இது தான் நிரந்தரம் - பல்ப்போ பல்ப்!

வணக்கம் நண்பர்களே...


விக்கிக்கு ஹாலிடே...பதிவுலக நண்பர்களுக்கு ஜாலிடே(!) என்று இருந்த காலம் இன்றுடன் மலை ஏறிடிச்சிங்க!...மீண்டும் உங்களை தொல்லைப்படுத்த இந்த பக்கி ச்சே விக்கி வந்துட்டேனுங்க...இந்த குறுகிய விடுமுறையில் பல விஷயங்களை புரிந்து கொள்ள உதவிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...

சரி நம்ம பொழப்ப பாப்போம்...

அது ஒரு காலைப்பொழுது...என் மகனுடன் டிவி பாத்திட்டு இருந்தேன்...அப்போ...

ஏம்பா தம்பி...

என்னப்பா..

சாப்பிடுற போல...

ஏன்பா பாத்தா எப்பிடி தெரியிது...

ஸ்ஸ் அதுவந்து...இந்த சோபால உக்காந்து சாப்பிடேம்பா!...கீழல்லாம் சோறு இரைப்பே!...அதுவும் இல்லாம டிவிய நிமிந்து பாத்திட்டு இருக்கே...அது கண்ணுக்கு நல்லது இல்லப்பா...

உங்க அட்வைச கொஞ்சம் நிறுத்துங்க...(பய புள்ளைக்கு 5 அரை வயசுதான் ஆகுது!)

ஏம்பா...

எனக்கு கீழ உக்காந்து சாபிட்டாதான் புடிக்கும்...

பார்ரா...நான் என்ன சொல்ல வரேன்னா....

நீங்க ஒன்னும் சொல்லவேணாம்...

அட...


என்ன வடை...கீழ உக்காந்து சாப்பிட்டாதான்...சட்டுன்னு எழுந்துப்பேன்...உக்காருவேன்...ஒல்லியா அழகா இருக்க முடியும்னு எங்க ஸ்கூல்ல சொல்லி இருக்காங்க...இல்லைன்னா உங்கள போல குண்டாயிருவேன்...

பார்ரா...

என்னத்த பார்ரா...உங்க வேலைய நீங்க தானே செய்யணும்...

நான் தானே செய்யிறேன்..

இல்லையே....எப்ப பாரு அதை கொண்டுவந்து கொடு!...இதை கொண்டுவந்து கொடுன்னு...என்னை வேலை வாங்குறது தப்பு இல்ல...

ஹிஹி...அதாவது நீ சின்னப்பையன்...சட்டுன்னு ஓடுவ...ஓடிவருவா...அப்படியே கேட்டத கொண்டாந்து தருவ...அதான்....

இதே போல நான் கொண்டு வந்து தர சொன்னா மட்டும்...என்னைய போய் எடுத்துக்க சொல்ற...முதல்ல நீங்க திருந்துங்க(!)...அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணுங்க...

ஆமாம்பா...திருத்திக்கறேன்...பெரியவங்க சொன்னது போல இந்த தரைல உக்காந்து சாப்பிடறது தான் நிரந்தரம்...ஹிஹி...இனி நானே எடுத்துக்கறேன்...இனி உன்னைய கூப்பிட்டு வேலை வாங்க மாட்டேன்...

திருந்தினா சரிதாம்பா....விடுங்க வருத்தப்படாதீங்க...

டேய்...போதும்டா கொஞ்சம் விட்டா ஓட்டிடிவியே...!

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா...பாடல் கேட்டது டிவியில்..!


கொசுறு: எது நிரந்தரம் என்பதை மறந்து விடுகிறேன் அடிக்கடி...ஞாபகப்படுத்திகொண்டு இருக்க ஒரு ஆள் வேணும்ல!

யாரோ சொன்ன கொசுறு: பாதைகளை புரிந்து கொண்டால், பயணங்கள் சிரமம் இல்லை...!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

27 comments :

  1. மாப்ள ஆமா, இது எப்போ வாங்குன பல்பு.. #ஜூனியர் ராக்ஸ்..

    ReplyDelete
  2. அந்த பாதை தானே புரிய மாட்டேங்குது..

    ReplyDelete
  3. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    வருகைக்கு நன்றி மாப்ள...எப்பவும் நாம வாங்குறது தானே!என்னையா ரொம்ப நாளா காணோம்!

    ReplyDelete
  4. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அந்த பாதை தானே புரிய மாட்டேங்குது..

    >>>>>>>>>>

    பெரியவங்க சொல்லிட்டு போயிடறாங்க...நம்மால தான் புரிஞ்சிக்க முடியல ஹிஹி!

    ReplyDelete
  5. மாப்ளைங்க்க 2 பேரும் பேசிக்கறங்க்களாம்

    ReplyDelete
  6. @சி.பி.செந்தில்குமார்

    டேய் சிண்டு முடியிரியா பிச்சிடுவேன் ஹிஹி!

    ReplyDelete
  7. பையா பலே... பலே....

    இன்னும் எத்தனை பல்பு பதிவுகள் வர போகுதோ? மாம்ஸ்....

    ReplyDelete
  8. விடுமுறை முழுசும் பல்பா! பல்ப் கொடுத்தவர் பிரகாசமாத்தான் இருக்காருன்னு தெரியுது. வாழ்த்துக்கள்- ஜூனியருக்கு.

    ReplyDelete
  9. //இந்த குறுகிய விடுமுறையில் பல விஷயங்களை புரிந்து கொள்ள//

    மாம்ஸ் ரொம்ப உசராகதான் இருக்கணும் போல..இந்த காலத்து பசங்க....ஹிம்.

    ReplyDelete
  10. வெல்கம் பேக்! வீட்டில் நிறைய பல்புகள் இருக்கும் போல?

    :) :) :)

    ReplyDelete
  11. இந்தக் கால குழந்தைகளிடம் பேசும் போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இதுவும் சந்தோசம் (பல்ப்...!) தானே! பதிவும் கருத்தும் நல்லா இருக்கு சார்!

    ReplyDelete
  12. சூப்பர் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அப்பாவ போல தானே புள்ளையும் இருக்கும்... ஹீ ஹீ

    ReplyDelete
  14. மாம்ஸ்... இப்பல்லாம் நீங்க எப்படி குத்தினாலும் உள்குத்துதானோன்னு பயமா இருக்கு...

    ReplyDelete
  15. இனிய காலை வணக்கம் அண்ணர்,

    புரிந்துணர்வுடன் எதையும் எடுத்துக் கொண்டால் சிரமம் இல்லை என்பதனை அனுபவ வெளிப்பாட்டின் ஊடாக அனைவரும் புரியும் படி சொல்லியிருக்கிறீங்க.

    நீங்க உங்கள் செல்ல மகனுக்குச் சொல்லியதை நாம் அனைவரும் எடுத்துக் கொண்டாலே சிரமம் இருககது!

    தங்களின் தெளிந்த மனதுடனான பதிவிற்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  16. எனக்கும் இந் நேரத்தில் கவியரசின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

    எதுவுமே நிரந்தரம் இல்லை! உண்மை அன்பு தான் நிரந்தரம் என்பது.

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  17. மாம்ஸ்..சின்ன பல்ப்பா இருந்தாலும் செம பல்ப்பு...

    ReplyDelete
  18. வணக்கம் வெங்கட் சார்!ஹாலிடே எல்லாம் ஜாலியா போச்சா?பையன் மொறைப்பப் பாத்தா எங்கயும் கூட்டிட்டுப் போவலபோல தெரியுதே?///.(பய புள்ளைக்கு 5 "அரை"வயசுதான் ஆகுது!)///அப்புடீன்னா வெறும் ரெண்டரை தானா?இந்தக்கடி கடிக்குறா(னே)ரே?

    ReplyDelete
  19. தம்பி ரொம்ப விவரமா இருக்காப்ல... மாம்ஸ் வாழ்க்கை ரொம்ப கஷ்டம் போல...

    ReplyDelete
  20. ஸ்ஸ்ஸ்ஸப்பா!
    பதிவ பார்த்தா மாம்சுக்கு எந்த நாளும் பல்புதான் போல இருக்கு! :-)

    ReplyDelete
  21. கொஞ்சம் கஷ்டம்தான் !

    ReplyDelete
  22. //Philosophy Prabhakaran

    மாம்ஸ்... இப்பல்லாம் நீங்க எப்படி குத்தினாலும் உள்குத்துதானோன்னு பயமா இருக்கு..//

    யோவ்....இதானா உன் டக்கு??? உன்ன பத்திதான்யா எழுதி இருக்காரு!!

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்
    உங்கள் பையனிடம் நீங்க பல்பு வாங்குவது சகஜம் போல தொடர்ந்து பல்பு வாங்குறீங்க

    ReplyDelete
  24. WIFE-KITTA THAN...ADI-NA..
    IPPA SON-KITTAIUMA.????

    ReplyDelete
  25. மாப்ள பல்புகள் என்ன தொடர்பதிவா ஆகிவிடும்போல் உள்ளது.

    ReplyDelete
  26. Daily பல்பு தான் போல இருக்கு...

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி