ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - 1)

வணக்கம் நண்பர்களே.......

இந்த தொடர் பல உண்மைச்சம்பவங்களின் தொகுப்பே.......இதில் வரும் பல விஷயங்கள் வித்தியாசமாக இருந்தால் அதை பெரிது படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்(!)..........

இந்த மனிதனின் டைரி பேசுவதை கேளுங்கள்......

தமிழ் எனும் இளைஞ்சன் பயிற்சி முடித்து எல்லை பாதுகாப்பு படையில இணைந்த நேரம்......பல கனவுகளுடனும், தேசியப்பற்று எனும் வெறியுடனும் தன் வாழ்கையின் அடுத்த அத்தியாயத்தை எடுத்து வைக்க ஆரம்பித்தான்..........அதுவரை வீட்டில் முதல் மகன் அதனால் தாய், தந்தை அவனை இந்த அர்ப்பணிப்பு விஷயத்துக்கு அனுப்ப விரும்பவில்லை....வீட்டில் அனைவரிடம் பெரிய வாக்குவாதம் செய்து இந்த நாட்டு சேவைப்பணிக்கு சேர்ந்தான்.........

இனி ஆரம்பம்..........

காலையில பரேடு முடிந்தது........தினமும் பல கிமி ஓடி வரவேண்டும்......அதுவே உடல் பயிற்ச்சியின் முதல் தகுதி...........அந்த இடம் மிதமான குளிர் நிறைந்த இடம்......மனசை வருடிச்செல்லும் காற்று.........சுற்றுப்புற அமைதியான சூழ்நிலை ஆகியவற்றில் தன்னை மறந்து போனான் அந்த மனிதன்........

ரம்மியமான காலைப்பொழுது..........

டேய்.........உன்ன கூப்பிடுறாங்க.........(நண்பன் சொல்லிவிட்டு சென்றான்)

அந்த அதிகாரிக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு........அவருடன் ஜீப்பில் செல்லத்துவங்கினான்........


ஜீப் கொஞ்ச நேரம் பயணித்தது........இப்போது நின்ற இடம் ஒரு அழகிய கிராமம்..........அந்த கிராமத்து தேவதைகள் அவ்வளவு அழகு(ஹிஹி!)......அழகான முகங்களா தெரிந்தன......(அமைதியான!)அந்த கிராம மக்கள் எங்களை கண்டவுடன் கலவரமானத்தை புரிந்து கொள்ள முடிந்தது.......


அந்த வீட்டின் முன் ஜீப் நின்றது.......வண்டிச்சத்தம் கேட்டு உள்ளிருந்து ஒரு இளைஞ்சன் வெளியில் வந்தான்..........அதிகாரி அவனிடம் சில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டார்.........அவனிடம் எந்த சலனமும் இல்லை........அதிகாரிக்கு கோவம் வந்துடுச்சி.........

உன்னத்தான் கேக்குறேன் சொல்லு..........

அவனிடம் இருந்து பதிலில்லை...........அதிகாரியின் கடைக்கண் பார்வை கவனித்த என்னுடன் வந்த சிப்பாய் தன் நீண்ட துப்பாக்கியின் பின் புற முனையால் அந்த இளைஞ்சனின் வாயில் இடித்தான்.......ரத்தம் கொட்ட ஆரம்பித்தது..........(மனசுக்குள் ஒரு வித கலக்கம்!).............

அவனின் ஓலம் கேட்டு உள்ளிருந்து ஒரு பெண் ஓடிவந்தாள்.........அந்த அதிகாரியின் காலைப்பிடித்துக்கொண்டு அவனை விட்டு விடுமாறு மன்றாடினாள்.........அந்த அதிகாரியின் கண் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட நானும் அந்த இன்னொரு சிப்பாயும்.......அந்த வீட்டின் உள் நுழைந்து ஆராயலானோம்.......ஒரு அகழியின் பள்ளத்தில் இரு AK 47 ரக துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.......


அந்த துப்பாக்கிகளை கொண்டு வந்து அதிகாரியிடம் காட்டினோம்.......அந்த இளைஞ்சனை ஜீப்பில் ஏற்ற சொன்னார் அதிகாரி.......அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஏறி அமர்ந்தான்......அந்த பெண் ஓலம் அதிகமானது.....அவள் அவனின் தாய் என்பது புரிந்து நெஞ்சம் பதைத்தது...........

ஜீப் வேகமாக போய் கொண்டு இருந்தது.....நான் அந்த மனிதனின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தேன்....எந்த வித பதைப்பும் அந்த முகத்தில் காணப்படவில்லை...........ஜீப் தலைமையிடத்தை நெருங்கியது........

அவன் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டான்....இப்போது வாயிலிருந்து வந்த ரத்தம் நின்று கட்டி இருந்தது...........அதிகாரி கேள்வி கேக்க துவங்கினார்.......

எங்கிருந்து கிடைத்தது இந்த துப்பாக்கி உனக்கு.......நீ எந்த அமைப்பு உறுப்பினர்.......சொல்லு(பல முறை கேட்டும் பயனில்லை!)

சிறிது நேர சித்ரவதைக்கு பிறகு..........அவன் உதிர்த்த சில வார்த்தைகள் கத்தியை என் நெஞ்சில் இறக்கியது போல் இருந்தது...........அவன் பேசிய மொழி புரியவில்லை என்றாலும் என் சக சிப்பாய் எனக்கு புரிய வைத்தார்...........

"எங்கள் பூமியில் எங்களை அடிக்கவும், சித்ரவதை செய்யவும் உங்களுக்கு யார் அனுமதியளித்தது"  - அவன்...........

அரசாங்கம்.......இது அதிகாரியின் பதில் 

எந்த அரசாங்கம்.........!........கேட்டுக்கொண்டே மயங்கி விழுந்தான் அந்த இளைஞ்சன்!

தொடரும்.....

கொசுறு: இது ஒரு மீள் தொடர்...உங்களுக்காக மீண்டும் வருகிறது!

துக்க தினம் அறிவிப்பு: எனது அன்பு மாப்பிள்ளை திரு. மாய உலகம் ராஜேஷ் நம்மை விட்டு மறைந்து விட்டார் என்பதை கேட்டு அதிர்ந்து போனேன்...திரு. வீடு சுரேஷ் அவர்கள் சொன்னது போல் நாளை பதிவுலக துக்க அனுஷ்டிப்பு தினம்..எனவே நண்பர்களே...நாளை நாம் பதிவிடாமல் மவுனம் காப்போமாக...அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. வீடு சுரேஷ்-ன் வேண்டுகோள்...
  நமக்குள்...நல்ல புரிதலை தருகிறது...
  அவரின் எண்ணப்படியே இயங்குவோம்...

  ReplyDelete
 2. மீள் பதிவாயினும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவே!
  ராஜேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாளை துக்க தினம் அனுஷ்டிப்போம்.

  ReplyDelete
 3. வணக்கம் வெங்கட் சார்!மீள்பதிவிட்டமைக்கு நன்றிகள்.நான் முன்னர் படித்ததில்லை.காலமுணர்ந்து மீள் பதிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன்!

  ReplyDelete
 4. முன்பு பதிவிட்ட சமயம் சில பாகங்கள் வாசிக்க இயலாமல் போயிற்று...
  இனி தொடர்கிறேன்...

  ReplyDelete
 5. நாளை அனைவரும் மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிலநிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்.

  ReplyDelete
 6. நான் படிக்காதது...நிறைய நிஜத்தை கூறும் தொடர் போல..என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 7. சரிங்கண்ணா. நாளைய தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்போம்

  ReplyDelete
 8. தொடருகிறேன் தோழர்..நாளை பதிவுகளை நிறுத்தி வைப்போம்.மாய உலகத்திற்கு சென்ற தோழர் ராஜேஷின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 9. மாப்ள நான் படிக்காமல் விட்டது. மறுபடியும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நண்பர் மாயாவுக்கு என் இரங்கல்கள்.

  ReplyDelete
 10. மாம்ஸ்

  உங்க தளத்தில் "தோஸ்துங்க" up date பண்ணுங்க.

  ReplyDelete
 11. >>தமிழ்வாசி பிரகாஷ் says:
  February 6, 2012 2:45 PM Reply

  முன்பு பதிவிட்ட சமயம் சில பாகங்கள் வாசிக்க இயலாமல் போயிற்று...
  இனி தொடர்கிறேன்...


  hi hi hi hi

  ReplyDelete
 12. பாஸ் முன்பு நான் இந்த தொடரை வாசிக்கவில்லை ராணுவக் கதைகள் படிப்பது என்றால் எனக்கு மிகுந்த ஆர்வம். தொடருங்கள் தொடர்கின்றேன்

  ReplyDelete
 13. நான் இதற்கு முன்பு படிக்கவில்லை
  ஆரம்பமே அதிக ஆவலைத் தூண்டிப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. விறுவிறுப்பாக செல்கிறது ! தொடருங்கள் சார் !

  நண்பன் திரு. மாய உலகம் ராஜேஷ் அவர்களின் குடும்பமும், நண்பர்களும், உறவினர்களும், மனம் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்!

  ReplyDelete
 15. நான் படிக்காதது...சுவாரஸ்யம்...தொடருங்கள் ...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி