ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 6)


வணக்கம் நண்பர்களே..........டைரி பேசுகிறது.......தொடர்கிறது...
எழ முயற்சித்தேன்..........மீண்டும் குழந்தையாக மண்ணில் விழுந்தது ஞாபகம் வந்தது...........தவறி விழுந்தேன்........எழுந்திருக்க முடியாமல் அந்த டாக்டர் மற்றும் அந்த தாதியின் தயவால் மீண்டும் அந்த சேரில் சாய்ந்தேன்...........

கவலைப்படாத தம்பி........சரி ஆயிடும்...........என்றார் அந்த டாக்டர்........

கொஞ்ச நாள் ஆயிற்று.......கொஞ்ச கொஞ்சமாக மாற்றங்கள் உடலில் வந்தது...........என் அக்கா என்னை தேடி வந்தாள்..........அவளிடம் பல மாற்றங்கள்.........நான் அவள் முகம் பார்த்து குனிந்து கொண்டேன்.........


தம்பி என்னை தவறா நெனைக்காத......எனக்கு உன் விஷயமே தெரியாது.....இடையில பல விஷயங்கள் நடந்துடுச்சி.......உனக்கு தெரிய ஞாயமில்ல.......பல மாதங்களா நானும் மாமாவும் பிரிஞ்சி இருக்கோம்......தெரியுமா...........நான் பெங்களூர்ல இருக்கேன்...அவரு சென்னையில இருக்காரு.....

என்னாச்சி......ஏன்?

வெளிப்படையா அவரு சொல்லல....ஆனாலும் எனக்கு புரிஞ்சிது....நாங்க சேர்ந்து இருக்கறது அவங்க அம்மாக்கு புடிக்கல......அதான்...எனக்கும் உன் விஷயத்த தெரியப்படுத்தல......நான் கேட்டதுக்கு நீ செத்துட்டதா சொன்னாங்க.....!

பரவாயில்லையே......என்னை அந்த உயர நிலைக்கு கொண்டு போயிட்டாங்களா....நல்லது தான்.........சரி விடு இப்ப எப்படி விஷயம் தெரியும்......சொல்லு!

பெங்களூரு ரமணி மேடம் பாத்தாங்க....அவங்க அங்கே அவங்களோட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க.......அப்போதான் சொன்னாங்க....


"தம்பி.......தம்பின்னு உயிரை விடுவியே.....அவன் இப்ப பொணம் போல இருக்கான் தெரியுமா.......6 மாசமா எந்த முன்னேற்றமும் இல்லன்னு டாக்டருங்க கைய விரிசிட்டாங்கலாம்.......உன்ன இந்த நெலமைக்கு ஆளாக்குன குடும்பம் பாரு எப்படி தவிக்குது...."

அப்போதான் எனக்கு தெரியும் நீ உயிரோட இருக்கறது.........வீட்ல தடுத்தாங்க.......ஆனாலும் நான் உன்னை பாத்தே ஆவேன்னு வந்தேன்டா......தம்பி.....

என்னை மன்னிசிடுக்கா........நான் எப்பவுமே அவசரக்காரேன்......

சரி விடு.......இனி நடப்பத பாப்போம்.......(அன்று முதல் அந்ததாயின் அன்பினால் குணமடைய ஆரம்பித்தேன்!.............இப்போது அக்காவின் சென்னை பிளாட்டில்..........பெங்களூரில் இருந்த அவளுடைய அப்பாவிடம் சண்டை பிடித்து வாங்கி வந்த பணத்தில் அந்த ப்ளாட்டை வாங்கி இருந்தாள்...........)

இப்போ எப்படி இருக்கு..........தம்பி..........

நடக்க முடியிது.....


ஆமா, காலையில கிரி வந்து ஆட்டோல உன்ன கூட்டிட்டு போனானே.......போகும் போது எங்க போறேன்னு கேக்க வேணாம்னு கேக்கல....எங்க வெளிய போயிட்டு வந்த..........சொல்லு!

அதான் உன் மாமியாருக்கு வேப்பிலை அடிச்சிட்டு வந்தேன்......அப்படியே மாமா ஆபீசுக்கு போயி அவர ஒரு கிழி!.......ஒரே கிழி..........கிழிசாச்சி..........அவரு நல்ல ஆம்பளையா இருந்தா இன்னிக்கே ஓடியாருவாறு பாரு.............

அக்கா என்னை ஓங்கி அறைந்தாள்...........

தொடரும்..........

கொசுறு: உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல..........கதை ட்ராக் மாறுவதாக நினைக்க வேண்டாம்....வாழ்கைன்னா அப்படித்தான்....திருப்பும் ஹேண்டில் நம் கையில் இல்லை என்பது என்தாழ்மையான கருத்து.....


மிச்சம்: சில பதிவுகளில் நண்பர்கள் போடும் பின்னூட்டம் தவறுதலாக ஸ்பாம் ஆகி விடுகிறது...நான் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்துவதில்லை...அடிக்கடி இனி ஸ்பாமையும் செக் பண்ணிக்கறேன்...கோபம் வேண்டாம் மாப்ளைஸ்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. போராட்டம் என்பதுதானே வாழ்ககை..அதை எதிர் கொள்ள இந்த தொடர் உதவும்.....

  ReplyDelete
 2. >>சில பதிவுகளில் நண்பர்கள் போடும் பின்னூட்டம் தவறுதலாக ஸ்பாம் ஆகி விடுகிறது...நான் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்துவதில்லை..

  hi ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 3. தக்காளி புதுசா போஸ்ட் போட்டுட்டு கடைசில கையெழுத்தெல்லாம் ஸ்டைலா போடறானே,வி ஐ பி ஆகிட்டானா? சசிகா பிளாக் பார்த்து அடிச்சுட்டானா? தெரியலையே..

  ReplyDelete
 4. Ok..maams...
  Niraiya thathuvangal...
  Athu thaane
  vazhkkai....

  ReplyDelete
 5. Ok..maams...
  Niraiya thathuvangal...
  Athu thaane
  vazhkkai....

  ReplyDelete
 6. செம அறையா மாஸ் ? பாவம்

  அசத்தல் பதிவு அருமை.

  ReplyDelete
 7. சோகமான போராட்டம், கடந்து வந்தது சந்தோசம் மக்கா...!!!

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி புதுசா போஸ்ட் போட்டுட்டு கடைசில கையெழுத்தெல்லாம் ஸ்டைலா போடறானே,வி ஐ பி ஆகிட்டானா? சசிகா பிளாக் பார்த்து அடிச்சுட்டானா? தெரியலையே..//

  எலேய் அவன்தான் பெரிய பெரிய வி ஐ பி'கலை ஸாரி களை தினமும் சந்திக்கிறான் என்னை மாதிரி ஆளையெல்லாம் போனில் கூப்பிட்டு மிரட்டுறான் ராஸ்கல்.

  ReplyDelete
 9. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தொடருங்க மாப்ள....//

  யோவ் பன்னி மறுபடியும் தீவிரவாதிங்க கூட விக்கியை சண்டை போட சொல்கிரீன்களா [[சத்தியமா சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லீங்க்னோ]]

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி