பிரபலங்களின் (பிராப்ள பதிவர்கள்!) காணும் பொங்கல்! -

வணக்கம் நண்பர்களே...
பிரபலங்களின் காணும் பொங்கல் அப்டின்ன உடனே அரசியல் மற்றும் டான்ஸ் தலைவர்கள் அப்படின்னு நெனைசிடப்போறீங்க(!)...இது நம்ம பதிவர்கள் கலாட்டா...


எப்பவும் போல முதாலவது இடத்தில(!) இருக்கும் அண்ணன் அவர்களிடம் இருந்தே ஆரம்பிக்கிறது இன்றைய நிகழ்வு...


சிபி: நண்பர்களே...இங்க நாம ஏன் கூடி இருக்கோம்னா...


விக்கி: ஏண்ணே எங்கயாவது கில்மா படத்துக்கு கூட்டிட்டு போகப்போறீங்களா...


மனோ: நான் வரலப்பா...எனக்கு முக்கியமான வேலை இருக்கு...நேத்து நைட் அந்த பேய பாத்ததுல இருந்தே...வவுறு கடமுடான்னு இருக்கு...


சிபி: அடேய் நான் சொல்ல வந்தது...இன்னைக்கு காணும் பொங்கல் அதுவுமா நாலு இடத்துக்கு போய் நாலு பேர பாத்து பேசலாமுன்னு தான்...


விக்கி: அந்த நாலு பேருல எத்தன லேடிஸ்...ஏன்னா நீ சைட் அடிக்க தானே அதிகமா போவே..அதான் கேட்டேன்...


மனோ: ஹே ஹே..நான் பாக்காத சைட்டா!


சிபி: நான் ரொம்ப சீரியஸா இருக்கேன்...


விக்கி: அண்ணன் கைய இப்போ கிழிசிப்பாரு பாரு...ஹிஹி...


சிபி: அடேய் உனக்கு மனசாட்சியே கிடையாதா...!


மனோ: யாரு பதிவர சொல்றியா...


சிபி: அதோ நண்பன் வரான்...
பன்னிகுட்டி: ஹாய் ஹாய் ஹாய்....என்றா..இங்க என்ன பண்றீங்க...


விக்கி: எது இவரு நண்பனா...ஸ் ஸ் அபா இப்பத்தான் ஒரு விமர்சனம் போட்டாரு...கொய்யால ஆளாளுக்கு தேடிட்டு இருக்காங்க இவர..ஒரு பய புள்ள ரொம்ப நாள் கழிச்சி சினிமால பன்ச் பேசாம நடிச்சிருக்குன்னு ஆளாளுக்கு சந்தோசப்பட்டா...இந்தாளு பண்ற ரவுசுல அடுத்து பத்து படம் மறுபடியும் முருங்க மரம் ஏறிடும் போல...ஹிஹி...


சிபி: அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா....


மனோ: நீ ஒன்னும் சொல்ல வேணாம்...வா இன்னைக்கு செத்த காலேஜ் ச்சே மியூசியம் சுத்தி பாக்க போலாம்...


பன்னி: யோவ் நீ இன்னும் அந்த காலத்த விட்டு வெளிய வரவே இல்லையா...


விக்கி: அவரு பாவங்க நேத்து மொராக்கோ பேய பாத்ததில இருந்து இப்படித்தான்...ஹிஹி..


மனோ: அடேய்...நாதாரி..வேணும்னா வா கறிசோறு சாப்பிட போலாம்...


சிபி: நான் வெஜ்...


விக்கி: நான் வெஜ்..


பன்னி: கொய்யால ரெண்டு பேருமே ஒன்னதானடா சொல்றீங்க...அப்புறம் என்ன?


சிபி: யோவ் நான் வெஜிடேரியன்...அந்த நாதாரி Non veg ன்னு சொல்லுது...அத அந்த அழகுல உள்குத்தோட சொல்லுது..!


விக்கி: ஆமா, நான் சாப்பாட்டுல மட்டும் non -veg...அண்ணாத்தே எப்பவுமே..


சிபி: டேய் நிறுத்து..என்னைய அசிங்கப்படுதறதே தொழிலா வச்சி இருக்கியா...


விக்கி: எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கணும் உன்கிட்ட...கேக்கட்டா...?


மனோ: என்ன இவன் எப்படி office போறான்னா..


சிபி: கேட்டு தொல!


விக்கி: உன்னால மட்டும் எப்படி முக்காடு போட்டு கிட்டு கில்மா படத்துக்கு இந்த யூத்தான(!) வயசுல போக முடியிது...


சிபி: அது கம்பனி ரகசியம்..சொல்ல மாட்டேன்..போ..(கேக்குறான் கேள்வி பன்னாடை!)


பன்னி: யோவ் அவரு சீசன் டிக்கட்டு வச்சி இருக்காரு...போன் பன்னி சொல்லிடுவாங்க...தனியா அவரு மட்டும் ஒரு குறுக்கு வழில போயி பாப்பாரு...


சிபி: யோவ் இதுக்கு அவனே மேலு...என்னைய ஏன் இப்படி போட்டு கொடுக்கற..!


மனோ: இம்புட்டு சொல்றோமே...அதான் நெட்டு இருக்கே அதுல பாத்துக்க வேண்டியது தானே..ஏன் இம்புட்டு கொலைவெறி உனக்கு....


சிபி: அடேய் உங்கள போய் இன்னைக்கு கூப்பிட்டேன் பாரு..என் டவுசர உருவறதே உங்களுக்கு டைம் பாசா பூடுச்சி...ச்சே இனி உங்கள எதுக்கும் கூப்பிட மாட்டேன்...


விக்கி: அது சரி உனக்கும் அந்த வாய்காலுக்கு வணக்கம் சொல்லும் பதிவருக்கும் என்ன லடாய்...


சிபி: ஒன்னும் இல்லையே..ஹிஹி...


விக்கி: அப்ப எதோ இருக்கு...இல்லன்னா..அந்தாளு எதுக்கு உன்னைய போட்டு வறுக்குறான்!


மனோ: இவன எவன் தான் வறுக்கல..நேத்து வந்த குயந்த பசங்க கூட வறுக்குறாங்க..


பன்னி: சரிப்பா விடுங்க...இனி அவரு நெட்லையே பாத்துப்பாரு...ஹிஹி..
விக்கி: ஓ இதுக்கு பேரு தான் காணும் பொங்கலா...


சிபி: இனி உங்கள மாதிரி நாதாரிங்க கூட நான் சேர்றதா இல்ல..போ..


பன்னி: யோவ் என்னையும் இவனுங்க கூட சேத்துட்டியா...


சிபி: போய்யா...நீயும் இவனுங்க கூட சேந்துகிட்டு என்னைய கலாய்கிற...


மனோ: அய்யயோ இவனுக்கு கோவம் வந்துடுச்சி போல..
விக்கி: ஆமா...இனி பொங்குவாரு...


சிபி: ஆமாம்டா...சும்மா இருக்கவன பொங்க வைக்கறதே உனக்கு பொழப்பு...இனி என் கடை பக்கம் வந்தே கொன்னே புடுவேன்..ராஸ்கல்..


கொசுறு: இப்படியாக இந்த சூப் பாய்ஸின் காணும் பொங்கல் பொங்கிப்போனது..ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. ராம்சாமி, பவர் ஸ்டார் படத்துக்குப்போனாராமே. அதுபற்றி எழுதவே இல்ல?

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  “ சி.பி.செந்தில்குமார் said...
  டேய், அடங்குலேய்”

  >>>>>>>>>>>

  எதுக்குலே அடங்கனும் ஹிஹி!

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  ராம்சாமி, பவர் ஸ்டார் படத்துக்குப்போனாராமே. அதுபற்றி எழுதவே இல்ல?"

  >>>>>>>>>>>

  ஹிஹி..அத அவரு தான் சொல்லனும்!

  ReplyDelete
 4. யோவ், ராம்சாமி, உமக்கு தில் இருந்தா இந்தாளை வைச்சு பயட்டேட்டா போடுய்யா பார்த்துடலாம் ஹி ஹி

  டைட்டில் பக்கி உலகம் ஒரு பயங்கர டேட்டா

  ReplyDelete
 5. பக்கி கலகம் கூட ஓக்கே தான்

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா காணும் பொங்கல் செம காமடிப்பா

  ReplyDelete
 7. /// சி.பி.செந்தில்குமார் said...
  ராம்சாமி, பவர் ஸ்டார் படத்துக்குப்போனாராமே. அதுபற்றி எழுதவே இல்ல?//////

  யோவ் இன்னும் படமே ரிலீஸ் ஆகல.... அதுக்குள்ள ஏன்யா....? படம் மட்டும் வரட்டும், அப்புறம் பாருங்க.....!

  ReplyDelete
 8. //////சி.பி.செந்தில்குமார் said...
  யோவ், ராம்சாமி, உமக்கு தில் இருந்தா இந்தாளை வைச்சு பயட்டேட்டா போடுய்யா பார்த்துடலாம் ஹி ஹி

  டைட்டில் பக்கி உலகம் ஒரு பயங்கர டேட்டா//////

  இதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு பயங்கர டேட்டா போடனும்? அவரு போட்டோவ கொடுக்க சொல்லுங்க அப்படியே போடுறேன், அது போதும்.....!

  ReplyDelete
 9. @மனசாட்சி

  அட்ரா அட்ரா அட்ரா சக்கையா ஹிஹி!

  ReplyDelete
 10. @பன்னிக்குட்டி ராம்சாமி

  “ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஞான் முன்னே கண்டு.....”

  >>>>>>>>>>>

  என்னத்தை ஹிஹி!

  ReplyDelete
 11. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////சி.பி.செந்தில்குமார் said...
  யோவ், ராம்சாமி, உமக்கு தில் இருந்தா இந்தாளை வைச்சு பயட்டேட்டா போடுய்யா பார்த்துடலாம் ஹி ஹி

  டைட்டில் பக்கி உலகம் ஒரு பயங்கர டேட்டா//////

  இதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு பயங்கர டேட்டா போடனும்? அவரு போட்டோவ கொடுக்க சொல்லுங்க அப்படியே போடுறேன், அது போதும்.....!

  >>>>>>>.

  why this கொலவெறி ஹிஹி!

  ReplyDelete
 12. ///// விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  “ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஞான் முன்னே கண்டு.....”

  >>>>>>>>>>>

  என்னத்தை ஹிஹி!///////

  உம்ம ப்ளாக்கத்தான்யா.....

  ReplyDelete
 13. @பன்னிக்குட்டி ராம்சாமி


  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///// விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  “ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஞான் முன்னே கண்டு.....”

  >>>>>>>>>>>

  என்னத்தை ஹிஹி!///////

  உம்ம ப்ளாக்கத்தான்யா.

  >>>>>>>>>>>>

  சபாஷ் சரியான பேட்டி ச்சே போட்டி ஹிஹி!

  ReplyDelete
 14. சென்னையில் இருந்தா செத்த காலேஜ்,உயிர்க்காலேஜ்,எல்லாம் பார்த்திருக்கலாம்.
  உங்கள் காணும் பொங்கலும் கலக்கல்தான்.

  ReplyDelete
 15. மாப்ள இருந்தாலும் இப்படி பண்ணக்கூடாது... பச்ச புள்ளைங்க உன் கிட்ட மாட்டிகிட்டு....

  ReplyDelete
 16. காணும் பொங்கலன்று, சிபியை தலை தெறிக்க ஓடிப்போகச் செய்ததற்கு உங்களைப் பாராட்டுறதா,திட்டுறதா? எதுக்கும் ஒரு நன்றி.

  ReplyDelete
 17. பாவமுங்க அந்த பச்ச புள்ளை மனோ, அவரையுமா!

  ReplyDelete
 18. பாருங்க நம்ம ராம்சாமி சார், ஒரு நண்பனுக்கு விமர்சனம் எழுதியே உலகப்புகழ் அடைஞ்சிட்டார்.

  ReplyDelete
 19. சொந்த மண்ணின் ஞாபகத்தில், செத்த காலேஜ் வரை வந்திட்டுப் போயிருக்கீங்க.

  ReplyDelete
 20. அண்ணே இது 15 ம் திகதி பொங்கல் பற்றியா? அல்லது 16ம் திகதி பொங்கல் பற்றியா..

  ReplyDelete
 21. இதுல சக் நாரிஸ் யார் தல...

  ReplyDelete
 22. வணக்கம் வெங்கட் சார்!வியட்னாமிலேருந்து எப்போ வந்தீங்க,சொல்லவே இல்ல??????ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
 23. //மனோ: நீ ஒன்னும் சொல்ல வேணாம்...வா இன்னைக்கு செத்த காலேஜ் ச்சே மியூசியம் சுத்தி பாக்க போலாம்..//

  கைடுன்னா இப்படி இருக்கணும்..

  ReplyDelete
 24. காமெடிப் பொங்கல் மாம்ஸ்....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி