ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 4)

வணக்கம் நண்பர்களே.......


தங்களின் மேலான ஆதரவுடன் தொடர்கிறேன்......

முன் பாகங்களை வாசிக்க...டைரி பேசுகிறது (3)

டேய்...........மறைஞ்சி இருந்தாடா சுடுறீங்க.............


கிட்டத்தட்ட இரு பக்கங்களில் இருந்து வந்த தோட்டாக்கள் என்னை நிராயுதபாணியாக்கியது.........ஏனெனில், என் கையை என்னால் எடுக்க முடியவில்லை.........அந்த விஞ்சுக்கு உள்ளே நாலு புறமாக நின்றிருந்த நாங்கள்...ஒரு புறமானோம்........

நான் ராவை குனிந்து பார்த்த போது ரத்தம் என் முகத்தில் தெறித்தது..........நான் நிமிர்ந்து பாக்கும் நேரம்..........மற்ற இரு நண்பர்களும் கல்லாக என்னை நோக்கி சாய்ந்து கொண்டு இருந்தார்கள்........அவர்களின் உடல் பளு என்மேல் அழுத்தியதால்.......என்னால் துப்பாக்கியை எடுக்க முடியவில்லை........

ஒரே நேரத்தில் மூன்று நண்பர்களின் பிரிவு என்னை நிலை குலையசெய்தது......ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியவில்லை...........

என்ன கொடுமை இது......சற்று முன் அளவளாவிக்கொண்டு இருந்த நண்பர்கள் என்னை விட்டு சென்றுவிட்டனர் எனும் போது நெஞ்சு அடைத்தது.......அவர்களின் உயிரற்ற உடலை பார்த்து என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.......அதிலும் ராஜேஷ் - இவனுக்கு மூன்று மாததிற்க்கு முன்னே தான் திருமணம் நடந்ததாக கூறி இருந்தான்........எண்ணற்ற கனவுகளுடன் அவனுக்கு கிடைத்த வாழ்கை....நொடிப்பொழுதில் ஒரு சிட்டுக்குருவியின் வேகத்துடன் பிரிந்ததை பார்த்து கொண்டு இருந்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.......


அவனுக்கு எதிர் வாடையில் என்மேல் வெட்டிய மரமாக சாய்ந்த இன்னொரு நண்பன் சத்யா...........இது என்ன விதியின் சதியா...........என்னைவிட்டு சென்று விட்டீர்களே.........

மூன்று உயிர் துறந்த வீரர்களுக்கு நடுவில் நான்.........என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் மரணத்தின் ஓசையாகிய தோட்டாக்களை முத்தமிட தயாரானேன்.........

மரணம் என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருப்பதை உணர முடிந்தது.........அந்த நேரத்தில் எனக்கு தோன்றிய ஒரு விஷயம்........இறப்பது என்பது என்றோ முடிவான விஷயம்........அந்த மரணம் என்னை தொடும் போது என்னுடன் சற்று முன் வரை உயிருடன் இருந்த நண்பர்களின் உயிருக்கு பழிக்கு பழி வாங்கியே தீருவேன் என்று முடிவு செய்தேன்........

முடிந்தவரை என் கைகளை அவர்களின் உடலுக்கு அடியிலிருந்து எடுத்து விட்டேன்........அடுத்து என் கை அந்த இயந்திர துப்பாக்கியின் விசையை இழுக்க..........ஓடி வந்து கொண்டு இருந்த தீவிரவாதிகள் மேல் பாய்ந்தன குண்டுகள்........அதே நேரம் அந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் துப்பாக்கியிலிருந்து வந்து கொண்டு இருந்த குண்டுகள்........என் நண்பர்களின் உயிரற்ற உடல்களை தாண்டி என்னிடம் வராமல் நின்றன.........

அவர்களின் உடலே ஒரு கேடயமாக இந்த முரடனைக்காப்பற்றி கொண்டு நின்றது......இப்போது நண்பனின் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நான் காத்துக்கொண்டு இருந்தேன் அடுத்த நிகழ்வுக்கு.......

அடுத்த அணி எண்ணி நோக்கி விரைந்து கொண்டு இருந்தது......அவர்கள் பேசியது அந்த பனிக்காற்றிலும் கொஞ்சம் கேட்டது.......


"அங்கேயிருந்து யாரோ சுடுகிறான்........அவர்களில் இன்னும் ஒருவன் உயிருடன் இருக்கிறான்......சுடுங்கள்"

அந்த குரல் வந்த திசையை நோக்கி சுடலானேன்..........

தடட்டட் என்று தொடர்ந்து வந்த தோட்டாக்களில் ஒன்று நெற்றியை உரசிசென்றது......அடுத்து நான் தொடர்ந்து சுடலானேன்.......எனக்கு பின் புறமிருந்தும் என்னை நோக்கி தோட்டாக்கள் வந்து கொண்டு இருந்தன.........

சில நிமிடங்களே என்னால் போக்கு காட்ட முடிந்தது.......அவர்களில் பலர் சுட்ட தோட்டாக்கள் அந்த விஞ்சின் கம்பிகளை அறுத்தன........அடுத்து வந்த தோட்டாக்கள் பின் மண்டையை பதம் பார்த்தன.......

கிட்ட தட்ட சில நூறு அடிகள் உயரத்தில் நான்..........

தொடரும்.............

கொசுறு: அய்யா கனவான்களே...இந்த மொக்கை பதிவரின் பதிவுகள் உங்களுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது போல...அதற்காக நீங்கள் ஒரு முறை unfollow செய்து மீண்டும் இந்த தளத்தை follow செய்யவும்...செய்முறை விளக்கம் தேவை என்றால் இங்கு அழுத்தவும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. வணக்கம் மாம்ஸ்

  தொடர்கிறேன்..........

  ReplyDelete
 2. சில நிமிடங்களே என்னால் போக்கு காட்ட முடிந்தது.......அவர்களில் பலர் சுட்ட தோட்டாக்கள் அந்த விஞ்சின் கம்பிகளை அறுத்தன........//m sirappu

  ReplyDelete
 3. டூமீல்!
  டூமீல்!
  டூமீல்!
  குண்டுகள் முழங்க...போர்களத்தை முத்தமிட்ட கனங்கள்
  படிக்கும் எங்கள் மூச்சை ஒரு நிமிடம்
  நிறுத்துகிறது!

  ReplyDelete
 4. மறுபடியுமா? கலக்கல்ஸ் மாம்ஸ்!

  ReplyDelete
 5. சாரி விக்கி.நடுவில் சிறிது மிஸ் பண்னி விட்டேன்.இனித் தொடர்கிறேன்.

  ReplyDelete
 6. எத்தனை முறை படிச்சாலும் சுவாரஸ்யமா இருக்கு மாப்ள....

  ReplyDelete
 7. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடுகிரது,

  ReplyDelete
 8. ஏற்கனவே படிச்சதுதான்னாலும் இப்பவும் படபடப்பாத்தான்யா இருக்கு!

  ReplyDelete
 9. விறுவிறுப்பு கூடிட்டே போகுது மாம்ஸ்...

  ReplyDelete
 10. ஏற்க்கனவே நீ எழுதியதும், சொன்னதுமான விஷயம்தான் இருந்தாலும் பன்னிகுட்டி சொன்னது போல படபடப்பாதான் இருக்கு...!!!

  ReplyDelete
 11. @மாலதி

  பிளீஸ் மாலதி இது சீரியஸ்...

  ReplyDelete
 12. மீண்டும் மீண்டும் படித்தாலும், அந்த சில நிமிடங்கள் அதிர வைக்கின்றன.

  ReplyDelete
 13. வணக்கம் வெங்கட்!அடுத்த பாகம் எப்போ போடுவீங்க?எனக்கொன்றும் உங்கள் பதிவு பார்ப்பதில் சிரமமில்லை,நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி