ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 2)


வணக்கம் நண்பர்களே........டைரி பேசுகிறது....தொடர்கிறது......மயங்கி விழுந்த அவனை பார்த்துக்கொண்டு இருந்த அந்த அதிகாரி என்னை ஒரு முறை பார்த்து விட்டு சென்று விட்டார்..........

நான் அவன் முகத்தில் சிறிது தண்ணீர் விட்டு எழுப்பினேன்..........பின்பு அவனுடைய வாயில் தண்ணீர் ஊற்றினேன்.........சிறிது குடித்த அவன் என்னை முறைத்தான்......அருகிலிருந்த என் சக சிப்பாய் அவனிடம்..........

நீ இப்போ உண்மைய சொல்லல ரொம்ப கஷ்ட்டப்படுவே..........என்றார்...

அதற்க்கு அவன் தன் வாயிலிருந்த தண்ணீரை என் முகத்தில் உமிழ்ந்தான்..........எனக்கு கோபம் வந்த போதும் அவன் நிலை நினைத்து பொறுத்துக்கொண்டேன்.......ஆனால் என் சகா அவன் முகத்தில் ஓங்கி அறைந்தான்.......

விடுப்பா பாவமா இருக்கு - நான்....

டேய் இவனுக்கு பாவம் பாத்தே நம்ம உயிர் நம்மளோடது இல்ல.......பக்கத்துல இவனுங்க குடோவுணுல நிறைய வெடிப்பொருள்கள் வச்சி இருக்கறதா தகவல்......அந்த விஷயம் இவனுக்கு தெரிஞ்சி இருக்கும்......ஆனா இவன் சொல்ல மாட்டேங்குறான்.......

நேரம் போய் கொண்டு இருந்தது....அந்த பிடிபட்ட மனிதன் எதுவும் பேசவில்லை.......

பிறகு அந்த அறையை பூட்டிவிட்டு நானும், நண்பனும் வெளியேறினோம்......அந்த மனிதனின் செயல் எனக்கு ஒன்றை நினைவு  படுத்தியது.......அதன் பெயர் "மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்"..........

அடிக்கடி இப்படிப்பட்ட நிகழ்சிகள் நடந்த வண்ணம் இருந்தன......அடிக்கடி இப்படி பலர் இருட்டு அறையில் அடைக்கப்படுவதுண்டு......உண்மையிலேயே அவர்களுக்கு விஷயம் தெரியுமா அல்லது சந்தேகம் மட்டுமேவா என்பது பல நேரங்களில் எனக்கு புரியவில்லை........


உண்மையில் அந்த இடம் மிகவும் அழகானது.......அந்த குளிர் உடலில் ஊடுருவி குத்தும் தன்மை கொண்டது.........அழகான பூமி ஆட்களைத்தான் காணோம்...நான் அடிக்கடி அலுத்துக்கொண்ட விஷயம் இது........

என்னைப்போன்ற, வருடத்தில் முக்கால் பாகம் சூரிய வெப்பத்தை கண்டவனுக்கு இது ஆனந்த விஷயமாகப்போனது..........அந்த அழகிய சூழ்நிலையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருந்தேன்......அருகில் இருந்த மற்றொரு இடத்துக்கு என்னை அனுப்பி வைத்தார்கள்........அந்த இடமும் அழகு.............

ஒரு நாள்..........

எனக்கு ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது......அலறல் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினேன்..........அங்கு நான் கண்டது.......ஒரு பலம் வாய்ந்த மிருகம்....சின்னஞ்சிறு மான் குட்டியை வேட்டையாடிக்கொண்டு இருந்தது.........அந்த நேரத்தில் எனக்கு வந்த கோபத்தில் அந்த மிருகத்தை பிடித்து இழுத்து பக்கத்தில் இருந்த மரக்கதவில் அவன் தலையை மோத விட்டேன்.......அவன் தன் தாயை அழைத்துக்கொண்டே சாய்ந்தான்(அப்போதும் பெண் மட்டுமே நினைவுக்கு வருகிறதோ!)........


அந்த பெண்ணிடம் நெருங்கினேன்....அவள் தன் கரம் குவித்து அழுது கொண்டு இருந்தாள்.........14 அல்லது 15 வயது இருக்கும்..அந்தப்பெண் குழந்தைக்கு..........அவளை அந்த குடிலில் இருந்து வெளிக்கொண்டு வந்து விட்டேன்........அவளுடைய இருப்பிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தேன்........அவள் குவிந்த கரங்களை எடுக்காமலேயே ஓடிக்கொண்டு இருந்தாள் என் கண்முன்னே......


என் வாழ்கையில்..........சினிமாவில் மட்டுமே கண்ட காட்சி என்முன் நிகழ்ந்ததை எண்ணி வருந்திக்கொண்டு இருந்தேன்..........அங்கே வந்த என் சகா.........

என்னடா இப்படி பண்ணிட்ட....உன் வாழ்கையே அவன் அழிச்சிடுவாண்டா....என்றான்......

விட்ரா.......அழியத்தானே வந்து இருக்கேன்.....அது நலத்துக்காக இருக்கட்டுமே...என்றேன்......என்னை ஏற இறங்க பார்த்தான் அவன்.........

அந்தப்பொண்ணு..பழங்குடி இனத்து பொண்ணு......அவன் எதோ பண்ணிட்டு போறான்...உணர்சிகளுக்கு இடம் கொடுக்க இது உன் ஊரு இல்ல.....இங்க வேல பாக்க வந்தியா Punishment வாங்க வந்தியா என்றான் நண்பன்...........


என்னடா இது.............நம்ம கண்ணு முன்னால இப்படி நடக்கும் போது.......அத பாத்து கைக்கட்டி நிக்க சொல்றியா.........இதுக்கு இவனுக்கு காவல் இருக்கனுமா.....தூ...

அந்த நாளின் மாலைப்பொழுதில்..........

அந்த மூத்த மனிதனின்(!)..........தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது.......அதற்க்கு காரணமாகிய நான் அவன் முன் நின்று இருந்தேன்..........

தொடரும்.............

கொசுறு: இந்த படங்களில் காணப்படும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள்.......முறையே மக்களின் மனமும்......அவர்கள் சிந்திய செவ்வனு கலக்காத ரத்தமும் ஆகும்....மீண்டும் சந்திக்கறேன்..........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி........Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. சுருக்கமாக என்றாலும் குளிர் தோலைத்துளைப்பதுபோல்
  நிகழ்வுகளும் சொல்லிச் செல்லும் விதமும்
  நெஞ்சைத் துளைத்துப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Neenga adichi...
  Dhul kilappunga maamu...

  ReplyDelete
 3. தொடர் மிக விறுவிறுப்பாக உள்ளது.

  ReplyDelete
 4. மீண்டும் தொடர் ஆரம்பம் நடத்து மக்கா....!!!

  ReplyDelete
 5. ராணுவத்தில் பணி செய்வோருக்கு சில சுவாரஸ்ய சம்பவங்களும், துக்கமான சம்பவங்களும் யுத்தமான சம்பவங்களும் நடப்பது உண்டு என்பதை தெளிவாக உன் பதிவு சொல்லி வருகிறது....!!!

  ReplyDelete
 6. மூத்த மனிதன்(!)??????

  ReplyDelete
 7. விறுவிறுப்பாக செல்கிறது...தொடருங்கள் தொடருகிறோம்

  ReplyDelete
 8. விரு விருப்பாக செல்கின்றது பாஸ்.

  ஒரு சலூட்

  ReplyDelete
 9. வணக்கம் வெங்கட் சார்!தண்டனை யாருக்கு????எதிர்பார்ப்புடன்...............

  ReplyDelete
 10. மாப்ள மிக எளிமையாக, ஆனால் கதையுடன் ஒன்றுப்போக வைக்கும் நடை. அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 11. வழக்கம் போல செம்ம விறு விறுப்பு மாம்ஸ்

  ReplyDelete
 12. பய புள்ள திருந்திட்டான், யாரையும் தாக்கல:)

  ReplyDelete
 13. புல்லரிக்க வைக்கும் அனுபவங்கள். அதை எடுத்துரைக்கும் விதம் அருமை. நன்றி.

  ReplyDelete
 14. // சி.பி.செந்தில்குமார் said...
  பய புள்ள திருந்திட்டான், யாரையும் தாக்கல:)//
  நீங்க எப்ப? :)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி