காதலர் தினமும், மறக்க முடியாத வடுவும்!

வணக்கம் நண்பர்களே...


அது ஒரு மறக்க முடியாத தினமாக ஆகிப்போகும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்...

அதில் நம் மாப்பிள்ளையும் ஒருவராக சடாரென்று காதுக்கு கேட்ட ஒலியை கேட்டு ஒரு நிமிடம் நெஞ்சி வெடித்து போனது போல உணர்ந்தார்...அந்த நிகழ்ச்சி நடந்த சனிக்கிழமை 1998 நினைவு நாள் இன்று!

கோயம்புத்தூர் - அமைதியாக தன் ஓட்டத்தை ஓடிக்கொண்டு இருந்தது...திடீரென்று ஒரே வெடிச்சத்தம்...மக்கள் அலறியடித்து கொண்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்!

11 இடங்களில் அடுத்தடுத்து வெடித்து சிதறியது கார்களில் வைத்திருந்த குண்டுகள்...12 கிலோமீட்டர் சுற்றளவில் மக்களை சுற்றி வளைத்து அடுக்கடுக்காக வெடிக்க வைத்தனர் குண்டுகளை...

மொத்தம் பலியான உயிர்களின் எண்ணிக்கை 46..அதில் 35 ஆண்கள்..10 பெண்கள், ஒரு குழந்தை அடக்கம்...200 பேர் காயமடைந்ததாக ஒரு செய்தி!

காதலர் தினத்தை கொண்டாடும் சமுதாயமே...இன்றைய தினத்தை மறந்து விடாதே...நம் மக்கள் - அது ஹிந்து, கிறிஸ்தவன், முஸ்லிம் என்று பாகுபாடு இல்லாமல் இந்தியன் என்ற ஒற்றை சொல்லில் நாம் அடக்கம் என்று என்றுமே நினைத்துக்கொள் என் மக்களே...

தீவிர வாதம் - அது காவியாகட்டும், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் கிறிஸ்துவ தீவிரவாதம் ஆகட்டும்..எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்த்து முனை மழுங்கச் செய்வது நம் அனைவரின் பொறுப்பே!

ஜெய்ஹிந்த்!

கொசுறு: இது ஒரு காதலர் தின பதிவு என்ற போதும் என் மக்களுக்கான அஞ்சலி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. Athu nadanthaa enna.??????
  Engalukku niraiya velai
  irukku......

  Innikku mattum..5 perukku
  love sollanum...matha velai
  pakkanum...

  Timetable pottu....
  Love pannikkittu irukkom.....
  Ithula...intha ninaivu.---ku
  nanga porathaavathu....

  ReplyDelete
 2. வணக்கம் மாம்ஸ்

  இப்ப நினைச்சாலும் கொல நடுங்குது.

  நேர்ல அனுபவசிச்ச அந்த பயங்கர நிகழ்வு இன்னும் மனச விட்டுப்போகல.

  மரணமடைந்த அனைத்து இதயங்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

  ReplyDelete
 3. டச்சிங் மாம்ஸ்!

  ReplyDelete
 4. குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் காதலை மென்மையான உணர்வுகளுடன் அரவனைப்போம்.

  ReplyDelete
 5. பலியான உயிர்களோடு மனிதத்தின் மீதான காதலும் பலியாகியிருக்கிறது.

  ReplyDelete
 6. மனித நேயத்தை காதலிப்போம் ...

  ReplyDelete
 7. மாம்ஸ் என்னால் மறக்க இயலாத ஒரு சம்பவம்..

  அந்த ரண வலி இன்றும் என் மனத்திரையில் நீங்கா வடு..

  ReplyDelete
 8. அருமையான நினைவூட்டல் பதிவு!இந்தியன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.பகிரங்கமாக ஒரு விடயம்:என் மனைவி பிறந்த நாள் மே-21. "அந்த" சம்பவத்தின் பின் இன்றுவரை அந்த நாளை நினைவு நாளாகவே.............................இனிவரும் காலங்களில் கூட!-ஈழத்தமிழன்-

  ReplyDelete
 9. தாங்கள் சொல்வது சரிதான்..

  ReplyDelete
 10. அது ஒரு துன்பியல் சம்பவம்! தமிழகத்தின் அழியா வடு!

  ReplyDelete
 11. மறக்க முடியாத நினைவலைகள் உங்களின் பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 12. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொன்டிருந்த என் காதில் காதே செவுடாகும் படியான பயங்கர சத்தம்!பேக்கரியில் வைத்திருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விட்டதாக ஒருவர் கூறிக்கொண்டே ஓடினார்
  மிகப்பெரிய கட்டிடம் வனிக வளாகத்தின் கண்ணாடி துண்டுகள ரோட்டில் சென்றவர்கள் மேல் தெரித்தது,அந்த வளாகத்தின் அருகே நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவரின் காதின் வழியே இரத்தம் வழிய துடித்து கொண்டு இருந்தார்,இது ஏதோ அசாதரண சம்பவம் என என் மனதில் தோன்றியது கோவையை விட்டு வந்தபிறகு தான் தெரிந்தது அரசுமருத்துவமனையில் பணிபுரிந்த பயிற்சி மருத்துவர் நண்பர் போன் செய்து தகவலை சொன்ன போதுதான் தெரிந்தது அமைதிபூங்கா சிதைந்து போனது என்று...மருத்துவமனைக்கு வெடி வைத்தது மிக கொடுமையான விசயம் மட்டுமல்ல குண்டுடன் இரும்பு ஆனியை கலந்து வைத்தது ஒவ்வரு இரும்பு ஆனிதுண்டுகளையும் கொரடு மூலம் பிடுங்கியெடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்...இந்த பாதகத்தை செய்தவர்களும்...செய்ய வைத்தவர்களும் நிம்மதியாக இருக்கிறார்கள் தன் குடும்பத்தையே தாங்கி கொண்டு இருந்த செவிலிய சகோதரியின் குடும்பம் மகளை இழந்து இந்த நாளின் போது மிக துயரத்தை அனுபவிக்கிறார்கள்,அவர்களின் வேதனை சொல்லில் அடங்காது! இன்றைய நாள் என் வாழ்வில் கருப்பு நாள்!

  மதவெறியர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல!

  ReplyDelete
 13. மறக்க முடியாத சம்பவம். ஒருபோதும் மதவெறிக்கு இடமளிக்கவே கூடாது!

  ReplyDelete
 14. இவர்கள் செய்யும் அயோக்கிய தனத்திற்கு மதம் ஒரு கேடயம்....

  ReplyDelete
 15. மறக்க இயலாத ஒரு வடு...

  ReplyDelete
 16. என்ன ஆச்சு மாம்ஸ்?

  ReplyDelete
 17. Its nt about muslim and christian, its abt hindus too...
  it will b better if u knw the doings of hindus also.
  hope u knw abt a major political party bcoz of whom the bomb blast is and dey r strongly against love.
  no othr parties r against love except dz which says tat tey always keeps the culture of India...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி