ஜாக்கிசானும், என் மகனும் - முடியல!

வணக்கம் நண்பர்களே... 



முதல்லையே சொல்லி புடறேன்...இது ஒரு சினிமா பார்த்த அனுபவமே....இதுக்கு மேல துணிவு இருப்பவர்கள் தொடரவும்..என் மகனுடன் அண்மையில் அமைந்த ஒரு விவாதமே(பல்ப்பே!) இந்த பதிவுக்கு காரணம்!

என்னப்பா பாக்குற டீவில..

ஆங்..அதுவந்து ஜாக்கிசான் படம்...

ஓ...நானும் பாக்கட்டா...

(வில்லங்கம் பண்ண ஆரம்பிச்சிட்டானே!)

ம்ம்...ஏன் கம்ப்யூட்டர்ல கேம் ஆடலியா...

(விடுமுறைன்னா வீட்ல கணிப்பொறி எனக்கு தடை ஹிஹி!)

இல்ல...போர் அடிக்குது...அதான் நீ என்ன பண்றேன்னு பாக்க வந்தேன்..

சரி பாரு...

ஏம்பா அவரு இத்தனை தடவை கீழ விழறாரு!

அது வந்து(!!!!) காமடிக்குப்பா...சண்ட போடும்போதே எப்படி காமடியா இருக்கு பாரு...



என்னப்பா அவரு கீழ விழுந்து..அடிபட்டுக்குன்னு முடியாம ஓடுறாரு...அத போய் சிரிச்சி பாத்துகிட்டு இருக்க...

(அடங்கொய்யால...இன்னைக்கு எனக்கு ஏழர ஸ்டார்ட்டா!)

ஸ்ஸ்...இல்லப்பா அது படம்...அதுல காமடிக்காக அப்படி இருக்கு...

அதாம்பா கேக்குறேன்...அவரு விழுந்து அடி படறது, உனக்கு காமடியா...

அதாவது...இந்த படத்துல அதாம்பா காமடி..



அப்போ நீ அந்த மாதிரி விழுந்தா...அப்புறம் எழுந்து ஓட முடியுமா சொல்லு...

ஹிஹி...அது வந்து படம்பா...இல்லப்பா...படத்துல சும்மா!

என்னை மட்டும் பவர் ரேஞ்சர்ஸ் பாத்திட்டு அப்படி செய்யாத(!)..இப்படி செய்யாதன்னு சொல்றே...அதுவும் சும்மா தான்...இதுவும் சும்மாதான்...அம்மா என்னை பாக்கவே விட மாட்டேங்குறா..

அதாவது...அதுல வர்றது போல எல்லாம் பறக்க முடியாதுப்பா...

அப்போ இங்க கூட தான் எவ்ளோ தூரத்துல இருந்து எகிறி போய் அந்த கையிற புடிக்கிறாரு அந்த அங்கிள்..அது மட்டும் முடியுமா...நீ மட்டும் இப்படி சும்மா டூப்பு (பொய்!) படத்தை பாக்கலாமா...

இல்லப்பா..இவரு நெறைய ட்ரைனிங் எடுத்து அதை உண்மையா செய்யிறாரு...



அதே போலத்தான் பவர் ரேஞ்சர்லையும்(!)...இதை ஒத்துக்கற...அதை ஒத்துக்க மாட்டேங்கற...அவங்களும் அப்படிதான் ட்ரைனிங் எடுத்திருப்பாங்க தானே..

இல்லப்பா அது வேற இது வேற...

எப்படி வேற வேறன்னு சொல்லு...

அதாவது...குழந்தைங்களால அப்படி செய்ய முடியாதுப்பா...பெரியவங்க அதை செய்யும்போது அடிபடாம செய்வாங்க...

ஏம்பா நான் செய்ய முடியறதை எல்லாம் நீ செய்வியா...

(என்றா இது கேள்வி!)

ஸ்ஸ்...ஏன்டா உனக்கு இப்போ என்ன தான் பிரச்சன....

எங்க என்னை போல கால தூக்கி இப்படியே 5 நிமிஷம் கராத்தே கிக் அடிக்கிறாப்ல நில்லு...

போடாங்க...என்னைய கீழ விழ சொல்றியா..

ஆங்...அதாவது உன்னால இப்படி செய்ய முடியாது...இப்போ ஒத்துக்கறியா...என்ன மாதிரி சின்னப்பையன் செய்யிறத...உன்ன போல பெரிய ஆளாள செய்ய முடியாது தானே...

இல்லப்பா..என்னைய போல ஆளாள செய்ய முடியலைன்னாலும்...இது போல ட்ரைனிங் எடுத்தவங்க செய்வாங்க...

நீ கூடத்தானே கராத்தே கத்து கிட்டதா சொன்னே...

ஹிஹி...அது உன்ன போல சின்ன பையனா இருக்கும் போது...

அதான் சொல்றேன்..என்னை போல சின்ன பையனால செய்ய முடிஞ்சது உன்னை போல பெரிய ஆளாள செய்ய முடியாது...

சர்ரா ஒத்துக்கறேன்...இப்பவாவது என்னைய படம் பாக்க விடு...

சாரி...உன்னால செய்ய முடியாத விஷயத்த...அதுவும் ஒரு டூப்பு விஷயத்தை நீ பாக்க கூடாது...

டிவி ஆப் செய்யப்பட்டது....எனக்கு ஆப் ....!(கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும்!)


சரி வீட்ல இருக்கும்போது கம்பியூட்டர் பாக்க கூடாதுன்னு அம்மா உன்ன சொல்லி இருக்காங்களே...இங்க லேப்டாப்ல என்னத்த பாத்துட்டு இருக்க...


ஹிஹி...மயில் ச்சே மெயில்!


அதை க்ளோஸ் பண்ணிட்டு என்னோட வீடியோ கேமை பாரு...அப்பத்தான் உனக்கும் கேம் எப்படி ஆடுறதுன்னு தெரியும்...


உள்ளிருந்து ஒரு குரல்...


ஏங்க சும்மாத்தான் இருக்கீங்களா...அந்த சப்பாத்தி மாவை பிசைஞ்சி வைங்களேன்...!


(அடங்கொய்யால!)

கொசுறு: ஒரு படம் பாக்க முடியல...என்ன கொடும சார் இது...!(இது ஒரு மொக்கை பதிவு என்றாலும் மன்னிச்சு!)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

34 comments :

  1. >>(வில்லங்கம் பண்ண ஆரம்பிச்சிட்டானே!)

    U R THE VILLAN, THEN HOW U EXPECT UR SON BE A HERO? HI HI

    ReplyDelete
  2. வணக்கம் மாம்ஸ்,
    நல்லாருக்கீங்களா?

    ஆப்பு வைக்க வெளியில் இருந்து ஆள் தேவையில்லை வீட்லையே இருக்காங்க போல.

    ReplyDelete
  3. மாப்ள இதுக்கு முதலிலேயே மாவு பிசைந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. உள்ளிருந்து ஒரு குரல்...


    ஏங்க சும்மாத்தான் இருக்கீங்களா...அந்த சப்பாத்தி மாவை பிசைஞ்சி வைங்களேன்...!

    செம மாமா!!

    ReplyDelete
  5. உங்க மகன் நல்லா தான் கேள்வி கேட்டு இருக்கான்.....

    ReplyDelete
  6. முதற்கண் இனிய பொங்கல்
    வாழ்த்துக்கள்!
    நீண்ட நாள் இடையில் வர இயலவில்லை.
    கணிணீ பழுது, மடிக்கணிணீ
    இயக்க பழக்கமில்லை!இப்படி பல
    தொல்லைகள்! மன்னிக்க!
    வாண்டுவின் செயல்களை
    சுவைபட தந்தீர் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. உங்களைவிட உங்க மகன் புத்திசாலி போல ....

    ReplyDelete
  8. //ஏங்க சும்மாத்தான் இருக்கீங்களா...அந்த சப்பாத்தி மாவை பிசைஞ்சி வைங்களேன்...!//

    அங்குமா???????

    ReplyDelete
  9. பையன்கிட்டயும், அண்ணிக்கிட்டயும் செம பல்ப் போல. இதுக்குதான் என் வீட்டுக்காரர் ஞாயிற்றுக்கிழமைக் கூட ஆபீஸ் போய்டுறார். நீங்களும்ம்டிரை பண்ணுங்கண்ணா

    ReplyDelete
  10. பசங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?? பையன் அவங்க அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலி போல......

    ReplyDelete
  11. //(விடுமுறைன்னா வீட்ல கணிப்பொறி எனக்கு தடை ஹிஹி!)//

    நிரந்தரம்மா..எப்ப..கேட்டு சொல்லவும்...

    ReplyDelete
  12. //எங்க என்னை போல கால தூக்கி இப்படியே 5 நிமிஷம் கராத்தே கிக் அடிக்கிறாப்ல நில்லு...//

    இந்த கமெண்ட் விசால் அவர்களுக்கு :

    உங்க அப்பா ரெண்டு காலையும் தூக்கிட்டு அந்தரத்தில நிப்பாரு...ஹிஹி

    ReplyDelete
  13. ஹி.ஹி.ஹி.ஹி பாஸ் நல்லாத்தான் பல்பு வாங்கியிருக்கீங்க

    ReplyDelete
  14. நல்ல காலம் டாகுதர் விசய் படம் பாக்காம இருந்தீங்க இல்லை என்றால் உங்க பையன் இன்னும் கேள்விகள் கேட்டு உங்களுக்கு செம பல்பு ஆகியிருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. வணக்கம் வெங்கட் சார்!என்ன சொல்லுறதுன்னே தெரியல!இப்படியுமா?உங்கள நினைச்சா பாவமா இருக்கு.போயி சப்பாத்தி மாவ பிசையுங்க,அதுக்குத்தான் நீங்க லாயக்கு!!!!!

    ReplyDelete
  16. ஆக மொத்தம் ஜாக்கிசான் படமும் பாக்கல..
    பவர் ரேன்ஜர்சும் பாக்கல..
    வீடியோ கேமும் விளையாடல..
    கராத்தேவும் பண்ணல..
    வேற என்ன தான் பண்ணீங்க?
    சப்பாத்தியாவது சுட்டீங்களா இல்லையா?

    ReplyDelete
  17. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

    ஹா...ஹா... நான் பையனையும், அவங்க அம்மாவையும் சொன்னேன்...

    நீங்க புலி அல்ல.....

    ReplyDelete
  18. நண்பர்களே, விக்கி பையனிடம் பேசி பாருங்க....
    நம்ம மனோவே பேக் அடிச்சுட்டாராம்...

    ReplyDelete
  19. புலிக்கு பெறந்தது பூனையாகுமா ??????

    ReplyDelete
  20. ஹா ஹா பையன் படு சுட்டி போல.. விக்கி அண்ணனையே பல்பு வாங்க வச்சிட்டானே

    ReplyDelete
  21. மகன் இப்படித்தான் இருக்கணும்!

    ReplyDelete
  22. உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன், ஒத்துக்கிறேன்.ஹே ஹே ஹே.

    ReplyDelete
  23. விக்கி மகனென்றால் சும்மாவா! வாழ்த்துக்கள் அந்த சுட்டிக்கு.

    ReplyDelete
  24. மாம்ஸ்,
    பசங்க சுட்டின்னு வருத்தப் படாதிங்க...
    என்ன இன்டெலிஜென்ட் ஆ இருக்காங்கன்னு ரொம்ப சந்தோசப் படுங்க

    அப்பு

    ReplyDelete
  25. அப்பனுக்கு புள்ள தப்பாம தான் இருக்கான். நல்லதொரு குடும்பம் ... விக்கி உலகம்.

    ReplyDelete
  26. என் இந்த கொலை வெறி விக்கி மாம்ஸ்...Like father Like son..

    ReplyDelete
  27. சான் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை மாம்ஸ்

    ReplyDelete
  28. சுவையான விவாதம் ! அதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் !

    ReplyDelete
  29. மாப்ள உங்க பையன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு? அவனை பார்த்தால் எதிர்காலத்துல பெரிய பதிவரா வருவான்னு தோணுது.

    ReplyDelete
  30. நாக்க புடுங்குர மாதிரி கேள்வி கேக்குர’னு சொல்வாங்களே!! அது இதுதானா???

    ReplyDelete
  31. ஹாஹாஹா... பையன் பிரமாதமா வருவான்...

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி