அறிவாளி தமிழச்சி!


விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி


                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.






                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 




                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional). 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.



                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.



நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:










இந்த குழந்தை மேலும் புகழ் பெற விக்கியின் வாழ்த்துக்கள்!

கொசுறு: இந்த பதிவு உணவு உலகம் அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்களின் தளத்தில் இருந்து காப்பி மற்றும் இங்கே பேஸ்ட் செய்யப்பட்டது என்பதை இங்கு கூறுவதில் பெருமைப்படுகிறேன்!



Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

21 comments :

  1. காப்பி பேஸ்ட் அல்ல மாம் கடமை!நன்றிகள் உங்களுக்கு

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ் - விசாலினிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விசாலினிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. தங்க தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்கைக்கு வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  6. அடேங்கப்பா? மிக பெரிய அறிவாளிதான். நாம் சமூகம் கண்டுகொள்ளுமா?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தமிழ் பாப்பாவுக்கு மிக்க மிக்க வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிடா மக்கா...!!!

    ReplyDelete
  9. மிகவும் சிறப்பான பதிவு இளைய அகவையில் இந்த மகத்தான சாதனை உலபூரவ பாராட்டுகளும் நன்றிகளும் பதிவிற்கு பாராட்டுகள் ...






    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. CCNA நானும் படித்திருக்கிறேன். அதில் 90 சதவீதம் மட்டுமல்ல, தேர்ச்சி பெறுவதே கடினமானதாகும். இந்த சிறு வயதில் பெரிய சாதனை புரிந்த சகோதரி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. அருமையான தகவலை பதிவாக்கித் தந்துள்ளீர்கள்
    படிக்கப் படிக்க பெருமையாக இருந்தது
    வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தங்கை விஷாலினி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்......

    பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  13. .பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்//

    பாராட்டுக்கள்,,

    ReplyDelete
  14. பெருமைப்படவேண்டிய பெண்
    பெருமைப்பட வேண்டிய காப்பி பேஸ்ட்!

    ReplyDelete
  15. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. பகிர்விற்கு நன்றி விக்கி.

    ReplyDelete
  18. இன்றுதான் இந்த பகிர்வு நிறைவு பெற்றுள்ளது.

    ReplyDelete
  19. மாம்ஸ்
    நன்றி...

    உங்கள் பக்க செய்திகள் சைட் பாரோடு உள்ளே செல்கிறது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யுங்கள்.

    ReplyDelete
  20. தங்கைக்கு வாழ்த்துக்கள்......

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி