அழுவினி போங்கு - அஸ்கு புஸ்கு!~

வணக்கம் நண்பர்களே...
அது ஒரு பனி பெய்யும் இரவு...அந்த வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி வருமாறு..


யக்கோவ்...இன்னாக்கா இப்படி பண்ணி புட்ட..


என்ன பண்றது நிலமை அப்படி..


அதுக்குன்னு என்னய போயி தப்பா நெனசிட்டியே...


உனக்கு அன்னைக்கே நான் சொன்னேன்ல...இருக்குற வரைக்கும் ஜாலியா இரு..எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீ உள்ள போக வேண்டி இருக்கும்னு..அதுக்கு நீ என்னா சொன்னே...


ஆமாம்கா சொன்னேன்...அதுக்குன்னு..


இன்னா சோறு இருக்குற வரைக்கும் தான் பாத்திரத்துக்கு வேலை...


அந்தாள வேற உள்ள புடிச்சி போட்டு புட்டீங்களே...


என்னா ஆணவம் அந்தாளுக்கு..அதான் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும்..


நான் உங்கள எதிர்த்து எதுவும் செய்ய மாட்டேன் கவலைப்படாதீங்கோ..


சரி பாக்குறேன்...


வீட்டு முறவாசலுக்கு ஆள் எடுக்கும் பணியில் ஒரு நாள்...


அய்யா எல்லாம் கேட்டுக்கங்க...நம்ம(!) அம்மாவோட அருமை பெருமைகள கூவி கூவி சொல்லி ஆளுங்கள தேத்துங்க...


என்னன்னு நைனா கூவுறது...


நம்ம மம்மி நம்மாளுங்களுக்கு கற்க்காலம்னா எப்டி இருக்கும்னு காட்டி கீறாங்கோ இல்லையா அத சொல்லுங்கோ...அப்படியே சொல்லுங்க...அந்த தாத்தா சரியா செய்யாத போன வேலைய நம்ம மம்மிதான் ஸ்ட்ரிக்டா செய்ஞ்சி காட்டி கீறாங்கோன்னும் சொல்லுங்க...


அப்புறம்...


அதாவது இனி யாரும் பயப்படவோனாம்...ஏதாவது திருட்டுப்பய புள்ள ஊருக்குள்ள நுழஞ்சிதுன்னா டமால் டமால்ன்னு சுட்டு புடுவோம்னு சொல்லுங்கோ...அப்படியே சொல்லுங்கோ நம்ம ஊரு காவக்காரங்க எல்லாம் இப்போ தொப்ப குறச்சதுக்கு மம்ஸ் தான் காரணம்னு...


ஏன் இப்படி திருடங்க வாராங்கன்னு கேட்டா...


போன தாத்தா சரியா கொண்டு போகல..அதனால ஆளு உட்டு அனுப்பி கொண்டு வர சொலறதா தகவலு வந்து கீதுன்னு சொல்லுங்கோ..


தொடப்ப குச்சி விலையேறி பூடுச்சேன்னு கேட்டா இன்னா சொல்றது...


இன்னாபா இது கூட தெர்ல..அந்த தாத்தா பல வர்சமா குச்சி விளைய எத்தாமையே டகுல் காட்டி கிட்டு இருந்தாரு..அதுனால தான் இப்போ ஏறிப்பூடுசின்னு சொல்லுங்கோ...


அது சரி இன்னா கொடுப்பீங்கோன்னு கேட்டா...


அட புரியாதவங்களே..உங்களுக்கு சிம்னி விளக்கு கொடுப்போம்னு சொல்லுங்கோ...


அண்ணே நீங்க ரொம்ப நல்லவருங்கன்னே...
ஏன் உனக்கு இந்த கொலைவெறி...ஏற்கனவே இங்க டவுசரு கிழிஞ்சி போச்சி..நீ போ ராசா போயி வேலயப்பாரு..எனக்கு வேற டவுசர தைக்கற வேல இருக்கு...


அது சரிண்ணே...இம்புட்டு அடி வாங்கியும் அசராம முறைவாசல் செய்யிரீங்களே எப்பிடிண்ணே...


இந்த கூட்டத்துல ஒருத்தரு என்னைய ரொம்ப நல்லவன்னு சொன்னான்யா அதான்...போய்யா போ...


அடுத்து நீங்கதானேன்னே..நடத்துங்க...


ஓடி வந்த ஆத்தா...


அழுவினி போங்கு நான் மட்டும் தான் ஆடுவேன்...அஸ்கு புஸ்கு என்று சொல்லி விட்டு சென்றார்...


கொசுறு: அய்யா, அம்மா புரிஞ்சிக்கங்கோ!


மிச்சம்: முதல் வீடியோவை காணத்தவறாதீர்கள்...உதவி (HELP) தேவை - பணம் அல்ல! - இந்த பதிவுக்கு முடிந்தால் பதிலளியுங்கள் உங்க பதிலுக்கு காத்து இருக்கேன்..நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. ரயில் கூட உயிரை பயணம் வைத்து விளையாட்டு...வீடியோ த்ரில்லிங்...

  ReplyDelete
 2. முதல் ஃபோட்டோ கலக்கல் ( உன் போஸ்ட்ல ஃபோட்டோ தான் டக்னு புரியுது ஹி ஹி

  ReplyDelete
 3. இளைஞன் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது புல்லரிக்க வைக்கிறது.

  ReplyDelete
 4. // சி.பி.செந்தில்குமார் said...
  முதல் ஃபோட்டோ கலக்கல் ( உன் போஸ்ட்ல ஃபோட்டோ தான் டக்னு புரியுது ஹி ஹி//
  ஒரு பதிவைப்படிக்காமலே கமெண்டிடுவது எப்படின்னு உங்ககிட்டதான் படிக்கணும்!!படம் பார்த்தே கெட்டுப்போனதை ஒத்துக்கிறீங்களே, அதுவரை சந்தோசம்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி