பில்லி, சூனியம் பெரும்பகை அகல!~ What to do?

வணக்கம் நண்பர்களே...
இரண்டு நாட்களுக்கு முன் என்னிடம் பேசிய நண்பன் தன் வாழ்வின் வலிகளை சொல்லிக்கொண்டு வந்தான்..அந்த நேரத்தில் அவனிடம் இருந்த போனை வாங்கி பேசத்தொடங்கிய தங்கை(நண்பனின் மனைவி!) இதற்க்கெல்லாம் நண்பனின் தந்தை தான் காரணம் என்று சொல்லி கொண்டு இருந்தாள்...!


முதலில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்று எளிதாக விஷயத்தை உள்வாங்கிக்கொண்டு இருந்த எனக்கு அவள் சொல்லிய விஷயங்கள் யோசிக்க வைத்தன...அவை உங்கள் பார்வைக்கு..


சொல்லும்மா ரமா...நீ எப்படி எல்லா பிரச்சனைக்கும் உங்க மாமனார் தான் காரணம்னு சொல்ற...பாவம்மா அவரு உங்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாதுன்னு ஊருல இருக்காரு அவர போய்...


அண்ணே தெரியாம பேசாதீங்க...அவரு என் மாமியார் இங்க வரும்போது, அவங்களோட பையில செய்வினை செய்ஞ்சி வெச்சி அனுப்பி இருக்காரு...அவங்களும் கொண்டாந்து வீட்ல அந்த பைய போட்டுட்டு போயிட்டாங்க கொஞ்சம் மாசங்களுக்கு முன்னால...நானும் திரும்ப அவங்க வரும்போது எடுத்து கொடுக்கலாம்னு விட்டுட்டேன்...


அந்த பைல அப்படி என்ன இருந்தது...ஒரு பேப்பர்ல சுத்தப்பட்ட எலுமிச்சை பழம்...அதூனட ஒரு கருப்பு கம்பி சொருகப்பட்டு இருந்தது...நாங்களும் இந்த 6 மாசமா ரொம்ப கஷ்டப்பட்டோம்..


ஏம்மா, அதனால தான் கஷ்டம்னு...
அண்ணே, நல்லா வேலைக்கு போயிட்டு இருந்த இவருக்கு வேலை போயிருச்சி..திடீர்னு குழந்தை ரத்த வாந்தி எடுத்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணோம்..டாக்டருங்களால என்ன பிரச்சனன்னு கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியல...


சரிம்மா அதுக்கும், இதுக்கும்....


கேளுங்க...அதுக்கப்புறமா ஒருத்தங்க மூலமா என்னோட கஷ்டத்த சொல்லிட்டு இருக்கும் போது அவங்க ஒரு கோயில்ல குறி சொல்ற ஒருத்தர்கிட்ட போக சொன்னாங்க...நானும் நம்பிக்கையோட போனேன்...அவர் ஒரு அலி(!)...அவர் சொன்னாரு இந்த மாதிரி உன் கணவர் அவோரோட அப்பாவ மதிக்காததால செய்வினை செய்ஞ்சி வச்சி இருக்காங்க...அப்படின்னு...


சரிம்மா எவ்ளோ துட்டு கொடுத்தே...


அவரு துட்டு எதவும் வாங்குறதில்ல...அதுவும் இல்லாம அவர் சொன்னது போலவே வீட்ல வந்து பாத்தா...இவரோட அம்மா கொண்டாந்து போட்ட பைல இப்படி எல்லாம் இருக்கு, அதுவும் இல்லாம ஒரு தாயத்து வேற இருந்தது..


சரிம்மா இப்போ அத எல்லாம் எடுத்திட்டியே...இப்போ எப்படி இருக்கு...
இப்போ தானா இவருக்கு மீண்டும் நல்ல வேல கெடச்சிருக்கு...கொஞ்ச நாளா பைத்தியம் பிடிச்சது போல இருந்தாரு...உங்க கிட்ட கூட பேச மறுத்தாரு!...நான் வேலைக்கும் போயிகிட்டு 3 வயசு குழந்தையையும் சமாளிச்சிக்கிட்டு இந்த இன்னலெல்லாம் பாத்தேன்...இந்த வயசான காலத்துல எப்படி எல்லாம் பண்றாங்கன்னா...நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் இது நிஜம்...


சரிம்மா இனியாவது நல்லதா நடக்கட்டும்...


எப்படின்னா நல்லது நடக்கும்...போன் பண்ணி இவர ஊருக்கு வா வான்னு கூப்பிடுறாங்க...கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் பித்து புடிச்சது போல இருந்த இவர...திரும்ப நல்ல நிலைமைக்கு கொண்டு வர நான் போகாத கோயிலில்ல...அப்போ யாரும் வரல..இப்போ இவரோட அப்பாவும் அம்மாவும் இவர மீண்டும் முன்ன போல ஆக்க கூப்பிடுறாங்க...இவரும் போகணும்னு அடம் பிடிக்கிறார்...நீங்களாவது அட்வைஸ் பண்ணுங்க...


இதற்க்கு பிறகு அவனிடம் பேசி இப்போதைக்கு ஊருக்கு பணம் மட்டும் அனுப்பி அமைதியா இருக்க சொன்னது தனிக்கதை...
கொசுறு: இப்படி என் சிறுவயதில் என் அக்காவுக்காக சென்னையிலிருந்து மாங்காடு செல்லும் வழியில் உள்ள "பட்டு" எனும் ஊருக்கு என் அக்காவோடு சென்று இருக்கிறேன்...நானும் இந்த கொடுமையை அனுபவித்திருக்கிறேன்..இந்த விஷயங்கள் எந்த அளவுக்கு உண்மை உங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்! 


மிச்சம்: நல்லதை நம்ப மறுப்பவர்கள் கூட கெட்டதை நம்புகிறார்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

39 comments :

 1. நாலவது பில்லி சூன்யம்...

  ReplyDelete
 2. உங்க வியட்நாமில் பில்லி சூனியம் எப்படி வைப்பாங்க...

  சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.

  ReplyDelete
 3. பில்லி சூன்யம் எல்லாம் பொய்...அப்படி ஒன்று இருந்தால் அம்பானியின் எதிரிகள் பயன்படுத்தி அவரை ஏழையாக்கியிருக்கலாமே? பாம்பாட்டி...சொல்லுவான் எங்கிட்ட குட்டி இருக்குன்னு கூட்டம் கலைஞ்சபின்னாடி 18 வயது குட்டி அவன் பொண்டாட்டியா இருக்கும்......

  ReplyDelete
 4. Ithu ellam duuppu.......
  Periyar thaan toppu.........

  ReplyDelete
 5. @veedu
  " veedu said...
  நாலவது பில்லி சூன்யம்.."

  >>>>>>>

  யோவ் முதல்லயே நீர் தான் ஹிஹி!

  ReplyDelete
 6. ஹா ஹா நீங்களுமா இதெயெல்லாம் நம்புறீங்க?

  ReplyDelete
 7. @தமிழ்வாசி பிரகாஷ்

  “தமிழ்வாசி பிரகாஷ் said...
  உங்க வியட்நாமில் பில்லி சூனியம் எப்படி வைப்பாங்க...

  சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.”

  >>>>

  இங்கன எடுக்கரது மட்டும் தான் ஹிஹி!

  ReplyDelete
 8. ” veedu said...
  பில்லி சூன்யம் எல்லாம் பொய்...அப்படி ஒன்று இருந்தால் அம்பானியின் எதிரிகள் பயன்படுத்தி அவரை ஏழையாக்கியிருக்கலாமே? பாம்பாட்டி...சொல்லுவான் எங்கிட்ட குட்டி இருக்குன்னு கூட்டம் கலைஞ்சபின்னாடி 18 வயது குட்டி அவன் பொண்டாட்டியா இருக்கும்......”

  >>>>>>>>

  மாப்ள..கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 9. ராஜி said...
  ஹா ஹா நீங்களுமா இதெயெல்லாம் நம்புறீங்க?

  >>>>>>>>>.

  வருகைக்கு நன்றி சகோ...எப்படி சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும் போது அதை கடவுள் எனும் பொருள் கொள்கிறோமோ...எப்படி நல்லது என்று ஒன்று உண்டோ அதைப்போல தீயது இருக்குமோ என்ற டவுட்டு தான் இது!

  ReplyDelete
 10. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?

  சிலருக்கு இம் மாதிரியான விடயங்களில் அதிகளவான நம்பிக்கை உண்டு, எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம், எங்கள் ஊரின் சில பகுதிகளில் இப்போதும் கோயில் வைத்து சாமியாட்டுவது எல்லாம் செய்து, பேய் விரட்டி நெறைய சம்பாதிக்கிறாங்க.

  ReplyDelete
 11. பதிவுலகில் எல்லாருக்கும் பில்லி சூன்யம் வைக்கற ஒரு ஆள் அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கு ஹி ஹி

  ReplyDelete
 12. வணக்கம் வெங்கட் சார்!இதுவெல்லாம் சும்மா!எல்லாத்துக்குமே காரணம் மனசுதான்!நல்லதாவே எதையும் நினையுங்க.எல்லாம் சரியாப் போகும்!!!

  ReplyDelete
 13. உங்கள் நண்பனின் மனதைக் கரைத்திருக்கிறீங்க. நல்ல முயற்சி.

  ஆனால் இப்படியான நம்பிக்கைகளுள் அகப்பட்டவர்களை எளிதில் கரைக்க முடியாது / ஒரு வழிக்கு கொண்டு வர முடியாது.

  ReplyDelete
 14. மனோ அண்ணா பேய் பிசாசுன்னு பதிவு போடுறாரு. நீங்க பில்லி சூன்யம் பத்தி போடுறீங்க. என்னதான் ரெண்டு பேரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said...
  பதிவுலகில் எல்லாருக்கும் பில்லி சூன்யம் வைக்கற ஒரு ஆள் அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கு ஹி ஹி//

  அட்ரா....அட்ரா....அட்ரா...
  இது தான் அட்ராசக்கவா?
  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 16. சி.பி.செந்தில்குமார் said...

  பதிவுலகில் எல்லாருக்கும் பில்லி சூன்யம் வைக்கற ஒரு ஆள் அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கு ஹி ஹி/////வணக்கம் சி.பி சார்!இதெல்லாம் நல்லால்ல ஆமா,சொல்லிப்புட்டேன்!

  ReplyDelete
 17. @நிரூபன்

  " நிரூபன் said...
  வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?

  சிலருக்கு இம் மாதிரியான விடயங்களில் அதிகளவான நம்பிக்கை உண்டு, எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம், எங்கள் ஊரின் சில பகுதிகளில் இப்போதும் கோயில் வைத்து சாமியாட்டுவது எல்லாம் செய்து, பேய் விரட்டி நெறைய சம்பாதிக்கிறாங்க."

  >>>>>>>>>

  வணக்கம் நிரூ..

  பணம் என்பதை விடுத்து பயம் எனும் விஷயம் உள் செல்வதே இதற்க்கு காரணம் என்று கொள்ளலாமோ!

  ReplyDelete
 18. டேய் வியட்நாமுக்கு வந்த பேய் எந்த பாஷையை பேசிச்சுன்னு கேட்டியா...??

  ஜிஒஎப்வெஹெஜிஒ ப்ப்ப்வாப் இஉஹ௯வ௮௭ ௮௭௨௪த௭எப்ஜ்

  இப்பிடித்தான் பேசுச்சு...?

  ReplyDelete
 19. ” சி.பி.செந்தில்குமார் said...
  பதிவுலகில் எல்லாருக்கும் பில்லி சூன்யம் வைக்கற ஒரு ஆள் அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கு ஹி ஹி”

  >>>>>

  எலேய் நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவே ஹிஹி இருடி இருக்கு உனக்கு!

  ReplyDelete
 20. ராஜி said...
  மனோ அண்ணா பேய் பிசாசுன்னு பதிவு போடுறாரு. நீங்க பில்லி சூன்யம் பத்தி போடுறீங்க. என்னதான் ரெண்டு பேரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.//

  ரெண்டுபேரும் அம்பது தோப்புகரணம் போடுறோம் தங்கச்சி பிரம்பை முதல்ல கீழே போடு...

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் says: January 9, 2012 3:55 PM Reply
  பதிவுலகில் எல்லாருக்கும் பில்லி சூன்யம் வைக்கற ஒரு ஆள் அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கு ஹி ஹி//

  அய்யே ஜோக்கடிக்குராராம் கி கி கி கி கி சிரிச்சுட்டேன் போதுமாடா அண்ணே...

  ReplyDelete
 22. ”Yoga.S.FR said...
  வணக்கம் வெங்கட் சார்!இதுவெல்லாம் சும்மா!எல்லாத்துக்குமே காரணம் மனசுதான்!நல்லதாவே எதையும் நினையுங்க.எல்லாம் சரியாப் போகும்!!!”

  >>>>>>>>

  வருகைக்கு நன்றி சார்...உங்களுடைய பதில் புரிகிறது..இது ஒரு வித இனம் புரியாத நிலை...அதுவும் தனியே பல இன்னல்களை சந்திப்போர் இதை சொல்ல கேட்டிருக்கிறேன்..எனக்கு இதில் புரிதல் குறைவு...என் அக்கா சொன்னதால அப்படியே ஏற்று கொண்டேன் அது ஒரு காலம்..இப்பொழுது தங்கை ஒருத்தி சொல்லும்போது ஒரு வித சந்தேகத்துடன்(பயம் அல்ல!) இருந்தது அவ்வளவே ஹிஹி!

  ReplyDelete
 23. ” நிரூபன் said...
  உங்கள் நண்பனின் மனதைக் கரைத்திருக்கிறீங்க. நல்ல முயற்சி.

  ஆனால் இப்படியான நம்பிக்கைகளுள் அகப்பட்டவர்களை எளிதில் கரைக்க முடியாது / ஒரு வழிக்கு கொண்டு வர முடியாது.”

  >>>>>>>>

  அது என்னவோ சரிதான் நிரூ...ஒரு முறை இந்த கிணற்றில் விழுந்தால் அம்புட்டு தான் போல ஹிஹி!

  ReplyDelete
 24. ”MANO நாஞ்சில் மனோ said...
  டேய் வியட்நாமுக்கு வந்த பேய் எந்த பாஷையை பேசிச்சுன்னு கேட்டியா...??

  ஜிஒஎப்வெஹெஜிஒ ப்ப்ப்வாப் இஉஹ௯வ௮௭ ௮௭௨௪த௭எப்ஜ்

  இப்பிடித்தான் பேசுச்சு...?”

  >>>>>>

  எலேய் பதிவை ஒழுங்கா படி...கொய்யாலா உளராதே ஹிஹி!

  ReplyDelete
 25. //நல்லதை நம்ப மறுப்பவர்கள் கூட கெட்டதை நம்புகிறார்கள்!//


  உண்மை தான்.


  ஆனா சமீபத்துல பில்லி சூன்யம்“னு பல பதிவுகள் வர ஆரம்பிச்சுருக்க மாதிரியிருக்கே..

  ReplyDelete
 26. ” ராஜி said...
  மனோ அண்ணா பேய் பிசாசுன்னு பதிவு போடுறாரு. நீங்க பில்லி சூன்யம் பத்தி போடுறீங்க. என்னதான் ரெண்டு பேரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.”

  >>>>>>>>

  இல்லை சகோ..உண்மையில் இது ஒரு உள்வியல் ரீதியிலான சங்கடம் அவ்வளவே...அதுவும் நமக்கு தெரிந்தவர்கள் சொல்லும்போது...எதிர்த்து சொல்லுவதும் சில நேரத்தில் நடப்பதில்லை ஹிஹி!

  ReplyDelete
 27. இந்திரா said...
  //நல்லதை நம்ப மறுப்பவர்கள் கூட கெட்டதை நம்புகிறார்கள்!//


  உண்மை தான்.


  ஆனா சமீபத்துல பில்லி சூன்யம்“னு பல பதிவுகள் வர ஆரம்பிச்சுருக்க மாதிரியிருக்கே..ப

  >>>>>

  வருகைக்கு நன்றி சகோ..அடடா இது எப்போல்ல இருந்து ஹிஹி...!

  ReplyDelete
 28. பேய், பிசாசு, பில்லி சூணியம் இதெல்லாம் யாரும் வைக்க வேண்டியதில்லே, நாமலேதான் வச்சுகறோம், நம்மல சுத்தியே மனுசஙக ரூபத்துல இருக்கு...

  ReplyDelete
 29. எனக்கு பிடித்தவை said...
  பேய், பிசாசு, பில்லி சூணியம் இதெல்லாம் யாரும் வைக்க வேண்டியதில்லே, நாமலேதான் வச்சுகறோம், நம்மல சுத்தியே மனுசஙக ரூபத்துல இருக்கு...

  >>>>>>>>>

  ஸ்ஸ் சகோ அப்போ நீங்க சூப் பாய்ஸ்ஸ சொல்லல இல்ல ஹிஹி!@

  ReplyDelete
 30. பெத்த அம்மா அப்பா எங்கயாவது புள்ளக்கி செய்வினை வைப்பாங்களா?

  எல்லாம் மனசு தான்னே.

  ReplyDelete
 31. மாம்ஸ் இந்த விசயத்தில் எனக்கு கொஞ்சம் அல்ல ரொம்பவே குழப்பம் இருக்கு.

  பின்னூட்டங்களை கவனமாக படிக்கிறேன் (என்னை தெளிவு பண்ணிக்கத்தான்)

  ReplyDelete
 32. என்னமோ போங்கப்பா, ஆனா மக்களை நல்லா பயமுறுத்தி வெச்சிருக்காங்க. சமயங்கள்ல வைத்தியம் பண்ணா சரியாக கூடியதுக்கும் இதெல்லாம் பண்ணிக்கிட்டு.......

  ReplyDelete
 33. முற்போக்கு பதிவுபோல இருக்கே..

  வாக்கிட்டேன்..


  கொக்கரக்கோ

  ReplyDelete
 34. பேய்,பில்லி, சூனியம் பெரும்பகை அகல-பெரியாரை படிங்க.

  ReplyDelete
 35. நல்லதை நம்ப மறுப்பவர்கள் கூட கெட்டதை நம்புகிறார்கள்!

  அதுதான் மிச்சம்..

  ReplyDelete
 36. இப்ப தான் ஒரு பில்லி என்னை க்ராஸ் பண்ணிட்டு போச்சு! இப்ப அது அங்க இல்ல! ஒரு பில்லி ஒரு இடத்துல இருந்து போயிடுச்சுன்னா, காலியா இருக்கும்ல -அதுதான் பில்லி சூன்யமோ?

  ReplyDelete
 37. நம்பிக்கை வாக்கெடுப்பா!

  ReplyDelete
 38. அட ஒரு சூப்பர் காமடி பார்த்தாச்சு இனி ஒரு ரெறரான பேய் படம்(பாடம்) பார்ப்பம்.

  ReplyDelete
 39. niraiya per ippadi than irukkanga yenga eppaddi oru kodu seiyala seiringa

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி