பயணங்களின்(Trip!) போது நாம் மிஸ்(!) செய்பவை!

வணக்கம் நண்பர்களே...
எந்த ஊருக்கு போகும் முன்பும் நாம் பல விஷயங்களை கருத்தில் கொண்டு செயல் படுவது வழக்கம்...அதை பற்றிய எனது பார்வையே இந்த பதிவு...


பொதுவாக நாம் பிறந்து வளர்ந்த ஊரில் எது கேட்டாலும் நமக்கு தெரியும் என்று சொல்வதுண்டு...ஆனால், இது முற்றிலும் உண்மை அல்ல...நம் ஊரில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும்(!)..அவை வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் நண்பர்கள் நமக்கு விவரிக்கும் போது நமக்கு சிறிய சங்கடம் ஏற்படுவதுண்டு..சரி விஷயத்து வர்றேன்...(இதுவரைக்கும் போட்டது சீன்!)
இப்போது பொதுவாக பலரிடமும் கைப்பேசியில் உலகத்தை அடக்கும் வசதி...அதாங்க GPRS மூலம் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது...இதை இன்னும் நாம் சரியாக பயன் படுத்தி கொள்ளலாம்..


அதாவது வெளி நாடுகளில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதனை இன்டர்நெட்டில் தேடி விடுகிறார்கள் இப்போது(நம் நாட்டிலும்தான்!)..இண்டு இடுக்கு எல்லாம் Google maps மூலம் எளிதாக தெரிந்து கொள்கிறோம்..


அப்படி இருப்பினும் வெளியூர் பயணங்களில் நாம் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் விரும்பி பார்க்க நினைக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள் போன்றவைகளை நாம் மெத்தனமாக கவனிக்க தவறுகிறோம்...


அதாவது நம்ம ஊருதானே நமக்கு தெரியாததா என்று நினைத்து கொள்கிறோம்...அதே வெளி நாட்டவர்கள் ஒரு இடத்துக்கு வந்து பார்த்து சென்றால்(!), அதை உடனுக்குடன் பதிவு செய்து விடுகிறார்கள்...அதாவது நமக்கு ஏற்ப்பட்ட சந்தோசம், இடைஞ்சல் போன்றவை அடுத்தவருக்கு சரியாக தெரியும் பட்சத்தில்(!) அடுத்து வருபவர்கள் தங்களை அதற்கேற்றவாறு சரி செய்து கொள்ள ஏதுவாக பதிவு செய்கிறார்கள்...


இதற்க்கு பெயர் Trip blogs என்பார்கள்...இருந்தாலும் இந்தியாவிலும் http://www.tripadvisor.in/ போன்ற தளங்கள் எளிதாக பல விஷயங்களை நமக்கு உணர்த்தும் விதமாக இருக்கின்றன...குறிப்பாக ஒரு ஊரில் என்ன என்ன இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள், எது எந்த விதத்தில் பிரசித்தி பெற்றவை போன்றவை...


இவை பெரும்பாலும் நம்மவர்கள் பயன் படுத்த தவறுகின்றனர்...மேல் தட்டு மக்கள் மட்டுமே பயன் படுத்தி வருகிறார்கள்(!)...நம்மவர்களின் எண்ணம் என்ன வென்றால்(!) இவை உண்மையோ பொய்யோ என்ற அச்சம்...உண்மையில் அந்த அச்சம் தேவையற்றது...உதாரணமாக நாம் ஒரு ஊருக்கு போய் தங்க வேண்டும் என்றால் இவ்வளவு என்று பட்ஜெட் வைத்து இருப்போம்(!)...அதற்க்கு தகுந்தாற்போல இருக்கும் ஹோட்டல்களை நாம் புக் செய்து கொள்ளலாம்..
அதே போல ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்..அந்த உணவு தரமானதாக இருந்ததா(நம் காசுக்கு!)...என்ன குறை போன்றவைகளை நாம் பதிவு செய்வதில்லை...கேட்டால் அவர்களிடம் வெப் சைட்டு இல்லை என்போம்..அதே பல இடங்களில் லோக்கல் உணவுகளை சாப்பிடும் வெளி நாட்டவர்கள்(!) அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து விட்டு செல்கிறார்கள்...இந்த Expat blogs என்ற பெயர் கொண்ட தளங்களில்..


இவை உதாரணதுக்கு வியட்நாமில் மிகுதி(இங்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க!)...அதாவது இன்று இங்கு சென்றோம் உணவு எப்படி இருந்தது...சர்வீஸ் எப்படி போன்ற விஷயங்களை பகிர்ந்து விட்டு செல்கிறார்கள்...இவற்றில் குறைகளும், நிறைகளும் சம அளவில் உண்டு...அவற்றை ஏற்று கொள்ளும் பக்கும் உணவு விடுதிகளை நடத்துபவர்களிடம் உண்டு...குறிப்பாக ஒரு உணவு விடுத்தது நமது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் அவற்றை தடை செய்து இருந்தால்(!)...அந்த உணவு விடுதிக்கு மக்கள் செல்வது தானாகவே குறைந்து விடும்..நாமும் வரும் காலங்களில் மேற்கொள்ளும் பயணத்தின் போது நமக்கு ஏற்ப்படும் அனுபவங்களை குறைந்தது நம்ம தளத்திலாவது பகிர வேண்டும் என்ற ஆவலுடன் எழுதப்பட்ட பதிவு இது...(பாத்துப்பா சைட் அடிச்ச பிகர் விஷயம்லாம் எழுதி மாட்டிக்காதீங்க ஹிஹி!)


சில விஷயங்கள் எனக்கு தோன்றியவை..


நாம் பயணம் செய்த இடங்களில் சந்தித்த சாதனைகள் மற்றும் சோதனைகள்...


குறிப்பாக அந்த இடத்துக்கு எந்த மாதிரி பயணம் உகந்தது..


எவ்வாறு சென்றால் பணம் மிச்சப்படும்..


என்ன மாதிரி உணவுகள் கிடைக்கும்...


இப்படி உங்களுக்கு தோன்றியவைகளை சொல்லுங்கள்...


கொசுறு: எனக்கு தோன்றியதை எழுதி இருக்கிறேன்...உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீர்கள்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. நம் அனுபவ குறிப்புகள் மற்றவர்களும் அறிய குறிப்பிடுவது அவசியமே.....

  ReplyDelete
 2. இதுவும் நல்லாத்தான் இருக்கு ....நான் ஏற்கனேவே ஆரம்பித்து விட்டேன்

  ReplyDelete
 3. நீங்க சொல்லரது சரிதான், முதல்ல நாம update பன்ன ஆரம்பிப்போம்,

  ReplyDelete
 4. மாப்ள மொழி தெரியாத ஊரில் நாம் ஏமாறும் வாய்ப்பு அதிகம் என்றே அநேகம் பேர் அச்சப்படுகிறார்கள்.

  ReplyDelete
 5. நானும் ரொம்ப நாளா இத பண்ணனும்’னு நெனச்சிட்டு இருக்கேன். இதன் மூலம் பலர் பயனடைய முடியும். சரியான விடயம் தெரியாமல் பலர் Guideகளிடம் ஏமாறுகிறார்கள்.

  ReplyDelete
 6. தமிழ்ல இருக்கு மாம் நம்ம மக்கா அங்கயெல்லாம் போகமாட்டாங்க....!இருந்தாலும் பயனுள்ள விசயத்தை சொல்லியிருக்கிங்க.....நன்றி!

  ReplyDelete
 7. GPRS சாதாரண மக்களை சேர நாட்கள் ஆகும் மாம்ஸ்!

  ReplyDelete
 8. நல்ல வியடங்கள் பாஸ் நீங்கள் சொன்ன மாதிரி எமது வலையிலாவது எழுதலாம் இதனால் பலருக்கு பயன்படும்.

  ReplyDelete
 9. வணக்கம் வெங்கட்!மொத்தத்துல பயணக்கட்டுரை எழுதுறதுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கீங்க.பயபுள்ளைங்க ஆரம்பிச்சிருப்பாங்க,தூசி தட்டி எழுத!ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 10. பயனுள்ள விசயத்தை பகிர்ந்துள்ளீர்கள்..வாசித்தேன் வாக்கிட்டேன்..

  திராவிட தீபம் தோன்றியது

  ReplyDelete
 11. இது கடைபிடிக்க வேண்டிய ஒன்று நானும் முயற்சிக்றேன்

  ReplyDelete
 12. அட புதுமுயற்சியாய் இருக்கே. ஆரம்பிச்சுட வேண்டியதுதான். நல்ல பகிர்வு நண்பரே

  ReplyDelete
 13. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆலோசனை. குட்.

  ReplyDelete
 14. பல பேர் பயணகட்டுரை எழுத அட்வைஸ் பண்ணி இருக்கீங்க. ம்ம்ம் யார் யாரெல்லாம் எழுதி இம்சிக்க போறாங்களோ

  ReplyDelete
 15. பயணத்தை நன்கு அனுபவிக்க தகுந்த ஆலோசனைகளை அழகாச் சொல்லியிருக்கீங்க, மாப்ஸ்.

  ReplyDelete
 16. >>கொசுறு: எனக்கு தோன்றியதை எழுதி இருக்கிறேன்...உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீர்கள்...!

  &&&&&&&&&&&&&&&&******************%%%%%%%%%%%%%%%%%###############################

  ஹி ஹி ஹி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி