வியட்நாமில் பொங்கலோ பொங்கல்!

வணக்கம் நண்பர்களே...




உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


நேற்று முன் தினம் என்றும் அழைக்காத ஒரு நண்பரிடம்(!) இருந்த தொலை பேசி அழைப்பு...அட என்னப்பா ஆச்சி இவருக்கு..நேரில் பார்த்தால் கூட பேசாமல் முகத்தை திருப்பிசெல்லும் பழக்கம் அவருக்காயிற்றே...இவரு நமக்கு எதுக்கு போன் பண்றாரு...


ஹலோ...


என்ன குமார்...எப்படி இருக்கீங்க?


நல்ல இருக்கேங்கோ...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும்...சொல்லுங்கோ..


same to you (பய புள்ள இங்கிபீசு எப்பவும் ஹிஹி!)..அதாவது இங்க நம்ம நண்பர் ஒருத்தர் வீட்டுல பொங்கல் தமிழ் முறைப்படி செய்யலாம்னு யோசிச்சிருக்கோம்...நீங்களும் உங்க குடும்பத்தோட வந்தா நல்லா இருக்கும்...


அப்படிங்களா வந்துட்டா போச்சி...முடிஞ்சா அந்த விலாசத்த அனுப்பிவிடுங்க...


அது ஒன்னும் இல்ல "புத்ரா" இந்த இடத்துக்கு வந்து போன் பண்ணுங்க...பக்கத்துல தான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்...


சரி...(டொக்!)


சரி குடும்பத்தோட கிளம்பினோம் பைக்கில்...(டாக்ஸி கிடைக்காது மழை என்பதால்!~)


பொறுமையா போய் சேர்ந்தோம்...போய் இறங்கியது தான் தாமதம்..அங்கிருந்த 8 தமிழ் குடும்பமும் அன்புடன் எங்களை வரவேற்றது...அதில் ஒருவர்...


என்ன தல சொன்னது போல செய்ஞ்சிட்டீங்க என்றார்...


அடடா...நான் எதுவும் சொல்லலியே!


அதான்...முன்னாடி வந்தா தொண்டன்..லேட்டா வந்தா தலீவன்னு ஹிஹி...


அடப்பாவி...ஸ் ஸ் அபா...யோவ் சும்மா இருய்யா மத்தவங்க தப்பா எடுத்துக்கப்போறாங்க...மழையில பைக் ஒத்துகிட்டு வர்றது கொஞ்சம் சிரமமா அதான் ஹிஹி!


அழகா செங்கல் அடுக்கி பானை வைத்து கட்டைகள் அடியில் போட்டு எரிய வைத்து...பொங்கலை செய்ய ஆரம்பித்து இருந்தனர்...5 வருடம் என் வாழ்வில் இந்த நிகழ்ச்சியை காணாது போயிருந்தேன்...அந்த புகை கண்ணில் பட்டு கண்கள் கலங்குவது ஒரு அழகிய நிகழ்ச்சி...என்னடா இதெல்லாம் பெருசா சொல்றானேன்னு நெனச்சிடாதீங்க...பொருளாதார காரணத்துக்காக வெளி நாடுகளில் உழைத்து வரும் பலர் ஒரு வித இயந்திரத்தனமான வாழ்கையில் என்னை போல் சிக்குண்டு இருக்கிறார்கள்...அதை உடைத்து சில நேரங்களில் ஆவது...நான், எனது என்ற கர்வம் நீங்கி...நாம் நமது என்ற ஒற்றுமை ஏற்ப்பட இந்த மாதிரி விழாக்களே மிகப்பெரிய வழிகாட்டிகள்...


நாங்கள் போயிருந்த நண்பரின் தாய் நம்மூரிலிருந்து வந்து இருந்தார்...அவரின் அன்பு எங்களை நெகிழ செய்தது...கிட்ட தட்ட 70 வயது மதிக்கத்தக்க அவரின் சுறுசுறுப்பு கலந்த வேலைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன...


வந்திருந்தவர்களின் குழந்தைகள் அவர்களாக ஒரு அணி அமைத்து கூட்டமாக விளையாடிக்கொண்டு இருந்தனர்...


எவ்வளவு நாளாயிற்று இப்படி பார்த்து...!


பொங்கல் பொங்கி வரும் போது அனைவரும் ஒரு வித "குலவை" சத்தம் கொடுக்கும்படி அன்புடன் அதட்டல் விட்டார் அந்த அம்மா...


"பொங்கலோ பொங்கல்" - இந்த முறை இனிய நிகழ்வாக இருந்தது...காஸ் அடுப்பினில் பொங்கல் வைத்து 4 வருடம் கழித்த போது இல்லாத சந்தோசம்...அதுவும் அனைவரும் Status எனப்படும் அரக்கனை தள்ளி வைத்து அன்புடன் ஒரு மித்த குரலோடு சங்கமித்தது...மிகுந்த மகிழ்ச்சியை தந்தது....


இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பேங்க் அதிகாரியை நேற்று தான் முதன் முதலாக பார்த்தேன்...அவரின் நட்பும் கிடைத்தது...எனக்கு போன் செய்து அழைத்த நண்பருக்கு நன்றியை தெரிவித்து கொண்டேன்...


இந்த பொங்கல் பல மனங்களை அன்பு எனும் ஒரு வட்டத்தில் ஒருங்கிணைத்தது என்பதுதான் மிகப்பெரிய விஷயம்...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...


கொசுறு: கொஞ்ச நாளா பதிவுலகம் சரியாக வர முடிய வில்லை...வேலைப்பளு என்பதை விட சில பல நெருடல்கள்...ஹஹா..இதுவும் கடந்து போகும்...இனிய நாளாக உங்களுக்கு மலர வாழ்த்துக்கள்!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

29 comments :

  1. அங்கே நீங்கள் பொங்கல் விழாவை கொண்டாடியது மகிழ்ச்சி! மகிழ்ச்சி!மனதை நெகிழவைத்த பதிவு.

    ReplyDelete
  2. //கொஞ்ச நாளா பதிவுலகம் சரியாக வர முடிய வில்லை...வேலைப்பளு என்பதை விட சில பல நெருடல்கள்...//

    ஆம்..மாம் எனக்கும் அதே நிலைதான்!

    ReplyDelete
  3. பொங்கலை முன்னிட்டு நீ பொங்கலையா? ந்க்கொய்யால

    ReplyDelete
  4. நம்ம ஊரு போல தாங்களும் பொங்கல் கொண்டாடியது சிறப்பு.....

    ReplyDelete
  5. அதான்...முன்னாடி வந்தா தொண்டன்..லேட்டா வந்தா தலீவன்னு ஹிஹி...//////

    தக்காளி இந்த பொங்கல் முதல் தலைவர் ஆகிறார்....

    ReplyDelete
  6. @veedu

    நன்றிங்க மாப்ள...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய பொங்கல் திருநாட்கள் இனிதே கழியட்டும்! வரும் காலம் வசந்தமாகட்டும்!

    ReplyDelete
  8. @சி.பி.செந்தில்குமார்

    வருகைக்கு நன்றிங்கோ..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. @தமிழ்வாசி பிரகாஷ்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. @ரமேஷ் வெங்கடபதி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தாங்களுக்கு எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  12. @நண்டு @நொரண்டு -ஈரோடு

    வருகைக்கு நன்றி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. பொங்கல் வாழ்த்துகள் மாம்ஸ்! உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்!

    ReplyDelete
  14. தாமதமான பொங்கல் வாழ்த்துகள் விக்கி!

    ReplyDelete
  15. இந்த வருடம் சிறப்பான பொங்கலாக அமைந்தது மகிழ்ச்சி, வாழ்த்துகள் மாப்ள.....!

    ReplyDelete
  16. இந்த பொங்கல் பல மனங்களை அன்பு எனும் ஒரு வட்டத்தில் ஒருங்கிணைத்தது என்பதுதான் மிகப்பெரிய விஷயம்...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. இனிய பொங்கல் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் மாப்ள.

    ReplyDelete
  18. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. பொங்கல் சாப்பிடி கூடியதா இருந்திச்சா??

    நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.

    ReplyDelete
  19. மாப்ள இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  21. //கொசுறு: கொஞ்ச நாளா பதிவுலகம் சரியாக வர முடிய வில்லை...வேலைப்பளு என்பதை விட சில பல நெருடல்கள்...ஹஹா..இதுவும் கடந்து போகும்..//

    நிச்சயம் இதுவும் கடந்துபோகும். மகிழ்ச்சிபொங்கட்டும் பொங்கல்முதல் வரும் அனைத்து நாட்களிலும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. வணக்கம் அண்ணா,
    வியட்னாமிலும் தமிழர் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீங்க.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பிந்திய தைத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  25. மொதல் கமெண்டில பிறந்த நாள் வாழ்த்து என்று அடிச்சிட்டேன்.
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  26. வியட்நாம் மாம்சுக்கு பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. வணக்கம் வெங்கட் சார்!இப்படி ஒரு பொங்கல் கொண்டாட கொடுத்துவைத்திருக்க வேண்டும்!தெரியாதவர்கள் ஆனாலும் கூடி ஒரு பொங்கலை கொண்டாடியது சிறப்பு!Late பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. VANAKKAM...MAMMS....
    EETHO SOLLUREENGA...KADAICIYA...
    ATHAN PURIYALAI....

    ReplyDelete
  29. இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் ...-:)

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி