட்டீங்க!ப.ரா.சொன்னாப்புல போர்முக்கு வந்துட்டீங்க!!ஹ!ஹ!ஹா!!!!

  ReplyDelete
 11. அப்புறம் அந்த தோழி தவளைக்கு பதிலா தக்காளியை! அறுத்து பிராட்டிகல முடிச்ச விசயத்தை போடல மாம்!
  சாப்பிடற தக்காளிங்கோ! கொய்யால ஊருக்குள்ள ஒரு கிணத்த கூடக் காணம்!

  ReplyDelete
 12. இதுக்கு பின்னாடி ஏதோ ஒண்ணு இருக்கு.. ம்ம்ம்ம் எனக்குத்தான் புரியல..

  ReplyDelete
 13. நல்ல வேல .நா வர்றப்ப அந்த வீடியோ புட்டுகிடுச்சி ......ஓடவே இல்ல.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி