நானும் எனது ஊரும்...(தொடர் பதிவு!)

வணக்கம் நண்பர்களே...
அன்பு மாப்பிள்ளை திரு. சங்கவி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொடர் பதிவை இடுகிறேன்...நாட்கள் பல கடந்து விட்டதுக்கு சகித்து கொள்ளுங்கள்!


பல நேரங்களில் நினைத்த துண்டு, நான் சென்னையின் புதல்வனா என்று...ஏனெனில், பிறந்தது எழும்பூர் அரசு மருத்துவமனை..வளர்ந்தது சென்னை சைதை!...நானொரு நாடோடி..எனவே, இதில் குறிப்பிட்ட ஒரு இடத்தை என்னால் சுட்ட முடியாததை பொறுத்துக்கொள்ளவும்...


எனது தந்தை, அவரின் தந்தையிடம் சிறுவயதில் மனவருத்தம் கொண்டு சென்னை வந்து விட்டதாக அடிக்கடி கூறுவார்...வருடத்தில் மூன்று முறை விடுமுறைக்கு செல்லும் எங்கள் தாத்தாவின் ஊர் காவேரிப்பாக்கம்!...அப்படியே எங்க பாட்டியின் ஊரான இச்சி புத்தூர் கிராமத்துக்கும் சென்று வருவதுண்டு...


இதில் இரண்டாவது ஊர் தான் என்னை மிகவும் கவர்ந்தது...நான் பிறந்து வளர்ந்திருக்க வேண்டிய ஊர்...காலத்தின் கோலத்தால் அப்படி எதுவும் நடந்து விடவில்லை...இருந்தாலும் அந்த மண்ணின் வாசம் எனக்கு எப்பவுமே பிடிக்கும்...


ஊரின் உண்மையான முகம் விவசாயம்...அதுவும் காலையில் நாலு மணிக்கு கழனிக்கு போகும் என் சொந்தக்காரர்கள்...அவர்களுடன் நானும் சென்ற ஞாபகத்தை மறக்க முடியவில்லை!...ஒரு சொம்பு கூழ் குடித்து விட்டு கழனிக்கு சென்று விடுவார்கள்...நானும் ஏர் பிடித்திருக்கிறேன் என்று பெருமையாக என்னை சொல்ல வைத்தவர்கள்...
அழகிய கிராமம்...பாழடைந்த கோயில், விளையாடி மகிழ்ந்த தருணங்கள்...கள்ள மில்லா நண்பர்கள்...சைக்கிள் டியுபை கட் செய்து கிரிக்கெட் விளையாடிய காலம்...வண்டியை கட்டிக்கொண்டு திருத்தணிக்கு தீமிதி திருவிழாக்கு சென்ற ஞாபகங்கள்!...


காலப்போக்கில் சென்னயை விட்டு அகல முடியாமல் போனதால்...பல விஷயங்களை இழந்ததாக நினைக்கிறேன்...எனவே, இங்கு என் வளர்ந்த இடமான சைதையை நினைவு கூறுகிறேன்..


நாங்கள் இருந்தது மேற்கு சைதை எனும் மேட்டுப்பாளையம்(இது சென்னை!)...அங்கே வாடகை வீட்டில் ஒன்டிகுடுத்தனத்தில் வாழ்ந்து வந்தோம்...கிரிக்கட் மட்டைக்காக சொந்த வீட்டிலேயே கல்விக்காக அளிக்கப்பட்ட பரிசான பேனாவை பொட்டி திறக்க சாவியாக யூஸ் செய்த காலம்...


அங்கு கிட்டே இருந்த சினிமா தியேட்டர் சீனிவாசா...இன்னொரு பக்கத்தில் உதயம்...இன்னொரு புறம் ஜெயராஜ்..இம்மூன்றும் இருந்தும் படம் பாத்ததது மிக குறைவு..


எந்நேரமும் கிரிக்கெட் தான் உலகமாக தெரிந்தது...படித்த சைதை மாந்தோப்பு ஸ்கூல்..ஒரு காலத்தில் மாந்தோப்பாக இருந்ததாக சொல்லுவார்கள்...ஒவ்வொரு வகுப்பிலும் நல்ல மதிப்பெண்ணும், விளயாட்டில் முதலாகவும் பலமுறை வந்து இன்றைய மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கையால் பல பரிசுகளை(கிண்ணம், தட்டு) வாங்கி இருக்கிறேன்...


மிலிட்டரி பேக் என்பது அப்போது மிகவும் பிரசித்தம்...அதை வாங்கி கொடுக்க சொல்லி தொல்லை செய்து வாங்கி பிறகு விளையாடும் தருணத்தில் யாரோ கொண்டு போனதை எண்ணி வருந்தி..பின் அப்பாவின் பெல்ட் அடி வாங்கியதும் நினைவுக்கு வருகிறது...


எதற்கெடுத்தாலும் அடி விழுந்த காரணத்தால் உடல் கொஞ்சம் மரத்துதான் போனது...அதன் காரணமாகவோ என்னவோ...அப்பவே சண்டைக்கு பந்தயம் வைத்து விளையாடுவோம்...3 அடியில் ஒருவனை வீழ்த்துவது எப்படின்னு மாந்தோப்பு ஸ்கூல் கற்று கொடுத்தது...அடியாத மாடு படியாது என்று பலர் சொல்லுவார்கள்..என்னை பொறுத்தவரை மாடும் குழந்தையும் ஒன்றல்லவே...


எப்படியாவது இவன் படித்து பெரிய ஆளாகிவிடமாட்டானா என்று எண்ணிய தந்தைக்கு, அந்த பாசத்தை காட்ட இயலாமல் அடி மூலம் காட்டியதால்...படிப்பு கசந்து தான் போனது...


அப்போதைய ரோட்டில் இரு புறமும் நூல் காய வைத்து இருப்பார்கள்...அதுவும் தறி போல நீண்ட தூரத்துக்கு இருக்கும்..இன்று இருக்கிறதா தெரியவில்லை..


விருப்பமான இடங்கள்...மாந்தோப்பு ஸ்கூல் கிரவுண்டு, டோக்கன் போட்டாலும் பால் வராத ஆவின் பூத்து, டீக்கடையில் கேக்கும் இளையராஜா பாட்டு, என்ன அடிச்சாலும் அப்பா வாங்கி தரும் சாக்லேட்டு...
அய்யா சாமி எதோ கிறுக்கி இருக்கேன்...தப்பா இருந்தா விட்ருங்க...ஜாலிய இருங்க...வாழ்க சந்தோஷப்படும்!


கொசுறு: இந்த பதிவு ஒரு சுய புராணம். எனவே சீரியஸா எடுத்துக்க எதுவுமில்லீங்க!(அப்பாடா சொன்னதுக்கு எழுதிட்டேங்கர மனசு திருப்தி இப்பதான் வந்துது!..நன்றி டு மாப்ள சங்கவி )


மிச்சம்: இந்த தொடர் பதிவில் விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம்...ஏனெனில்,  நான் சொல்லி யாரு கேக்க போறாங்க ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. மாமா என் அழைப்பிற்கினங்க ஊர் பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி...

  கிராமத்தில் கூழ் குடித்து சென்றதை படித்ததும் எனக்கு இப்ப கூழ் ஞபாகம்...

  கூழ், கம்மஞ்சோறு இதெல்லாம் மறக்க இயலாத உணவுகள்... இப்ப கிடைப்பது அரிது...

  ,,,மாந்தோப்பு ஸ்கூல் கிரவுண்டு, டோக்கன் போட்டாலும் பால் வராத ஆவின் பூத்து, டீக்கடையில் கேக்கும் இளையராஜா பாட்டு, என்ன அடிச்சாலும் அப்பா வாங்கி தரும் சாக்லேட்டு...,,

  சூப்பர்... இத நான் மறந்திட்டேன்... இதப்பத்தி ஒரு பதிவு விரைவில் போட்டு விடுகிறேன்...

  ReplyDelete
 2. தக்காளி ஃப்ளாஷ்பேக் நல்லாத்தான்யா இருக்கு......

  ReplyDelete
 3. ////.வருடத்தில் மூன்று முறை விடுமுறைக்கு செல்லும் எங்கள் தாத்தாவின் ஊர் காவேரிப்பாக்கம்!..////

  இது எந்த ஏரியா மாப்ள?

  ReplyDelete
 4. ////ஒவ்வொரு வகுப்பிலும் நல்ல மதிப்பெண்ணும், விளயாட்டில் முதலாகவும் பலமுறை வந்து இன்றைய மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கையால் பல பரிசுகளை(கிண்ணம், தட்டு) வாங்கி இருக்கிறேன்...////

  அட தக்காளி நல்ல பயலாத்தான்யா இருந்திருக்கான்.....

  ReplyDelete
 5. @சங்கவி

  "சங்கவி said...
  மாமா என் அழைப்பிற்கினங்க ஊர் பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி...

  கிராமத்தில் கூழ் குடித்து சென்றதை படித்ததும் எனக்கு இப்ப கூழ் ஞபாகம்...

  கூழ், கம்மஞ்சோறு இதெல்லாம் மறக்க இயலாத உணவுகள்... இப்ப கிடைப்பது அரிது...

  ,,,மாந்தோப்பு ஸ்கூல் கிரவுண்டு, டோக்கன் போட்டாலும் பால் வராத ஆவின் பூத்து, டீக்கடையில் கேக்கும் இளையராஜா பாட்டு, என்ன அடிச்சாலும் அப்பா வாங்கி தரும் சாக்லேட்டு...,,

  சூப்பர்... இத நான் மறந்திட்டேன்... இதப்பத்தி ஒரு பதிவு விரைவில் போட்டு விடுகிறேன்...
  >>>>>>>>>>>>>>>>>>>

  ஹஹா நீங்க சொன்னது போல முழுவதும் எழுத முடியல ஹிஹி!

  ReplyDelete
 6. ////எதற்கெடுத்தாலும் அடி விழுந்த காரணத்தால் உடல் கொஞ்சம் மரத்துதான் போனது...////

  அதான்யா இப்போ வாங்குற அடியெல்லாம் சமாளிக்க முடியுது.....

  ReplyDelete
 7. மாப்ள நம்ம ஏரியாதான், ஜெயராஜ் தியேட்டர் இன்னும் இருக்கா?

  ReplyDelete
 8. ////இந்த தொடர் பதிவில் விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம்...ஏனெனில், நான் சொல்லி யாரு கேக்க போறாங்க ஹிஹி!/////

  மாப்ள ஒரு நியாயஸ்தன்யா.....

  ReplyDelete
 9. @பன்னிக்குட்டி ராம்சாமி
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////ஒவ்வொரு வகுப்பிலும் நல்ல மதிப்பெண்ணும், விளயாட்டில் முதலாகவும் பலமுறை வந்து இன்றைய மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கையால் பல பரிசுகளை(கிண்ணம், தட்டு) வாங்கி இருக்கிறேன்...////

  அட தக்காளி நல்ல பயலாத்தான்யா இருந்திருக்கான்.....

  >>>>>>

  அது ஒரு காலம் மாப்ளே!

  ReplyDelete
 10. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////.வருடத்தில் மூன்று முறை விடுமுறைக்கு செல்லும் எங்கள் தாத்தாவின் ஊர் காவேரிப்பாக்கம்!..////

  இது எந்த ஏரியா மாப்ள?

  >>>>>>>>>

  சென்னையில் இருந்து ஆற்காடு போகும் வழியில் இருக்கு மாப்ளே!

  ReplyDelete
 11. //தக்காளி ஃப்ளாஷ்பேக் நல்லாத்தான்யா இருக்கு......//

  இப்ப தக்காளி சட்னியா கிடக்கு....

  ReplyDelete
 12. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////எதற்கெடுத்தாலும் அடி விழுந்த காரணத்தால் உடல் கொஞ்சம் மரத்துதான் போனது...////

  அதான்யா இப்போ வாங்குற அடியெல்லாம் சமாளிக்க முடியுது.....

  >>>>>>>>>>>

  அது என்னமோ உண்மைதான் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 13. @கும்மாச்சி

  கும்மாச்சி said...
  மாப்ள நம்ம ஏரியாதான், ஜெயராஜ் தியேட்டர் இன்னும் இருக்கா?

  >>>>>>>>>>>>

  இப்போ சரியா தெரியல மாப்ள விசாரிக்கணும்!

  ReplyDelete
 14. என்ன மாம் அது ஒரு கனா காலத்தில ஹீரோயின் இல்லை....செல்லாது..செல்லாது!

  ReplyDelete
 15. அப்ப அப்பாகிட்ட பெல்ட்டு...
  இப்ப அக்காகிட்ட பூரிகட்டை...
  உங்க வாழ்க்க இப்படி பூடிச்சே....

  ReplyDelete
 16. @பன்னிக்குட்டி ராம்சாமி

  " பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////இந்த தொடர் பதிவில் விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம்...ஏனெனில், நான் சொல்லி யாரு கேக்க போறாங்க ஹிஹி!/////

  மாப்ள ஒரு நியாயஸ்தன்யா....."

  >>>>>>>>>>>>

  நீங்களாவது நம்புறீங்களே...ஒரே அழுவாச்சியா வருதுய்யா ஹூம்!

  ReplyDelete
 17. அட ஆமாய்யா நானும் மறந்துட்டேன், யோவ் தக்காளி, ஃப்ளாஸ்பேக்ல அந்த ஆட்டோகிராஃப் மட்டும் மிஸ்ஸாகுதே, ஏன்யா?(அதுக்கே நாலு பதிவு வேணும்?)

  ReplyDelete
 18. @வீடு K.S.சுரேஸ்குமார்

  வீடு K.S.சுரேஸ்குமார் said...
  //தக்காளி ஃப்ளாஷ்பேக் நல்லாத்தான்யா இருக்கு......//

  இப்ப தக்காளி சட்னியா கிடக்கு....

  >>>>>>>

  யோவ் உமக்கு குசும்பு அதிகமா பூடிச்சி ஹிஹி!

  ReplyDelete
 19. @வீடு K.S.சுரேஸ்குமார்

  வீடு K.S.சுரேஸ்குமார் said...
  என்ன மாம் அது ஒரு கனா காலத்தில ஹீரோயின் இல்லை....செல்லாது..செல்லாது!

  >>>>>>>>>

  அந்த சோகக்கத வேற வேணுமோ கொய்யால!

  ReplyDelete
 20. பாருங்கய்யா கூழ் குடிச்சி வளர்ந்த பிள்ளைக்கு அறிவை...?

  ReplyDelete
 21. @வீடு K.S.சுரேஸ்குமார்

  "வீடு K.S.சுரேஸ்குமார் said...
  அப்ப அப்பாகிட்ட பெல்ட்டு...
  இப்ப அக்காகிட்ட பூரிகட்டை...
  உங்க வாழ்க்க இப்படி பூடிச்சே...."

  >>>>>>>>>>>

  யோவ் ஏன்யா ஏன் அதான் நடக்குதே நீ வேற குத்தி காட்ற ராசுகோலு ஹிஹி!

  ReplyDelete
 22. பாருங்கய்யா ஏர் பிடிச்சு உழுத பயபிள்ளைக்கு அறிவை...?

  ReplyDelete
 23. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அட ஆமாய்யா நானும் மறந்துட்டேன், யோவ் தக்காளி, ஃப்ளாஸ்பேக்ல அந்த ஆட்டோகிராஃப் மட்டும் மிஸ்ஸாகுதே, ஏன்யா?(அதுக்கே நாலு பதிவு வேணும்?)

  >>>>>>>>>

  மாப்ள நமக்கு விளம்பரம் பிடிக்காது அதான் ஹிஹி!

  ReplyDelete
 24. பாருங்கய்யா கழனிக்கு போயிட்டு வந்த பிள்ளை கையில ஏ கே நாப்பத்தேழு அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 25. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  பாருங்கய்யா கூழ் குடிச்சி வளர்ந்த பிள்ளைக்கு அறிவை...?"

  >>>>>>>>>

  பய புள்ள வந்துட்டான்யா...அடேய்!

  ReplyDelete
 26. MANO நாஞ்சில் மனோ said...
  பாருங்கய்யா ஏர் பிடிச்சு உழுத பயபிள்ளைக்கு அறிவை...?

  >>>>>>>>

  அடங்கொய்யால

  ReplyDelete
 27. Cps-ku pottiya
  innikku 2 pathivu
  potta vikki.....ozhiga.....!!!!!

  He...he...he...

  Sari sari.....
  Vazhga......!!!!!!

  ReplyDelete
 28. MANO நாஞ்சில் மனோ said...
  பாருங்கய்யா கழனிக்கு போயிட்டு வந்த பிள்ளை கையில ஏ கே நாப்பத்தேழு அவ்வ்வ்வ்வ்....

  >>>>>>>>

  நாங்கல்லாம் அப்பவே அப்பிடி...அப்ப இப்போ பாத்துக்கயா ஹிஹி!

  ReplyDelete
 29. @NAAI-NAKKS

  எலேய் உனக்கு இருக்குடி!

  ReplyDelete
 30. மாப்ள மிக சுவாரசியம் படிக்க அருமையா இருந்துச்சு.... சுய புராண என்ற பெயரில் பத்தி பத்தியா எழுதி போரடிக்காம... அழகா சின்னதா சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க சூப்பர் மாப்ஸ்...

  ReplyDelete
 31. சொர்கமே என்றாலும் அது சொந்த ஊரு போல வருமா ?

  ReplyDelete
 32. தக்காளி மாமாவின் ஃப்ளாஷ்பேக்கும் நல்லாத் தான் இருக்கு. தொடரட்டும்.

  ReplyDelete
 33. அதான் ஊர விட்டு அடிச்சி தொறத்திட்டாங்கள்ள.... அப்புறம் என்ன ஊர பத்தி பதிவு? :-)

  ReplyDelete
 34. நாட்டாமை பொண்ணு வாயில பட்டாசு கொளுத்தி போட்டுட்டு ஊரை விட்டே ஓடுன மாம்சு...இன்னும் ஆளைக்காணும்...

  ReplyDelete
 35. //வீடு K.S.சுரேஸ்குமார் says:

  //தக்காளி ஃப்ளாஷ்பேக் நல்லாத்தான்யா இருக்கு......//

  இப்ப தக்காளி சட்னியா கிடக்கு....//

  ஹா....ஹா...தக்காளி சட்னி கூட செய்ய தெரியாம அண்ணி கிட்ட செம அடி வாங்கிட்டு கெடக்கு மாம்ஸ். எப்ப சாம்பார் வக்க கத்துக்க போறாரோ பாவம். ஹய்யோ ஹய்யோ..!!

  ReplyDelete
 36. /விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////ஒவ்வொரு வகுப்பிலும் நல்ல மதிப்பெண்ணும், விளயாட்டில் முதலாகவும் பலமுறை வந்து இன்றைய மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கையால் பல பரிசுகளை(கிண்ணம், தட்டு) வாங்கி இருக்கிறேன்...////

  அட தக்காளி நல்ல பயலாத்தான்யா இருந்திருக்கான்.....

  >>>>>>

  அது ஒரு காலம் மாப்ளே!//

  அது கெடக்கட்டும். மாம்ஸ்..எந்த பாத்திரக்கடைல இந்த கோப்பைகளை ஆர்டர் தந்தீங்க..??

  ReplyDelete
 37. இனிய நினைவுகள் - அருமை ! சங்கவி சார் என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்துள்ளார். சிறிது சிறிதாக தொகுத்து கொண்டே உள்ளேன் !
  இந்த கரண்ட் தொல்லை தாங்க முடியலை சாமி...மீ !

  ReplyDelete
 38. மாம்ஸ்...மலரும் நினைவுகள்....ஹிம்...நன்று

  ReplyDelete
 39. விக்கியண்ணாவின் கிராமத்து மனசும் சென்னை சைதையின் இருப்பும் தெரிந்து கொண்ட நினைவை மீட்டிப்பார்க்கும் பதிவு .

  ReplyDelete
 40. பெலிட் அடி வாங்கியதாலே மிலிட்டிக்குப் போகும் ஆசை வந்ததோ??

  ReplyDelete
 41. மாப்ள சுருக்கமா ஒரு பிளாஷ் பேக். நன்றாகத்தான் இருக்கிறது...

  ReplyDelete
 42. ஊர் ஊரா மாறிப்போனாலும் நம் மனம் எந்த மண்ணை தேடுதோ அதுவே சொந்த ஊர்...நல்லா எழுதியிருக்கீங்க...இது போல் நிறைய எழுதுங்கள்...

  ReplyDelete
 43. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 44. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி