கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!

வணக்கம் நண்பர்களே...


இன்னைக்கு காலையில கூகுள்காரனுக்கு எதோ வரப்பு பத்திய கவலை வந்துடுச்சி போல...திடு திப்புன்னு என்னன்னமோ பண்ண ஆரம்பிச்சிட்டான்!...பல நண்பர்களின் சோகத்திலும் இது தெரிகிறது...இதை நம்ம ஆளுங்க எப்படி எடுத்துக்கறாங்க...பாருங்க..

சிபி: அய்யோ போச்சே போச்சே...

விக்கி: டேய் சிபி என்ன ஆச்சி...

சிபி: எல்லாம் போச்சி...கஷ்டப்பட்டு கைய புடிச்சி இழுத்து வர வச்ச அலெக்சா போச்சே..

விக்கி:  அடப்பாவி இதுக்கு ஏன் இம்புட்டு டென்சன் ஆகுற!..என்னைய பாரு...

சிபி: டேய் நாதாரி!...உனக்கென்ன கண்ட கருமத்தையும் எழுதுவ...நான் அப்படியா...எனக்குன்னு எம்புட்டு நண்பர்கள் தெரியுமா...இதுவரைக்கும் பட்ட கஷ்டம்லாம் போச்சி...

மனோ: சரி விடுறா...போயிட்டு போகுது...உன் மூளைக்கு நீ மீண்டும் எழுந்து வருவடா!

சிபி: எலேய் நீ பேசாத...உனக்கென்ன திடீர்னு வருவ...கொஞ்ச நாள் போயிடுவ...நான் அப்படியில்ல...எம்புட்டு கஷ்டப்பட்டு தினமும் ரெண்டு மூணு பதிவை போடுறேன் தெரியுமா!...

விக்கி:  ஆமாம் இவரு போடறது எல்லாம் ஜோக்கா...சிரிப்பே வர மாட்டேங்குது...


சிபி: எங்க நீ போடு பாப்போம்..அடுத்தவங்களை கிண்டல் பண்றது ஈசி அதே போல உன்னால எழுத முடியுமா...

விக்கி:  ஹே ஹே...இது எனக்கு தொழில் அல்ல உனக்கு தான்!...நான் நாளைக்கே துண்ட உதறி தோள்ல போட்டு கிட்டு போயிட்டே இருப்பேன்..

மனோ: அதானே...விட்ரா எப்படியாவது சீக்கிரத்துல சரியாயிடும்...

விக்கி:  அடேய் ஆகாதுன்னு நெனைக்கிறேன்..எனக்கு வந்த தகவல் படி இனி திரட்டிகள்ல நம்ம ஓசி பிளாக்கை இணைக்கு முடியாதாம்..

சிபி: ஏன்...

விக்கி:  ரொம்ப நாளா கூகுள்காரேன் பாத்திட்டு இருந்திருப்பான் போல...நம்ம ஓசில ப்ளாக்கை கொடுத்தா அதை வைச்சி வேற யாரோ சம்பாதிக்கராங்கன்னு டென்சன் ஆயிட்டான்...!

மனோ: அதால...

விக்கி:  அதால இனி .Com மட்டும் தான் திரட்டில இணைக்க முடியும்னும் சொல்றாங்க...கூகுள்காரனே ஒரு திரட்டிய செயல் பாட்டுக்கு கொண்டுவரப்போறானாம்...

சிபி: இதை முதல்லையே செய்ஞ்சி தொலைச்சி இருக்கலாம்ல...

விக்கி:  ஹிஹி...அதெப்படி கொஞ்ச நாளைக்கு ஆடட்டும்னு விட்டான்...இப்போ அடிக்கறான்...

சிபி: இதுல நாம என்ன தப்பு பண்ணோம்...சரி வேணும்னா "காம்" ன்னு மாத்திப்புடலாமா!

விக்கி:  அதுவும் ஒரு டவுட்டு இருக்கு...அப்புறம் அதுலயும் ஏதாவது மாற்றம் கொண்டுவருவானொன்னு நம்ம பய புள்ளைங்க பயப்படுது...

சிபி: மவனே என்னோமோ போங்கடா...இனி என்ன ஆகப்போகுதோ...

விக்கி:  ஹஹா ஒன்னும் ஆகாது...இனி ரேஸ் குதிரைய கூகுள்காரன் தான் முடிவு பண்ணப்போறான்னு நெனைக்கறேன்...

சிபி: ஸ் ஸ் அபா...இம்புட்டு நாள் எவ்ளோ பொறுமையா இருந்தேன்...ச்சே அதுக்கு ஒண்ணுமே பயன் இல்லாம போச்சே...

மனோ: கிடைக்கறது கெடைக்காம போகாது...கண்டிப்பா ஒரு நாளு கெடைக்கும் விடு...

சிபி: பாப்போம்...

மனோ: இனி பிட்டு விமர்சனத்தை ப்ளோக்ல தடைப்பண்ணிட்டா என்ன பண்ணுவ...

சிபி: உன் வாய பினாயில் ஊத்தி கழுவு..கொய்யால!...எப்ப பாரு ஏதாவது சொல்லி வவுத்துல புளி கரைக்கறதே பொழப்பா போச்சி உனக்கு...

விக்கி: விட்ரா...பாக்கத்தானே போறோம்...

மனோ: டேய் இப்போ லேப்டாப்ப வாங்கிட்டேன்...இப்போ நான் என்ன செய்யிறது...

விக்கி: ஹிஹி...இப்போதைக்கு படத்தையாவது பாரு...அப்புறம் எல்லாம் சரி ஆனதுக்கப்புறம் பதிவா போடு...

மனோ: போடாங்க... 


என்னமோ நடக்குது மக்களே...எனக்கு தான் சரியா விளங்கல!

கொசுறு: வந்தது தெரியும் போவது எங்கே...போனால் போகட்டும் போடா...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. மாப்ள ஏனிந்த கொலவெறி தாக்கு.

  ReplyDelete
 2. மாப்ள கடைசில ஒரு பாட்டு வரி போட்டிருக்கீங்க பாருங்க. அதான் உண்மை.

  ReplyDelete
 3. கூகுல் திரட்டி வந்தால் நல்லது ஆனால் அது பிளஸ் மாதிரி வருமாமே...அதுல ஓட்டுபட்டை தகரடப்பாவையெல்லாம் வைக்க முடியாதாமே! பாவம் இனி இதவெச்சு பொழைச்சவங்க பழைய படி மாடு மேய்க்கத்தான் போகனுமா!

  ReplyDelete
 4. இன்னிக்கு உங்களுக்கு இடிக்க கூகுள் கெடச்சிட்டான் போல மாம்ஸ்.அடிச்சி முடிச்சதும் இங்கிட்டு அனுப்பி வைங்க நாங்கள் பொழச்சுக்கிறோம்!!


  அருமை பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அப்ப இனி தமிழ்மணத்துக்கு ஆப்பா ?

  ReplyDelete
 6. மச்சீ... ஓபன் த பாட்டில்.....

  கூல் பாய்ஸ்.....

  டாட் இன் மட்டுமே மாற்றமாய் இருக்கட்டும். வேற மாற்றங்கள் வந்துற கூடாதுன்னு அந்த கூகிள் ஆண்டவரை வேண்டுவோம்....

  ReplyDelete
 7. அதிரடி மாற்றத்தை வைத்து ஒரு மொக்கை போட்டு இருக்கிறீங்க அருமை

  பாஸ் இதைவிட இன்னும் பல மாற்றங்கள் வரப்போகுதுனு பேசிக்கிறாங்க ஒன்னுமே புரியலை

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது சரி
  என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
  என்கிற பாட்டின் முதல் அடியும் ஏனோ
  ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது

  ReplyDelete
 9. தொந்தரவிற்கு மன்னிக்கவும்
  வெகு நாட்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்
  தயவுசெய்து ஏதேனும் வேலை செய்தியிருந்தால் தெரியப்படுத்தவும்
  மிகவும் கஸ்டப்படுகிறேன், உங்களால் முயன்ற உதவிசெய்யவும்
  எந்த நாட்டில் வேலையென்றாலும் எந்த வேலையென்றாலும் சொல்லுங்கள்

  4yrs Exp BPO Operations
  1 yr Exp in Desktop Support Engineer
  Life Insurance
  Health Care Adjudication

  Career Knowledge:
  Trained and managed 100+ people in various onshore site.
  Handled daily compliance and Prepared MIS Reports
  Maintained the MIS Report on process condition and reporting into customer.
  Processing Monthly reconciliation on Billing reports, Quality Reports
  Maintaining the month wise billing reports on onshore site, planning
  Attendance and shift details for the Team.
  Certifications: Diploma in Hardware and networking, VB Dot Net. MS-Office

  Software Languages: Visual Basic, C & basic SQL Queries
  Having experience in Garments Sales and marketing by helping dad business

  Part time Experience:
  Experience in Medical Shop and good knowledge in medicines,
  Worked in Doordharsan Podthigai Tv as Assist Programs Producer
  Worked in Money Exchange also

  Thanks & Regards
  Syed Musthafa.K
  Mobile: +91- 98425 54215

  ReplyDelete
 10. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
  இருட்டில் நீதி மறையட்டுமே...
  தன்னாலே வெளிவரும் தயங்காதே...
  ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...
  பவர் ஸ்டார் என்னும் தலைவன் இருக்கிறான் கலங்காதே....

  ReplyDelete
 11. ராம்சாமி சார், சந்தடி சாக்கில பவர்ஸ்டார் புகழ் பரப்பிட்டீங்க. அப்படியே சிபிக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கக்கூடாது!

  ReplyDelete
 12. வணக்கம் வெங்கட்!///என்னமோ நடக்குது மக்களே...எனக்கு தான் சரியா விளங்கல!///ஒண்ணுமே இல்ல.கூட்டம் சேக்கிறாங்க,அம்புட்டுத்தான்!

  ReplyDelete
 13. மாம்ஸ் - என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியலே...

  ReplyDelete
 14. நல்லா கலாய்க்கிறீங்க சார் ! ஹா ஹா ..... Blogger-இதுவும் கடந்து போகும்... போகட்டும். நன்றி நண்பரே !

  ReplyDelete
 15. வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுரியா....

  ReplyDelete
 16. http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

  ReplyDelete
 17. பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. வணக்கம் அண்ணா,

  நன்றாக கலாய்த்து மும் மூர்த்திகளையும் கடிச்சு எழுதியிருக்கிறீங்க.

  கூகிள் திரட்டி பற்றிய தகவல் புதியதாக இருக்கிறது.

  பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 19. எலிக்கு மரண வலியாம்,பூனைக்கு கொண்டாட்டமாம்

  ReplyDelete
 20. வித்தியாசமான கற்பனையில், உண்மை நிகழ்வை எழுதியமை ரசிக்கும்படி இருந்தது. ஆனால் சி.பி செந்தில்குமாரின் நிலைமை உண்மையிலேயே வருந்தக்கூடியதுதான். உச்சத்தில் இருந்தவர் திடீரென தலைகீழாக 'தொபுக்கடீரென' விழுந்தால் எப்படி இருக்கும். அந்த நிலைமைதான்.. நண்பர் தனபாலன் சொல்வதைப் போல இதுவும் கடந்து போகும். விரைவில் அவரது வலைப்பூவின் தரம் பழைய நிலையை அடையும். அவரைப்போன்ற மற்ற பிரபல பதிவர்களுக்கும்தான். தரம் என்றுமே நிரந்தரம்தானே..!!!

  ReplyDelete
 21. பிளாக்கை பொழுதுபோக்காய் நினைத்தவர்களுகு ஒரு பிரச்சனையும் இல்லை.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி