பேச்சுலர் - பயணம்!

வணக்கம் நண்பர்களே...


பேச்சி துணைக்கு ஆளில்லாதவர் எனும் காலங்கள் பற்றிய பதிவுகளில் இதுவும் ஒரு துளி!


ஹாய் ராஜேஷ்...


ஹாய்டா மாப்ள...சொல்லு எப்படி இருக்க..


நல்லா இருக்கேன்..


என்ன இன்னைக்கு டூர் கெளம்பறியா!...எந்த ஊரு!


சேலம்...ஏன் கேக்கறே...


இல்ல கேட்டேன்...சரி எப்போ வருவே...


ரெண்டு நாள் மார்கெட் வேலை...சனி நைட்டு வந்துடுவேன்...
(கோயம்பேடு பஸ் நிலையம்..டிக்கட்டை வாங்கிக்கொண்டு அருகில் இருந்த டாஸ்மாக்குக்கு சென்று நிரப்ப வேண்டியதை நிரப்பிக்கொண்டு திரும்பினான் ராஜேஷ்!)


என்னனே எத்தன மணிக்கு எடுப்பீங்க..


என்னப்பா இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கு...


பஸ்ஸில் ஏறியவுடன் இரண்டாவது சீட்டில் உக்காந்து கொண்டான்...(முன்னாடி சீட் நடத்துனருடயது!...சில நிமிடங்களில் ஒரு வயதான அம்மாள் ராஜேஷ் பக்கத்தில் அமர்ந்தார்கள்!)


ஏம்பா நான் இங்க உக்கார கூடாதா என்ன அப்படி ரியாக்ட் பண்ற...நான் உனக்கு அம்மா மாதிரிபா...


அதனால தாம்மா சொல்றேன் பின்னாடி போய் உக்காந்துக்கோங்களேன்!


இல்லப்பா எனக்கு இங்க தான் உக்காரணும்...
அப்புறம் உங்க இஷ்டம்மா...(ஏழற ஆரம்பிச்சிடுச்சி டோய்!)


 (வண்டி கிண்டியை தாண்டியது...!நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பல விஷயங்களை கிண்டலடித்து கொண்டே இருந்தனர்)


ஏன் தம்பி...ஒன்னு கேக்கட்டுமா...


தாராளமா கேளுங்க....


நானும் பாக்கறேன்...வண்டி ஸ்டார்ட் ஆனதுல இருந்து இது வரைக்கும் கொஞ்ச கொஞ்சமா அந்த கோக் பாட்டில குடிக்கறே..பக்கத்துல இருக்க லேஸ் சிப்ஸ கடிக்கறே...என்னப்பா பண்றே..அதை ஒரு மடக்குல குடிக்க முடியாதா...!


அது வந்து...எனக்கு இப்படிதான் புடிக்கும்...


எதோ வித்தியாசமா படுது!..அதான் கேட்டேன்!


ம்ம்..அதுக்கு தான் சொன்னேன் இங்க உக்காராதீங்கன்னு...!


ம்ம்..இப்போ தான் புரியிது..நீ பபிளிக்ல குடிக்கற...இது சரி இல்லை..உன்னை என்ன பண்றேன் பாரு!


தம்பி கண்டக்டர்..!


சொல்லுங்க அம்மா..!


இவன் குடிச்சிட்டு இருக்கான்..இவன வண்டிய விட்டு கீழ இறக்குங்க!...


அப்படியா..ஏம்பா தம்பி அப்படியா..!


ஹலோ என் கையில இருந்த கோக் இப்போ காலி..இதோ இந்த காலியான டப்பாவ தூக்கியும் போடறேன் பாருங்க...


கண்டக்டர்...இது பத்தாது இவன் மேல வாடை வருது கீழ இறக்கி விடுங்க...


மேடம் அது முடியாது...


வேற இடத்துல உக்கார சொல்லுங்க...


அதுவும் முடியாது பஸ் புல்லு..!(இவரு ஆப்!)


ச்சே இப்படி ஒரு கேவலமானவன் பக்கத்துல உக்காந்துட்டனே....


(தன்னை தானே அந்த லேடி திட்டிக்கொண்டே, ராஜேஷையும் திட்டிக்கொண்டே வந்தார் வழி நெடுக!...கொஞ்ச நேரத்தில் அடித்த சரக்கு ஏறிப்போக தூங்கிப்போனான் ராஜேஷ்!...பொழுது விடிந்தது...)


தம்பி எழுந்திரு...இது தான் லாஸ்ட்...எல்லாம் இறங்கி போயிட்டாங்க பாரு...


ஆங் தேங்க்ஸ்னா!(ராஜேஷ் தன் ஷூ லேசை கட்ட கீழே குனிந்தான்...ஷூ க்கு அருகே ஒரு லேடிஸ் பர்ஸ் கெடந்தது...!..எடுத்து திறந்து பார்த்தல் ஒரு நெக்லசும்...பல ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக இருந்தன!..அந்த பர்சை எடுத்துக்கொண்டு கீழ இறங்கினான்...அதிலிருந்த அட்ரசை கவனித்து...ஆட்டோ பிடித்தான்!)


ஹலோ இந்த அட்ரஸ்சுக்கு போகணும்...


இது நாலு ரோடு கிட்ட தாங்க இருக்கு வாங்க...


அந்த வீட்டை அடைந்த பொழுது வீடு பூட்டி இருந்தது...
பக்கத்தில் விசாரித்த பொழுது...இப்போ தான் அந்த வயதான பெண்ணும்..அவருடைய மகளும் வெளியே சென்றதாக சொன்னார்கள்...தான் வேலைக்கு போக வேண்டிய டீலருக்கு போன் செய்து தான் மதியம் வந்து விடுவதாக கூறிவிட்டு...அங்கேயே வைட் செய்தான் ராஜேஷ்!...கிட்ட தட்ட 2 மணி நேரம் கழித்து...அவர்கள் வீடு நோக்கி அந்த அம்மாவும் இன்னொரு பெண்ணும் வந்து கொண்டு இருந்தனர்....


நீங்க...


நாந்தாம்மா..நேத்து உக்க பக்கத்து சீட்ல உக்காந்து இருந்தவன்...இந்தாங்க உங்க பர்ஸ்...செக் பண்ணிக்கங்க...எல்லாம் சரியா இருக்கா!


தம்பி உங்களுக்கு நான் என்ன பிரதிஉபகாரம் செய்யப்போறேன்...என்னை மன்னிச்சிடுங்க...நான் உங்கள கண்ட படி திட்டிட்டேன்...


இல்லம்மா...என் மேல தான் தப்பு..நீங்க தான் என்னைய மன்னிக்கணும் இனி வண்டில குடிக்க மாட்டேன்...சாரி..


ஓ..இருங்க வர்றேன்..


(PCO நோக்கி ஓடினார்!...அங்கிருந்து போன் செய்தார்!)


ஹாலோ போலீஸ் ஸ்டேஷனா...


(அடங்கொன்னியா என்னடா இது வம்பா போச்சி!)


இன்ஸ்பெக்டர்தம்பி இருக்காரா...நான் தான் தம்பி...கோகிலா பேசுறேன்..இப்போ உங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வந்தேன்ல...தம்பி நான் வந்து அதை வாபஸ் வாங்கிடறேன்..அந்த பையன் தான் இப்போ கொண்டாந்து என்னோட பர்ஸ கொடுத்தாரு....மன்னிச்சிடுங்க...நன்றி!


ராஜேஷிடம்..


சாரி தம்பி...உங்க அங்க அடையாளத்தோட கம்ப்ளைன்ட் கொடுத்தேன்...மன்னிச்சிடுங்க...


நோ ப்ரோப்ளம் அம்மா...நான் வர்ர்ட்டா...


ஏதாவது சாப்பிட்டு போங்களேன்...


இல்லைமா எனக்கு நேரம் ஆயிடுச்சி!...இன்னொரு முறை வரேன்!


கொசுறு அலைஸ் நீதி(ஹிஹி!): அன்றிலிருந்து ராஜேஷ் பஸ்ஸில் உற்சாக பானம் அருந்துவதில்லை(!)...தவறுகள் திருத்தப்பட சந்தர்ப்பங்களே காரணம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. அடடா....மப்பு போச்சே!

  ReplyDelete
 2. //தவறுகள் திருத்தப்பட சந்தர்ப்பங்களே காரணம்!//

  எவ்ளோ பெரிய உண்மை, உஙக நண்பர்க்கு பெரிய மனசுங்க,

  ReplyDelete
 3. மாம் வண்டியில குடிக்கலாம் வண்டிவண்டியாத்தான் குடிக்ககூடாது.....தண்ணி அடிப்பவனெல்லாம் கெட்டவனும் இல்லை! அடிக்காதவனெல்லாம் நல்லவனுமில்லை!கதையில சொல்லுற மேட்டர்....சூப்பரு...

  ReplyDelete
 4. ராம்சாமியின் பர்சனல் மேட்டரை பப்ளீக் ஆக்கிய விக்கிக்கு என் கண்டனங்கள் ஹி ஜ்ஹி ஜ்ஹி

  ReplyDelete
 5. எனக்கு ஒரு டவுட்டு குடிச்சதுனால அவர் திருந்துனாரா இல்லை குடி தெளிஞ்சதால அவர் திருந்துனாரா .......

  ReplyDelete
 6. //தவறுகள் திருத்தப்பட சந்தர்ப்பங்களே காரணம்!
  //
  100 % உண்மை

  ReplyDelete
 7. / ராம்சாமியின் பர்சனல் மேட்டரை பப்ளீக் ஆக்கிய விக்கிக்கு என் கண்டனங்கள் ஹி ஜ்ஹி ஜ்ஹி

  January 6, 2012 11:28 AM
  Blogger தினேஷ்குமார் said...

  எனக்கு ஒரு டவுட்டு குடிச்சதுனால அவர் திருந்துனாரா இல்லை குடி தெளிஞ்சதால அவர் திருந்துனாரா .......//


  எனக்கும் தான்

  ReplyDelete
 8. Enna mamms...
  Konja naala
  orey
  neethi
  kathaiya
  varuthu....

  ReplyDelete
 9. சந்தர்பங்களின் காரணங்களால் தவறுகள்
  திருத்தப்பட வேண்டும் .....
  சரியான அறிவுரை மாம்ஸ்...

  ReplyDelete
 10. மாப்ள சிறுகதை நல்லா இருக்கு.

  ReplyDelete
 11. அன்றிலிருந்து ராஜேஷ் பஸ்ஸில் உற்சாக பானம் அருந்துவதில்லை(!)...தவறுகள் திருத்தப்பட சந்தர்ப்பங்களே காரணம்!//

  ஆனால் வண்டி வண்டியா குடிச்சுட்டு பைக்ல சுத்துனதையும் சொல்லலாம்ல...

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  ராம்சாமியின் பர்சனல் மேட்டரை பப்ளீக் ஆக்கிய விக்கிக்கு என் கண்டனங்கள் ஹி ஜ்ஹி ஜ்ஹி//

  சைக்கிள் கேப்புல எப்பிடி மாட்டி விடுறான் பாருங்க...?

  ReplyDelete
 13. veedu said...
  மாம் வண்டியில குடிக்கலாம் வண்டிவண்டியாத்தான் குடிக்ககூடாது.....தண்ணி அடிப்பவனெல்லாம் கெட்டவனும் இல்லை! அடிக்காதவனெல்லாம் நல்லவனுமில்லை!கதையில சொல்லுற மேட்டர்....சூப்பரு...//

  நான் ஒரு சரக்கு பீப்பாய்னு இன்டைரக்ட்டா சொல்லுறது புரியுதுலேய்...

  ReplyDelete
 14. வணக்கம்,வெங்கட் சார்!அருமை!இப்படியும் திருந்தலாம் என்பதற்கு நீங்கள்?!ஒரு உதாரணம்!ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 15. சந்தர்ப்பங்களால் தவறுகள் திருத்தப்படவேண்டும்

  நல்ல அறிவுரை பாஸ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி