தனிநபர் பார்வைன்னா என்னாது - !?

வணக்கம் நண்பர்களே..


இருந்து இருந்து நானே நேத்து தான் ஒரு(http://www.vikkiulagam.blogspot.com/2012/01/blog-post_18.html) படத்தை பத்தி என் பார்வையில எழுதி இருந்தேன்...அந்த பதிவுக்கு வந்த நம்ம பன்னிகுட்டிக்கு டவுட்டு வந்துருச்சி...இந்தாளு தனி நபர் பாவின்னு ச்சே பார்வைன்னு சொல்றானே...மாப்ள அப்படின்னா என்னன்னு கேட்டு புட்டாரு...சரி நாமளும் ஒரு வரில(tax அல்ல!) கமன்ட்ல பதில் சொல்லி இருக்கலாம்...But ஆனா why ஏன்?...அதுக்குத்தான் இந்த பதிவு..(ஸ் ஸ் அபா என்று மூச்சி இரைக்காமல் தொடரவும்!)

கொஞ்ச நாளாவே என்னிடம் சாட் செய்பவர்களுக்கு தெரியும்(!)...ஆனா, வெளிப்படையா சொல்ல மாட்டாங்க(!)...அது அவங்க பெருந்தன்மை(!)...அத விட்ருங்க...அதாவது என்னனா...இந்தாளுக்கு பெரிய பருப்புன்னு(பருப்புகள் மன்னிக்க!) நெனப்பு...என்னவோ இவன் மட்டும் தான் ஒழுங்கு மாதிரியும்...எப்ப பாரு யாரையாவது கலாய்ச்சிட்டு இருக்கான்(!) - இப்படி பலர் நெனச்சிட்டு இருக்காங்க...

உண்மையில் விஷயம் என்னன்னா...டிஷ்யூம் படத்துல வர்ற அந்த குள்ளமான கோமாளி நிலையே இங்கே பலருக்கு(நான் உட்பட!)...எங்கே நம்ம சோகங்கள் வெளியே கசிந்திடுமோ(!)..அது மூலமா நம்மை ஒரு வித பாவப்பட்ட ஜீவனாக இந்த உலகம் பார்த்திடுமோ(!)...என்று தான் பலர் தங்களை ஒரு வித ரப்(கடினமானவர்களாக!) காட்டிக்கொள்ள வேண்டி இருக்கிறது...!

சரி தனி நபர் விஷயத்துக்கு வர்றேன்...

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை பாக்கிறேன்(!) அது என்னை கவர்ந்திருக்கிறது...எப்படி என்பதை சொல்ல நெனைக்கும் போது என்னை தடுப்பது என்ன...அதாவது நான் காசு கொடுத்து அந்த படத்தை பார்க்கவில்லை..அப்புறம் எப்படி அதனை பற்றிய பார்வை(!)..அதான் இத்தனை நாளா எழுதாமல் இருந்தேன்..ஆனா, ஒரு சில நண்பர்கள் என்னமோ இது பெரிய தொண்டு விஷயமாகவும்...இதன் மூலம் பலரின் பாக்கெட்டை காப்பாற்றுவதாகவும் காட்டிக்கொள்வது வருத்தத்தை கொடுத்தது...


அதன் காரணமாகவே நானும் என் வட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்..சினிமா பலரின் கனவு...அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை...பலரை வெறும் கனவுகளோடு மட்டுமே வாழ வைத்திருக்கிறது...அவர்களின் நிஜ முகங்கள் கண்ணாடியில் தெறித்து அவர்களை வாழ்கை எனும் அழகிய ஓட்டத்தில்(!) எளிதில் முதுமையை காட்டி விடுகிறது...

சமூகத்தின் வழி மாற ஒரு தனி நபரின் தூண்டு கோல் தேவை(!)...உதாரணம் தேசப்பிதா...ஒரு நாட்டையே அடிமையிலிருந்து வென்று நமக்கு கொடுத்துவிட்டு...நான் தோற்று விட்டேன்..இப்போது முன்னை விட அதிகமாக அல்லவா கொடுமைகள் நடந்து வருகிறது என்று மேலிருந்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார்...!

அது போல ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு...ஆனால், உண்மை என்றுமே மாறாது...வேண்டுமானால் மறைந்திருக்கும்(!)...

உதாரணம்: பதிவுலகம் - இங்கு எத்தனையோ நட்புகள் நம்மை சுற்றி...அவர்களுக்கு என்ன தேவை..ஏன் நம்மிடம் நட்பு பாராட்டுகிறார்கள்...அவர்கள் இருக்கும் உயரத்திற்கு நம்மை ஈடாக நிறுத்தி அல்லவா அளவளாவுகிறார்கள்...இது ஏன்?...தன் கருத்தை எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று நினைப்பவனின் செயல் எப்போதுமே தோல்வியில் தான் முடிகிறது..

இங்கு பலர் தவறான கண்ணோட்டத்தை விதைத்தும் வருகிறார்கள்...இதை யாரும் வெளிப்படையாக வாதிட விரும்ப வில்லை(!)...

வல்லவன் வைத்தது எல்லாம் சட்டம் அல்ல...!(ஹஹா இங்க யாரும் வல்லவர்கள் அல்ல என்பது தனிக்கதை!)

ஒரு மனிதனின் ஆக்கம் பலரை புருவம் தூக்கி பாக்க வைப்பதே பெருமை...அதை விடுத்து ஓசில கொடுத்த உளுந்த வடைக்கு நன்றின்னு எழுதுற கொடுமையும் இருக்கு...


என்னமோ சொல்ல வந்தேன்..ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்..ஆங் எது தனி நபர்...ஸ் ஸ் அபா...அதாவதுங்க இங்க பினாத்தி இருக்க கருத்துக்களுக்கும் இந்த தனி நபர்..அதாவது விக்கிதாங்க பொறுப்பு...சர்தானே..

கடைசி வரைக்கும் சொல்ல வந்தததை சொல்லாதது போல இருக்கு...எதுக்கும் நீங்களாவது சொல்லிட்டு போங்க!

கொசுறு: இது ஒரு பம்மாத பதிவு!(ஹிஹி)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. நீங்க.... நீங்க உங்க வட்டத்துல இருந்து வெளியே வந்துட்டிங்களா?

  ReplyDelete
 2. தமிழ்வாசி பிரகாஷ் said...

  நீங்க.... நீங்க உங்க வட்டத்துல இருந்து வெளியே வந்துட்டிங்களா?

  aamaa அவர் இப்போ மாவட்டம் ஆகிட்டார்.. வீட்ல மாவு ஆட்டறதில்லை

  ReplyDelete
 3. பய புள்ள என்னமோ சொல்ல நினைச்சிருக்கான்.. கொஞ்சம் கொஞ்சம் புரியுது

  ReplyDelete
 4. கொசுறு: இது ஒரு பம்மாத பதிவு!(ஹிஹி)///

  இதென்ன பம்மாத்து? உள்குத்து, வெளிக்குத்து பதிவெல்லாம் இருக்கு?
  இப்ப பம்மாத்து பதிவா?

  இந்த தலைப்பில் இனி தொடர்ந்தாலும் தொடரலாம்....

  ReplyDelete
 5. விக்கி ஹை கியர்ல இருக்கும் போது எழுதினது போல தோணுது. சுத்தமா புரியல.

  ReplyDelete
 6. தனிநபர் விமர்சனம்.....நீங்க கூட்டமா பார்த்திருந்தா பன்னிகுட்டியார்க்கு விளக்க பதிவு போட்டிருக்க வேண்டியதில்லைதாங்க....!

  ReplyDelete
 7. @சிபி
  //பய புள்ள என்னமோ சொல்ல நினைச்சிருக்கான்.. கொஞ்சம் கொஞ்சம் புரியுது//

  எங்க புரிஞ்ச வரைக்கும் கமெண்ட் போடுங்க பார்க்கலாம் ஹிஹி நாங்களும் புரிஞ்சிக்கிறோம்....

  ReplyDelete
 8. >>Blogger ஹாலிவுட்ரசிகன் said...

  விக்கி ஹை கியர்ல இருக்கும் போது எழுதினது போல தோணுது. சுத்தமா புரியல
  haa haa

  உங்களூக்கும் அவன் மப்புல இருக்கான்னு தெரின்சுடுச்சா?

  ReplyDelete
 9. veedu said...

  தனிநபர் விமர்சனம்.....நீங்க கூட்டமா பார்த்திருந்தா பன்னிகுட்டியார்க்கு விளக்க பதிவு போட்டிருக்க வேண்டியதில்லைதாங்க....!

  ராமசாமியோட அடுத்த போஸ்ட் - பக்கி உலகம் ஒரு பய டேட்டா

  ReplyDelete
 10. *(%&§=¥€@€$£.........

  Vazhakkam pol mamms
  onnum.....
  Puriyalai......

  Yappa samy.....
  Konjam......
  Puriyaraappula
  ezhuthuna.....
  Ennavaam.?????????????????

  ReplyDelete
 11. அய்யோ மாமா என்ன ஆச்சு?ஏன் இந்த பதிவு.

  ஒவ்வொரு மனிதனும் தனி உலகம் யாரும் யாருக்கும் திணிக்க வேண்டியதில்லை.

  ReplyDelete
 12. வணக்கம் அண்ணா,
  உண்மையிலே விமர்சனங்கள் என்பது தனிநபர் பார்வை தானே.
  எல்லோரும் தனிப்பட்ட மனிதர்களின் பார்வையில் பட்டதைத் தானே விமர்சனமாக சொல்கிறார்கள்.
  ஆனாலும் உங்க விளக்கம் ரொம்ப ரசிக்க கூடியமாதிரி இருந்திச்சு.

  பதிவுலகம்....செமையா யாரையோ கடிச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 13. தனியா போய் சைட் அடிப்பது

  ReplyDelete
 14. ஏன் பாஸ் நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று எனக்கு புரியலை.யாருக்கும் உள்குத்தா?

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட் சார்!///கடைசி வரைக்கும் சொல்ல வந்தததை சொல்லாதது போல இருக்கு.////சரி பரவால்ல,அடுத்த வாட்டி சொல்லுங்க!காத்துக்கிட்டிருக்கோம்!!!!!!

  ReplyDelete
 16. தனிநபர் பார்வைன்னா..........................தனிநபர் பார்வைதான்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 17. veedu said...

  தனிநபர் விமர்சனம்.....நீங்க கூட்டமா பார்த்திருந்தா பன்னிகுட்டியார்க்கு விளக்க பதிவு போட்டிருக்க வேண்டியதில்லைதாங்க....!////என்னது,தனி நபர் தாக்குதல் போலருக்கு????வெங்கட் "சிங்கம்" அப்புடீன்னு சொல்ல வரீங்களா?(கோத்து விட்டாச்சு)

  ReplyDelete
 18. ஒரு கேள்வி கேட்டது குத்தமாய்யா....?

  ReplyDelete
 19. அந்த வட்டச் செயலாளர் வண்டு முருகன் நீங்க தானா?

  ReplyDelete
 20. //ஒரு மனிதனின் ஆக்கம் பலரை புருவம் தூக்கி பாக்க வைப்பதே பெருமை...அதை விடுத்து ஓசில கொடுத்த உளுந்த வடைக்கு நன்றின்னு எழுதுற கொடுமையும் இருக்கு...//


  ஓ இதுக்கு பேர் தான் உள்குத்தா???
  சரி யாருப்பா அது?

  ReplyDelete
 21. பம்மாத பதிவா???
  யாரப்பாத்து பம்மாத பதிவு???
  சொல்லவேயில்ல???

  ReplyDelete
 22. வந்த வேலை முடிஞ்சிடுச்சு.
  கிளம்புறேங்க..

  ReplyDelete
 23. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு கேள்வி கேட்டது குத்தமாய்யா....?//
  ராம்சாமி சார், சிங்கத்தை உசுப்பி விட்டுட்டீங்களே!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி