பதிவுலகும் அய்யோ பாவம் ஆபீஸ் ஸ்டேனோவும்!~

வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவு நிதர்சன விஷயம் மட்டுமே...யார் மனதை யாவது புண் அல்லது கண் உறுத்தினால் எப்படி வேண்டு மென்றாலும் எடுத்துக்கொள்ளவும்...ஹிஹி!


சார்....சார்...சார்...கொர்ர்!


ஏம்மா இந்த மாதிரி கிண்டல் பண்ற...என்ன வேணும்...!~


இல்ல சார் எப்ப பாரு உங்கள அந்த குட்டியூண்டு பொட்டியோட பாக்குரனா அதான்..!


அது லாப் டாப்மா ...ஏன் உனக்கு தெரியாதா...! கிண்டல் பண்றியா என்னைய!


அன்னைக்கு தான் சொன்னீங்களே...தெரியும் சார்...அப்படி என்னத்த கிழிக்கறீங்கன்னு எப்ப பாரு அத குட்டி போட்ட பூனை போல தூக்கிட்டு போறீங்க....


அதுவா...என்னோட நண்பர்கள் பதிவு போட்டு இருப்பாங்க...அப்படி நான் அவங்க பதிவுக்கு போலன்னா என் பதிவுக்கு வர மாட்டாங்க...அதான்!


என்ன சார் பதிவுக்கு வரமாட்டாங்கங்கறீங்க...நண்பருங்கறீங்க...அப்படி என்ன தான் எழுதுவீங்க...


ஹிஹி..தோன்றத எழுதுவேன்.... 


யோவ் ஒரு பொட்டி கெடாச்சா என்ன வேணா எழுதுவியா...சரி அப்படி எழுதுறவங்கள பத்தி சொல்லு..என்னாலையும் எழுத முடியிதான்னு பாக்குறேன்...


ஓ...உனக்கும் இந்த ஆச வந்துருச்சா...ஆசையே துன்பத்துக்கு காரணம்..ஸ் ஸ் அபா...விதி வலியது...சரி ஒவ்வொன்னா சொல்லுறேன் கேளு!


(இந்தாளு ஆபீஸ் பைலையே ஒழுங்கா படிக்க மாட்டாரு...இவரு என்னத்த எழுதி கிழிச்சி!..!)


முதல்ல ஒரு ப்ளாக் ஆரம்பிசிக்கணும்...


அதான் தெரியுமே...


அப்புறம் என்ன பண்ணனும்...


அதான் சார் தெரியாது....


அடிங்...அப்புறம் எல்லாரு ப்லோகுளையும் போயி..நான் இன்னாரு இன்னாரு...நீங்க மன்னாரு மன்னாருன்னு கமன்ட் போடணும்...!


ஏன் சார் நீங்க போஸ்ட் ஒன்னு போட்டா தானா யாரும் வர மாட்டாங்களா...ஹிஹி..நான் என்ன உன்னைய போல பிகரா...!


யோவ் பிச்சிடுவேன்...


ஹிஹி சரி சரி விடு...அதாவது நீ உங்கூரு வார் அதாவது போர் பத்தி எழுது...செம கூட்டம் வரும் அதுவும்..நீ பெண் பதிவர்ன்னாலே பய புள்ளைங்க என்னா மறியாத கொடுக்கும் தெரியுமா...அப்படியே கவிதா ச்சே கவிதை போஸ்ட் போடு அதுவும்..எப்படி ஏய் ஆணே உன் தல புல்லா பேனே அப்படின்னு போட்ட சும்மா பிச்சிக்கும்..


எது..தலையா...


இல்லம்மா உன் போஸ்ட் மக்கள் கிட்ட ரீச் ஆகும்னு சொல்ல வந்தேன்....


சார் அதுக்கு நாளாகும் போல(!)..சட்டு புட்டுன்னு பேமஸ் ஆகணும்னா!


அட இது ரொம்ப சுலபம்...ஏதாவது பிரபல பதிவர் கிட்ட போன் பண்ணி பேசு...யோவ் நான் சட்டுன்னு பிரபலம் ஆகணும்னு சொல்லு...அவங்களும் சரி நமக்கு ஒரு ஆடு சாரி ஆட்டு குட்டி கெடசிருசின்னு உன்னைய பதிவுல போட்டு பேமஸ் ஆக்கிடுவாங்க...


எனக்கு ஒரு பதிவர தெரியுமே...

ஓ அப்படியே..அப்போ பிரச்சனயே இல்ல..அவர் கிட்ட சொல்லி அவருக்கு பாலோயரா இருக்குற அத்தன பேருக்கும் உன்னோட பதிவையும் உன் பேரையும் மெயில் மூலமா அனுப்ப சொல்லு...அவ்ளோதான் உடனே உனக்கு பல நண்பர்கள் கெடசிடுவாங்க...ஆனா ஒன்னு நீ எழுதுற பதிவு காரம் சாரமா இருக்கோணும்..


ஓ...சரி சார் நான் இங்கிலீஸ்ல தானே எழுதுவேன்..இல்ல வியட்நாமிய மொழில தான் எழுதுவேன்...எப்படி உங்க மொழில அதை மாத்துறது...


அது ரொம்ப சிம்பிள்..அப்படியே கூகிள் டிரான்ஸ்லேட்டர் போட்டு மாத்திக்க அம்புட்டுதான்...இது என்ன பெரிய விஷயம் சில நேரங்களில் நான் எழுதுற பதிவை புரிஞ்சிக்காம...என் நண்பர்கள் என்னமோ அவர குத்துனே இவர சொரிஞ்சேன்னு சொல்லி அவங்களா கற்பன பண்ணிப்பாங்க...அம்புட்டு நல்லவங்கோ...!  


ஓ...அது சரி வேற என்ன எழுதலாம்...


வேணும்னா பட விமர்சனம் எழுதேன்...


சார்...அது எப்படி சார்...


அதாவது அந்த படத்துல யாரு நடிச்சா..யாரு எத்தன முறை கடிச்சா..அதாவது ஆங்கில படம் இல்லையா...அந்த விஷ்யங்கள எல்லாம் நீ எழுதினேன்னா...உன்னைய முற்போக்கு வாதின்னு பெருமையா சொல்லுவாங்க....


அடடா...அப்படியா...அது சரி வேணும்னா சொந்த அனுபவங்கள எழுதட்டுமா..


ஹிஹி...எழுது..இப்போ எத்தனாவது பாய் பிரண்டு..இது வரைக்கும் எப்படி ஒவ்வொருத்தரையும் கழட்டி விட்ட!...இதெல்லாம் படிக்கிறவங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும்..!


யோவ் என் பர்சனல் லைப் உனக்கு காமடியா....


அடப்போம்மா...நாங்கல்லாம் இப்படிதான் பொழப்ப ஓட்டிகிட்டு இருக்கோம்...வேணும்னா அரசியல்வாதிகள பத்தி எழுது...


அடபோய்யா..இங்க எழுதினா அடுத்த நாளு களிதான்....உங்கூரு மாதிரின்னு நெனச்சீங்களா!


சரி விடு...வேணும்னா சமையல் பத்தி எழுது...


ஹிஹி..ஏன்சார் நீங்க வேற...உங்களுக்கு தெரியாதா...இங்க எல்லோரும் வெளில கையேந்தி பவன்ல தான் சாப்பிடுவோம்...எனக்கு சமயல்லாம் தெரியாது....


பரவால்லையே...எங்கூர்ல கூட இப்படிதான்...சமைக்க தெரியாதுன்னு சொல்றது ஒரு ஸ்டைல் ஹிஹி..!


அப்போ உங்களுக்கு தெரியுமா....


எங்க அம்மா எனக்கு சின்ன வயசுலேயே கத்து கொடுத்திட்டாங்க...கண்ணு கல்யாணம் ஆகிப்போனதுக்கப்புறம் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு...அதான்!


ஓ...அப்போ உங்க வீட்ல நீங்க தான் சமையலா...


ஸ்ஸ் அபா...நீ ப்ளாக் எழுத வந்தியா...இல்ல என் குடும்ப ரகசியத்த வெளி கொண்டுவர வந்தியா...கொய்யால பிச்சிடுவேன்...சரி அந்த டாகுமென்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டியா...


சார் விடுங்க..இனி கேக்க மாட்டேன்....சரி உங்களுக்கு உங்க மனைவின்னா...பயமா!


எலேய் கொன்னே புடுவேன்..ராஸ்கல் நான் எம்மாம் பெரிய வீரன் தெரியுமா...


உங்க ஒய்ப் போன் லைன்ல இருக்காங்க...


அய்யோ...அடிப்பாவி போட்டு கொடுத்திட்டியா....


(போன் எடுக்கப்பட்டது!)


ஹலோ...


என்ன அங்க ஒரே ஜாலியா கும்மி அடிக்கறீங்களா...


ஹிஹி..அப்படியெல்லாம் இல்ல...ஹிஹி


சீக்கிரம் வீட்டு வந்து சேருங்க...(டொக்!)


ஏம்மா..ஏன் இந்த கொலைவெறி...மீ பாவம்!


சரி சார்..அப்போ அந்த ப்ளாக் எழுதறது...பத்தி...


உனக்கு கோடி புண்ணியம் என்னைய விட்ரு!


இல்ல சார் நான் பேமஸ் ஆகணும்...எல்லோரும் என்னைய பத்தி பேசணும்...


மொட்ட மாடிக்கு போ...அங்கிருந்து குதி பேமஸ் ஆயிருவ...கொய்யால ஏற்கனவே ...நீ கழட்டி விட்ட பய புள்ளைங்க மென்டலா சுத்துது...இதுல இந்த கொடும வேறயா!


அது சரி சார்...எப்ப பாரு சிபின்னு ஒருத்தர பத்தி பேசிட்டு இருக்கீங்களே..யாரு அவரு...


ஓ அவரா...அவரு பெரிய அப்பா டக்கரு...1000 பதிவு சீவிய ஆலினாலு அசப்புல ராஜா..ஹிஹி..


அப்போ மனோ...


அவரு ஒரு அருவா வேலு...


வேற யாரெல்லாம் பேமஸா இருக்கவங்கள உங்களுக்கு தெரியும்...?


பெல்ட் ஆபீசர்...


குட் டைம் பதிவர்...


வாய்காலுக்கு வணக்கம் சொல்லும் பதிவர்....


ஹவுஸ் பதிவர்....


பெற்றோர் பதிவர்...இன்னும் பலர்...!


ஏன் அவங்க சொந்த பேர சொல்ல மாட்டேங்கறீங்க...


அப்புறம் நான் நேர்குத்து பதிவர்னு சொல்லிடுவாங்க..அதான்!


ஏன் சார் இதெல்லாம் ஒரு பொழப்பா...


என்ன பண்றது...எல்லாம் பழகிப்போச்சி ஹிஹி!


இப்பேற்பட்ட பொழப்பு எனக்கு வேணாம்...என் பாய் பிரண்டு போன் பண்றான்..நான் கெளம்பறேன்...


இது எத்தனையாவது...


சார் இதோட நிறுத்துங்க


சரி இனி நானும் சொல்ல மாட்டேன் நீயும் கேக்காத...பை!


கொசுறு: என்ன கொடும சார் இது ஒரு பச்சை மண்ணை இப்படி குமுறிட்டு போகுது ஒரு பொண்ணு...எல்லாம் கலிகாலம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. ?>>>இந்த பதிவு நிதர்சன விஷயம் மட்டுமே...யார் மனதை யாவது புண் அல்லது கண் உறுத்தினால் எப்படி வேண்டு மென்றாலும் எடுத்துக்கொள்ளவும்...ஹிஹி!

  டேய் ந்க்கொய்யால, போடரது பிட்டுப்படம், அப்புறம் என்ன தியேட்டர் வாசல்ல அபாயம் வராதே போர்டு?

  ReplyDelete
 2. >>ஓ...அது சரி வேற என்ன எழுதலாம்...


  வேணும்னா பட விமர்சனம் எழுதேன்...

  வேணாம்னா?

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  பாங்கோ சார் பாங்கோ...ஏன் இவ்வளவு கோவம்...!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...
  >>ஓ...அது சரி வேற என்ன எழுதலாம்...


  வேணும்னா பட விமர்சனம் எழுதேன்...

  வேணாம்னா?

  >>>>>>>>>>>

  அதுக்கெல்லாம் உங்களை போல வால்லாரை லேகியம் சாப்பிடனுங்கோ!

  ReplyDelete
 5. Enna mams....vara vara
  ennai-ya
  maranthutteenga....?????

  ReplyDelete
 6. இந்த பதிவுக்கு நான் சண்டைபோடலாமா :-)

  ReplyDelete
 7. ஆமினா said...

  இந்த பதிவுக்கு நான் சண்டைபோடலாமா :-)

  >>>>
  ம்ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக்

  ReplyDelete
 8. மானாவாரியா புரியல மாம்ஸ்!

  ReplyDelete
 9. ஹய்யோ ஹய்யோ. என்னமோ எழுதியிருக்கீங்கண்ணு மட்டும் தெரியுது.

  ReplyDelete
 10. கலக்குங்க மாம்ஸ்....இந்த பதிவுக்கும் நம்ம சி பி அண்ணனுக்கும் தொடர்பில்லை...ஹி ஹி

  ReplyDelete
 11. சார் இதோட நிறுத்துங்க...ஹிஹிஹிஹி...புரியல தல...

  ReplyDelete
 12. சுவாரஸ்யமான பதிவு
  முழுவதையும் இரண்டுமுறை படிக்க முடியுமா ?
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. மாம்ஸ், ஹி..ஹி....ஹி......

  என்னத்த சொல்ல?

  ReplyDelete
 14. இது மொக்கை பதிவுன்னு சொல்லியிருந்தா நா எதுவும் சொல்ல போறதில்ல :-) நிதர்சன விஷயம் என்பதாலேயே மொக்கை கமென்ட் போடாமல் சில நிதர்சன விஷயங்களை கேட்க ஆசைபடுகிறேன். ஏன்னா இந்த பதிவு என் கண்ண ரொம்ப உறுத்துது சகோ :-)

  இந்த பதிவு ஏதோ ஒரு பிரபல பதிவர் ஒரு பொண்ணுக்காக சிபாரிசு பண்ண சொல்லிய அந்த பெண் பதிவர்க்காக இருக்கலாம். ஆனா இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண்பதிவர்களையும் இழிவு படுத்துவதாக தெரியவில்லையா சகோ :-)

  //ஹிஹி..நான் என்ன உன்னைய போல பிகரா...!

  //
  இங்கே யாரும் வெறும் பெண் என்ற அடையாளத்தை மட்டுமே சுமந்து எழுத வருவதில்லை. நா femaleன்னு ப்ரோபைல்ல கொடுத்துட்டா மட்டும் போஸ்ட் போடாம எல்லாரும் எனக்கு பாலோவர்ஸா வரப்போவதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திறமைக்கு, கற்பனைக்கும் மட்டுமே இங்கே மதிப்பு. நீ பதிவே போட தேவையில்ல. மேலே நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை பெண்பதிவர்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல... ஒட்டுமொத்தமாக ஆண்களையும் தான் இங்கே சாடியுள்ளீர்கள். அந்த அளவுக்கு கேவலாமனவர்களா ஆண்கள்? இங்கே கமென்ட் போட்டவங்க யாரும் ஏன் இது பத்தி கேட்கல?

  சில பிரபல பதிவர்கள் அவரவர் ப்ளாக்குகளில் புதியபதிவர்களுக்கு அறிமுகம் கொடுப்பதன் மூலம் ஊக்கவிக்கிறார்கள் என்பது உண்மையே. எகா நிரூபன். இனி இவர் பெண் பதிவர்களுக்கு அறிமுகம் கொடுத்தால் //ஏதாவது பிரபல பதிவர் கிட்ட போன் பண்ணி பேசு...யோவ் நான் சட்டுன்னு பிரபலம் ஆகணும்னு சொல்லு...அவங்களும் சரி நமக்கு ஒரு ஆடு சாரி ஆட்டு குட்டி கெடசிருசின்னு உன்னைய பதிவுல போட்டு பேமஸ் ஆக்கிடுவாங்க...// இப்படி தான் நினைக்க தோன்றும்! :-(

  மரியாதையா பேசுறத பத்தி சொல்லியிருந்தீங்க. சரி தான் ஒத்துக்குறேன். நீங்களும் மனோவும் ஒருமையில் பேசிக்கொள்வது போல் எப்படி பெண்ணிடம் பேச முடியும்? இந்த மரியாதை நம் சமூகத்தால் நமக்கு கற்பிக்கப்பட்ட கலாச்சார,பழக்க வழக்கங்களின் வெளிப்பாடு. நீங்கள் சொல்வது போல் நீ பெண்பதிவர்ங்குறதுனால எல்லா ஆண்பதிவரும் வழிஞ்சு வழிஞ்சு உனக்கு மரியாத கொடுத்து பேசுவாங்க என்ற அர்த்தத்தில் கிடையாது.

  சுருக்கமா சொல்லணும்னா உங்கள் பதிவில் உள்ள நிதர்சனம் பதிவுலகை படம்பிடித்து காட்டுதோ இல்லையோ பெண்பதிவர்களின் வளர்ச்சியை பிடிக்காத ஆணாதிக்க வாதிகளின் மனநிலையை தான் காட்டுது :-) இருங்க எங்க அண்ணி விஷாலிகிட்ட போட்டு கொடுக்குறேன். அவங்களும் பதிவராச்சே :-)

  மீண்டும் சொல்றேன். இங்கே திறமைக்கு தான் முதலிடம். நீங்க மொக்கைபதிவுன்னு சொல்லியிருந்தா நா ஒன்னும் சொல்லப்போறதில்ல.. ஆரம்பத்துலையே நிதர்சனம் என குறிப்பிட்டதால் தான் வந்தேன்..

  ஆணாதிக்க பதிவு :-)

  ReplyDelete
 15. @ராஜி

  ஆரம்பிச்சுட்டேன் :-) மதனியை வரச்சொல்லுங்க இந்த பக்கம்... அவங்களும் ஆரம்பிக்கட்டும் பூரிக்கட்டையோட ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 16. ஆஹா, குடும்பத்தில குழப்பம் வரும் போலிருக்கே!

  ReplyDelete
 17. சகோதரி என்ன திட்டினாலும், கடைசியில வீட்ல போட்டுக்கொடுக்கணும்னே முடிவோட இருக்காங்களே!
  பாவம் விக்கி. சும்மா கலாய்த்தலுக்காக எழுதியுள்ளார். மற்றபடி, உள்குத்து எழுதி சகோதரிகளைக் காயப்படுத்துதல் அவர் நோக்கமாக இருக்காது.

  ReplyDelete
 18. வணக்கம் வெங்கட் சார்!நன்றாக வாய்விட்டு சிரித்தேன்!பதிவை மட்டுமல்ல விமர்சனங்கள்/கருத்துகளையும் படிக்கும் வழக்கம் உள்ளவன் நான்.படித்தேன்!கதறி அழும் சகோதரி களுக்காக வருந்துகிறேன்!என் பாஷையில் சொல்வதானால்,ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம் எல்லாம் அவரவர் மன உணர்விலிருந்து பிறப்பது தான்!எனது தாயாரின் பொன்மொழி;மனமது நல்லதானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை!

  ReplyDelete
 19. @ஆமினா

  “ஆமினா said...
  இந்த பதிவுக்கு நான் சண்டைபோடலாமா :-)”

  >>>>>>>>>>>>

  வணக்கம் சகோ...தாராளமா!

  ReplyDelete
 20. ராஜி said...
  ஆமினா said...

  இந்த பதிவுக்கு நான் சண்டைபோடலாமா :-)

  >>>>
  ம்ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக்

  >>>>>>>>>>>

  ஹாஹா சகோ நீங்களுமா! ஸ்டார்ட் நோ ப்ராப்ளம்!

  ReplyDelete
 21. ஜீ... said...
  மானாவாரியா புரியல மாம்ஸ்!

  >>>>>>>>>

  புரியாத வரைக்கும் ஷேமம் ஹிஹி!

  ReplyDelete
 22. ஹாலிவுட்ரசிகன் said...
  ஹய்யோ ஹய்யோ. என்னமோ எழுதியிருக்கீங்கண்ணு மட்டும் தெரியுது.

  >>>>>>>>>

  சபாஷ் மாப்ள well said ஹிஹி!

  ReplyDelete
 23. NKS.ஹாஜா மைதீன் said...
  கலக்குங்க மாம்ஸ்....இந்த பதிவுக்கும் நம்ம சி பி அண்ணனுக்கும் தொடர்பில்லை...ஹி ஹி

  >>>>>>>>>>>>

  மாப்ள வருகைக்கு நன்றி..ஆமா எந்த தொடர்பும் இல்லை ஹிஹி!

  ReplyDelete
 24. ரெவெரி said...
  சார் இதோட நிறுத்துங்க...ஹிஹிஹிஹி...புரியல தல...

  >>>>>>>>>>>>

  மாப்ள ஏன்யா நிறுத்தனும்..ஏன் நிறுத்தனும்...வாங்கிய அடிகள் கொஞ்ஜமா நெஞ்ஞமா ஹிஹி!

  ReplyDelete
 25. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  உங்களுக்காக ...

  நண்பன் : திரை விமர்சனம்

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள..கண்டிப்பா வாரேன்!

  ReplyDelete
 26. Ramani said...
  சுவாரஸ்யமான பதிவு
  முழுவதையும் இரண்டுமுறை படிக்க முடியுமா ?
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  >>>>>

  அண்ணே வருக்கைக்கு நன்றி..உங்களுக்கும் என் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மாம்ஸ், ஹி..ஹி....ஹி......

  என்னத்த சொல்ல?

  >>>>>>>>>>

  ஹிஹி நீங்க என்ன வேணா சொல்லுங்க மாப்ள..ஹிஹி!

  ReplyDelete
 28. ஆமினா said...
  இது மொக்கை பதிவுன்னு சொல்லியிருந்தா நா எதுவும் சொல்ல போறதில்ல :-) நிதர்சன விஷயம் என்பதாலேயே மொக்கை கமென்ட் போடாமல் சில நிதர்சன விஷயங்களை கேட்க ஆசைபடுகிறேன். ஏன்னா இந்த பதிவு என் கண்ண ரொம்ப உறுத்துது சகோ :-)

  >>>>>

  சகோ ஒரு பதிவை எழுத எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ..அதே போல அதில் இருக்கும் கருத்துக்கள் பற்றிய எதிர் வாதம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு..தாராளமா சுட்டி காட்டலாம்!

  .....................
  இந்த பதிவு ஏதோ ஒரு பிரபல பதிவர் ஒரு பொண்ணுக்காக சிபாரிசு பண்ண சொல்லிய அந்த பெண் பதிவர்க்காக இருக்கலாம். ஆனா இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண்பதிவர்களையும் இழிவு படுத்துவதாக தெரியவில்லையா சகோ :-)

  அப்படியா...எனக்கு தெரிந்து அப்படி எழுதியதாக இல்லை..

  .......................
  //ஹிஹி..நான் என்ன உன்னைய போல பிகரா...!

  //
  இங்கே யாரும் வெறும் பெண் என்ற அடையாளத்தை மட்டுமே சுமந்து எழுத வருவதில்லை. நா femaleன்னு ப்ரோபைல்ல கொடுத்துட்டா மட்டும் போஸ்ட் போடாம எல்லாரும் எனக்கு பாலோவர்ஸா வரப்போவதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திறமைக்கு, கற்பனைக்கும் மட்டுமே இங்கே மதிப்பு. நீ பதிவே போட தேவையில்ல. மேலே நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை பெண்பதிவர்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல... ஒட்டுமொத்தமாக ஆண்களையும் தான் இங்கே சாடியுள்ளீர்கள். அந்த அளவுக்கு கேவலாமனவர்களா ஆண்கள்? இங்கே கமென்ட் போட்டவங்க யாரும் ஏன் இது பத்தி கேட்கல?

  >>>>>>>>>>>>>

  சகோ இந்த பதிவின் முதலிலேயே போட்டு இருந்தேன்

  ”இந்த பதிவு நிதர்சன விஷயம் மட்டுமே...யார் மனதை யாவது புண் அல்லது கண் உறுத்தினால் எப்படி வேண்டு மென்றாலும் எடுத்துக்கொள்ளவும்...ஹிஹி!”

  ........................

  சில பிரபல பதிவர்கள் அவரவர் ப்ளாக்குகளில் புதியபதிவர்களுக்கு அறிமுகம் கொடுப்பதன் மூலம் ஊக்கவிக்கிறார்கள் என்பது உண்மையே. எகா நிரூபன். இனி இவர் பெண் பதிவர்களுக்கு அறிமுகம் கொடுத்தால் //ஏதாவது பிரபல பதிவர் கிட்ட போன் பண்ணி பேசு...யோவ் நான் சட்டுன்னு பிரபலம் ஆகணும்னு சொல்லு...அவங்களும் சரி நமக்கு ஒரு ஆடு சாரி ஆட்டு குட்டி கெடசிருசின்னு உன்னைய பதிவுல போட்டு பேமஸ் ஆக்கிடுவாங்க...// இப்படி தான் நினைக்க தோன்றும்! :-(

  >>>>>>>>>>>>>>>

  ஹஹா நான் யாரயும் குறிப்பிடவில்லை...இது என் தனிப்பட்ட கருத்து அவ்வளவே!

  .............................
  மரியாதையா பேசுறத பத்தி சொல்லியிருந்தீங்க. சரி தான் ஒத்துக்குறேன். நீங்களும் மனோவும் ஒருமையில் பேசிக்கொள்வது போல் எப்படி பெண்ணிடம் பேச முடியும்? இந்த மரியாதை நம் சமூகத்தால் நமக்கு கற்பிக்கப்பட்ட கலாச்சார,பழக்க வழக்கங்களின் வெளிப்பாடு. நீங்கள் சொல்வது போல் நீ பெண்பதிவர்ங்குறதுனால எல்லா ஆண்பதிவரும் வழிஞ்சு வழிஞ்சு உனக்கு மரியாத கொடுத்து பேசுவாங்க என்ற அர்த்தத்தில் கிடையாது.

  சுருக்கமா சொல்லணும்னா உங்கள் பதிவில் உள்ள நிதர்சனம் பதிவுலகை படம்பிடித்து காட்டுதோ இல்லையோ பெண்பதிவர்களின் வளர்ச்சியை பிடிக்காத ஆணாதிக்க வாதிகளின் மனநிலையை தான் காட்டுது :-) இருங்க எங்க அண்ணி விஷாலிகிட்ட போட்டு கொடுக்குறேன். அவங்களும் பதிவராச்சே :-)

  >>>>>>>>>

  இது ஆணாதிக்க பதிவு என்று சொல்லிட்டீங்க...ம் நான் என்ன சொல்ல...உண்மையில் இந்த பதிவு மூலம் சிலருக்கு அவர்க்ள் செய்து வரும் தவறுகளை சுட்டி காட்டவே எழுதினேன்...இதுக்காக யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை...

  ........................
  மீண்டும் சொல்றேன். இங்கே திறமைக்கு தான் முதலிடம். நீங்க மொக்கைபதிவுன்னு சொல்லியிருந்தா நா ஒன்னும் சொல்லப்போறதில்ல.. ஆரம்பத்துலையே நிதர்சனம் என குறிப்பிட்டதால் தான் வந்தேன்..

  ஆணாதிக்க பதிவு :-)

  >>>>>>>>>>

  ஹஹா....மீண்டும் சொல்றேன்...இதில் எந்த வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை...இது தான் இப்போ நிதர்சனம்..இது புரிய வில்லை என்றால் நீங்க பதிவுலகை கூர்ந்து கவனிக்க வில்லை என்று பொருள்படும் ஹிஹி...

  ReplyDelete
 29. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  சகோதரி என்ன திட்டினாலும், கடைசியில வீட்ல போட்டுக்கொடுக்கணும்னே முடிவோட இருக்காங்களே!
  பாவம் விக்கி. சும்மா கலாய்த்தலுக்காக எழுதியுள்ளார். மற்றபடி, உள்குத்து எழுதி சகோதரிகளைக் காயப்படுத்துதல் அவர் நோக்கமாக இருக்காது.

  >>>>>>

  நீங்க தான்னே சரியா புரிஞ்ஜிகிட்டீங்க..விடுங்க அண்ணே நாலு பேருக்கு உண்மய புரிய வைக்க நினைக்கும் போது கல்லடி படத்தான் செய்யும் ஹிஹி...அதுவும் நம்ம சகோதரிகள் மூலமா எனும் போது சந்தோஷமே எனக்கு!

  ReplyDelete
 30. @Yoga.S.FR
  Yoga.S.FR said...
  வணக்கம் வெங்கட் சார்!நன்றாக வாய்விட்டு சிரித்தேன்!பதிவை மட்டுமல்ல விமர்சனங்கள்/கருத்துகளையும் படிக்கும் வழக்கம் உள்ளவன் நான்.படித்தேன்!கதறி அழும் சகோதரி களுக்காக வருந்துகிறேன்!என் பாஷையில் சொல்வதானால்,ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம் எல்லாம் அவரவர் மன உணர்விலிருந்து பிறப்பது தான்!எனது தாயாரின் பொன்மொழி;மனமது நல்லதானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை!

  >>>>>>>>>>

  வருக்கைக்கு நன்றி சார்...சரியா சொன்னீங்க் ஒவ்வொருவரின் மன நிலையே இதை முடிவு செய்யிது...வேறு என்ன சொல்ல..ஹாஹா!

  ReplyDelete
 31. //கதறி அழும் சகோதரி களுக்காக வருந்துகிறேன்!//

  வருத்தத்திற்கு நன்றீ :-) யாராவது கதறி கூப்பாடுபோட்டாங்க? :-)

  ReplyDelete
 32. @விக்கி

  ஒவ்வொருபதிவை படிக்கும் போது மனதில் சில கருத்துக்கள் வெளிப்படும். அதை தான் இங்கே கொட்டினேன். முன்பே உங்களுடன் பேசியிருந்தபடியால் நீங்கள் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடிய நபர் அல்ல என்ற எண்ணம் மனதில் இருந்தது.

  நாகரிகமான பதில்களூக்கு மிக்க நன்றி சகோதரர்.

  பதிவுலகில் பெண்களின் நிலையை இன்னும் முழுதாக நான் உற்றுகவனிக்கவில்லைதான் போலும் :-)

  ReplyDelete
 33. பாஸ் இது பொதுவான உள்குத்து பதிவு போல அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 34. //வாய்காலுக்கு வணக்கம் சொல்லும் பதிவர்....//

  மாப்ள இது யாருய்யா அப்புறம் போன்ல சொல்லு இங்க வேணாம் நேர்குத்து பதிவர்னு சொல்லிட போறாங்க...

  ReplyDelete
 35. // சி.பி.செந்தில்குமார் said...
  >>ஓ...அது சரி வேற என்ன எழுதலாம்...


  வேணும்னா பட விமர்சனம் எழுதேன்...

  வேணாம்னா?//

  பிட்டு பட விமர்சனம் எழுதலாமில்ல...

  ReplyDelete
 36. மாமா உன் பதிவு இப்பதான் எல்லாருக்கும் புரியுது!.....இப்படியே எழுதுங்க வாழத்துகள்!?

  ReplyDelete
 37. //சசிகுமார் said...
  //வாய்காலுக்கு வணக்கம் சொல்லும் பதிவர்....//

  மாப்ள இது யாருய்யா அப்புறம் போன்ல சொல்லு இங்க வேணாம் நேர்குத்து பதிவர்னு சொல்லிட போறாங்க...//

  நீங்க தெழில் நுட்பம் எழுதறதால தப்பிச்சிட்டிங்க..!இல்லைன்னா...தேசபக்தி பதிவர்னனு போட்டிருப்பார்!

  ReplyDelete
 38. ஆமினா says:
  January 13, 2012 8:31 AM Reply

  //கதறி அழும் சகோதரி களுக்காக வருந்துகிறேன்!//

  வருத்தத்திற்கு நன்றீ :-) யாராவது கதறி கூப்பாடுபோட்டாங்க? :-)////குறித்த ஓர் வசனத்தை மட்டும் சுட்டுவதேன்???மீதிக்கும் விளக்கம் சொல்லலாமே/கேட்கலாமே? நாங்கள் மணையில் தூக்கி உட்கார வைத்தாலும்,அடம்பிடித்து இறங்கி விடவேண்டியது!அப்புறம்,அங்கே குத்துது,இங்கே குடையுது என்று கூப்பாடு போடா வேண்டியது!இதுவே பிழைப்பாகிவிட்டது பெண்களுக்கு!மன்னிக்க வேண்டும்ஆமினா,புரிந்து கொள்ளுங்கள்!உளவியல் தாக்கம் எங்கும் உள்ளதுதான்!மாற்றிக் கொள்ளுங்கள்,மாறுங்கள் என்றே சொல்கிறோம்!விமர்சிப்பது ஆரோக்கியமானது!இன்னுமின்னும் தெளிவுபெற வைக்கும் தூண்டுகோல்!!!

  ReplyDelete
 39. //இதுவே பிழைப்பாகிவிட்டது பெண்களுக்கு//

  :-)

  ReplyDelete
 40. வணக்கம் விக்கி சார், நீங்க நிதர்சனம் என்று சொல்லிட்டு அப்புறம் எதுக்கு மொக்கையா நெகட்டிவ்வான பக்கத்தைமட்டும் கிண்டலடிச்சிருக்கிறிங்க. நிதர்சனத்தில் அதற்கு எதிர்மாறாக நல்லது பண்ணுகிற பதிவருங்க பலபேரும் இருக்கிறாங்களே.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி