நண்பன் - உண்மையிலேயே பாதித்த படம்!

வணக்கம் நண்பர்களே...
ஒரு வழியா ஓசில(இன்டர்நெட் சார்ஜ் விலக்கு!) நண்பன் படம் பாத்துட்டேன்...சரி அது பத்தி ஏதாவது சொல்லனும்ல...இது விமர்சனம் அல்ல தனி நபர் பார்வை அப்படின்னு வச்சிக்கங்க...


3 இடியட்ஸ் - இந்த படத்தை இந்தில பாக்கும்போது ஒரு வித வித்தியாசம் தெரிந்தது...அமீரின் தனிப்பட்ட நடிப்பு...மற்ற இருவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் இருந்தது...சரி நம்ம மொழிக்கு வருவோம்...
ஒரு ரீமேக் படத்தை எடுக்கும் போது டைரக்டர்கள் தங்களோட அறிவாளித்தனத்தை அதில் காமித்து குழப்பி விடுவது தான் வாடிக்கை...ஆனால், அந்த வகையில் இந்த படம் சேராது...ஏனெனில், சுட்ட தோசயையே(!) மீண்டும் மாவாக்கி...மீண்டும் சுட்டு காசு பாக்கும் கலை இந்த இயக்குனரை தவிர யாருக்கும் வராது...


கதை - நமக்கு பிடிச்சத நாம படிக்கணும்...சந்தோஷமே முக்கியம் - இதாங்க..


சத்யன் - இவரு தான் இந்த படத்துக்கு ஒரு மெயின் ஆணி...இவரு தான் கதையே நகத்துராரு...தொண்டையிலே எதோ சிக்கி கொண்டது போலவே இருக்கும் இவரின் குரல்(!)...பல மேதாவிகள்..அதாங்க அடிச்சான் காப்பிங்களை கண் முன்னே நிறுத்துது...


சத்தியராஜ் - நல்ல நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்த போதிலும்...அங்க அங்க தன்னோட ஓவர் ரியாக்ஷன் மூலம் நாடகத்தன்மையை கொண்டுவாராறு...
அதை தாண்டி ஒரு நடிகர் இதுவரைக்கும் ஒரு வேலி அமைசிக்கிட்டு பன்ச் மட்டுமே தன்னோட எதிர்காலத்தை முடிவு செய்யும் என்பதை கொள்கையா வச்சிக்கிட்டு இருந்தாரு...இந்த படத்தின் மூலம் அவரை ஒரு தனி ட்ராக்கில் பயணம் செய்ய வைத்த டைர டக்கருக்கு ஒரு மலர் கொத்து....


ஸ்ரீகாந்த் - குரலிலும் நேர்த்தி...நடிப்பிலும் அசத்தல்...குறிப்பாக சொல்லனும்னா அப்பா மகன் எனும் அன்பு கெஞ்சலில்...ஒவ்வொரு டயலாக்கிலும் ழுத்தம்..


இவை தவிர ஜீவா - இயல்பான நடிப்பு அருமை...கேம்பஸ் இன்டர்வியுவில் தன்னை தைரியசாலி என்று பதிய வைக்கும் இடம்...


விஜய் - உண்மையில் வெகு நாட்களுக்கு முன் பார்த்த பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை...இந்த படங்களுக்கு பிறகு தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் முத்திரை பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...சாமி இப்படி சில படங்களாவது கொடுங்க(!)...அப்பத்தான் நீங்க ஒரு நடிகர்...இல்லன்னா எப்ப பாரு கொள்ளை கூட்ட தலைவன் மாதிரியே இருப்பீங்க...இந்த படம் உண்மையில் இவரு கேரியர்ல ஒரு நல்ல பேரை கொடுத்திருக்கு என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...
ரெண்டே சீனில் கக்கிய S.J சூர்யா (ஹிஹி!)


ஹீரோயின்: இந்த பொண்ணு சாப்பிடுதா...இல்ல வெறும் காத்து தான் உணவான்னு தெரியல...இதுக்கு அக்காவா நடிச்ச பொண்ணு நடிப்பை கம்பேர் பண்ணும்போது..நடிப்பு எதோ வருது அம்புட்டு தான்...அப்படியே இந்தில எப்படி பேசி நடிச்சாங்களோ ஹீரோயின் அதை காப்பி அடிச்சிருக்கு பொண்ணு...பேரு என்னப்பா இலியோ...எலியோ!
மனோஜின் ஒளிப்பதிவு டக்கரு...


இசை ஹாரிஸ் ஒகே ரகம்.. பாடல்கள் - என் நண்பன் போல - நல்லா இருக்கு!


பாதித்த காட்சிகள்:


சீனியருக்கு அந்த இடத்துல கரண்ட் ஷாக்..


ஜீவா அம்மா சப்பாத்தி சுடும் காட்சி...


குழந்தை பிறக்க வைக்க நடக்கும் அமளி துமளி காட்சி..


ஒரு விஞ்சானின்னா 50 வயசுக்கு மேல கோயிந்த்சாமியாத்தான் இருக்கனும்ங்கறத மாத்தி யூத்தா காமிச்சது..


எத்தன வயசானாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் நம்முடைய புத்தி மட்டும் மாறாது என்பதை காட்டியது - சத்யன்..!


பாடமுறை மாற்றம் தேவை என்பதை காட்டியது...(ஹிந்தில இருந்து சுட்டிருந்தாலும்!)


அடிப்படையில கல்வி நம்ம உயர்வுக்கு மற்றும் சந்தோஷத்துக்கு தான் தேவையே தவிர...இயந்திரத்தனமான வாழ்கைக்கு அல்ல என்பதை அழுத்தமாக உரைத்தது...(நடக்காதிருப்பது என்பது சாபக்கேடு!)


எந்த படத்துல தான் குறை இல்ல...இருந்தாலும் எனக்கு தோன்றியது...


 பிரின்சிபாலா இல்ல ஸ்கூல் டீச்சரான்னு அடிக்கடி சிந்திக்க வைத்த சத்தியராஜ் கேரக்டர்..


வாயிலேயே நுழையாத பேரை திணித்த விஞ்சானி பெயர்...


ஆளாளுக்கு ஹீரோவை அடித்தல் (எத்தன பட காண்டோ!)


டாப்பு - அமீரின் நடிப்பை ஒப்பிட முடியா விட்டாலும்...விஜயின் அப்பாவித்தனமான முகம் சரியான படி படத்துக்கு ஒத்து வருகிறது...


மொத்தத்தில் மீண்டும் ஒரு ஹிட் படத்தை...அதுவும் நல்ல கான்செப்டை (ரீமேக்காக இருந்தாலும்!) கையிலெடுத்த வகையில் டைர டக்கருக்கு வாழ்த்துக்கள்...


கொசுறு: இது தனி நபர் பார்வை மட்டுமே...பொது விமர்சனமாக கொள்ளவேண்டாம் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. என்னது? நண்பன் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?

  ReplyDelete
 2. ஓகே தலைவா!இன்னைக்கே டிக்கெட் புக் பன்னிருவோம்

  ReplyDelete
 3. நண்பன் பற்றிய உங்கள் பார்வை சிறந்த்ததாகவே இருக்கிறது....

  விமர்சனம் என நீங்க சொல்லாட்டியும் நாங்க விமர்சனமாவே எடுதுக்கறோம்..ஹி..ஹி..

  ReplyDelete
 4. வணக்கம் பாஸ்,

  சுருக்கமான, சுவையான அலசல்.
  அதுவும் இலகு மொழி நடையில் சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 5. //இது தனி நபர் பார்வை மட்டுமே...பொது விமர்சனமாக கொள்ளவேண்டாம் //

  அருமையான உள்குத்து..ஹி..ஹி..

  ReplyDelete
 6. //
  சி.பி.செந்தில்குமார் says:January 18, 2012 2:01 PM Reply
  என்னது? நண்பன் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?/


  பார்ரா!!

  ReplyDelete
 7. வணக்கம் வெங்கட் சார்!///ஒரு வழியா ஓசில(இன்டர்நெட் சார்ஜ் விலக்கு!) நண்பன் படம் பாத்துட்டேன்.////ஓ,ஓ, ஓ!!!நீங்க நம்ம ஆளு!விமர்சனம் அருமை!இப்படிப் பார்ப்பதால் படத்தை முழுமையாக ரசிக்கமுடியும் என்று நிரூபித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said...

  என்னது?நண்பன் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?///நக்கலு????

  ReplyDelete
 9. நண்பன் படம் நானும் பார்த்தேன் சகோ...வழமையான எப்போவும் முக்கி முக்கி வசனம் பேசுற விஜய் நண்பனில் இல்லை, இந்த விஜய் ரசிக்கும் படி இருந்தார் என்பதே உண்மை...பல இடங்களில் என்னால விஜய் கிட்ட இருந்து அமிர்கான் ஒட பாவனைகளைத்தான் பார்க்கமுடிச்சது.. இலியான என்னவே கடைசிவரைக்கும் ஒட்டவே இல்லைனு தான் சொல்லனும்..இது ரீமேக் படமா இருந்தாலும் ஈ அடிச்சான் காப்பி மாதிரி எல்லா இடத்திலயும் அதே மாதிரியான காட்சி அமைப்புக்கள் இருப்பது என்னமோ தமிழ் படத்துக்கு பொறுந்தாத மாதிரி இருந்தது சகோ உதாரணமா இலியானாவோட கனவு காட்சி வட நாட்டு கல்யாண உடுப்பு... ஹி ஹி ஆனாலும் என்னைக்கும் நட்பு எப்படி சொன்னாலும் ரசிக்கும் படியா தான் இருக்கும்கிறதுக்கு இந்த படமும் ஒரு நல்ல உதாரணம்... இன்றைய கல்விச் சூழலை காட்டிய விதமும், நாம் இன்னும் ஆட்டு மந்தைகள் மாதிரி தான் கல்வியில் இருக்கோம் என்பதும் அழுத்தம்...இது தனி நபர் பார்வை மட்டுமே...பொது விமர்சனமாக கொள்ளவேண்டாம் ஹிஹி! ஹி ஹி நானும் அதையே தான் சொல்றேன் சகோ....

  ReplyDelete
 10. பார்த்தேன் ரசித்தேன்.

  படித்தேன் மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 11. எல்லாமே புளூ கலரா இருக்கு.. :((

  ReplyDelete
 12. // சி.பி.செந்தில்குமார் said...
  என்னது? நண்பன் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?//
  அப்ப படம் பார்க்காமத்தான் விமர்சனம் எழுதுறீங்களோ!

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. எதோ என்னாலானது, எல்லாத் திரட்டிகளிலும் இணைச்சாச்சு.

  ReplyDelete
 15. எதோ நம்மாலானது, திரட்டிகளில் இணைத்துள்ளேன் நண்பரே.

  ReplyDelete
 16. @FOOD NELLAI

  நண்பா இணையத்தில்..

  ReplyDelete
 17. என்னது தனிநபர் பார்வையா அப்படின்னா என்ன மாப்ள?

  ReplyDelete
 18. //////சி.பி.செந்தில்குமார் said...
  என்னது? நண்பன் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?/////

  தலைவரே பதறாதீங்க, இதுவும் நீங்க பார்த்த அதே நண்பன் படம்தான்.... புதுசா எதுவும் வந்திருக்கோன்னு நெனச்சி மறுபடி விமர்சனம் போட்றாதீங்க....!

  ReplyDelete
 19. உங்க லுக்கும் (படத்தைப் பற்றிய பார்வை) தனி லுக்கா தான் இருக்கு. நல்லாயிருக்கு பாஸ்.

  ReplyDelete
 20. //கொசுறு: இது தனி நபர் பார்வை மட்டுமே...பொது விமர்சனமாக கொள்ளவேண்டாம் ஹிஹி!// ஆமாங்கோ!இவர் மட்டும் தனியா....லேப்டாப்ல பார்த்திருக்கிறாரு தனிநபர் பார்வைதான்...

  ReplyDelete
 21. Y....y....??????
  Mamms....????????
  Ithu yaaro ezhuthi
  unga blog-la
  pottathu thane ??????????????

  ReplyDelete
 22. என்னது நண்பனுக்கு மனநிலை பாதிப்பா?

  தனிநபர் பார்வை -:)

  ReplyDelete
 23. உடுக்கை இடுப்பழகி இலியானாவைக் கேலி செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்! அதுக்கு தண்டனையாக அடுத்த பதிவு பூரா இலியானா படத்தை போட வேண்டும் என ஆணையிடுகிறோம்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி