குரூப் சேர்றதுன்னா! - அது ஒரு டீன் ஏஜ் காலம்!

வணக்கம் நண்பர்களே...


அப்போது நாங்கள் இருந்த காம்பவுண்டில் பல வீடுகள் இருந்தன..குறைந்த வாடகையில் இருந்து ஆரம்பித்து பெரிய அளவு வாடகை வரை...நெறைய நண்பர்கள்..

அதில் பெண்கள் குறைவாக இருந்தாலும்(!)...இவர்களை பார்க்க வரும் பெண்கள் அதிகம்(!)...நெறைய பேரோட அறிமுகம் கிடைத்தாலும், ஒரு வித தயக்கம் இருக்கும்...காரணம் அவர்களின் ஆடைகள் மற்றும் பேச்சி...சில நேரங்களில் மனதை பாதிக்கவும் செய்யும்!..

பத்தாவது முடித்து அடுத்த +1 எனப்படும் அடுத்த தொடக்கதுக்காக பள்ளியில் சேர முடிவு செய்த காலம்...இவன் படிச்சி என்ன பண்ணப்போறான்...இவனை தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு அனுப்பி வச்சா..ரெண்டு வருசத்துல வேலைக்கு போய் வீட்டுக்கு உபயோகமா இருப்பானே என்று பலர் சொன்ன போதும்..என் அப்பாவும், அக்காவும் இவனை ஒரு டிகிரி வாங்க (காபி இல்லீங்க!) வைக்கனும்னு போராடினாங்க...அதிலும் அக்கா பங்கு அதிகம்..


ஸ்கூல்ல எந்த குரூப்(இது வேற!) எடுப்பது என்பதில் எனக்கு தயக்கம்...சரி கணக்கே இல்லாத குரூப் எதுன்னு பாத்திட்டே வந்து டிக் பண்ணிட்டேன்...இனி கணக்கு தொல்லை இல்லன்னு முடிவு பண்ணி அப்பாருக்கிட்ட சொல்லிட்டேன்...அவரும் சரின்னு பீச கட்டி புட்டாரு...அப்புறம் என் நண்பிகளும் அதே க்ரூப்பை எடுத்தது தெரிந்தது...ஏன் நீங்களும் இந்த க்ரூப்பை எடுத்தீங்கன்னு கேட்ட போதுதான் புரிஞ்சது...அது முதல் குரூப் அதாவது இந்த பாட திட்டம் எடுப்பவர்களால் தான் மெடிக்கல் மற்றும் இஞ்சினியரிங் படிப்புக்கு போக முடியும்னு!..

ச்சே மறுபடியும் பல்ப்பா(!)...ஏன்டா ஒன்னுத்த ஒழுங்கா பண்ண மாட்டியா...ச்சே அந்த படிவத்துல கீழ கடைசில கணக்குன்னும் இருந்ததே அதை கவனிக்கலியா நீ - இப்படிக்கு மனசாட்சி டு விக்கி!

அந்த கேண்டீன்ல உக்காந்து இருந்தேன்...

டேய் விக்கி...

சொல்லு வசந்தி...

என்ன ஒரு மாதிரியா இருக்க...

இல்ல இப்பத்தான் பாத்தேன் உண்மையிலேயே இந்த கிளாஸ்ல கணக்கு இருக்கு...

அப்போ நாங்க சொல்லும்போது நம்பலியா...

இல்ல எங்க அக்காவும் ஒண்ணுமே சொல்லலியே...அதான்!

அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்...நீ எங்க கேக்காம போயி கணக்கு இல்லாத பாடத்திட்டம் எடுத்திடுவியோன்னு பயந்திட்டு சொல்லாம விட்ருப்பாங்க...

ஆமாம், அப்படிதான் இருக்கும்..பெங்களூர்ல படிச்ச அவங்களுக்கு தெரியாம இருக்குமா...என்னைய ஏமாத்தி புட்டாங்களே..

 விட்ரா இதுவும் நல்லதுக்கு தான்...இப்போ நாம எல்லாம் ஒரே குரூப்!

ஆமா இதுல நான் மட்டும் நொந்த குரூப் ஹிஹி!

அது சரி சம்பத்தும் இந்த குரூப்ல சேந்து இருக்கான் பாத்தியா...

அதானே பாத்தேன் உன்னைய விட்டு அவன் எப்படி தனியா ஹிஹி!..

ச்சி அப்படியெல்லாம் இல்ல...

ம்ம் நடத்துங்க...பாத்து உங்கப்பாரு பின்னிடுவாரு...

உன்கிட்ட போய் சொன்னேன் பாரு...அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல...சரி சித்ரா இன்னைக்கு எல்லோரையும் மலைக்கோயிலுக்கு வர சொல்லி இருக்கா!

ஓ அப்படியா...இன்னைக்கு வெள்ளிகிழமையா அதான்!...

ஆமா, மறக்காம வந்துடு உன்கிட்ட எதோ பேசணுமாம்!

ஓ...சரி பாப்போம்..அவ என்ன குண்ட தூக்கி போடப்போறாளோ!   

(சம்பத் அந்தப்பக்கமா வந்தான்!)

வாடா வா...உன்னைய பத்தி தான் பேசிட்டு இருந்தோம்..

எது என்னைய பத்தியா என்னன்னு...

டேய் நான் கெளம்பறேன் என்றாள் வசந்தி!

எங்க போற இரு மாப்ள வந்து இருக்கான் இல்ல..

ராஸ்கல் உனக்கு எப்ப பாரு இதே பொழப்பு...நான் வரேன் பை விக்கி..பை சம்பத்..!

அட என்னய்யா இந்த பொண்ணுங்க...சட்டுன்னு கிளம்பிடுராங்களே..(அவள் சென்றே விட்டாள்!)

அப்புறம் மணி என்ன வசந்தி சிக்கிட்டா போல!

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல...ஏன் நீ யாரையாவது ட்ரை பண்றியா...

ஆமாம், ஏன்டா நீ வேற...நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடா ஹிஹி!

ம்ம் இப்போ இந்த குரூப்ல எல்லோரும் ஒன்னாயிட்டோம்...இனி கலக்குவோம்!

எதை கலக்கறது...எனக்கு ஏற்கனவே கணக்கும் இங்கிபீசும் தகராறு...இதுல இப்ப வந்து மாட்டிகிட்டேன்...

விட்ரா எல்லாம் நம்ம மனசு தான் காரணம்...நீ வேணா பாரு கலக்கப்போறே இதே குரூப்ல!


பாப்போம்...அய்யா புள்ளையாரப்பா என்னைய காப்பாத்து...


எங்கிருந்தோ வந்த பந்து என்னை பதம் பார்த்தது!


தொடரும்!


கொசுறு: இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. ??>>>இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)

  hi hi நீயும் மொக்கை, நானும் மொக்கை.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மொக்கை

  ReplyDelete
 2. Yowwwww
  cps
  neenga innum
  padathukku
  pogaliya....?????

  ReplyDelete
 3. Naan
  cps
  comment-i
  vazhi mozikiren.....
  He...he...he....

  ReplyDelete
 4. பதிவு பிரமாதம் மாம்ஸ்.

  ReplyDelete
 5. // NAAI-NAKKS said...
  Naan
  cps
  comment-i
  vazhi mozikiren.....
  He...he...he....//
  நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 6. சரி, விக்கி உடான்ஸ்,இண்ட்லி இணைப்பு கொடுத்தாச்சு.

  ReplyDelete
 7. மலரும் நினைவுகளா, மயக்கிய நினைவுகளா?

  ReplyDelete
 8. //சி.பி.செந்தில்குமார் says:February 3, 2012 11:24 AM Reply
  ??>>>இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)

  hi hi நீயும் மொக்கை, நானும் மொக்கை.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மொக்கை//

  ஹா.ஹா...தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்க வேண்டிய பின்னூட்டம். விக்கி டுமீல்!!

  ReplyDelete
 9. //விக்கியுலகம் ஓசியில் இருந்து சொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருசொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருக்கிறார்!..இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள், ஒரு முறை unfollow செய்து
  இருக்கிறார். இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள்,
  ஒரு முறை unfollow செய்து மீண்டும் ஒரு முறை follow செய்துக்கங்க.. //

  ண்ணா...சர்ணா!!

  ReplyDelete
 10. பழங்கதைகள் என்றுமே ஸ்வாரஸ்யமே!

  ReplyDelete
 11. பாஸ் இந்த தொடர் மொக்கை என்று நீங்க தான் சொல்லுறீங்க ஆனா படிக்க செம சுவாரஸ்யமாக இருக்கு.

  ReplyDelete
 12. நாங்களும் புதுசா தொடர்ந்துட்டோம்ல.

  ReplyDelete
 13. நல்லாத்தானே இருக்கு??? பதிவுகள் தொடரட்டும் மாம்ஸ்.

  ReplyDelete
 14. அடுத்த பாகத்துல மலைகோட்டைல இருந்து அந்த பொண்ணு உங்கள கீழ தள்ளி விட்டுடும்.. அதுதானே ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 15. ங்கொய்யால அப்படிப் போடு அருவாள.....

  ReplyDelete
 16. /////விக்கியுலகம் ஓசியில் இருந்து சொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருசொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருக்கிறார்!..இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள், ஒரு முறை unfollow செய்து
  இருக்கிறார். இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள்,
  ஒரு முறை unfollow செய்து மீண்டும் ஒரு முறை follow செய்துக்கங்க.. //////

  எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லீங்கோ, இதெல்லாம் பண்ணாமயே கரெக்டா வருதுங்கோ...... நாங்கள்லாம் யாரு.....!

  ReplyDelete
 17. ////கொசுறு: இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)/////

  ங்கொய்யால இப்படி மொக்க போடுறதுக்கெல்லாம் ஒரு தனி டொமைனு? வெளங்கிரும்....

  ReplyDelete
 18. @பன்னிக்குட்டி ராம்சாமிங்கொய்யால இப்படி மொக்க போடுறதுக்கெல்லாம் ஒரு தனி டொமைனு? வெளங்கிரும்....///
  அதே....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி