உதவி (HELP) தேவை - பணம் அல்ல!

வணக்கம் நண்பர்களே....


நண்பர்களே நேற்று சில நண்பர்களிடம் இணையம் வழியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சில விஷயங்கள் நெஞ்சை அடைத்தன.

அவைகள் நட்டாற்றில் விடப்பட்ட பெரியவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனை. அதாவது இந்தப்பெரியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள இவர்களின் வாரிசுகள்(பணத்திற்க்கு மட்டும்!) தயாராக இல்லை.


நான் பேசிப்பார்த்த போது பணம் தரத்தயார் ஆனால், "எங்களுக்கு நேரம் இல்லை" அதனால் முடிந்தால் நீங்களே நல்ல முதியோர் காப்பகம் சொல்லுங்கள். நாங்கள் ஒரு முறை வந்து படிவம் வேண்டுமென்றால் எழுதிக்கொடுத்து எங்கள் வீட்டு பெரியவர்களை சேர்த்து விட்டு வந்து விடுகிறோம் என்றனர்.

இந்த மக்கள் தங்களால் ரூபாய் 5000 - 6000 (மாததிட்க்கு)வரை தர இயலும் என்று கூறுகின்றனர். இந்த குடும்ப தலைவர்களின் மாத வருமானம் ரூபாய் -20,000 கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.(அண்ணன்  தம்பி சேர்ந்து கொடுப்பதாக முடிவு!)

எமக்கு வேண்டிய தகவல் இதுவே:

1. சென்னையில் உள்ள முதியோர் இல்லம்(குறைந்த பணம் வாங்கும்!)முகவரி மற்றும் தொலைபேசி ...

2. இந்த முதியோர் இல்லங்க ரூபாய் 5000 - 6000 க்குள் வாங்குபவை பற்றிய தகவல் தேவை. (தனி நபருக்கு!)

3. முன் வைப்பு தொகை ரூபாய் 10,000/-  வரை கொடுக்க இயலும்(சம்பந்தப்பட்டவர்களின் அதிக பட்சமாக!).

4. முக்கியமான விஷயம் இந்த பெரியவர்கள் அனைவரும் வாரத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை (சென்னை central railway station எதிர் இருப்பது) சென்று வந்தாகவேண்டும். அதனால் அதிக பட்சமாக 10 - 25 கிமீக்கு மிகாமல் இருந்தால் நல்லது.

தெரிந்தால் தெரிவிக்கவும்.

தெரிவிக்க வேண்டிய முகவரி : vbvvvmv@gmail.com 

ஏனெனில் நானும் எனது நண்பர்களும் இனைய வழி தொலை பேசி மூலம் பல இல்லங்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் கேட்ட தொகை ரூபாய் 20000. அதுமட்டுமின்றி முன்தொகை (deposit) - ரூபாய் 30000 லிருந்து 1 லட்சம் வரை.

இந்தப்பெரியவர்களுக்கு செய்யும் உதவி அந்த கடவுளுக்கு செய்வது போன்றது.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .................

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. வணக்கம் மாம்ஸ்

  அறியதொரு முயற்சி

  நானும் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம்
  பகிர்கின்றேன்

  கண்டிப்பாய் நல்லது நடக்கும்

  ReplyDelete
 2. உதவி விரைவில் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 3. தகவல் சேகரிக்க முயல்கிறேன்...

  ReplyDelete
 4. என் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் மாம்ஸ்..

  ReplyDelete
 5. நண்பர்களிடம் பகிர்கிறேன் ! சிறப்பான பதிவு ! நன்றி !

  ReplyDelete
 6. மாம்ஸ் நண்பர்களிடம் பகிர்ந்து.. தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 7. மாப்ள எனக்கு சென்னையை பற்றி தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன்

  ReplyDelete
 8. உதவி செய்திட உன்னத முயற்சி.

  ReplyDelete
 9. முயன்று கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 10. என் உறவினர் சொன்னது...

  அன்னை இல்லம்
  24950003...

  பேசிப்பாருங்களேன் ...

  ReplyDelete
 11. @ரெவெரி

  நன்றி மாப்ள ட்ரை பண்றேன்!

  ReplyDelete
 12. நல்ல முயற்சி. நான் ஃபேஸ் புக், ட்விட்டர், எனது தளத்தில் லிங்க் தர்றேன்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி