ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 3)


வணக்கம் நண்பர்களே,

முன் பகுதிகளுக்கு செல்ல 
டைரி பேசுகிறது (2)...


டைரி பேசுகிறது பாகம் 3 தொடர்கிறது...

அந்த மனிதனின் தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது.........அதற்க்கு காரணமாகிய நான் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்தேன்..........

அவன் பேசிய பல வார்த்தைகள் புரியவில்லை.....திட்டிக்கொண்டு இருக்கிறான் என்று புரிந்து அமைதியாக இருந்தேன்.........

அந்த மனிதன் வெளியில் சென்றான்........அப்போது நண்பன் என் காதருகே வந்து, எதுவும் எதிர்ப்பு காட்டாதே...அமைதியாக இரு இல்லன்னா இங்கயே பொதசிடுவான் என்றான்...........

திரும்பி வந்த அந்த மனிதன்.......உன்னை நான் தொட மாட்டேன்......ஆனா நீ என்னை தொட்டதுக்கான பலன் கிடைக்க வைப்பேன்.......அப்போது உன்கிட்ட உன் உயிர் இருக்காது என்றான்.........(கேட்க்க சினிமா வசனம் மாதிரி இருந்தது!)

நான் என்னுள் சிரித்துக்கொண்டேன்.....எப்பேர்ப்பட்ட நல்லது செய்ய இருந்தான்...அத நான் தடுத்துட்டேன்னு என் மேல கோவமா!....இவன் என்னை என்ன செய்யறான்னு பார்ப்போம் என்று நின்று இருந்தேன்......அவன் என்னை அங்கிருந்து போகச்சொன்னான்......சிறிது நேரம் கழித்து.......நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்......

என்னடா என்னமோ கிழிக்கப்போறான்னு சொன்னே!...என்னடா ஒன்னும் செய்யல என்றேன்..........

எனக்கு என்னமோ அவன் உன்ன வேற ஆபத்தான இடத்துக்கு அனுப்பப்போறான்னு நெனைக்கிறேன்.......என்றான் நண்பன்........

இரண்டு நாட்களில் அவன் சொன்னதை போல நடந்தது...........

(நான் அப்போதும் அசட்டு தைரியத்துடன் அவனிடம் இருந்து விடை பெற்றேன்.......வீட்டில் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்து சென்றன......என் நினைவு சிறிது பின்னோக்கி சென்றது.......)

தம்பி ஏன் இந்த வேலைக்கு போவேன்னு பிடிவாதமா இருக்க..அக்கா கேட்டாள்.....

எனக்கு இது பிடிச்சிருக்கு.....இதற்குத்தான் இத்தன நாள் கஷ்ட்டப்பட்டு ட்ரைனிங்ல  இருந்தேன்..........

ஏம்பா அந்த சேவையை உள்ளுருல இருந்து செய்யக்கூடாதா.......அந்த அப்பாவித்தந்தை கேட்டார்.........

ஏன்டா இப்படி நாங்க சொல்ற பேச்சே கேக்ககூடாதுன்னு இருக்கியா - அம்மா...

உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.....நீங்க சொன்னா மாதிரி வராத படிப்ப எப்படியோ கஷ்டப்பட்டு(!) படிச்சி பட்டம் வாங்கிட்டேன்....நீங்க சொன்னா மாதிரி.......இந்த வேலை என் கனவு அத நிறைவேத்த விடுங்க ப்ளீஸ்!

சரிப்பா போயிட்டு வா........ஞாபகம் இருக்கட்டும்......நீ போறது ரொம்ப அபாயகரமான வேலை......எப்பவும் உன் மனச அலை பாய விடாதே.......எப்போ நேரம் கெடைக்குதோ அப்போ எங்கள நெனச்சா போதும்..........எப்போதும் அக்காவையே நெனச்சிட்டு இருக்காதே........எந்த நேரத்திலும் உன் தைரியத்த மட்டும் இழந்திடாதே........அது தான் உன் சொத்து.....நீ முரடனா இருந்த போது நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன்......ஆனா அந்த முரட்டுத்தனம் இன்னைக்கு உன்ன பொறுப்பான மனுசனா ஆக்குனத நெனச்சா பெருமையா இருக்கு......- அந்த ஏழை தந்தை அதை விட நாசுக்காக என்ன சொல்லிவிட முடியும்.....

விடை பெற்று என் பணியிடம் போய் சேர்ந்தேன்.......இப்போது நிகழ்காலம்........

புதியதான இடத்துக்கு வந்து சேர்ந்தேன்..............

நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்........அதில் தெற்கத்திய நண்பர்கள் நால்வர் சேர்ந்தோம்...........என்னுடன் ராவ், சத்தியா, ராஜேஷ் என நட்பு வட்டம் கிடைத்தது.........அந்த நட்பு சில காலம் நீடித்து இருந்தது.........அவரவர் பணியில் மிகுந்த கவனத்துடன் ஓடிக்கொண்டு இருந்தோம்..........


அந்தப்பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகமாக மேட்கொள்ளப்பட்டுக்கொண்டு இருந்தது.....

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒருவர் இறந்து கொண்டு இருந்தனர்.......அது எதிர் தரப்பு மற்றும் எங்கள் தரப்பிலும் சில நாள்!..என காலம் ஓடிக்கொண்டு இருந்தது........நாம் கழிக்கும் மலம் 2 நிமிடங்களில் பனிக்கட்டியாக இறுகிவிடும் காலம் அது..........அப்போது தான் அந்த பழைய அரக்கனின் எண்ணம் எனக்கு புரிய ஆரம்பித்தது...........

ஒரு மலைக்கும், அடுத்த மலைக்கும் பயணப்பட மற்றும் கண்காணிக்க ஒரு வாகனம் (வின்ச்) வந்து சென்று கொண்டு இருக்கும்..........


அப்படித்தான் நாங்கள் நால்வரும் ஒரு நாள் அந்த வாகனத்தின் மூலம் அடுத்த பகுதிக்கு பயணப்பட்டுக்கொண்டு இருந்தோம்...........

டுப்..டுப்...டுப்.......என சத்தம் கேட்டது......தூரத்தில் இருந்து யாரோ சுடுகிறார்கள்(snipper shot!)..........என்பது போன்ற உணர்வு........திரும்பி பார்த்தால் முனகல் சத்தத்துடன் ராவ் உடலில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்து கொண்டு இருந்தது..........அவன் என் கண்ணெதிரே துடிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் துடித்தேன்....என்ன செய்வது தெரியாமல் தவித்தேன்.........டேய்............@#@#@#@#.........மறைஞ்சி இருந்தாடா சுடுறீங்க..........!

தொடரும்...........

கொசுறு: இந்த சீரியஸ் பதிவுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. தினமும் மாலை 6.30 டூ 7.30 பஸ் பயணத்தில் இருப்பேன்னு சொல்லியும் தினமும் அதே டைமில் கால் பண்றே, நீ பண்றதும் இல்லாம நம்ம பிளாக் ஃபிரண்ட்ஸையும் பண்ண சொல்றே.. இன்னா ஒரு வில்லத்தனம்? ங்க்கொய்யால

  ReplyDelete
 2. >>கொசுறு: இந்த சீரியஸ் பதிவுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி...

  ஹி ஹி ஹி ஹி

  தம்பி, யு டான்ஸ்ல ஓட்டு போட முடியல, கவனி, சும்மா பி ஏ வை மட்டும் கவனிக்காத

  ReplyDelete
 3. /////தினமும் மாலை 6.30 டூ 7.30 பஸ் பயணத்தில் இருப்பேன்னு சொல்லியும் தினமும் அதே டைமில் கால் பண்றே, நீ பண்றதும் இல்லாம நம்ம பிளாக் ஃபிரண்ட்ஸையும் பண்ண சொல்றே.. இன்னா ஒரு வில்லத்தனம்? ங்க்கொய்யால/////

  அப்படியா...எனக்கு தெரியலை சரி இன்னையில இருந்து ஆரம்பிச்சிர வேண்டியதுதான்...

  ReplyDelete
 4. மாப்ள அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாகிடுச்சு போலிருக்கே? கதையிலும் நிஜத்திலும். சைடுல அருவாளோட அதென்ன டெர்ரர் எப்பேக்டு?

  ReplyDelete
 5. அதிர்ச்சி அதிரடி சோக்ம் எல்லாம் கலந்த பதிவு,

  ReplyDelete
 6. அண்ணே மீள்பதிவு சோகமா இருக்கு....!!!

  ReplyDelete
 7. படங்கள் நல்லா இருக்குய்யா....!!!

  ReplyDelete
 8. மாமு... வணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...

  நன்றி....

  ReplyDelete
 9. வணக்கம் வெங்கட் சார்!த்ரில் கூடிக்கிட்டே போவுது!(மொதல்லையே படிக்காததாலையோ?)த்சோ,த்சோ!!!!

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said...

  தினமும் மாலை 6.30 டூ 7.30 பஸ் பயணத்தில் இருப்பேன்னு சொல்லியும் தினமும் அதே டைமில் கால் பண்றே,நீ பண்றதும் இல்லாம நம்ம பிளாக் ஃபிரண்ட்ஸையும் பண்ண சொல்றே.. இன்னா ஒரு வில்லத்தனம்? ங்க்கொய்யால!////சும்மா தானே?யாருமே கால் பண்ணுற மாதிரி தெரியலியே?இனிமேதான் வீடு சுரேஷ் கால்பண்ணி செலவு பண்ணப்போறாரு!ஹ!ஹ!ஹா!!!!!!!!!

  ReplyDelete
 11. மாமு விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறது உங்கள் வரிகளில்...

  ReplyDelete
 12. வணக்கம் பாஸ் உங்கள் பதிவுகளிலே என்னை மிகவும் கவந்த பதிவு இந்த தொடர்தான் மிகவும் ஆர்வமாக வாசிக்கின்றேன் தொடருங்கள் தொடர்கின்றேன்

  ReplyDelete
 13. வணக்கம் மாம்ஸ்

  தொடர்கிறேன்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி