அது ஒரு டீன் ஏஜ் காலம்! -ஸ் ஸ் அபா!

வணக்கம் நண்பர்களே...


கண்டிப்பா வேற வழி இல்ல..அதாவது நான் எது எழுதினாலும்(டைப்பினாலும்!) யாரையாவது குத்துறா போல இருக்குன்னு மாப்ள பிரபா வருத்தப்பட்டாரு!...இனி முடிஞ்சவரை(!) மொக்கை போடலாம்னு(இதுக்கு முன்னாடி மட்டும்!) முடிவு பண்ணிட்டேன்...அதான் உங்களுக்கு இந்த டீன் ஏஜ் காலம் என்ற தொடரை ஆரம்பிக்கிறேன்(ஹிஹி..கொலையா கொல்லப்போறேன்!)..ஸ்டார்ட் லாஜிக் சாரி மியூசிக்!


அப்போ நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன்(சாரி பாத்துட்டு இருந்தேன் - உபயம் சிபி!)...அப்போ டைப்ரைட்டிங் கிளாஸ் ரொம்ப பிரசித்தம்...எங்கப்பாரு என்னைய டைப்ரைட்டிங் கத்துக்க சொல்லி சேத்து விட்டாரு...!


நான் தினமும் அப்பாவ கொண்டு போய் ட்ரைன் ஏத்திட்டு வந்து கிளாசுக்கு போவேன்(அவரு ட்ரைன் மூலமா வேலைக்கு போயிட்டு இருந்தாரு!)...அவரும் புள்ள நல்லபடியா கத்துக்கும்னு நம்பி சேத்தாரு!..என்னை சுத்தி பொண்ணுங்க டபடபன்னு அடிச்சி புழிஞ்சிட்டு இருக்கும்ங்க...அதாவது அந்த ஓல்டு டைப்ரைட்டர் மிஷின்கள பின்னி எடுத்து கத்துகிட்டு இருப்பாங்க...


நான் அப்போதான் asdf + lkjh ஆரம்பிச்ச காலம்...என்னடா இது எல்லாம் இம்புட்டு ஸ்பீடா அடிச்சி பழகுதுங்க(!)...நாம எதுக்கும் லாயக்கில்லயான்னு யோசிச்சி...டமால் டுமீல்ன்னு அடிக்க...கொய்யால மிஷின்ல நாலு எழுத்து உடஞ்சி போச்சி...(பாவிங்களா எனக்கு ரொம்ப ஓல்டான மிஷின கொடுத்துட்டாய்ங்க!)..

அங்கிருந்து வந்த அந்த ஓனர்(அதாங்க மிஷினுக்கு சொந்தக்காரர்!) என்னைய வெளிய போன்னு காட்டமா சொல்ல..நான்...

சார் ஆர்வகோளாரா அடிக்க போக இப்படி ஆயிடிச்சின்னு கெஞ்ச...


டேய் சத்தியமா சொல்றன்டா உனக்கு டைப்ரைட்டிங் வராது...ஒரு மாசமா இந்த எட்டு எழுத்த அடிச்சிட்டு இருக்கே...உங்க அப்பா என்னோமோ நீ பெரிசா கிழிச்சிகிட்டு இருக்கறதாகவும், லோயர் தாண்டி ஹையர் எழுதப்போறன்னு கனவு கண்டுண்டு இருக்கார்...ராஸ்கல் வெளிய போ!...உனக்கு இதெல்லாம் வராது நீ போய் கழுத மேய்க்க தான் லாயக்கு!...

இப்படி அவர் திட்டிய உடன் அங்கிருந்த எல்லா பெண்களும் என்னை பார்த்து சிரித்தனர்...ச்சே மானமே போச்சி...நான் தான் அப்பவே சொன்னனே எனக்கும் இந்த விஷயத்துக்கும் ஒத்து வராதுன்னு....

சார் எங்கப்பா கிட்ட நீங்களே சொல்லிடுங்க...

என்னன்னு!

இந்த பய புள்ளைக்கு டைப்ரைட்டிங் வராது...இவன் வேஸ்டுன்னு...!

ஓ அவ்ளோ திமிரா உனக்கு...நான் ஏன் சொல்லணும்!..வெளிய போ...என்று துரத்தி விட்டார்..!

(யோவ் துரத்துரதுன்னு முடிவு பண்ணிட்டியே அதை ஏன் எங்கப்பாரு கிட்ட சொல்ல மாட்டேன்னு அடம் புடிக்கறே..!..சரி இதை நானே டீல் பண்ணிக்கறேன்!)

இப்படியாக என்னோட டைப்ரைட்டிங் செயல் முறை படிப்பு நின்றது...ஆனா, அதை அப்பாருகிட்ட சொல்ல முடியாம(கொன்னே புடுவாரு!)...தினமும் எப்பவும் போவது போல போய் அந்த இன்ஸ்டிடுட் கீழே நூலகம் இருந்தது...அங்க உக்காந்து பேப்பர் படிக்க ஆரம்பிச்சேன்...இது ரெண்டு மாசம் தொடர்ந்தது..!

ஒரு நாளு, திடீர்ன்னு ட்ரைன் ஸ்ட்ரைக்குன்னு நான் ஸ்டேஷன்ல விட்ட அப்பாரு திரும்பி வந்துட்டாரு...சரி போற போக்குல பய புள்ளைய பாத்துட்டு போவோம்னு நேரா இன்ஸ்டிடுட் மாடிக்கு போய் இருக்காரு...

அங்க அந்த வாத்தியாரு...உங்க புள்ள இங்க வந்து ரெண்டு மாசம் ஆகுது...எங்க சுத்துறானோன்னு போட்டு கொடுக்க...அய்யனாரு கணக்கா டென்சன் ஆன அப்பாரு..இல்லையே இப்போ கூட கீழ அவனோட சைக்கிள் நிக்குதேன்னு சொல்ல...அப்போ கீழ எங்கயாவது சுத்திட்டு இருப்பான்னு அவரு சொல்ல...கீழ வந்து பாத்த எங்கப்பா, சுத்தி சுத்தி என்னைய தேட...ஒருமணி நேரம் ஆயிறிச்சின்னு நான் நூலகத்த விட்டு வெளிய வர...ஸ் ஸ் அபா...!

டேய் சைக்கிள எடு...வீட்டுக்கு போய் பேசிப்போம்!..

அது வந்துப்பா...இப்போ தான் கிளாஸ் முடிஞ்சிது..நீங்க தினமும் பேப்பர் படிக்க சொன்னீங்கயல்ல அதான் ஹிஹி...


வீட்டுக்கு போனதும் என்ன என்ன விதத்துல அடிச்சி பழகி இருப்பாருன்னு நான் சொல்லத்தான் வேணுமோ!...

கொசுறு: ஒன்னு புரிஞ்சி போச்சி...இப்படி என் பய்யன் விஷயத்துல நடந்துக்க கூடாதுங்கற கொள்கைல தெளிவா இருக்கேனுங்க...டீன் ஏஜ் காலம் தொடரும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. இதெல்லாம் வாழ்க்கைல சாதாரணமப்பா ... நாம எத்தன வாங்கியிருப்போம்.

  ReplyDelete
 2. மாப்ளே! பருவகால ஞாபகமோ?

  ReplyDelete
 3. ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

  :) :) :)

  //இப்படி என் பய்யன் விஷயத்துல நடந்துக்க கூடாதுங்கற கொள்கைல தெளிவா இருக்கேனுங்க//

  நல்ல முடிவு.

  ReplyDelete
 4. //அப்போ நான் பத்தாவது படிச்சிட்டு//

  ஓ..

  ReplyDelete
 5. //நீ போய் கழுத மேய்க்க தான் லாயக்கு!...//

  கரைட்டு

  ReplyDelete
 6. //ஒன்னு புரிஞ்சி போச்சி...இப்படி என் பய்யன் விஷயத்துல நடந்துக்க கூடாதுங்கற கொள்கைல தெளிவா இருக்கேனுங்க...//

  அதான் எங்க சின்ன மருமகன் கும்மாகுத்தா குத்தறாருல்ல நீங்க எங்க திருப்பி அடிக்கிறது..கொய்யால

  ReplyDelete
 7. மாம்ஸ் 10 வது எல்லாம் படிச்சிருக்கே...ஹிம்

  ReplyDelete
 8. நீங்க டைப்பல்லாம் செய்வீங்களோ!
  அங்கிட்டு ரொம்ப பிசியோ? யார்கூடன்னு கேட்கமாட்டேன்!!!!!
  இண்ட்லி,தமிழ்-10,உடான்ஸ் இணைப்பு கொடுத்தாச்சு.

  ReplyDelete
 9. அடி இன்னமும் வலிக்குது போல ...

  ReplyDelete
 10. Coming Soon...
  http://faceofchennai.blogspot.in/

  ReplyDelete
 11. பாஸ் சுவாரஸ்யமாக ஆரம்பிச்சு இருக்கீங்க தொடருங்க.

  இந்த தொடரில் பல கதைகள் வெளிவரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 12. வணக்கம் வெங்கட் சார்!///ஒன்னு புரிஞ்சி போச்சி...இப்படி என் பய்யன் விஷயத்துல நடந்துக்க கூடாதுங்கற கொள்கைல தெளிவா இருக்கேனுங்க...////பையன் ரொம்பவே விவரமா இருக்கான்!அதோட பையன் காலத்துல இப்புடீல்லாம் மாங்கு,மாங்குன்னு கைவலிக்க அடிக்க வேண்டி இருக்காது,கவலைப்படாதீங்க!சும்மா அப்புடியே எழுத்தப் பாத்து கையால, இல்ல பென்சிலால தொட்டா முடிஞ்சுடும்,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 13. கொஞ்சம் வயசான பிறகு எல்லா அப்பாக்களும்
  நினைக்கிற விஷயத்தை (என் மகனுக்கு இது போல
  நடக்கக் கூடாது) அழகா சொல்லியிருகீங்க...
  தொடருங்க மாம்ஸ்...

  ReplyDelete
 14. மீண்டும் வருமா இளமைக்காலம்...

  அசைபோடும் விக்கி....

  ReplyDelete
 15. அழகான பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. எனக்கென்னவோ டைப் கற்றுக்கொண்டதற்குப் பதில்
  லைப்ரரி போனது உருப்படியான விஷயமாகப் படுகிறது
  இப்போது அதுதான் ரொம்ப பயன்படுகிறது என நினைக்கிறேன்
  சுவாரஸ்யம் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. உனக்கு சைட் தானே அடிக்க தெரியும்? டைப்புமா? அவ்வ்வ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி