குடிமகன்(Dr!) Vs நிர்வாகம் - ஒரு கலாய்துரையாடல்!

வணக்கம் நண்பர்களே...
நடுவர் மையம் இப்போ லேட்டஸ்ட்டா கொடுத்த அறிவுரைப்படி...இனி குடித்து விட்டு வண்டி ஒட்டி மரணம் விளைவித்தால் 10 வருஷம் உள்ளார போட சொல்லி இருக்காங்க..அதை பற்றிய ஒரு பதிவு...


தம்பி குடிச்சியா...
என்ன குடிச்சியா...


யோவ் என்ன குடிச்ச...


என்ன என்ன குடிச்ச...


ஸ்ஸ் ஏற்கனவே நாட்ல நெறைய உயிர் பலி...


என்ன உயிர்பலி...


அடேய்...


என்ன அடேய்..


இப்போ நீ குற்றத்த ஒத்துக்கல உன்னைய பத்து வருஷம் உள்ள போட்ருவாங்க...


சார் இப்போ நான் பேசலாமா...


பேசு...


நாங்க அடிக்குற சரக்கு எந்த கடையில கிடைக்குது...


ஏன் இது தெரியாதா...டாஸ்மாக்...என்னைய நீ கேள்வி கேக்குறியா...


இல்ல சார் நான் பாமரன்..நீங்க படிச்ச மேதாவிங்களாச்சே அதான் கேட்டு தெரிஞ்சிக்கறேன்....


சரி கேளு...


டாஸ்மாக் நடத்துறது யாரு...


நிர்வாகம்...


இப்போ தான் பாயிண்டுக்கு வந்து இருக்கீங்க...


என்னா சொல்றே...


அப்போ நிர்வாகம் இந்த கடைகள மூடிட்டா நாங்க எப்படி குடிக்க முடியும்...எப்படி இந்த மாதிரி உயிர்பலி ஏற்ப்படுத்த முடியும்!


நிர்வாகம் இதை நடத்துலன்னா...நீங்க திருட்டுத்தனமா காய்சிரத குடிச்சி புட்டு செத்து போயிடுவீங்களே...


என்னா அக்கறை...ஏன் இம்புட்டு மார்தட்டிக்கிற நிர்வாகம் அதையும் தடை செய்யலாமே...முடிஞ்சா ஒன்லி காஸ்ட்லி கடைங்க தான் உண்டு...ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...


நீ நிர்வாகத்த குறை சொல்றியா...நீ பண்ண தப்ப மறைக்க!


இல்லங்கய்யா...தப்பு ஆரம்பமே நிர்வாகம் தான்...அப்படி இருக்க(!)...அப்பாவி(!) குடிகாரங்களை வளத்து விட்டு புட்டு எங்க மேல குற்றம் சாட்ரீன்களே...அதுவும் ஒரு காலத்துல பெரியவங்க மட்டுமே குடிச்சது போயி...இப்ப ஸ்கூல் பசங்க எல்லாம் அதுவும் ஆறாவது படிக்கிறது எல்லாம் குடிக்குதுய்யா...என்னய்யா நடக்குது இந்த நாட்ல..நீங்க அந்த அடிப்படை தவறுகள தட்டி கேக்காம...மக்களை திருந்த சொன்னா எப்படிய்யா..


அதுக்கு என்ன பண்ணனும்..


முதல்ல நிர்வாகத்த நிறுத்த சொல்லுங்க..தானே மக்கள் நிறுத்திடுவாங்க..அத விட்டு புட்டு எதுக்கு எடுத்தாலும் எங்கள வாட்டரதுலையே இருக்காதீங்கோ!


யோசிக்கறோம்...அதுக்காக உன்னைய விட்ற முடியாது...கொஞ்ச நாளைக்கு உள்ள இரு...


அய்யா வெளிய விட உள்ள தான் சரக்கு நல்லா இருக்காம்...


அடங்கோ...


கொசுறு: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. >>
  இல்லங்கய்யா...தப்பு ஆரம்பமே நிர்வாகம் தான்...அப்படி இருக்க(!)...அப்பாவி(!) குடிகாரங்களை வளத்து விட்டு புட்டு எங்க மேல குற்றம் சாட்ரீன்களே.

  adeey adeey

  ReplyDelete
 2. ?>>>ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...

  super

  ReplyDelete
 3. @ cps....

  Vikki unga post-i
  sollalai....he...he...

  Summa....

  ReplyDelete
 4. அய்யா சாமி போதையில தெரியாம இந்த போஸ்ட் வந்துட்டேன்!குடிகாரங்களை பத்தி எவனாவது சொன்னா எங்கிட்ட சொல்லு மாமு!கொய்யால எங்களாலதான் கவருமெண்ட்டு ஆபிசருக சம்பளம் வாங்குறானுக...பின்னே எதுக்கொசரம் குடிக்காதே..குடிக்காதேன்னு சொல்றானுவ..

  ReplyDelete
 5. மாம்ஸ்.இது மப்புல எழுதிய போஸ்டா?
  திருப்பு என்ன மப்புல எழுதுன போஸ்டான்னு கேக்காதீங்க.

  ReplyDelete
 6. அய்யா வெளிய விட உள்ள தான் சரக்கு நல்லா இருக்காம்...//
  கரெக்ட் தான்.

  ReplyDelete
 7. கொசுறு: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!//டாஸ்மாக் ஏலத்துல எடுக்கப் போறீங்களோ?????

  ReplyDelete
 8. மாமா ஒரு சிறு உதவி என்னுடைய அண்ணன் ஒருவர் யுஎஸ் குடிமகன். அவருக்கு வியட்நாமில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து தொழில் புரிய விரும்புகிறார். அதற்குரிய கன்சல்டன்சி நிறுவனம் உங்களுக்கு தெரிந்தால் என்னுடைய மெயில் ஐடி யான senthilkkum@gmail.com க்கு மெயில் அனுப்பவும். நன்றி

  ஆரூர் மூனா செந்தில்

  ReplyDelete
 9. மாம்ஸ் ஒரு குவாட்டர் சொல்லுங்க! :-)

  ReplyDelete
 10. மாம்ஸ் நீங்க எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு அடிக்கிறீங்க போல.


  அருமை பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 11. நிறுவாகம் பிழை செய்துவிட்டு சாதாரன பாமரன் மீது இப்படி சட்டம் என்று அடக்கவருவது தவறுதான் மாம்ஸ்.

  ReplyDelete
 12. எங்களுக்கும் வாழ்வு வரும் கள்ளுத்தானே முன்னேற்றம் அடையும்.

  ReplyDelete
 13. நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க?

  ReplyDelete
 14. // சி.பி.செந்தில்குமார் said...
  ?>>>ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...
  >>>>>>>>>>>>>>>>>>>>>
  super//
  எது எலைட் சேல்சா?

  ReplyDelete
 15. குவாட்டர் + ஆப்பு

  ReplyDelete
 16. ஆப்பு அடிச்சாலும் அசரமாட்டோம்ல...

  ReplyDelete
 17. உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

  பல்சுவை பதிவர்கள்

  ReplyDelete
 18. மாம்ஸ் குவாட்டர் அடிச்சிட்டே யோசிச்சீங்களா???

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி