ஏன்டா நீ திருந்தவே மாட்டியா - அது ஒரு டீன் ஏஜ் காலம்!

வணக்கம் நண்பர்களே...


இந்த டீன் ஏஜ் முன் பகுதிகளுக்கு செல்ல டீன் ஏஜ் காலம் (3) அழுத்தவும்!

மாலை நேரம்:

விக்கி: என்னடா இது நாம வந்துட்டோம் இன்னும் இந்த சித்ரா அண்ட் கோ வை காணோம்...

முனி: டேய் அவங்கல்லாம் வைட்டு கைங்க...எப்பவும் போல வருவாங்க...

விக்கி: வந்துட்டாளுங்கய்யா வில்லிங்க...

சித்ரா: அடேய் யாரடா வில்லிங்கறீங்க...

விக்கி: உங்கள சொல்ல முடியுமா டுக்கி கேர்ல்ஸ்!

முனி: அது என்னடா டுக்கி?


விக்கி: ஹிஹி அழகான ராட்சசிங்கன்னு சொல்ல வந்தேன்..

சித்ரா: அடப்பாவி...சரி இங்க வாரம் வாரம் ஒரு ஜோடி உக்காந்து இருக்குமே எங்க காணோம்...

விக்கி: அதோ அந்த பொண்ணு மட்டும் உக்காந்து இருக்கு..பையன காணோம்!

அதானே...வேணும்னா நீ போய் கேட்டு வாயேன்...

விக்கி: எதுக்கு அந்த பொண்ணு என்னய கண்டமேனிக்கு திட்டவா...

சித்ரா: இருடா நான் போய் கேட்டு வர்றேன்..

அந்த பெண்ணிடம் சித்ரா பேசலானாள்...

சித்ரா: ஏம்மா என்னாச்சி இப்படி அழுதிட்டு இருக்க...


பச்சை மண்ணு ச்சே பொண்ணு: அது ஒன்னும் இல்ல...ப்ளீஸ் என்னைய தொந்தரவு பண்ணாதீங்க...

சித்ரா: ஹலோ பிரன்ட் இது கோயிலு இங்க வந்து இப்படி அழராதால கேட்டேன்...உன்னோட சிஸ்டரா நெனச்சிக்க...என்ன விஷயம் சொல்லு...

பச்சை மண்ணு ச்சே பொண்ணு: அது வந்து...என்னோட பிரெண்ட் என்னைய கழட்டி விட்டுட்டான்...

சித்ரா: எது நீ போர்ட் ஸ்கூல் தானே...நான் உன்னைய பாத்து இருக்கான்...ஏன்னா நாங்களும் அங்க தான் படிக்கறோம்...நீ படிக்கறது +1 தானே, உன் பிரண்டு பியூர் சைன்ஸ் குரூப் தானே...கவலைப்படாதே அவன என்னான்னு கேப்போம்!

பச்சை மண்ணு ச்சே பொண்ணு: நீங்க கேப்பீங்களா...ஏன்னா அவன் ஒரு மாதிரி முரடன்...அதான்!

சித்ரா: ஹஹா...நம்ம கிட்டயும் இப்படி பயலுங்க இருக்கானுங்க...விடு பாத்துப்போம்!

முனி: ஏய் இங்க பாருடா, சந்தடி சாக்குல நம்மள காட்டுவாசிங்கன்னு சொல்லிட்டா...

விக்கி: இங்க பாரு நீ வீணா கமிட் ஆகாத அப்புறம் அடி வாங்குறது நாங்க தான்...ஞாபகம் வச்சிக்க...

சித்ரா: என்னடா நம்ம பிரண்டுக்காக இத கூட செய்ய மாட்டீங்களா...

விக்கி: ஏண்டீ இந்த பொண்ணு கிட்ட இப்ப தான் முதல் முறையா பேசுற..அதுக்குள்ளார இவன் உனக்கு பிரெண்டாயிட்டாளா..

சித்ரா: அதாண்டா பிரான்ட்ஷிப்பு!

முனி: பார்ரா...

விக்கி: ஹலோ சித்ரா நீ என்னமோ பேசணும்னு சொன்னதால தான் நான் இன்னைக்கு வந்தேன்...இல்லன்ன இன்னைக்கு எனக்கு அயர்ன் பண்ற வேலை இருந்தது...அதுக்கு போயி இருந்தா அஞ்சு ரூவா கேட்சி இருக்கும்...

சித்ரா:  அது வந்து...நான் உன்கிட்ட தனியா பேசனும்..அந்தப்பக்கமா வா..

ஆஹா...என்னோமோ நடக்குது...

சித்ரா:  அதாவது...எப்படி சொல்றது...

விக்கி: உன் வாயால தான்...இதுக்கு வேற யாராவது வந்து சொல்லுவாங்களா...

சித்ரா: அடேய்...அது வந்து மைக்கேல் தெரியும்ல...

விக்கி: எந்த மைக்கேல்...

சித்ரா: அதான் உங்க கூட கிரிக்கேட் ஆட வருவானே...காமராஜர் நகர் 2 வது தெருல, 32 நம்பர் வீட்ல இருக்கானே...அவங்க அப்பா கூட பிசினெஸ் மேன்!

விக்கி: அடிப்பாவிகளா..இப்பல்லாம் இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா..என்னமா கொடுக்குராய்யா டீடைலு...

சித்ரா: கேள்றா...

விக்கி: சரிங்கோ...சொல்லுங்கோ...அவன் நல்ல பையனாச்சே...ஏன் அவனை ஏதாவது பண்ணனுமா...

சித்ரா: அடேய் அவனை நான் லவ் பண்றேன்...

(என்னாது இது ஒரு ராட்சசி லவ் பண்ணுகிறாள்!...)ஓ அதுக்கு நான் என்ன செய்யணும்...

சித்ரா: நீ தான் அவன்கிட்ட பேசணும்...

(ம் இதுக்கு என்ன பொழப்புன்னு பேரு சாமி(!) என்னைய மன்னிச்சிடு!)

விக்கி: ஏங்க, இதுக்கு கோயிலுக்கு வந்து தான் இத சொல்லனுமா...ஏன் ஸ்கூல்லயே சொல்லி இருக்கலாமே...

சித்ரா: இல்ல இங்க சொன்னாத்தான் நல்லதுன்னு எனக்கு தோணிச்சி...ஏன்னா நீ ஒரு உளறு வாய்...அங்க சொல்லி இருந்தா எல்லாரு கிட்டயும் சொல்லி இருப்பே...நாளைக்கு சனி கிழம நீ கிரிக்கெட் ஆடப்போவேல்லே அங்க அவன் கிட்ட பேசி எனக்கு ஈவினிங் சொல்லு...

விக்கி: அடப்பாவமே...என் பொழப்பு இப்படி ஆயிப்போச்சே...சரிங்கா கண்டிப்பா இந்த மேட்டர நான் முடிக்கறேன்..

சித்ரா: இதுல ஏதாவது சொதப்புனே பிஞ்சிடும்...

விக்கி: என்னடா இது எனக்கு வந்த சோதனை...இவங்க லவ்வுக்கு நான் பலியாடா!
சித்ரா: அப்புறம் எதுக்குடா பிரெண்ட்ஸ்ன்னு இருக்கீங்க...

விக்கி: அட அப்போ இந்த எடுப்புக்கு தான் நான் இருக்கனா...

முனி:  விட்ரா இதெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு...


சித்ரா: அதானே எதோ +2 ஸ்டேட் பார்ஸ்ட் வர்ற சொல்லி கேட்டது போல ஏன் இவ்ளோ ஜர்க்கு உட்ற!

விக்கி: ஏன்டா நீ திருந்தவே மாட்டியாஅடேய் முனி வழக்கம் போல ஒட்டு கேட்டுட்டியா, சரி கண்டிப்பா நான் பேசுறேன்...அதுக்கு அவன் என்ன சொல்றான்னு பாப்போம்!

தொடரும்....

கொசுறு: நாம நெனைக்கறது ஒன்னு..மேல இருக்கவன் முடிக்கறது ஒன்னு..ச்சே என்ன வாழ்கடா...

மிச்சம்: வேலை பெண்டு எடுப்பதால் தான் மீள் பதிவான ரத்தக்கறை (ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 2)ஆரம்பித்தேன்...இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரத்தக்கறை தொடரும்...சீரியசுக்கு நடுவே இப்படி மொக்கையும் போடணுமாம்...பெரியவங்க சொல்லி இருக்காங்க!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. மாம்ஸ், மொக்கைன்னாலும் ஏதோ ஒண்ணு சொல்ல வறீங்க???!!!

  ReplyDelete
 2. ம்ம்ம்...அப்புறம்.....இருங்க....ஒரே தூக்கமா வருது

  ReplyDelete
 3. //வேலை பெண்டு எடுப்பதால் தான் மீள் பதிவான ரத்தக்கறை (ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 2)) ஆரம்பித்தேன்...இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரத்தக்கறை தொடரும்...சீரியசுக்கு நடுவே இப்படி மொக்கையும் போடணுமாம்...பெரியவங்க சொல்லி இருக்காங்க!//

  வணக்கம் மாம்ஸ் இதுல எது மொக்கை பதிவு எது சீரியஸ் பதிவு மாம்ஸ் லேட்டா வந்ததால ஒன்னும் புரியமாட்டேங்குது..

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 4. He...he.....he....
  Comment podave
  payama irukkuppa.....

  Naan ethai pottalum....
  Accept panna mattenkuraanga.....

  ReplyDelete
 5. மாப்ள மொக்கை நன்றாகவே போய்கிட்டிருக்கு.

  ReplyDelete
 6. எலேய் சீரியஸ் நடுவே மொக்கையும் நல்லதுதான் மக்கா, வெரைட்டிஸ் வேணும் இல்லைய்யா....!!!!

  ReplyDelete
 7. எலேய் சீவலப்பேரி அருவாளை என் வீட்டம்மா தந்தாளே சும்மா போஸ் குடுக்க ராஸ்கல் போட்டு விட்டுட்டியே நீயும் சுரேஷும் ராஸ்கல் காட்டி குடுத்திட்டீன்களே, இனி அருவாளை காட்டவே மாட்டேன் வெப் கேமராவில் கொய்யால.....

  ReplyDelete
 8. வணக்கம் மாம்ஸ்
  மொக்கையோ சக்கையோ நடத்துங்க - தொடர்வோமில

  ReplyDelete
 9. காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

  ReplyDelete
 10. ////
  விக்கி: அடிப்பாவிகளா..இப்பல்லாம் இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா..என்னமா கொடுக்குராய்யா டீடைலு.////

  ஹி.ஹி.ஹி.ஹி........

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. ஆமா அந்த அழுதுகிட்டு இருந்த பொண்ணு மேட்டர் என்ன வென்று சொல்லவே இல்லையே பாஸ்

  ReplyDelete
 13. //He...he.....he....
  Comment podave
  payama irukkuppa.....

  Naan ethai pottalum....
  Accept panna mattenkuraanga.....//

  அண்ணே! சின்ன பையனெல்லாம் இங்க வரக்கூடாது.....அப்படி ஓரம்மா உக்கார்ந்து அப்பா..அம்மா வெளையாட்டு விளையாடுங்க..ஹிஹி

  ReplyDelete
 14. என்ன மாம் லவ் ஸ்டோரியா...நடக்கட்டும் நடக்கட்டும்...இரத்தகறைக்கு நடுவே ஒரு லில்லி மலரா கவிதை கிவிதை வரையறது...ஹிஹி

  ReplyDelete
 15. நடத்துங்க மக்கா .. நடத்துங்க

  ReplyDelete
 16. பல்சுவையும் தரும் பலே திறமை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன்.

  ReplyDelete
 17. நல்லா இருக்கு சார் ! நன்றி !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி